வாழ்கின்ற வகையிலே மரியாதை கிடைக்கும் !


 














   


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா



மதிப்பு மரியாதை தானாக வரவேணும்
வணங்குதல் வாழ்த்துதல் மனதார வரவேணும் 
கேட்டுப் பெறுவதில் பெருமையே இல்லை
கேளாமல்  கிடைப்பதே பெருமையே ஆகும்

மண்ணிலே நல்லவண்ணம் வாழ்ந்துமே இருந்தால்
எண்ணில்லா மரியாதை எப்போதும் கிடைக்கும்
கண்ணீரைத் துடைக்காமல் கடமையைச் செய்யாமல்
மண்மீது வாழ்ந்தால் மரியாதை கிடைக்காது

இறையடியார் அனைவரையும் ஏற்றியே போற்றுகிறோம்
இன்தமிழில் குறளீந்த வள்ளுவரை வாழ்த்துகிறோம்
ஏற்றமாம் இலக்கியங்கள் எமக்களித்த அனைவரையும்
என்னாளும் போற்றி இதயத்தால் வாழ்த்துகிறோம் 

கவிதை..."ஏன்சொல் தோழி?"... மெல்போர்ன் அறவேந்தன்

 














கனவிலும் வருகிறது நினைவிலும் தொடர்கிறது !















   

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
 மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா



எங்கும் பனைமரம் இடையிடையே ஈச்சமரம்
வெள்ளை மணற்பரப்பில் வேலிக்குள் வீடுகள்
மாடியில்லை மதிலில்லை வசதியாய் வீடில்லை
பனையோலை வீட்டில்த்தான் பலபேரும் வாழ்ந்தார்கள்

கதவில்லை பூட்டில்லை கள்ளர்பயம் இருக்கவில்லை
காசுபணம் நகையில்லை களவெடுக்க ஏதுமில்லை
மண்பானை அடுப்பிருக்கும் மிச்சமாய் சோறிருக்கும்
அடுத்தநாள் நீரூற்றி அனைவருமே பசியாற

தென்னைமரம் வாழைமரம் மாமரமும் வளவிருக்கும்
நல்லதண்ணிக் கிணறும் எல்லையில்லாச் சந்தோஷம்
குடிப்பதற்கும் குழிப்பதற்கும் வற்றாமல் நீர்வழங்கும்
வளவுக்கிண றென்றும் வரமென்றே நினைக்கின்றோம் 

இயற்கையையே சூது கவ்வும்போது செயற்கையாம் புகழ் நிலைக்குமோ?


பதினாறும் நிறையாத பருவ மங்கை
நான்கு வார்த்தைகளே முதலடியில்
இதை முன்பும் சொல்லியிருப்பர்
பின்னும் சொல்லியதை சொல்வர்

பருவம் பதினாறும் நிறையாத மங்கை
வார்த்ததைகளை இப்படியும் மாற்றுவர்
இவ்வாறு முன்பாகவும் சொல்லியிருப்பர்
பின்னரும் இவ்வார்த்தைகளை சொல்வர்

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கையை
வசமாக்கி காதல் பசியூட்டும் ரதியின் தங்கையாக
வார்த்தைகளை மாற்றியும் எழுதியிருப்பர்
வரிசையை மாற்றி பின் நாளிலும் எழுதுவர்

ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்காய் எழுதினால்
வரிகள் அறிந்தோர் மருதகாசி பாடல் என்பர்
ஏற்காது போனால் களவாடியது என்றிடுவர்
பாடலை அறியாதார்முன் புதிய கவிஞராவர்

பேரும் புகழும் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

ஒரு பக்கம் சிவாஜி நடித்த படங்களை டைரக்ட் செய்து கொண்டு மறு புறம் ஏனைய நடிகர்களின் படங்களையும் இயக்கி பேரும் புகழும் பெற்றுக் கொண்டிருந்தார் முக்தா சீனிவாசன். அதன் தொடர்சியாக 1976ல் அவர் டைரக்ட் செய்த படம் பேரும் புகழும்! 


