அன்சாக்களை நினைவுகூருதல் - நாம் மறக்காமல் இருப்போம்


 




“ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் – சில நினைவுகள் - செ .பாஸ்கரன்

 .

தி. ஞானசேகரன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் சிறந்த சிந்தனையாளர் மற்றும் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். குறிப்பாக “ஞானம்” எனப்படும் சஞ்சிகையின் மூலம் வாழ்க்கை நெறிகளை பொதுமக்களிடம் எளிமையாக கொண்டு சென்றவர்.

சிரித்தமுகம், அமைதியான ஆனால் ஆழமான பேச்சு. காணுமிடமெல்லாம் அன்பாக பேசிப்பழகும் ஒரு மனிதர், மறைந்து விட்டார் என்றதும் அந்த சிரிப்பும் பார்வையும் தான் கண்முன்னே வந்து நின்றது. 

“ஞானம்” சஞ்சிகை என்பது சாதாரண இதழாக இல்லாமல், மனிதன் தனது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனை மேடையாக வழங்கியவர். ஈழத்து எழுத்தாளர்களை மட்டுமல்லாது புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களையும் எழுத தூண்டி அவர்களின் எழுத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர் .  

இவரது எழுத்துக்கள் அவர் வாழ்ந்த இடங்களையும் அனுபவத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இலகுவான எழுத்துக்களாகும் .  எமது போராட்டத்தை சிறுகதையாக கொடுத்தபோது  தமிழ் இளைஞர்கள்  ஏன் ஆயுதம் ஏந்தி போர் செய்ய வேண்டி வந்தது என்பதை "அல்சேசன் நாயும் பூனைக்குட்டியும்" என்ற சிறுகதை மூலம் ஒரு பெரிய அரசியலை சுவையாகவும் மிக ஆழமாகவும் சொல்லி சென்றவர்.

ஞானம் சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடு சிட்னி 2017 

 இவரது எழுத்துகள் எளிமையான தமிழில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் ஆழமான அர்த்தங்களை கொண்டிருக்கும், 

இவரோடு பழககிடைத்த சந்தர்ப்பங்களை பெறுமதி மிக்கதாக கருதுகிறேன். அவரின் மறைவு மனதில் மெல்லிய சுமையாக கனக்கின்றது .  அவரின் பிள்ளைகளுக்கும் அன்பு மனைவிக்கும் தமிழ்முரசு அவுஸ்திரேலியாவின் ஆழ்ந்த  அனுதாபங்கள்.


ஞானம் சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடு சிட்னி 2017


சிட்னியில் Toongabbie வணிகர் அமைப்பு நடத்திய சித்திரைப் புத்தாண்டு விழா 2026

 அங்காடி உரிமையாளர்களோடு ATBC வானொலிக்காக நிகழ்த்திய பேட்டி






கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம் !


 












 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



கீதை சொல்லக் கண்ணன் தேரேறி வந்தான்
பார்த்தனுக்குப் பாதை காட்டியவன் நின்றான்
பார்த்தனவன் தெளிந்தான் பக்குவத்தை அடைந்தான்
பாரிலுள்ளார் விழிக்கப் படித்திடுவோம் கீதை 

கீதையைப் படித்தால் பாதை தெளிவாகும்
பாதை தெளிவானால் பயணம் சிறப்பாகும்
பயணம் சிறப்பானால் மனது மகிழ்வடையும்
மனது மகிழ்வடைந்தால் நிறைவுவங்கே பொலியும்

எண்ணுகின்ற எண்ணம் இழுக்ககற்ற வேண்டும்
இழுக்ககன்று நிற்க இறைநினைப்பு வேண்டும்
இறைநினைப்பை ஊட்ட கீதை வழிகாட்டும்
வழிகாட்டும் கீதை வாழ்க்கைத் துணையாகும்

என்றாலும் அக்காலம் இனிப்பாக இருக்கு !

 












   

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... ஆஸ்திரேலியா 



கல்லும் தெரியாது முள்ளுந் தெரியாது
காலிலே செருப்புமின்றி எப்படித்தான் திரிந்தோமோ 
குழங்கண்ட இடமெல்லாம் குதித்துமே நீந்திடுவோம்
நேரங்கெட்ட நேரத்தில் நிறையவே சாப்பிடுவோம்

ஊருறங்கும் வேளை ஊர்சுற்றித் திரிவோம்
ஒழுங்கையெலாம் நாங்கள் ஓடியே திரிவோம்
காலோய்ந்த பின்னால் வீடுவந்து படுப்போம்
கட்டிலும் இல்லை மெத்தையும் இல்லை 

கட்டாந் தரையே எங்கள் கட்டிலாகும்
எறும்பு கடிக்கும் நுளம்பும் கடிக்கும்
அவைப்பாட்டில் கடித்து அவையலுத்துப் போகும்
ஓடியலைந்த களைப்பில் கும்பகர்ணன் ஆகிடுவோம்

சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா  




மேன்மைகொள் சைவநீதி விளங்கிட வைப்பதற்கு
மாதராய் வந்தமைந்தார் மங்கையர் கரசியாரும் 
அரசியாய் ஆனபோதும் அரனது அடியைப்பற்றி
தினமுமே தொழுதுநின்றார் தீயவை அகன்றுபோக

தீயதாம் சமணந்தன்னை சிந்தையில் கொண்டதாலே
பாண்டிய நாட்டுமன்னன் பரமனை மறந்துபோனான்
பரமனைப் பற்றிநின்ற அவனது மனைவியான
மங்கையர் கரசியாரோ பரமனைப் பணிந்துநின்றார்

சைவத்தின் போக்குவேறு சமணத்தின் போக்குவேறு
அனைவரும் இணைந்துநிற்கும் அன்பதே சைவமாகும்
ஒறுப்பது சமணமாகும் வெறுப்பது சமணமாகும்
மக்களை விட்டுவிட்டு தத்துவம் சொல்லிநிற்கும்

விந்தை என்னென்பேன் வேல்விழி மாதே! - -சங்கர சுப்பிரமணியன்.


