பாடுவோம் பணிவோம் பக்கம் வருவான் !


 

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 





நீலங்கொள் மேகத்தின் மயில் மீது
நீ வந்து காட்சிதா திருக் குமரா
ஆலத்தை உண்டவன் மடி அமர்ந்து 
ஞானத்தை உரைத்தவன் நீ அல்லவா 

வேலினை ஏந்திய திருக் குமரா
வெவ்வினை வேரறச் செய் குமரா
மாலது மருகனாய் ஆகி நின்றாய்
மாயைகள் அகன்றிடச் செய் குமரா

அசுரரின் ஆணவம் அடக்கி நின்றாய்
அவ்வைக்குத் தமிழை அள்ளிக் கொடுத்தாய் 
முத்தமிழ் முழுதுமாய் ஆகி நின்றாய்
முருகா என்றதும் உருகி நிற்பாய் 

“தெய்வம்போல் வந்தபெருந் தியாகிநீ”

 இயற்றியவர்: பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்.
















பால்பொழியும் நிலாவெறிக்குங் கடற்க ரையில்   

பாவையவள்  வரவுக்குக் காத்தி ருந்தேன்

வேலையொத்த ஒளிவிழியிற் பொங்கிய சீற்ற

வேகமின்னுந் தணியவிலை என்றூ கித்தேன்!















பருவவெழில் ஒருமித்த உருவங் கண்டு

பகலிரவாய் அவள்நினைவால் தூக்கங் கெட்டேன்

பெருகிவரும் காதலினை அவளிடம் சொல்லப்

பெண்ணவளும் பார்த்தாளே! அந்தப் பார்வை……  

இன்சொற்கள் பேசுவோம் இன்பமாய் வாழுவோம் !


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 





நலந்தரும் சொல்லை நாராயணா என்றார்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார்
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
இப்படிச் சொற்களை எடுத்துமே இயம்பினார்

அன்பு என்பதும் பாசம் என்பதும்
நலமா என்பதும் வளமா என்பதும்
வாழ்க என்பதும் வாழ்த்து என்பதும்
நலந்தரும் சொல்லாய் சொல்கிறார் அனைவரும் 

இனியதை நல்கிடும் எல்லாம் நல்லதே
இதயத்தை உடைப்பது இனியவை அல்லவே
இன்பம் நல்கிடும் எல்லாம் நல்லதே
இன்பம் பெருகிட  உரைப்போம் நல்லவை

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 13…..சங்கர சுப்பிரமணியன்.

மாடசாமி அண்ணாச்சி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார் என்று கடந்த தொடரில் கூறியிருந்தேன் அல்லவா? நான் எப்போதும் சொல்லும் இயற்கைதான் கடவுள் என்ற உண்மைதான் அது. மவுண்ட் ப்யூஜி போன்று ஏழுமலையானும் இயற்கை எனும் கடவள்தான். ஏழுமலயானுக்கு சருகண்டி சருகண்டி போல மவுண்ட் ப்யூஜிக்கு மேகமும் மழையும்.

எல்லாவற்றிற்கும் கொடுப்பினை என்று ஒன்று வேண்டும். இயற்கையையே கடவுள் என்பவனும் மனிதன் பாதி மிருகம் பாதி என்று சொல்வதுபோல் இயற்கை வேறு கடவள் வேறு என்பவனும் ஒருவேளை சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டால் யாருக்கு கொடுப்பினை என்பதை உங்களிடமே விடுகிறேன். ஆனால் எனக்கு கொடுப்பினை வானம் இருண்டு போகவில்லை.

ஷிஸுவோகா ரயில் நிலையத்தை தாண்டியதுமே தயாராக

இருந்தேன். அத்தோடு மழையோ மேக கூட்டமோ வந்து மவுண்ட் ப்யூஜியை முழுவதுமாக மறைக்க வில்லை. குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஐந்து பத்து நிமிடங்களில் மவுண்ட் ப்யூஜியை
நன்றாக பார்க்க முடிந்தது. ஆதலால் மவுண்ட் ப்யூஜிக்காக ஹஹோன் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மவுண்ட் ப்யூஜியை பார்த்த மகிழ்ச்சியில் இருந்து விடுபடுமுன்னே ரயில் டோக்கியோ நிலையத்தை வந்தடைந்தது. டோக்கியோ ரயில் நிலையம் எத்தனை பெரியது என்பதை என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு பெரியதாக இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து வெளிவருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. ஆங்கிலத்தில் அறிவிப்பு இருந்தும் திண்டாட வேண்டியிருந்தது.

`வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் மற்றும் மீண்டும் வசந்தகாலம்’ - கிம் கி-துக்கின் தென்கொரிய திரைப்படம் குறித்த பார்வை. - Spring, Summer, Fall, Winter... and Spring – Kim Ki-Duk - கே.எஸ்.சுதாகர்

உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் கி-துக் இன் புகழ்பெற்ற

திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 2003 ஆம் ஆண்டு அவரே எழுதித் தயாரித்து

நடித்தும் இருந்தார். படத்தின் தலைப்பு போலவே, திரைப்படத்தின் காட்சிகள் ஐந்து

பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கதை வெவ்வேறு கால இடைவெளிகளில்

நடக்கின்றது.

வசந்தகாலம்

திரை விலகுகின்றது. அமைதியான ஒரு ஏரியின் நடுவே மிதக்கும் ஒரு பெளத்த

மடாலயம். வசந்தகாலத்தில் மரங்கள் துளிர்த்து நிற்கின்றன. ஒரு வயது முதிர்ந்த

பெளத்த துறவி, மரத்தால் செய்யப்பட்ட மீன்போன்ற வாத்தியக்கருவியை

(மொக்தாக்) சிறிய குச்சியினால் தட்டியபடி புத்தபிரானைக் குனிந்து

வணங்குகின்றார். பின்னர் உறக்கத்தில் இருக்கும் குழந்தைத் துறவியை

எழுப்புகின்றார். சிறுவனும் துயில் கலைந்து, முழந்தாளிட்டு புத்தபிரானை

வணங்குகின்றான். பின்னர் இருவருமாக, மருந்துக்கான மூலிகைகள் தேடி, ஒரு

படகில் தண்டு வலித்துச் செல்கின்றார்கள். இந்த வசந்த காலத்தின் ஆரம்பக்

காட்சியுடன் - வயது முதிர்ந்த துறவியாக வரும் ஓ யங்-சுவும் (O Yeong-su),

குழந்தை துறவியாக வரும் ஜோங்-ஹோ கிம்மும் (Jong-ho Kim) நம் மனதில்

இடம்பிடித்து விடுகின்றார்கள்.

சிறுவன், காடுகள் நிறைந்த மலையில் இருக்கும் புத்தபிரானின் சிலையின்

தோள்மீது ஏறி நின்று அற்புதமான இயற்கையை இரசிக்கும் போது,

ஒளிப்பதிவாளர் நம்மையும் அங்கே அழைத்துச் சென்றுவிடுகின்றார்.

சிறுவன், பாம்புகளைத் தூக்கி சுழற்றி எறிகின்றான். நாயுடன் விளையாடுகின்றான்.

தானே துடுப்பு வலித்து படகோட்டவும் கற்றுக் கொள்கின்றான். அவனின்

குறும்புகள் எம்மை மட்டுமல்ல, முதிர்ந்த துறவியையும் கவர்ந்து கொள்கின்றன.

இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதும் புன்னகை கொள்வதுமாக


இருக்கின்றார்கள். முதிர்ந்த துறவி சிறுவனை மிகவும் பொறுப்புடனும்

அவதானத்துடனும் வளர்க்கின்றார்.

இலங்கையின் கிராமப்புறங்களில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்குக் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல்

 


இலங்கையின் மிகவும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வசதியற்ற தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு Vanni Hope நிறுவனம் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு நீங்கள் வழங்கிவரும் உதவிக்கு மீண்டும் ஒருமுறை எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

“கல்வியின் சக்தியே ஒரு தேசத்தை ஒன்றிணைக்கிறது. வாருங்கள், ஒன்றிணைந்து கல்விக்கு எமது பங்களிப்பை வழங்குவோம்.”

இரு பெற்றோரையும் இழந்துள்ள இந்த மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஒரு ஆதரவாளரைத் தேடுகிறோம்.

தங்களின் அன்பான பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் பின்வரும் மாணவர் கல்வி உதவித்தொகை முன்மொழிவை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறோம்.

மாணவர் விபரங்கள்

பெயர்: P. Keerththikan – வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
பாடசாலை: யா/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்
தரம்: 09

கல்வி உதவித்தொகை விபரங்கள்

காலப்பகுதி: 30 மாதங்கள்

மாதாந்திர உதவித்தொகை:
AUD$ 45.00 / US$ 33.00 / EUR 28.00 / GBP 24.00

வருடாந்த உதவித்தொகை:
AUD$ 540.00 / US$ 396.00 / EUR 336.00 / GBP 288.00

30 மாதங்களுக்கான மொத்த உதவித்தொகை:
AUD$ 1,350.00 / US$ 990.00 / EUR 840.00 / GBP 720.00


தயவுசெய்து கவனிக்கவும்: அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் வரி விலக்கிற்குத் தகுதியானவை.

நன்கொடை வழங்க விரும்புவோர் எமது இணையத்தளத்தில் உள்ள PayPal இணைப்பைப் பயன்படுத்தலாம்:
www.vannihope.org.au

அல்லது இணைக்கப்பட்டுள்ள Vanni Hope – அவுஸ்திரேலியா அல்லது இலங்கை வங்கிக் கணக்கு விபரங்களைப் பயன்படுத்தி நன்கொடை வழங்கலாம்.

உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அன்பான பங்களிப்புக்கும் மீண்டும் ஒருமுறை எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வரப்பிரசாதம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் இலக்கியத் துறையிலும், பத்திரிக்கைத் துறையிலும், மேடைப்


பேச்சிலும் , பட்டி மன்றங்களிலும் கோலோச்சியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் . பிரபல டைரக்டராக விளங்கியவர் ஐ .வி . சசி, இசைஞானியாக திகழ்பவர் இளையராஜா இவர்கள் மூவரும் அறிமுகமான தமிழ் படம் ஒன்றேதான். இம் மூவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்த அந்த படம் வரப்ரசாதம் !


இந்தப் படத்தின் மூலம் தான் வலம்புரி ஜான் கவிஞராக அறிமுகமானார் . அதோடு வக்கீலாக இரண்டு காட்சிகளிலும் தோன்றினார். அதே போல் அவளோட ராவுகள், காளி , குரு போன்ற படங்களை இயக்கிய ஐ வி சசி இப் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார். அதே சமயம் இசையமைப்பாளர் ஆர் . கோவர்தனத்திடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிய இளையராஜாவின் பெயர் முதல் தடவையாக திரையில் காண்பிக்கப் பட்டதும் இந்தப் படத்தில் தான். 

 தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஹீரோ ரவிச்சந்திரன். பல

வெற்றி படங்களை கொடுத்த அவருக்கு 70ம் ஆண்டுகளின் நடுப் பகுதி ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் அவர். 

 படத்தில் நான்கு நண்பர்களாக ரவிச்சந்திரன், விஜயகுமார், சுருளிராஜன் , ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஹீரோயினாக நடித்த ஜெயசித்ரா நன்கு நடித்திருந்தார். ரவியின் நடிப்பு மிகையின்றி அமைந்தது. அதே அளவு நடிப்பை விஜயகுமாரும் வழங்கி இருந்தார். சுருளிராஜன், மனோரமா காமெடி சலிப்பை தந்தது. படத்தில் நீதிபதியாக வரும் அசோகனின் நடிப்பு கிரேட். அவருக்கு இணையாக வரும் எம் என் ராஜம் நடிப்பில் அசத்துகிறார். அதே போல் சி ஐ டி சகுந்தலாவுக்கு இதில் மாறுபட்ட வேடம் . இவர்களுடன் கே . கண்ணன், சுந்தரராஜன் , ஆகியோரும் நடித்தனர். 

 திருமணங்கள் சொர்கத்ததில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள் அவை திருமண மேடையிலும் நிச்சயிக்கப் படுகிறது என்று சொல்கிறது வரப்பிரசாதம் படம்! 1976ம் ஆண்டு வெளிவந்த இப் படத்தின் கதை இவ்வாறுதான் அமைக்கப் பட்டுள்ளது. 

இலங்கைச் செய்திகள்

 அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையாது; குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை - ஜனாதிபதி

மெல்பேர்ன் - கொழும்பு நேரடி விமான சேவை : ‘ஜெட்ஸ்டார்’ குழுவினர் அமைச்சர் அனுர கருணாதிலக்கவுடன் சந்திப்பு

திருகோணமலையில் 29 எண்ணெய்த் தாங்கிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க தீர்மானம் : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

ஜெட்ஸ்டாரின் வாரத்திற்கு மூன்று சேவைகள் : மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமானப் போக்குவரத்து ஆரம்பம் !



அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையாது; குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை - ஜனாதிபதி

Published By: Vishnu

26 Aug, 2026 | 08:01 PM

(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான எந்த தீர்மானத்தையும் நான் எடுக்கபோவதில்லை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. நீதியை தேடும் மற்றும் நீதியை பெற்றுக்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் இது பாதகமாக அமையலாம்.நாட்டு மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புக்களினால் இடைநிறுத்த போவதில்லை, மீளப்பெறுவும் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்த கனடா!

இந்தியா – ரஷ்யா மூலோபாய உறவை ஆழப்படுத்துவதில் மோடியின் பங்கைப் பாராட்டிய புட்டின்

சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்?


நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

28 Aug, 2026 | 03:45 PM

நேபாளத்தில் ஏற்பட்ட இராட்சத வெள்ளப்பெருக்கு நிலைமையில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 538 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், காணாமற்போனவர்களின் எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ள அந்த அமைப்பு, 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளது.

புதன்கிழமை (26) ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 என நேபாள பொலிஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

மாதாந்த சைவ சமயச் சிந்தனைச் சொற்பொழிவு



 


திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026


இப்
போட்டிகள் செப்டம்பர் மாதம் 6ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபத்தில் முற்பகல் 10.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026


இப் போட்டிகள்  செப்டம்பர் மாதம் 6ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

 

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும்  போட்டிகளும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

  கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

 

தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம்  ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.