 தனது சொந்த நிறுவனமான முக்தா பிலிம்ஸ் படங்களை டைரக்ட் செய்து கொண்டிருந்த சீனிவாசன் தன் நண்பன் வேணுகோபாலன் என்பவரின் வித்யா மூவிஸ் தயாரிக்கும் படங்களையும் டைரக்ட் செய்து வந்தார். அந்த வகையில் இந்தப் படம் அவரின் தயாரிப்பில் உருவாகி சீனிவாசன் இயக்கத்தில் வெளியானது. 

 சுஜாதா நடித்த படம் என்றால் பேரும் புகழும் நிச்சயம் என்ற

நம்பிக்கை நிலவிய அந்த சீசனில் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார் அவர். அவருக்கு இணையாக முத்துராமன் நடித்தார். 

 முக்தா இயக்கும் படம் என்றால் ஒரு செட் மெனு போல் சிலர் அவர் படங்களில் தொடர்ந்து இருப்பார்கள். இப் படத்திலும் அது தொடர்ந்தது. மனோரமா, சோ, சுந்தரராஜன், ஶ்ரீகாந்த் , தேங்காய் சீனிவாசன் என்று வழமையான நடிகர்கள் எல்லோரும் இதில் நடிக்க போனசாக சவுகார் ஜானகியும் படத்தில் இடம் பெற்றார். இவர்களுன் வை .ஜி .மகேந்திரன், ஐ எஸ் ஆர் , பண்டரிபாய் , ஸ்ரீகாந்த் , வி .கோபாலகிருஷ்ணன் , சுகுமாரி , ராஜவேலு , மணிமாலா ஆகியோரும் நடித்திருந்தனர். 

 வசதியான வீட்டுப் பெண் நிர்மலா . பணக்காரத் தந்தையால் செல்லமாகவும், தாயினால் கண்டிப்பாகவும் வளர்க்கப்படுபவள். அவளுக்கு ஒரு வீக்கனஸ் , தினசரி தன்னைப் பற்றிய செய்தியும் , போட்டோவும் பத்திரிகையில் வர வேண்டும் என விரும்புவாள் . ஒரு நாள் தானே தன் காரை மரத்தில் மோதி விட்டு ஒரு ஆட்டை காப்பாற்ற போய் இந்த விபத்து ஏற்டபட்டது என்று போலி விளம்பரம் தேடுகிறாள். இதனை கோபி என்பவன் கண்டு பிடித்து கண்டிக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அதே கோபி அவளை மணக்கிறான். அவள் பாதையில் சென்று அவளை திருத்த தீர்மானிக்கிறான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக விபரீதம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து நிர்மலாவை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறான் கோபி. நிர்மலா திருந்தி தன் கணவனுடன் வாழ்ந்தாளா என்பதே படத்தின் மீதி. 

 படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். தான் எடுக்கும் சிவாஜி படத்துக்கு கதை வேண்டும் என்று சீனிவாசன் கேட்டுக் கொள்ள கலைஞானம் இக் கதையை சொன்னார். கதையை சிலாகித்த சீனிவாசன் இது ஹீரோயின் சப்ஜெக்ட் இக் கதை சிவாஜிக்கு பொருந்தாது என தீர்மானித்து , தன் நண்பன் வேணுகோபாலன் சிறிய பஜட்டில் எடுக்கும் படத்துக்கு இந்த கதையை தெரிவு செய்ய அதுவே பேரும் புகழும் ஆனது. 

இலங்கைச் செய்திகள்

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு - பொது மன்னிப்பு கோரிக்கைக்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய ஏற்பாடு

ஈரானியக் கப்பல்களால் இலங்கைக்கு நெருக்கடி அமெரிக்க, ஈரான் தூதரகங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ; இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் வலியுறுத்தல்

ஞானசார தேரர் கைது

இலங்கை கடற்பரப்புக்கு அருகாமையில் அமெரிக்கா தடை விதித்த ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் - சிக்கலாக இராஜதந்திர சூழ்நிலைக்கு இலங்கை முகங்கொடுத்திருப்பதாக அமெரிக்க ஊடகம் தகவல்

விஜித ஹேரத் - டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு புகைப்படம் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை! 



சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு - பொது மன்னிப்பு கோரிக்கைக்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆராய ஏற்பாடு 

03 Oct, 2026 | 05:47 PM

(எம்.மனோசித்ரா)

அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்த சட்ட முன்னெடுப்புக்களுக்காக இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வரடங்கிய விசேட இலங்கைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி செல்லவுள்ளது.  ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும கேசரி வார வெளியீட்டுக்கு தெரிவித்தார். தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்தே நாம் ஆராயவுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் கொண்டு செல்லவுள்ளோம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

தடை செய்யப்பட்ட ஓமான் விமானி எவ்வாறு இஸ்ரேல் செல்லும் விமானத்தில் பணியாற்றினார் ?  விசாரணை தீவிரம் !

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் 20க்கும் மேற்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல்கள் முடக்கம் - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு

நீருக்கடியில் இயங்கும் தானியங்கி ட்ரோன்களை இயக்கி சீனா கின்னஸ் உலக சாதனை

நேபாளத்தில் கடும்மழை, வெள்ளம், மண்சரிவு: 24 பேர் உயிரிழப்பு 


தடை செய்யப்பட்ட ஓமான் விமானி எவ்வாறு இஸ்ரேல் செல்லும் விமானத்தில் பணியாற்றினார் ?  விசாரணை தீவிரம் ! 

Published By: Digital Desk 1

03 Oct, 2026 | 10:43 AM


ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் அல் ஹமாமி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி, தீவிரவாதக் கருத்துகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகங்கள் மற்றும் அவரது பின்னணி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமனில் இருந்து வெளியேறிய பின்னர்,  ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஹமாமி தனது பெரும்பாலான காலத்தை சிரியாவில் கழித்ததாகவும், அங்கு அவர் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது தீவிரவாதக் கருத்துக்கள் தொடர்பாக கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏரில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்-சித்-ஆனந்தம் — ஆத்ம தத்துவத்தின் உண்மை

 தேகம் + ஆத்மா = தேகாத்மா.

ஜீவன் + ஆத்மா = ஜீவாத்மா.
பரம் + ஆத்மா = பரமாத்மா.

தேகம், ஜீவன், பரம் ஆகியவை வெவ்வேறு சொற்களாக இருந்தாலும், இவை மூன்றிலும் பொதுவாகவும் சமமாகவும் நிறைந்திருப்பது ஆத்ம தத்துவமே ஆகும். ஆத்மா எங்கும் நிறைந்துள்ளது. இதுவே ‘சத்’ — இருப்பு என்று அழைக்கப்படுகிறது.

இதனை சர்க்கரைக்கு ஒப்பிடலாம். சர்க்கரையை காபியிலோ, தேநீரிலோ, பாலிலோ, பாயசத்திலோ அல்லது வேறு எந்தப் பொருளிலோ சேர்த்தாலும், அதன் இனிப்பு மாறுவதில்லை. காபி, தேநீர், பால், பாயசம் என்று பெயர்களும் வடிவங்களும் மாறுகின்றன; ஆனால் அவற்றில் கலந்துள்ள சர்க்கரையின் இனிமை ஒன்றே.

அதேபோல், ‘சித்’ — விழிப்புணர்வு என்பது மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் உட்பட்டதாகும். சர்க்கரையைத் தண்ணீரில் கலந்தால், அங்கு சர்க்கரையையும் தனியாகப் பார்க்க முடியாது; தண்ணீரையும் தனியாகப் பார்க்க முடியாது. இரண்டும் இணைந்து சர்க்கரைப் பாகாக மாறுகின்றன.

அதேபோல், தெய்வீகத்தைப் பிரதிபலிக்கும் ‘சத்’ என்பதும், உயிர்த் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் ‘சித்’ என்பதும் ஒன்றிணையும்போது, ‘ஆனந்தம்’ — பேரானந்தம் — தோன்றுகிறது. இதுவே சத்-சித்-ஆனந்தம் (Sat-Chit-Ananda) ஆகும்.

இதனை ஒரு பெருங்கடலுக்கு ஒப்பிடலாம். அந்தப் பெருங்கடலில் எண்ணற்ற உயிரினங்கள் அலைகளைப் போல தோன்றி, மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர்களும் வடிவங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றின் அடிப்படையான உண்மை ஒன்றே — அவை அனைத்தும் கடலிலிருந்தே தோன்றியவை; இறுதியில் அதிலேயே கலக்கின்றன.

அதேபோல், இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற பெயர்களும் வடிவங்களும் கொண்ட உயிரினங்கள் தோன்றுகின்றன. அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகத் தோன்றினாலும், அவற்றின் அடிப்படையில் விளங்குவது ஒரே தெய்வீகத் தத்துவமாகும்.

அனைத்து உயிர்களும் சத்-சித்-ஆனந்தத்திலிருந்தே தோன்றியவை. பெயரும் வடிவமும் வேறுபட்டாலும், அவற்றின் ஆதாரமான ஆத்ம தத்துவம் ஒன்றே.

இதுவே ஆன்மிகத்தின் ஆழ்ந்த உண்மை:
வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதும், அனைத்து உயிர்களிலும் ஒரே தெய்வீக ஆத்மாவை உணர்வதுமே உண்மையான ஞானமாகும்.

இறைவனின் அருளே உண்மையான வெற்றி

 ஒருமுறை அர்ஜுனன், தர்மராஜரிடம், தனது சகோதரர்களான பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதி மற்றும் அவர்களது குழந்தைகள் அனுபவித்த துன்பங்களைப் பற்றி அவர் போதிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டினான். ‘நீதி, தர்மம்’ என்ற பெயரில் கண்மூடித்தனமாகப் பற்றிக்கொண்டிருப்பதற்காக, தர்மராஜரை அவன் கடுமையாக விமர்சித்தான்.

ஆனால் தர்மராஜர் சிறிதும் கோபமோ மனவருத்தமோ கொள்ளாமல் அமைதியாகப் பதிலளித்தார்:

“பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு — இவை மட்டுமே உண்மையான வெற்றியைத் தரக்கூடியவை. பொய்யாலும் கொடூரத்தாலும் பெறப்படும் வெற்றியால் என்ன பயன்? அத்தகைய போராட்டம் மேலும் மேலும் போர்களையே உருவாக்கும்.

நாம் எப்போதும் இறைவனின் முன்னிலையில் இருப்பதைப் போல வாழ வேண்டும். நமது ஒவ்வொரு எண்ணத்தையும், சொல்லையும், செயலையும் இறைவன் கவனித்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்கிறான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அனைவரிடத்திலும் உங்களைக் காணுங்கள்; அனைவரையும் உங்களுக்குள் காணுங்கள். அதுவே நிலையான அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழியாகும்.

வெளி உலகத்தின் சாம்ராஜ்யத்தை நாட வேண்டாம்; முதலில் நமது உள்ளார்ந்த சாம்ராஜ்யத்திற்கு அரசர்களாக மாறுவோம். வெளியில் உள்ள பகைவரை எதிர்த்துப் போராடுவதில் மட்டும் கவனம் செலுத்தி, நமக்குள் இருக்கும் பகைவரை வளர விட்டுவிடக் கூடாது.

கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார். நம்மை யாரால் வெல்ல முடியும்? அவருடைய அருளைப் பெறுவதன் மூலம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.”

எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், எத்தகைய சோதனைகளையும், கவர்ச்சிகளையும் எதிர்கொண்டாலும், தர்மத்தின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதீர்கள். உங்கள் இறைநம்பிக்கையை எந்தச் சூழ்நிலையிலும் தளர விடாதீர்கள்.

செல்வம், பிள்ளைகள், புகழ், பதவி அல்லது அதிர்ஷ்டம் ஆகியவற்றுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்தால், அதன் மூலம் நாம் உண்மையில் யாரிடம் பற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறோம். அப்போது, “நான் இறைவனை அல்ல; செல்வத்தையும், பிள்ளைகளையும், புகழையும், பதவியையுமே பற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று நாமே அறிவிப்பது போலாகிவிடும்.

நாம் உண்மையிலேயே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தால், அந்தப் பக்தியை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்?

தெய்வீகப் பண்புகளை வெளிப்படுத்துங்கள்.
தெய்வீக நற்குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தெய்வீக அன்பை வெளிப்படுத்துங்கள்.
தெய்வீக வலிமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு வாழும்போது, இறைவனின் பண்புகள் நம்முள் வெளிப்படும்.

இறைவனின் அருளைப் பெறுவதிலேயே உண்மையான வெற்றி உள்ளது. அந்த அருளை நம்பிக்கையுடன் நாடி, தர்மத்தின் பாதையில் உறுதியாக நடப்பதே மனித வாழ்க்கையின் உயர்ந்த சாதனையாகும்.

ஒற்றுமையில் தூய்மை; தூய்மையில் தெய்வீகம்

 இந்த உலகில் காணப்படும் வேற்றுமைகளில் ஒற்றுமையைக் காண்பது மிகவும் எளிதானது. அதை யார் வேண்டுமானாலும் காண முடியும். ஆனால், உலகில் காணப்படும் அனைத்து வேற்றுமைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஒற்றுமையை உணர்வதற்கு மிகுந்த முயற்சியும், ஆழ்ந்த ஆன்மிகப் புரிதலும் தேவை.

இன்று மனிதன், அனைவரிடத்திலும் ஒரே சீராக நிறைந்திருக்கும் ஆத்ம தத்துவத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். ஆத்மாவின் உண்மையை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான்.

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் ஒரே குடும்பமாகக் கருதி, மனிதகுலம் முழுவதும் ஒன்றே என்ற உண்மையை உணர வேண்டும்.

மதங்கள் பல; ஆனால் இறைவனை அடையும் இலக்கு ஒன்றே.
ஆடைகள் பல; ஆனால் அவற்றை உருவாக்கும் நூல் ஒன்றே.
நகைகள் பல; ஆனால் அவை அனைத்திற்கும் அடிப்படையான தங்கம் ஒன்றே.
பசுக்கள் பல; ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் பால் ஒன்றே.

இவ்வாறு பார்க்கும்போது, இறைவன் படைத்த இந்தப் படைப்பின் முழுவதிலும் ஒற்றுமையே அடிப்படையாக உள்ளது. ஆனால் மனிதன்தான் அதில் பல்வேறு பிரிவுகளையும் வேற்றுமைகளையும் உருவாக்குகிறான்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது மனிதகுலத்தின் ஒற்றுமை ஆகும். சாதி, மதம், மொழி, இனம், நாடு போன்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரிடத்திலும் ஒரே ஆத்ம தத்துவம் விளங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளும்போது, நமது இதயத்தில் தூய்மை மலரும். தூய்மை இருக்கும் இடத்தில் தெய்வீகம் வெளிப்படும்.

எனவே, ஒற்றுமை, தூய்மை, தெய்வீகம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை; ஒன்றை ஒன்று சார்ந்தவை.

ஒற்றுமை இருக்கும் இடத்தில் தூய்மை பிறக்கும்; தூய்மை இருக்கும் இடத்தில் தெய்வீகம் வெளிப்படும். இதுவே மனித வாழ்க்கையின் உயர்ந்த ஆன்மிகப் பாதையாகும்.

தீய எண்ணங்களும் தீய செயல்களும் அழிவுக்கு வழிவகுக்கும்

 மனிதன் தனது புலன்கள் தவறான வழியில் சென்று, தீய செயல்களில் ஈடுபடாதவாறு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தீயவற்றை எண்ணுதல், தீயவற்றைப் பேசுதல், தீயவற்றைப் பார்ப்பது ஆகியவை இறுதியில் மனிதனை முழுமையான அழிவுக்கே இட்டுச் செல்லும்.

இதற்கு மகாபாரதத்தில் துரியோதனனின் வாழ்க்கையே ஓர் சிறந்த உதாரணமாகும். துரியோதனன் எப்போதும் பாண்டவர்களைப் பற்றி தீய எண்ணங்களையே கொண்டிருந்தான். அந்தத் தீய எண்ணங்கள் நாளடைவில் பகையாக வளர்ந்து, இறுதியில் அவனது குடும்பத்தையே அழிவுக்குக் கொண்டு சென்றன.

அதேபோல், பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் மறைமுகமாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, கீசகன் திரௌபதியின் மீது தீய பார்வை கொண்டான். அவனது தீய எண்ணத்திற்கும் தவறான நடத்தைக்கும் இறுதியில் அவன் தனது உயிரையே விலையாகக் கொடுக்க நேர்ந்தது.

இராமாயணத்திலும் இதற்கு ஓர் சிறந்த உதாரணம் உள்ளது. கைகேயி, மந்தரையின் தீய ஆலோசனையைக் கேட்டதன் காரணமாக, தனது கணவனான தசரத மன்னரை மட்டுமல்லாமல், தனது சொந்த மகனான பரதனின் அன்பையும் மதிப்பையும் கூட இழந்தாள்.

துரியோதனன், கீசகன், இராவணன் போன்ற பெயர்களால் இன்று யாராவது அறியப்பட விரும்புகிறார்களா? நிச்சயமாக இல்லை. அந்தப் பெயர்களுடன் இணைந்துள்ள தீய குணங்களே அவர்களை இன்றும் நினைவுகூரச் செய்கின்றன.

ஆனால், அந்தப் பெயர்களை நாம் விரும்பவில்லை என்றாலும், அவர்கள் வெளிப்படுத்திய தீய குணங்களை மனிதகுலம் இன்னும் முழுமையாக விட்டுவிடவில்லை என்பதே வருத்தத்திற்குரியது.

எனவே, ஒவ்வொருவரும் தமது எண்ணங்களையும், பார்வையையும், பேச்சையும், கேட்பதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • தீய எண்ணங்களை விட்டொழிப்போம்.
  • தீய பார்வையைத் தவிர்ப்போம்.
  • தீய மற்றும் கெட்ட வார்த்தைகளைப் பேசாதிருப்போம்.
  • தீய ஆலோசனைகளையும் அவதூறான பேச்சுக்களையும் கேட்பதில் ஆர்வம் காட்டாதிருப்போம்.

நமது புலன்கள் நம்மை வழிநடத்தாமல், நமது நல்லறிவே புலன்களை வழிநடத்த வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாகவும், நல்ல சொற்கள் நல்ல செயல்களாகவும், நல்ல செயல்கள் உயர்ந்த வாழ்க்கையாகவும் மலர்கின்றன.

ஆகவே, தீமையை எண்ணாமல், தீமையைப் பார்க்காமல், தீமையைப் பேசாமல், தீமையைக் கேட்காமல் வாழ்வதே உண்மையான ஆன்மிக சாதனையின் ஒரு முக்கியமான படியாகும்.

விக்கிரக வழிபாட்டின் உண்மையான பொருள்

 விக்கிரகங்கள் இயல்பிலேயே ஜடப்பொருள்கள்; அவற்றுக்கு இரக்கம், அன்பு, பொறுமை போன்ற மனிதப் பண்புகள் எதுவும் இருப்பதில்லை. இதன் காரணமாக சிலர் விக்கிரக வழிபாட்டை எதிர்க்கின்றனர். ஆனால், இது உண்மையைப் புரிந்துகொள்ளாத அறியாமையாகும்.

ஒரு குறிப்பிட்ட பொருளை — உதாரணமாக, ஒரு மலரையோ அல்லது ஒரு குவளையையோ — சுட்டிக்காட்டுவதற்கு நாம் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்துகிறோம். அதுபோலவே, விக்கிரகங்களும் இறைநிலையைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களாக உள்ளன. இறைநிலையை உணர்ந்துகொண்ட பிறகு, அந்த இறைநிலையைச் சுட்டிக்காட்டிய அடையாளமான விக்கிரகம் நமக்குத் தேவையில்லாமல் போகலாம்.

இவ்வாறு இருக்கும்போது, விக்கிரக வழிபாட்டை எதிர்ப்பது அறிவுடைமையா?

நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளின் புகைப்படங்களைப் போற்றி வைத்திருக்கிறீர்களல்லவா? அந்தப் புகைப்படங்களில் உயிர் இருக்கிறதா? இல்லை. அவற்றில் இரக்கம், அன்பு, தியாகம் போன்ற பண்புகள் இருக்கின்றனவா? இல்லை. அப்படியானால், அவற்றைப் போற்றி வைத்திருப்பதன் பொருள் என்ன?

அந்தப் புகைப்படங்களின் மூலம் அவர்கள் வாழ்ந்து காட்டிய நற்பண்புகளையும், உயர்ந்த இலட்சியங்களையும் நாம் நினைவுகூருகிறோம். புகைப்படம் வெறும் காகிதமாக இருந்தாலும், அது நம் அன்புக்குரியவர்களின் நினைவையும், அவர்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தந்த மதிப்புகளையும் நம் மனதில் எழுப்புகிறது.

இதேபோன்ற ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஆறு அங்குலம் × நான்கு அங்குலம் அளவுள்ள நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தாளில் உயிர் இருக்கிறதா? அன்பு, இரக்கம் போன்ற நற்பண்புகள் அதற்கு இருக்கின்றனவா? இல்லை. இருந்தாலும், மக்கள் அந்தப் பணத்தாளை விரும்புகின்றனர்; அதைத் தங்களிடம் வைத்திருக்க விரும்புகின்றனர். பணத்தை விரும்பாதவர் உலகில் யாராவது இருக்கிறார்களா?

அதேபோல், தேசியக் கொடி வெறும் உயிரற்ற துணித்துண்டுதான். ஆனால் அது பிரதிபலிக்கும் நாடு, தேசப்பற்று, தியாகம் மற்றும் தேசிய மரியாதை ஆகிய உயர்ந்த மதிப்புகளுக்காக நாம் அதைக் கௌரவிக்கிறோம்.

எனவே, உயிரற்ற ஒரு பொருளை வணங்குவதோ அல்லது மதிப்பதோ அதன் பொருட்டாக மட்டுமல்ல; அது சுட்டிக்காட்டும் உயர்ந்த மதிப்பையும் உணர்வையும் போற்றுவதற்காகவே ஆகும்.

விக்கிரக வழிபாடு முட்டாள்தனமானது என்று கூறினால், அதே அளவுகோலைப் பணத்தின் மீதான நமது பற்றுக்கும், தேசியக் கொடியின் மீதான நமது மரியாதைக்கும் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் அவையும் உயிரற்ற பொருள்களே.

விக்கிரகம் இறைவன் அல்ல; அது இறைவனை நினைவூட்டும் ஓர் அடையாளம். பக்தனின் மனதைப் புலன்களிலிருந்து திருப்பி, உருவமற்ற தெய்வீக உண்மையை நோக்கிச் செலுத்துவதற்கான ஒரு வழியாக விக்கிரக வழிபாடு அமைகிறது.

காயத்ரி மந்திரம் — உலகளாவிய பிரார்த்தனை

 காயத்ரி மந்திரம் என்பது உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு உலகளாவிய பிரார்த்தனை ஆகும். ஏனெனில், சூரியனிலும், மூவுலகிலும் பரவி நிற்கும் பேரொளிமிக்க தெய்வீக சக்தியை அது வேண்டுகிறது. அந்தத் தெய்வீக சக்தி நமது புத்தியைத் தூண்டி, விழிப்புணரச் செய்து, வலிமைப்படுத்த வேண்டும் என்பதே காயத்ரி மந்திரத்தின் பிரார்த்தனையாகும். தெளிவும் வலிமையும் பெற்ற புத்தி, தீவிரமான சாதனைக்கு நம்மை வழிநடத்தும்; அந்தச் சாதனை இறுதியில் வெற்றிக்கு வழிவகுக்கும்.

கண்ணின் மீது இமை விழும்போதுகூட ஒரு நுண்ணிய ஒலி உண்டாகிறது. ஒரு மலரிதழின் மீது பனித்துளி விழும்போதுகூட ஓர் ஒலி ஏற்படுகிறது. அமைதியைச் சற்றேனும் குலைக்கும் எந்தவொரு சிறிய அசைவும் ஓர் ஒலியை உருவாக்கியே தீரும். ஆனால் அந்த ஒலி நம் காதுகளுக்குக் கேட்காமல் இருக்கலாம்; காரணம், நாம் கேட்கக்கூடிய ஒலியின் எல்லை மிகவும் குறுகியது.

பிரம்மத்தைத் தானாகத் தோன்றிய மாயை சூழ்ந்துகொள்ளக் காரணமான ஆதிமுதற் பேரியக்கத்திலிருந்து எழுந்த ஒலியே “பிரணவ சப்தம்” அல்லது “ஓம்” ஆகும். காயத்ரி மந்திரம் அந்தப் பிரணவத்தின் விரிவான வடிவமாகும். அதனால்தான் காயத்ரி மந்திரம் மிகவும் புனிதமானதாகவும், போற்றுதலுக்குரியதாகவும் கருதப்படுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் ஒருவர் பிரவேசிக்கும் போது, காயத்ரி மந்திரத்தைத் தியானிப்பதன் மூலம் அந்த ஆன்மிகத் தொடக்கம் நிறைவேறுகிறது.

ஒரு மந்திரத்தின் ஒலிக்கும் அதன் பொருளுக்கு இணையான முக்கியத்துவம் உண்டு. தொட்டிலில் இருக்கும் குழந்தை அழும்போது, தாலாட்டு பாடத் தொடங்கியவுடன் அதன் அழுகை நின்றுவிடுகிறது. அந்தத் தாலாட்டில் ஆழமான பொருள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம். அது பொருளற்ற ஒரு சிறு பாடலாகவோ, வெறும் இனிமையான ஓசைகளின் தொகுப்பாகவோ இருக்கலாம். இருந்தாலும், அந்த ஒலி குழந்தையின் மனதை அமைதிப்படுத்தி, நரம்புகளைச் சாந்தப்படுத்தி, உறக்கத்தை வரவழைக்கிறது.

காயத்ரி மந்திரத்தைப் பொறுத்தவரை, அதன் ஒலிக்கு மட்டுமல்ல, அதன் பொருளுக்கும் ஆழமானதும் எளிமையானதுமான சிறப்பு உண்டு. அது நம்மிடம் இரக்கத்தையோ மன்னிப்பையோ வேண்டுவதில்லை. மாறாக, நமது புத்தி தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்றே அது வேண்டுகிறது.

உண்மை எவ்விதத் திரிபும், சிதைவும் இல்லாமல், அதன் உண்மையான வடிவிலேயே நமது புத்தியில் பிரதிபலிக்க வேண்டும். அதற்குத் தேவையான தெளிந்த அறிவையும், தூய்மையான சிந்தனையையும் அருளுமாறு காயத்ரி மந்திரம் பிரார்த்திக்கிறது.

தெளிந்த புத்தியே உண்மையை உணர்வதற்கான கண்ணாடி; தூய்மையான மனமே இறைவனை பிரதிபலிக்கும் ஆலயம்.

உண்மையான மகாராஜா யார்?

 எல்லா விதமான செல்வங்களையும், வளங்களையும், அதிகாரத்தையும் பெற்றிருப்பவனே சிறந்த அரசன் என்று கூற முடியாது. உண்மையான மகாராஜா (மாபெரும் அரசன்) என்பவர், தன்னிடம் உள்ள அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து சரணடைந்தவரே ஆவார். அவர் ஒரு தியாகி; அவர் ஒரு யோகி — இறைவனுடன் ஒன்றிப்பதையே தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்.

இதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புனிதத் தலங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு இருக்கும் சாதுக்கள் மற்றும் துறவிகளை பக்தர்கள் “மகாராஜ்” என்று மரியாதையுடன் அழைப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் துறந்து, இறைவனையே சரணடைந்து, அவருடன் ஒன்றிணைவதற்காக ஆன்மிக சாதனைகளை மேற்கொள்வதால், அவர்கள் “மகாராஜ்” என்று போற்றப்படுகின்றனர்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கூறினார்:

“எனது செல்வம் ‘ஸ்ரீ’ அல்ல; ‘ஹரி’. நான் இலட்சுமி தேவியை அல்ல, இலட்சுமியின் நாதனான திருமாலை (விஷ்ணுவையே) மதிக்கிறேன்.”

நாம் இறைவனை அடைவதையே வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியமாகக் கொண்டால், நமக்கு எந்தக் குறையும் ஏற்படாது. இறைவன் மீதான அன்பைவிட உயர்ந்த செல்வம் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.

இந்த உன்னதமான செல்வத்தை — இறைவன் மீதான அன்பையும் பக்தியையும் — பெற்றுக்கொள்வதற்காகவே மனிதன் இவ்வுலகில் பிறந்திருக்கிறான். உலகச் செல்வங்கள் அனைத்தும் நிலையற்றவை; ஆனால் இறைவனின் மீது கொள்ளும் அன்பு என்றும் அழியாத உண்மையான செல்வமாகும்.

Mobile Breast Cancer Unit நிதி திரட்டும் இரவு விருந்து – சனிக்கிழமை, 10 அக்டோபர் 2026