குன்றிலிட்ட விளக்காய் இருக்க
அனைவருக்கும் ஆசைதான்
குடத்திலிட்ட விளக்காய் இருக்க
அனைவராலும் முடியும்

குன்றிலிட்ட விளக்கு அனைந்துவிடும்
எதிர் கொள்ளும் பிரச்சனை ஆயிரம்
காற்று மழை எனப் போராட்டம்

போராட்டம் தாண்டியும் பிழைத்திருக்க
தீப்பந்தமாய் திறமை வேண்டும்
விளக்காய் நின்று வெளிச்சம் தந்தால்
கொஞ்சகாலமே ஆயுள் குறைந்து நிற்கும்

குடத்தில் இட்ட விளக்கு
வெளிச்சம் தராது அதற்கென்றும்
ஆபத்தொன்றும் எந்நாளும் வராது
காற்று மழையெனக் கவலையில்லை

கவிதை..."நீ வருவாய் என!"... மெல்போர்ன் அறவேந்தன்










 


Azonway Pictures "GREY" Promo

 .


சிட்னியில் வசிக்கும் நடிகர் , தயாரிப்பாளர் திரு செல்வின்தாஸ் அவர்களின் 5 வது திரைப்படமான க்கிறே (GREY ) யின்  திரைப்பட முன்னோட்டம் வெளியிடப் பட்டுள்ளது.



Azonway Pictures - லீ முரளி இணையும் புதிய படத்தின் ‘டைட்டில் போஸ்டர்‘ ஏப்ரல் 13 வெளியீடு!

 .

Azonway Pictures - லீ முரளி இணையும் புதிய படத்தின் ‘டைட்டில் போஸ்டர்‘ ஏப்ரல் 13 வெளியீடு!

'கூத்தாடி' திரைப்படத்தை தொடர்ந்து Azonway Pictures தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் #பெயர் #title எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

Azonway Pictures இன் ஐந்தாவது திரைப்படமாக உருவாகும் இதனை லீ முரளி இயக்குகின்றார். இதன் தொடக்க விழா (பூஜை) அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்றதுடன், படப்பிடிப்புக்களும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இதில் செல்வின் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அவருடன் இணைந்து பிரபல சிங்கள நடிகர்களான ரஞ்சன் ராமநாயக்க, உதாரி வர்ணகுலசூரியா, மிச்சல் தில்காரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அதேசமயம், ஈழத்தின் சிறந்த நடிகர்களான அல்விஸ் கிளின்டன், ஆர்.ஜே நெலு, பானுக பெர்னாண்டோ, கிரிஷான் வினோதன், தர்சி பிரியா, பூர்விகா ராஜசிங்கம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், ஹிப் ஹாப் சங்கீ இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இலங்கையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கதிர் ஒளிப்பதிவு செய்கின்றார்.

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 3…..சங்கர சுப்பிரமணியன்.

தென் சீனாவில் குவாங்டங் மாநிலத்தின் தலைநகரான மிகப் பெரிய நகரம் குவாங்சௌ. குவாங்சௌவை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது சீனா சதர்ன் விமானச்சேவை.

நான் கடந்த முறை சீனா சென்றிருந்தபோது பார்த்த சீனாவின் தலைநகரான பீஜிங்கின் மற்றொரு விமான நிலையமான டாக்ஸிங் பன்னாட்டு விமான நிலையத்தைப் போன்றே குவாங்சௌ விமான நிலையமும் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அதன் பிரமிப்பை கண்டு களிக்கும் விதமாக அங்கு தங்கவேண்டி இருந்த நான்கரை மணி நேரம் எனக்கு உதவியது.

இப்படி விமான நிலையம், விமானம், வழங்கப்படும் உணவு மற்றும் கவனிப்பு என்று இருந்தாலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் இணையாகுமா என்று எண்ணினேன். அதன்பின் அதற்கான காரணங்களை அறிந்தேன். என்னதான் சிங்கப்பூர் ஏன்லைன்ஸுக்கு இணையாக இருந்தாலும் விமான சேவையில் எப்போதும் சீரான தன்மை இல்லை.

அடுத்ததாக மொழிப் பிரச்சனை. மேலும் டிரான்சிட் என்று சொல்லப்படும் பயணத்தில் கடந்து போகும் இடம். குவாங்சௌ பையுன் பன்னாட்டு விமான நிலையம் பிரம்மாண்டமாக இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் டிரான்ஸிட்டுக்காக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைத்தான் தேர்வு செய்கிறார்கள். இவை போன்ற காரணங்கள் உள்ளன.

விமான நிலையத்திலேயே தாமதித்த போதும் திரும்பவும் ஜப்பான் செல்ல சீனா சதர்ன் விமானத்தில் ஏறுமுன் கடுமையான சோதனைக்கு பயணிகள் உள்ளாக்கப் பட்டனர். ஒருவழியாக ஜப்பான் செல்ல விமானத்தில் அமர்ந்தோம். சரியாக சீன நேரப்படி காலை 10.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் ஓட ஆரம்பித்தது. இந்த விமானமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தைப் போன்று நன்றாகவே இருந்தது.

முதலில் வந்த விமானத்தைப் போன்று இந்த விமானத்தில் விளம்பரங்கள் ஏதும் இல்லை. இந்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவும் நன்றாகவே இருந்தது. சுமார் நான்கரை நேரப் பயணத்திற்கு பின் மாலை 3.00 மணயளவில் ஜப்பான் ஓஸாகா கன்சாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கி பொதிகளைப் பெற்றபின் விமான நிலயத்தைவிட்டு வெளியேறும் முன் செய்யவேண்டிய பணிகள் இருந்தன.

இருட்டடிப்பு செய்வாரோடு இணங்க வேண்டாமென்பதும் இன்னா செய்தாரை ஒறுத்தலும்! ……சங்கர சுப்பிரமணியன்.





-சங்கர சுப்பிரமணியன்.


 மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று கண்ணதாசன் பாடல் வரி போல் மனிதன் மதத்தில்தான் மூழ்கி விட்டான் என்று எண்ணி இருந்தேன். ஆனான் மனிதன் குணத்திலும் மாறிவிட்டான். 


இதை உலகநாத பண்டிதர் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இல்லாவிடில் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம் என்று எழுதியவர்
இருட்டடிப்பு செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்றும் கூறியிருப்பார்.

இப்படியாக பெங்களூர்த் தமிழ்ச்சங்க வீதியில் நடைபயிற்சி  சென்றுகொண்டிருந்த பரந்தாமன் நண்பன் பாண்டியனிடம் புலம்பிக் கொண்டே வந்தான். அப்போது பாண்டியன்,

“என்னடா, என்னவோ உலகநாத பண்டிதர் என்று ஏதேதோ சொல்கிறாய்” என்றான்.

“ஆமாண்டா, தமிழென்றாலே வேப்பங்காயாய் கசக்கும் கூட்டத்தில் நீயும் சேர்ந்து விட்டாயா?” என்று பதிலளித்தான்.

“இந்த வேப்பங்காய் புடலங்காய் சங்கதி ஒன்றும் வேண்டாம். எங்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. தமிழை நீ தான் தத்து எடுத்து வளர்க்கிற மாதிரி பேசாதே”

“டேய், கோபப்படாதே. இங்கு தமிழ் தமிழ் என்பவர்கள் சிலர் மாறி தாறி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி தூள் கிளப்புவார்கள். ஆனால் மற்றவர்கள் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தினால் அவர்களைத் தமிங்கிலம் பேசுவதாக சொல்வார்கள். அந்தக் நினைப்பில்தான் அப்படிப் பேசிவிட்டேன். கோபப்படாதே”

“சரி கோபப்படல, உலகநாத பண்டிதர் மற்றும் உலகநீதி என்றாயே? அந்த செய்தியைப்பற்றி சொல்”

என்று கேட்ட பாண்டியனிடம் பரந்தாமன்   சொன்னான். உலகநாத பண்டிதர் என்பவர் பதினெட்டாம் ஆண்டில் வாழ்ந்த ஒரு புலவர். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் போன்ற அறிவரைகள் நிறைந்த உலகநீதி என்ற நூலை இயற்றியவர் இவர் என்றான்.

உடனே பாண்டியன், அவர் இருட்டடிப்பு செய்வாரோடு இணங்க வேண்டாம் என்றும் எழுதியிருப்பார் என்றாயே, எதனால் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டான்.

அது எனக்கு ஏற்பட்ட அனுபவம். சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தான். மைசூரில் என் அக்கா வனஜாவை திருமணம் பண்ணிக் கொடுத்திருப்பது உனக்கு தெரியும் அல்லவா? அவளுடைய ஐந்து வயது மகன் அன்புக்கு பிறந்தநாள் கொண்டாடினார்கள். நானும் போயிருந்தேன் என்பது உனக்குத் தெரியும். 

“நூல்களைப் பேசுவோம்”

 


இல்லத்திற்கு அவள் அரசி

  


தாருணி பாலேசன்

அவுஸ்திரேலியா


யமுனா அனைத்து வேலைகளையும்  முடித்து தூக்கத்திற்குப் போக மணி சாமம் 12:30 ஆகிவிட்டது. அவளுக்கோ குளிர் வேறு எலும்புகளூடு ஊடுருவி உடம்பு எல்லாம் குத்துவது போல உணர்வு. அதிகாலை எழவேண்டும், மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:00, 6:15, 6:30 என மூன்று அலாரங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள். ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள்  சுருண்டு படுத்திருந்த மகனின் இருமல் அவளை  மீண்டும் எழச் செய்தது. இந்தக் குளிர் ஆரம்பித்தது முதல் எந்நேரமும் குழந்தைக்கு இருமலும் தடிமனும் தான். பாவம் குழந்தை தொடர்ந்து இருமிக் கொண்டிருக்க இளஞ்சூடான தண்ணீர் கொடுத்து மீண்டும் அவனைத் தூங்க வைக்க மணி இரண்டு ஆகி விட்டது. அவளுக்கோ குழம்பிய தூக்கம் மீண்டும் வர மறுக்கின்றது. புரண்டு புரண்டு படுக்கின்றாள் . அவ்வப்போது இடைக்கிடை மீண்டும் குழந்தையின்  இருமல். குழந்தையின்  முதுகைத் தடவிவிட்டபடியே ஒருவாறு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் யமுனா . அவளுக்கு கனவுகள் கூட நல்லதாய் வருவது இல்லை. ஆறுமணி அலாரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவளுக்குக் கேட்கவில்லை. 6:15 ஊஹும்... அதுவும் கேட்கவில்லை. 6:30 அலாரச் சத்தத்திற்கு அவளின் செல்ல மகள் தூக்கம் விட்டு எழும்பி அவளையும் எழுப்ப அந்தச்சத்தத்திற்கு மகனும் எழும்ப எப்படியோ கண்களைக் கசக்கிய வண்ணம் எழும்பி நேரத்தைப் பார்த்தாள். மணி  6:35. குளிர் தாங்க முடியவில்லை. மகனோ தூக்கச் சொல்லி அடம் பிடிக்கின்றான். பாவம் இரவு முழுவதும் இருமிய வண்ணம் இருந்தவன் அம்மாவின் அரவணைப்பைத் தேடுவான் தானே!. 

இரவிரவாக அலுவலக வேலை செய்து அதிகாலை மூன்று மணிக்கு படுக்கைக்குச் சென்ற நந்தனையும் எழுப்ப மனமில்லை. காலைக் கடன்களை முடிக்க வேண்டும். மகனோ இறங்க மறுத்து யமுனாவின்  கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறான். அவனை மடியில் இருத்தியவண்ணமே காலைக் கடன்களை முடிக்க வேண்டிய நிலைமை அவளுக்கு . மகளோ குளிர் தாங்க முடியாமல் உடலைக் குறுக்கியபடி குந்தியிருக்கின்றாள். ஒருவாறு அவளைத் தூக்கியெழுப்பி, பல் துலக்கி, முகம் கழுவி முடித்தாயிற்று. இனி காலை உணவு. ஒன்றும் சமைத்தபடி இல்லை. குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து வெறுமையாய் இருக்கும் தட்டுக்களையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் நிற்க குளிர், குளிர்என யமுனா   இன்னமும் தூக்கி வைத்திருக்கும் மகனின் மழலைக்கு சுயநினைவிற்கு வந்து பாலை எடுத்து வெளியில் வைத்து குளிர்சாதனப் பெட்டியை மூடுகின்றாள். செல்லமணி சத்து மா  சாப்பிடிவியோணை பிளீஸ்...”. நிலைமை புரிந்து மெதுவாய் சம்மதிக்கின்றாள் அவளின் ஆறு வயது மகள் 

மேஜர் சந்திரகாந்த் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1954ம் ஆண்டு வீணை எஸ். பாலசந்தரின் இயக்கத்தில் அந்த நாள்


என்ற பாடல்கள் இல்லாத படத்தைத் தயாரித்த ஏவி .எம் , பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஒரே ஒரு பெண் பாத்திரம் தோன்றும் படமொன்றை கே. பாலசந்தர் இயக்கத்தில் தயாரித்தார். அந்தப் படம்தான் மேஜர் சந்திரகாந்த். அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படம் பெரிய பட நிறுவனம் தயாரித்த சிறிய பஜெட் படம் என்ற பேரையும் பெற்றுக் கொண்டது. 



ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களிடம் சிறந்த குணச்சித்திர நடிப்பும் புதைந்து கிடக்கும் என்ற உண்மையை முதலில் வெளிப்படுத்தியவர் ஜே .பி . சந்திரபாபு. இவர் நடித்த குமாரராஜா, கவலை இல்லாத மனிதன் போன்ற படங்களில் தனது சோக நடிப்பை வழங்கியிருந்தார் சந்திரபாபு. அவரை தொடர்ந்து சோக நடிப்பை தன்னால் தர முடியும் என்பதை நாகேஷ் செய்து காட்டினார். அதற்கு வழியமைத்து கொடுத்தவர் கே. பாலசந்தர். இவர் மேடையேற்றிய சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த் போன்ற நாடகங்களில் நடித்து உணர்ச்சிகரமாக நடித்து தன் சோக நடிப்பை வெளிக் காட்டினார் நாகேஷ். இந்த நாடகங்கள் படமான போது திரையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் இவர். 


ஒரு தையல்காரன், அவனுக்கு ஒரே ஒரு தங்கை , அவளொரு கல்லூரி

மாணவி , அவளுக்கு ஒரு பித்தலாட்டக்கார காதலன், அவளின் பெண்மையை பறித்து விட்டு அவன் ஒதுங்கி விட, அவள் விபரீத முடிவை எடுக்கிறாள். உண்மையை தெரிந்து கொள்ளும் அண்ணண் தன்னுடைய தங்கையை ஏமாற்றி கை விட்டவனை பழி வாங்குகிறான். அதன் பின் போலீசில் இருந்து தப்ப தான் கொன்றவனின் தந்தையின் வீட்டிலேயே அடைக்கலமாகிறான். சட்டத்துக்கும் தர்மத்துக்கும் இடையில் அவன் உயிர் ஊசலாடுகின்றது .

 

இந்த கதையை நாடகமாக்கிய பாலசந்தர் சுந்தரராஜானை மேஜர் சந்திரகாந்தாக நடிக்க வைத்தார். தையல்காரன் மோகன் வேடத்தில் நாகேஷை நடிக்க வைத்தார். நாடகம் படமான போது இருவரும் அதே வேடத்தை ஏற்றார்கள். ஆனால் ஒருவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாடகத்தில் மேஜரின் மகனாக பித்தலாட்டக்காரனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். ஆனால் படத்தில் அந்த வேடத்தில் நடித்தவர் ஏவி .எம் .ராஜன். மற்றுமோர் மகனாக பொலிஸ் இன்ஸ்பெக்டராக முத்துராமன் நடித்தார். இவர்களுடன் தசரதன் , ஐ.எஸ் .ஆர், டைபிஸ்ட் கோபு, ஆகியோரும் நடித்தனர். 

 அன்பே வா படத்தைத் தொடர்ந்து எம் ஜி ஆர் நடிப்பில் இன்னுமொரு படத்தை தயாரிக்க ஏவி .எம் நிறுவனம் திட்டமிட்டு அதில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவிடம் தேதிகளை வங்கியிருந்தார்கள். ஆனால் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் போகவே , ஜெயலலிதாவிடம் வாங்கிய கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் ஏவி. எம் . நிறுவனத்தினர். அந்த வகையில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்தார் ஜெயலலிதா. ஆனாலும் அவரின் நடிப்பு மனதில் நிற்பது போல் அமைந்தது. பாலசந்தர் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படமும் இதுதான். 

கௌரி கல்யாணம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்



எம் ஜி ஆரின் நடிப்பில் ஆண்டுக்கொரு படம் எடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்த ஜி என் வேலுமணி , அதே போல் ஆண்டுக்கொரு படத்தை புதிதாக அறிமுகமான நடிகர்களை போட்டும் எடுத்துக் கொண்டிருந்தார் . அந்த வரிசையில் 1966ம் ஆண்டு அவர் தயாரித்த படம் கௌரி கல்யாணம். 

ஏற்கனவே சிவாஜி நடிப்பில் பாகப்பிரிவினை, பாலும் பழமும் போன்ற குடும்பக் கதைகளை படமாக்கிய அவர் இம்முறையும் குடும்பக் கதை ஒன்றையே படமாக்கியிருந்தார். 1965ல் ஜெய்சங்கர், முத்துராமன் நடிப்பில் பஞ்சவர்ணக் கிளி படத்தை தயாரித்தவர் இம்முறையும் இரண்டு கதாநாயகர்களை கொண்ட படத்தை உருவாக்கினார். ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் இதில் நாயகர்களாக நடித்தனர். 

 தபால்காரனான ராஜு தன் தங்கை கௌரியை உயிராக பேணி

வளர்க்கிறான். அவளின் கல்லூரியில் பயிலும் சக மாணவன் ராமு செய்யும் குறும்புகளை சகிக்க முடியாத கௌரி அது பற்றி ராஜுவிடம் முறையிட , ராஜு தெருவில் ராமுவுடம் ஆக்ரோஷமாக மோதுகிறான் . ஆனால் சில காலங்களில் கௌரி , ராமு இருவரிடையே காதல் மலர்கிறது. இப்போது அண்ணன் தங்கையின் காதலுக்கு தடை போடுகிறான். இதனிடையே ராஜு பள்ளி ஆசிரியை லஷ்மியை மானசீகமாக காதலித்த போதும் லஷ்மி அவனின் காதலை நிராகரிக்கிறாள் . கௌரி கல்யாணம் தன் வாழ்வின் இலட்சியம் என்று வாழும் ராஜு அவளின் காதலை அங்கீகரித்து கௌரி கல்யாணத்தை நடத்துகிறானா என்பதே படத்தின் முடிச்சு. 

1960 ம் ஆண்டுகளில் பிரபல நாடகாசிரியர் பிலஹரி . இவர் எழுதிய பாலாடை, கஸ்தூரி திலகம், ஆலயம் போன்ற மேடை நாடகங்கள் திரைப்படங்களாக வெளி வந்தன. பிலஹரியின் கதைகள் குடும்பங்களில் நிலவும் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவே அமைவதுண்டு. இப் பட கதையும் அவ்வாறே அமைந்தது. அந்த வரிசையில் அவர் இந்தக் கதையை எழுதி அதற்கு வசனங்களையும் எழுதியிருந்தார். இரண்டிலும் அவரின் திறமை வெளிப்பட்டது. 

இலங்கைச் செய்திகள்

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

பிள்ளையானின் சிறைவாசத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இராணுவ புலனாய்வு பிரிவு மீது விசாரணை கோருகிறார் சிரன்த அரசிங்க!

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் வருகை!

யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும்  நூல் வெளியீடு ; இதுவரை பயன்படுத்தப்படாத வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பதாக பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தெரிவிப்பு



அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

17 Apr, 2026 | 01:58 PM

(இணையத்தள செய்தி பிரிவு) 

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக,  மே மாதம் 15ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

உலகச் செய்திகள்

 யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் - ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம் : டிரம்ப் அறிவிப்பு

 “போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது தொடக்கம் மட்டுமே” : மத்திய கிழக்கு பதற்றத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நிலைப்பாடு

போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா இடையே 2 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை

 ஈரானுக்கு இராணுவ உதவி? – சீனா திட்டவட்ட மறுப்பு, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை 



யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் - ட்ரம்ப் தகவல் 

17 Apr, 2026 | 11:15 AM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

வியாழக்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிய யுரேனியத்தை "அணுசக்தி தூசி" (nuclear dust) என்று குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கை உலுக்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஓர் அமைதி உடன்படிக்கையை நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நிரந்தரமாக அணு ஆயுதம் தயாரிப்பதைக் கைவிடவேண்டும் என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார்.

பிறை தமிழ் கற்றல் இல்லம்

 


உடல்நலமும் குடும்ப சூழலின் முக்கியத்துவமும்

 மனிதன் இறைவனை உணர்வதற்கு, இந்த மனித உடல் ஒரு முக்கியமான கருவியாக உள்ளது. ஆகையால், உடலை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும். ஒருவரின் உடல் வலிமையானதா அல்லது பலவீனமானதா, திறமையான கருவியா அல்லது திறமையற்றதா என்பது, பெற்றோரின் உணவு, பொழுதுபோக்கு மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் அமைகிறது.

மூத்தவர்கள் இவற்றில் கவனம் செலுத்தாததால், குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இப்போது ஒவ்வொரு தெருவிலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகள் அதிகரித்து வருகின்றன; ஏனெனில் நோய் ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு இல்லத்தையும் பிடித்திருக்கிறது.

சிறிய குழந்தைகளுக்கே கண்ணாடி அணிய வேண்டிய நிலை உள்ளது; இளைஞர்கள் தங்கள் முடியை நிறமூட்டுகின்றனர்; பலர் போலி பற்கள் (dentures) பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய வீட்டுச் சூழல் இயற்கையற்ற தன்மையால் நிரம்பியுள்ளது.

அந்த சூழலில்:

  • கவலை
  • பொறாமை
  • அதிருப்தி
  • வெற்று பெருமை
  • ஆடம்பரம்
  • வீண்செலவு
  • பொய் மற்றும் பாசாங்கு

இவையெல்லாம் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பாதகமான சூழலில் வளர்கிறவர்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்க முடியும்?

வீடு திருப்தி மற்றும் அமைதி என்ற சுத்தமான மணத்தால் நிரம்பியிருந்தால், அதில் வாழும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.

ஆகையால், அடுத்த தலைமுறையின் நலனுக்காக, மூத்தவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

க்ஷமையின் (பொறுமையின்) மகத்துவம்

 க்ஷமை (பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை) என்ற உயர்ந்த குணம், எதிர்மறையான சூழ்நிலைகளில் தான் சிறப்பாக வளர்கிறது. ஆகையால், கஷ்டங்களை விரும்பத்தகாததாக எண்ணாமல், மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

சிரமங்களும் துன்பங்களும், பொறுமையை வளர்க்கவும் வலுப்படுத்தவும் உதவுகின்றன. இதற்கு பாண்டவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்கள் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருந்தபோது, க்ஷமை குறைவாக இருந்தது. ஆனால், அவர்கள் வனவாசத்திற்கு சென்றபோது பல துன்பங்களை சந்தித்தனர்; அப்போது அவர்களுள் க்ஷமை இயல்பாக வளரத் தொடங்கியது.

இதனால், துன்பமான காலங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்க சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. உண்மையில், வேதனை மற்றும் க்ஷமை ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஏனெனில், துக்கம் மற்றும் துயரம் நிறைந்த சூழலில் தான் க்ஷமை சிறப்பாக வளர்கிறது.

ஆனால், மனவலிமை குறைவு மற்றும் அறியாமை காரணமாக, நாம் பொதுவாகவே துன்பங்களையும் சிரமங்களையும் தவிர்க்க முயல்கிறோம். நீங்கள் பலவீனமாக இருக்கக் கூடாது; தைரியமாக இருந்து கஷ்டங்களை வரவேற்க வேண்டும். அவை வரட்டும் — அதிகமாக வந்தால் கூட பரவாயில்லை.

இத்தகைய தைரியமான மனப்பாங்கு இருந்தால்தான், உங்களுள் மறைந்திருக்கும் க்ஷமையை வெளிக்கொணர முடியும்.

தெய்வீக சக்தியும் மனிதனின் உண்மை இயல்பும்

 உங்கள் கண்கள் மிகவும் சிறியவை — அரை அங்குலம் கூட இருக்காது. ஆனால், நீங்கள் பரந்த நிலப்பரப்புகளையும், கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள நட்சத்திரங்களையும் காண முடிகிறது. இந்த சக்தி கண்களுக்கு எங்கிருந்து வருகிறது? அது தெய்வீக சக்தியிலிருந்தே வருகிறது.

ஒரு புதிய டார்ச் லைட் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள் — அதில் புதிய பல்பும், புதிய ஸ்விட்சும் இருக்கலாம். ஆனால், அதில் செல்கள் (battery) இடப்படாவிட்டால், ஒளி கிடைக்காது. அதுபோல, உங்கள் உடல் டார்ச் போன்றது; கண்கள் பல்பாகும்; புத்தி ஸ்விட்சாகும். நல்ல சிந்தனைகள் என்ற செல்களை உள்ளே சேர்த்தால் மட்டுமே, நல்ல உணர்வுகளின் ஒளியை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இந்த தமிழ் புத்தாண்டும் விஷு திருநாளிலும், நீங்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுள், உங்களைச் சுற்றிலும், மேலும்கீழுமாக இருப்பவரான இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள். தெய்வீகம் உங்களுள் மற்றும் உங்களைச் சுற்றிலும் நிறைந்துள்ளது. தெய்வீக சக்தி இல்லாமல், ஒரு கணமும் நீங்கள் வாழ முடியாது.

நீங்கள் எப்போதும் உங்களுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்: “நான் மனிதன்; நான் மிருகம் அல்ல.” “நான் மனிதன்” என்று சொல்வது பாதி உண்மை மட்டுமே. மனித உருவில் இருந்தாலும், சில நேரங்களில் நாம் மிருக குணங்களை வளர்க்கிறோம். அதனால், “நான் மிருகம் அல்ல” என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இரு நினைவுகளும் ஒன்றாக சேர்ந்தால், மிருக இயல்புகளிலிருந்து நீங்கள் விலக முடியும்.

இந்த இரண்டின் ஒருமைப்பாடு, உங்களின் தெய்வீகத்தைக் காணச் செய்கிறது; அதுவே உண்மை. புனிதமான சிந்தனைகள் மிகவும் அவசியமானவை. அவைதான் நீங்கள் செய்ய வேண்டிய உண்மையான சடங்குகள் ஆகும்.

தூய அன்பின் மகிமை

 இந்த உலகத்தில் தூய அன்புக்கு இணையானது எதுவும் இல்லை. அன்பின் இனிமைக்கு ஒப்பிடுகையில் அமுதமும் சுவையற்றதாகவே தோன்றுகிறது. இந்த அன்பு தெய்வத்தையும் பரவசமாய் ஆடச் செய்கிறது; அதேபோல் பக்தனையும் ஆனந்த நடனத்தில் மூழ்கச் செய்கிறது. அன்பு தன்னைத்தான் நடனமாக வெளிப்படுத்துகிறது.

இத்தகைய தூய அன்பு சுயநலமுள்ளவர்களின் இதயத்தில் இடம் பெறாது. அது தூய்மையான, தன்னலமற்ற, தெய்வீக குணமுடையவர்களின் இதயங்களில் மட்டுமே தங்கும். வேதங்களும் சாஸ்திரங்களும் இந்த அன்பை ஒரு அரிய வைரத்துடன் ஒப்பிடுகின்றன.

இந்த அரிய ரத்தினம் எங்கே கிடைக்கும்? சாதாரண வைரங்களையே நாம் மிகுந்த பாதுகாப்புடன் உறுதிப்படுத்தப்பட்ட பெட்டிகளில் வைத்துக் காக்கின்றோம். அப்படியானால், அன்பெனும் இந்த அரிய வைரத்தை எவ்வளவு பாதுகாப்பாக காக்க வேண்டும்! இதை பிறருக்கு வழங்கத் தகுதியானவர் யார்? அன்பால் நிரம்பி, அன்பையே ஆதாரமாகக் கொண்டு வாழ்பவரே அதற்கு தகுதியானவர்.

உண்மையில், இத்தகைய அன்பை அளிக்கத் தகுதியானது தெய்வமே. அன்பின் உருவாகிய தெய்வமே அன்பின் மதிப்பை அறிந்துள்ளது. ஆகவே, நீங்கள் கடவுளை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் அன்பு குறையும் அளவுக்கே உங்கள் ஆனந்தமும் குறையும். உங்கள் அன்பின் அளவே உங்கள் ஆனந்தத்தின் பெருமையை நிர்ணயிக்கிறது.

உழைப்பின் மதிப்பும் கடமையின் அவசியமும்

 கடின உழைப்பு இல்லாமல் எந்த பலனையும் பெற முடியாது. ஆனால் இன்றைய மனிதன் உழைக்கத் தயாராக இல்லை. உபநிஷத் காலங்களில், மக்கள் எந்த செயலும் தொடங்குவதற்கு முன் அதற்கு வணக்கம் செலுத்துவார்கள்: “தஸ்மை நம: கர்மணே” (செயலுக்கு வணக்கம்).

நாம் முதலில் கர்மாவுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்; அப்போதுதான் அது நமக்கு நல்ல பலன்களை அளிக்கும். பாரத நாட்டில், சிலர் இன்றும் இந்த புனிதமான பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர்.

ஒரு கிரிக்கெட் வீரர் பந்துவீசத் தொடங்குவதற்கு முன் பந்துக்கு மரியாதை செலுத்துகிறார். ஒரு நடனக் கலைஞர் காலில் அணியும்முன் சிலம்புக்கு வணக்கம் செலுத்துகிறார். கல்வி இல்லாத ஓட்டுநர்கூட வாகனம் ஓட்டுவதற்கு முன் ஸ்டியரிங் சக்கரத்திற்கு வணக்கம் செலுத்துகிறார்.

ஆனால், பல கல்வியுள்ளவர்கள் இந்தப் பழமையான பண்பாட்டையும் மரபையும் மறந்துவிட்டனர். அதனால் தான் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மக்களிடையே பயமும் பாதுகாப்பின்மையும் உருவாகியுள்ளது.

எந்த செயலையும் தொடங்குவதற்கு முன், அதற்கு நாம் மரியாதையும் நன்றியையும் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையைப் புரிந்து கொண்டு, தங்களால் இயன்ற சிறந்த முறையில் அதை நிறைவேற்ற வேண்டும்.

நிகழ்காலத்தின் மதிப்பு மற்றும் மனிதன் வாழ்க்கை

 எதிர்காலத்தைப் பற்றி இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனால் தான் இறைவனுக்கே மூன்று கண்கள் உள்ளன என்று கூறப்படுகிறது (மூன்றாவது கண் என்பது எதிர்கால அறிவை குறிக்கும்); மனிதனுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், மனிதன் கடந்த காலத்திலும் தன்னைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், தற்போது அதே கட்டுப்பாட்டை கொண்டிருந்தாலும், அவனுடைய எதிர்காலம் முழுவதும் அவனுடைய கைகளிலேயே இருக்கும்.

இன்றைய மனிதன் எப்போதும் கடந்த காலத்தை நினைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதிலேயே மூழ்கியிருக்கிறான். எப்போதும் அவன் சிந்தனை: கடந்த காலம், எதிர்காலம்; கடந்த காலம், எதிர்காலம் என்பதே. இப்படிப் கடந்த காலத்தை நினைத்து வருந்தியும், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டும், மனிதன் நிகழ்காலத்தை கவனிக்காமல் இழக்கிறான்.

நிகழ்காலம் என்பது கடந்த காலத்தின் விளைவு என்பதை மறந்துவிடக் கூடாது. அதே சமயம், அது எதிர்காலத்தின் விதையாகவும் உள்ளது. இவ்வாறு கடந்த காலமும் எதிர்காலமும் நிகழ்காலத்திலேயே அடங்கியுள்ளன. இந்த அடிப்படை உண்மையை மனிதன் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

நல்லதும் பிரகாசமானதுமான எதிர்காலத்தை விரும்பினால், நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். நிகழ்காலம் என்பது “கடந்த காலம்” என்ற விதையிலிருந்து உருவான ஒரு மரம் போன்றது. அந்த மரத்திலேயே “எதிர்காலம்” என்ற விதையும் உள்ளது. எனவே, எதிர்காலம் ஏற்கனவே இங்கேயே உள்ளது.

நிகழ்காலத்தை சரியாக பாதுகாக்க சிறந்த வழி, நமது பேச்சு எப்போதும் புனிதமாக இருக்க வேண்டும் என்பதே. வார்த்தைகள் எங்கு இருந்து வருகின்றன? அவை மனதிலிருந்து வருகிறது. ஆகவே, நல்ல பேச்சு இருக்க வேண்டுமெனில், மனமும் நல்லதாக இருக்க வேண்டும்.

அமைதியும் ஆனந்தமும் பெற வேண்டிய பாதை

 அமைதியும் ஆனந்தமும் பெற மனிதன் எதை அடைய வேண்டும்? முதலில் நாம் பெற வேண்டியது இறைவன் மீதான அன்பாகும். புராணங்களும் மகான்களும், தெய்வம் அவதாரம் எடுப்பது துன்பத்தையும் வேதனையையும் நீக்கவும், துஷ்டர்களை தண்டிக்கவும், நல்லவர்களை காக்கவும் என்று கூறுகின்றன. ஆனால் இது முழுமையான உண்மை அல்ல.

உண்மையில், தெய்வம் மனிதகுலத்திற்கு அன்பு என்றால் என்ன, அதை எப்படி செலுத்த வேண்டும் என்பதை கற்பிப்பதற்காகவே அவதாரம் எடுக்கிறது. இப்படியான அன்பு மனிதனுள் வளர்ந்தால் மட்டுமே, அவன் துன்பங்களிலும் சிக்கல்களிலும் இருந்து விடுபடுவான். பாவங்கள் நீங்கும்; பயம் அவனை வாட்டாது.

ஆகவே, நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது இறைவன் மீது அன்பு ஆகும். இறைவன் மீது அன்பு இருக்கும் இடத்தில், பாவத்தின் பயம் நிழல் போல பின்தொடரும். இவ்விரண்டும் உள்ளபோது, சமுதாயத்தில் நெறிமுறையும் நிலைநிறுத்தப்படும்.

மனிதனின் முதன்மை கடமை மூன்றையும் வளர்ப்பதாகும்:

  • தெய்வப் ப்ரீதி (Daiva Preeti) – இறைவன் மீது அன்பு
  • பாப பீதி (Papa Bheeti) – பாவத்தின் பயம்
  • சமாஜ நீதி (Samaja Neeti) – சமூக நெறி

நாம் ஒரு பொருளை விரும்பினால், அதை அடைய சில செயல்களை செய்ய வேண்டும். நாம் நேசிக்கும் பொருளின் தன்மைகளை அறிந்து, அதில் நம்பிக்கை வளர்க்க வேண்டும். அன்பு இல்லாமல் நம்பிக்கை உருவாகாது. அன்பும் நம்பிக்கையும் சேர்ந்தபோது, அந்த இலக்கை அடைய தேவையான செயல்களை நாம் மேற்கொள்வோம்.

அன்பே பக்தி (Bhakti); நம்பிக்கையே ஞானம் (Jnana); அதை அனுபவிக்க செய்யப்படும் செயல் கர்மம் (Karma) ஆகும். ஆகவே, உபாசனை (Upasana) என்பது பக்தி, ஞானம், கர்மம் ஆகிய மூன்றின் இணைந்த பலனாகும் என்று கூறப்படுகிறது.