திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026

இப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 10.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

தயவுசெய்து 2026 ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026

கீழ்ப்பிரிவு

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஐந்து குறள்களையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 322:

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு

குறள் 350:

பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

குறள் 616:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

குறள் 783:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

 ---------------------------------------------------------------------------------------------------

திருக்குறள் மனனப் போட்டிகள் – 2026

மத்தியபிரிவு

கீழே கொடுக்கப்பட்டுள்ள  ஆறு குறள்களையும் மனனம் செய்து ஓப்புவித்தல் வேண்டும்.

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்

குறள் 392:

எண் ன்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு

குறள் 964:

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

குறள் 734:

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு

குறள் 155:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

----------------------------------------------------------------------------------

திருக்குறள் மனனப் போட்டிகள் - 2026

மேற்பிரிவு

கிழே கொடுக்கப்பட்ட ஆறு குறள்களையும் மனனம் செய்து, அவற்றின் பொருளையும் தெளிவாக விளக்குதல் வேண்டும்.  (பொருளும் கீழே தரப்பட்டுள்ளது.  பொருள் வேறு படாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

விதியை விட வலிமையுடையது வேறு ஒன்றும் இல்லை.  விதியை விலக்கும் வேறொரு வழியை ஆராய்ந்து செயல் பட்டாலும் அங்கும் அவ்விதியே முன் வந்து நிற்கும்

குறள் 964:

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

தலையில் இருக்கும் போது உயர்வாகப் பேணி வளர்க்கப்பட்டு இருந்தாலும், தலையை விட்டுக் கீழே விழுந்து விட்டால் மதிப்பாரற்றுப் போகின்ற மயிர்போல, மனிதர்களும் தங்கள் நிலை மாறி இழிவுற்றால் தேடுவாரற்றுப் போவர்.

குறள் 784:

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

---------------------------------------------------------------------------------

திருக்குறள் மனனப் போட்டிஅதிமேற்பிரிவு – 2026

கீழே  கொடுக்கப்பட்ட ஏழு குறள்களையும் மனனம் செய்து அவற்றின் பொருளையும்  தெளிவாக விளக்குதல் வேண்டும் (பொருளும் கீழே தரப்பட்டுள்ளதுபொருள் வேறுபடாவண்ணம் தெளிவாக விளக்கினால் போதுமானது)

குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

நினைப்பவை எல்லாம் உயர்வானதைப் பற்றியே இருக்க வேண்டும்.  அப்படி நினைத்த உயர்வு கைகூடாவிட்டாலும் நினைப்பதை நிறுத்திக் கொள்ளக்கூடாது.

குறள் 397:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.  எல்லா ஊருமே ஊர்தான் அவர்கள் நாடுதான்.  இவ்வளவு சிறப்பு கல்வியறிவால் கிடைக்கும் என்பது அறிந்திருந்தும், ஏன்தான் சிலர் சாகும் வரையும் கூட படிக்காமல் திரிகிறார்களளோ?

குறள் 358:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

பிறவியோடு தொடர்கின்ற அறியாமை நீங்கிப் புகழ் தரும் மெய்ப்பொருளைக் காண்பதே உண்மையான அறிவாகும்.


 

 

குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

பிறர்க்கு முதலில் செய்கின்ற துன்பங்கள், தாமாகவே அத்துன்பம் செய்தவர்க்கும் பிறகு வந்து சேரும்.

குறள் 74:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

அன்புடையவராய் இருத்தல் பிறர் விரும்ப வாழும் சிறப்பைத் தரும்.  அதனால் பகையின்றி எவரையும் நண்பராகப் பெற்றுத் திகழும் நலத்தை, நாடிச் செல்லமலே அடையலாம்.

குறள் 35:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

பொறாமை அடைதல், பிறர் பொருளின் மீது ஆசை வைத்தல், கோபம் கொள்ளுதல், சுடுசொல் பேசுதல், இவை நான்கினையும் தவிர்த்து வாழ்வதே நல்வினையாகும்.

குறள் 20:

நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

தண்ணீர் இன்றி, உலகில் யாராலும் வாழமுடியாது.  அந்தத் தண்ணீரும் மழையின்றேல் கிடைக்காது.  உயிர் வாழ  மழை முக்கியம்.

 

சிரித்து மகிழ - நல்லன சொல்வதற்கு - மட்டுமே அல்ல நட்பு.  தவறு செய்கிறபோது தடுத்து நிறுத்தி கண்டிக்கத்தக்கது நட்பு ஆகும்.

குறள் 622:

வெள்ளது அனைய இடும்பை அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

வெள்ளம் போல் துன்பம் தொடர்ந்து பெருகிவரினும் அறிவுடையோர் மனத்திண்மையால் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்வர்.  வந்த துன்பமும் தொலையும்.

குறள் 615:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்

தன் இன்பத்தைக் கருதாமல் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதையே இன்பம் என்று கருதுபவன், தன் சுற்றத்தாரின் துயர் போக்கிக் காக்கின்ற தூண் போன்றவன் ஆவான்.

No comments: