ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026


இப் போட்டிகள்  செப்டம்பர் மாதம் 6ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

 

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும்  போட்டிகளும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2021 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு

01.08.2019 க்கும் 31.07.2021 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு

01.08.2014 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு

01.08.2011 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு

01.08.2007 க்கும் 31.07.2011 க்கும் இடையில் பிறந்தவர்கள்

சமய அறிவுப் போட்டி

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

  கீழே விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு உள்ளது.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2026

 

தயவுசெய்து 2026 செப்டம்பர் மாதம் 4ம்  ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 போட்டிக்கான விதிமுறைகள்,  கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளின் வயதை கவனத்தில் கொண்டு, அவர்கள் சரியான பிரிவுகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்துங்கள்.  

மேலும் தகவல்களுக்கு கருணாசலதேவாவை 0418442674 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


No comments: