மரண அறிவித்தல்

 .                   சாகித்யரத்னா, வைத்திய கலாநிதி 

                                  தி. ஞானசேகரன் 



யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகை ஸ்தாபகர் , சாகித்யரத்னா, வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள் தமது 84ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், தியாகராஜ ஐயர் – பாலாம்பிகை தம்பதியின் மூத்த மகனும் கெங்காதரக் குருக்கள் (ஈவினை), சாமிநாதன் சர்மா (திருகோணமலை) மற்றும் காலஞ்சென்ற லலிதாம்பாள் வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னார் கீரிமலை ஞானலக்ஷ்மி (முன்னாள் இந்து சமயப் பாட இணைப்பதிகாரி – கண்டி) அவர்களின் அன்புக் கணவரும் இராஜேஸ்வரன் (அவுஸ்திரேலியா), வசுந்தரா சுவாமிநாதன் (வட்டுக்கோட்டை), பாலச்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (Mahinda Funeral Parlour – 591 Galle Rd, Mount Lavinia)
12-04-2026 (ஞாயிறு) மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரையும்
13-04-2026 (திங்கள்) காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரையும்
வைக்கப்பட்டு பின்னர் தெஹிவளை – கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்: ஞானம் பாலச்சந்திரன் (இளைய மகன்)
0717 362 862
0787 362 862
+61 408884263 (whatsapp)

சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள் !


 












 

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ 
சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம் 

தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

❤️ ❤️❤️தமிழுக்கு வந்த ஆஷா போஸ்லே ❤️❤️❤️

 


ஏப்ரல் 12 ஆம் திகதி இந்தியத் திரையிசையின் புகழ் பூத்த பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.


எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.


இளையராஜாவைத் தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமார், R.D.பர்மன், ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்த பாடல்கள் மற்றும் தெலுங்கிலும் இளையராஜாவோடு இணைந்த இரண்டு பாடல்களுமாக இத்தொகுப்பைப் பகிர்கிறேன்.


🎙️கானா பிரபா கதைக்கிறேன்

தமிழ் முரசு வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து

 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்





ஆழிரங்கல் 🙏 ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன்


 









ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 25 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.


வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க








அரனே அப்பர்க்கு அனைத்தும் ஆகினார் !
















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்…. அவுஸ்திரேலியா 




சமணம் தவறி வீழ்ந்தார் அப்பர்
சைவம் அவரைத் தாங்கிப் பிடித்தது
சிவனே அப்பரின் நோயினைப் போக்கினார்
சிவன் அடியாராய் அப்பர் மலர்ந்தார் 

எண்பத் தொராண்டுகள் இம்மண் வாழ்ந்தார் 
இறைவன் நினைப்பில் எல்லாம் செய்தார்
உழவாரம் கையில் எடுத்துமே அப்பர்
உலகின் புரட்சி வீரராய் எழுந்தார்

அப்பரின் புரட்சி ஆன்மீகப் புரட்சி
ஆண்டவன் ஒருவனே அவருக்குத் தலைவன்
அடக்கிய அரசினை எதிர்த்தவர் அப்பர்
அவரோ சைவத்தின் அரும்பெரும் சொத்தே

சமணத் தலைவராய் இருந்தார் அப்பர்
சைவம் தொட்டதால் சமணர் வெறுத்தார்
நஞ்சைக் கொடுத்தார் கொல்ல நினைத்தார்
யானையைக் கொண்டு கொன்றிட முனைந்தார் 

மகாகவி சொன்னதின் பொருள் விளங்காது இன்றும் தவறாகப் பேசுகிறார்களே!

 














பாரதியார் பகர்ந்திட்ட கூற்றைத் தப்பாய்ப்

    பறைசாற்றும்  பாமரர்காள் சற்றே கேட்பீர்!

தாரணியிற் சிறந்தமொழி “தமிழும் மெல்லத்

    தரங்குனறிச்; சாகும்”என்றவர் சொல்லவே இல்லை!

யாரெவரோ மதியிழந்து உரைத்தல் கேட்டு

    “யாரெந்தப் பேதையிதைக் கூறிச் சென்றான்?

வேர்வுதரும் இந்தவசை எனக்(கு) எட்டவோ”  வென

    வெகுண்டெழுந்து பாரதியும் மேலுஞ் சொன்னான்!

 

 எட்டுத்திக் குகளெல்லாம் சென்று  கலையில்;

    இணையிலாச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்து

கெட்;டித்தன மாகத்தேன் தமிழின் வளத்தைச்

    செழுமைசெய் வீரென்று பாரதி அன்றிதை

மட்டுந்தான் பாவினிலோர்  செய்தியாய்ச் சொன்னான்!

    மாறாகத் தமிழ்இனிமேற் சாவுமென் றெதுவும்

மட்டியைப்போற் சொல்லவில்லை மறந்தும் நீவிர்

    மாறாகத் தவறான விளக்கம் கொளாதீர்!

  

பஞ்சபூதச் செயல்நுட்பங் கூறிட இன்று

    பாவிக்கும் ஆங்கிலச்சொல் பலதிற்குத் தமிழில்

விஞ்சும்நற்; சொல்லாக்கம் குறைவே என்ற

    வெற்றிடம்பெருங் கவலைதனைத் தருவ துண்மை!

பஞ்சமொன்றுந் தமிழுக்கு என்றும் இல்லை!

    பரந்தெங்கும் சிதறிவிட்ட கலைச்செல் வங்களைச்

செஞ்சோற்றுக்; கடனாக நினைந்து நீவிர்

    சேர்த்திடுவீர் என்றன்றோ பாரதி சொன்னான்!

  

கவிதை..."கருவிழி கணை"... மெல்போர்ன் அறவேந்தன்

 








அக்கினிக்குஞ்சு 16ம் ஆண்டுவிழா 06.06.2026

 .



சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு (சிறுகதைத் தொகுப்பு) - தாமரைச் செல்வி 📖 நூல் நயப்பு - கானா பிரபா

 

ஈழத்து எழுத்தாளர்களில் கடந்த அரை நூற்றாண்டாக இயங்கி வரும் தாமரைச் செல்வி அவர்கள் வன்னி மண்ணில் பிறந்த கதை சொல்லி. அவரின் சமீப காலத்து வரவாக இச்சிறுகதைத் தொகுதி எதிர் வெளியீடு வழியாக வெளி வந்திருக்கிறது.


“இரவில் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு மடியில் படுத்திருக்கும் பிள்ளைக்குத் தன் வாழ்க்கைக் கதைகளை மனோலயப்படி சொல்லும் தொனியில் எளிமையாகப் பேசும் இச்சிறுகதைகள்”
என்று முன்னுரையில் இந்திரன் அவர்கள் காட்டிய வண்ணமே இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் உணர்வெழுகின்றது.

இன்னும் சொல்லப் போனால் அந்தந்தக் கதைகளுக்குள் வாழ்ந்து விட்டு வந்தது போலொரு உணர்வை, ஒவ்வொரு கதைகளின் பரப்பை விவரிக்கும் பாங்கிலும், கதை மாந்தர்களை உலாவ விடும் விதத்திலும், போலித்தனமில்லாத, அதே சமயம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கதைப்பின்னணியிலும் யதார்த்தம் கொண்டு படைத்திருக்கின்றார்.

“எளிமையும், உண்மையும், மனிதாபிமானமும் நிறைந்த யதார்த்த எழுத்துகளே இவரது முத்திரை”
என்று அணிந்துரையில் ரஞ்ஞனி சுப்ரமணியம் பகிர்ந்ததும், நம்முடைய வாசிப்பனுபவத்தின் சாட்சியாக அமைகின்றது.

முடித்து வைக்கப்பட்ட போ ரின் ஆறா வடு, மறுபடி ஆரம்பப் புள்ளியில் இருந்து வாழத் தலைப்படும் சமூகம் எதிர் நோக்கும் அடுத்த கட்டச் சவால்களையே இச் சிறுகதைத் தொகுப்பில் காணும் படைப்புகள் பலதும் கோடிட்டுக் காட்டுகின்றன.
தன்னுரையில் எழுத்தாளர் தாமரைச் செல்வி அதையே முக்கியப்படுத்திப் பதிவாக்குகிறார்.
எழுத்தாளர் என்பவர் நீதிபதியா அல்லது நிகழ்வின் சாட்சியமா என்பதற்கான விடை பகரும் முடிவிடமாக இச் சிறுகதைகள் அமைகின்றன.

நம்முடைய வாழ்வோட்டத்தில் சந்தித்த மனிதர்கள் மட்டுமன்றி சந்திக்காதோரது சிக்கல்களைக் கூடத் தன் சிறுகதைகளில் காட்டி நிற்கும் போது அவற்றின் மெய்த்தன்மை கேள்விக்குட்படுத்தப்படாது ஏற்குமளவுக்கு அங்கே நம் தாயகத்துச் சொந்தங்களின் துன்பியல் வாழ்வு அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான அனுபவ ஓட்டத்தில் புனைவு என்பது தேவையே இல்லை என்பதைத்தான் தாமரைச் செல்வியின் கதைகள் உணர்த்துகின்றன.

யாரொடு நோவோம் சிறுகதையின் பின்புலத்தில், முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் வலிகளைப் பிரதிபலிக்கும் சூழலில், தன் கணவன் இறந்து விட்டான் என்ற முடிவில் இருக்கும் ஒரு அபலையின் வாழ்வில் எதிர்ப்படும் அதிர்ச்சி நிகழ்வும், அந்தச் சூழலின் முடிவும் காட்டப்படுகிறது.

“கனவுகளின் மீள் வருகை”, “கசிந்துருகிக் கண்ணீர் மல்கி”, இருட்டின் நிறம் வெள்ளை

முள்ளிவாய்க்கால் காலத்துப் பின்னணியோடு அமைந்த இருவேறுபட்ட கதைப் பின்னணிகள். அவை கொடுக்கும் கனதியும் தனித்தனி.

மெளன யுத்தம் தமிழ்ச் சூழலில் ஒரு பொதுத்தன்மை கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அமைந்திருக்கிறது.

சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்!


நிலா நீ என் அருகில் இருக்கையிலே
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது

நிலா இன்று உனக்கு என்ன வந்தது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் சுடுகின்றது

நிலா நான் தவறேதும் செய்தேனா?
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

நிலா என் காதலை நீ ஏற்றாய்
நிலவே நீ சாட்சி மனநிம்மதி தேடும்
உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி

நிலா நான் பாடுகிறேன் நீயும் பாடு
பாடு நிலாவே தேன்கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்

நிலா நீ பேசமாட்டாயா நீ பேசாவிட்டால்
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 2…..சங்கர சுப்பிரமணியன்.


தமிழர் தம்மை தமிழராக உணர்ந்து ஓன்றிணைய வேண்டும். இளங்கோ சிலப்பதிகாரத்தை மலையாளத்தில் எழுதவில்லை தமிழில்தான் எழுதினார் என்பதை உணரவேண்டும். அதைவிட்டு நான் இந்தத் தமிழன் நீ அந்தத் தமிழன் என்று தமிழராகிய நாம் நமக்குள்ளேயே பிளவை ஏற்படுத்திக் கொண்டே செல்வோமானால் எந்த ஒரு செயலையும் ஆக்க பூர்வமாக செய்து முடிக்கமுடியாமல் வேறுபாட்டை விரிவுபடுத்தியே வீணாய்ப் போய்விடுவோம்.

இது நம் இனத்தையும் மொழியையும் அழிக்க நினைப்பவர்களுக்கு சாதகமாக முடியும்.
அப்படி உணர்ந்தால்தான் எங்கிருந்தாலும் தமிழரே என்பதை உணரமுடியும். சான்றாக ஒன்று சொல்வேன். மனதத்துவ முறையில் மனிதர்கள் ஒப்பிடுவதைப் பாருங்கள். தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் ஆறுபேரைக் கொன்ற ஆறுமுகம் நெருங்கிய உறவாக  இருந்தாலும் சொல்ல மாட்டார்கள்.

அதே ஆறுமுகம் குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கினார் என்றால்

தூரத்து உறவு என்றாலும் சொல்வார்கள். நமக்கு ஆறுபேரைக் கொன்ற ஆறுமுகம் என்றாலும் குடியரசுத் தலைவரிடம் விருதுபெற்ற ஆறுமுகம் என்றாலும் உறவு உறவுதான். முதலில் தமிழராகிய நாம் இதை உணரவேண்டும். இதை உணராதவரை தமிழர் வீழ்ச்சிக்கு எவரையும் குற்றம் சொல்லமுடியது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். விலகிச் சென்ற மனக்குதிரையைத் தடுத்து வழிக்கு கொண்டு வருகிறேன். ஜப்பானிய மொழியின் இலக்கணம் மற்றும் சொற்தொகுதியிலும் ஒற்றுமை நிறையவே உள்ளதால் ஒட்டுநிலை குடும்பத்தில் வருவதை உணரமுடியும். தமிழ் மற்றும் ஜப்பானிய மொழி இரண்டுமே வாக்கிய அமைப்பில் எழுவாய், செயப்படுபொருள் மற்றும் பயனிலை என்ற வரிசையையே பின் பற்றுகின்றன.

சான்றாக, நான் மாலையில் வருகிறேன் ஜப்பானிய மொழியிலும் யூஹடா நி கிமாசு என்ற வரிசையிலேயே சொல்கிறார்கள். மேலும் அம்மா(அம்மா), அண்ணன்(அண்ண), வா(வா), இரு(இரு), மெய்(மி ), தரை(தைரா), நிழல்(நிழ), ஊர்(ஊரு) போன்று எண்ணற்ற சொற்கள் இருமொழிகளிலும் ஒலிப்பிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன.

எதிர்பாராதது! - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

நண்பன் ஈசனின் இரண்டு பிள்ளைகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்ட நாங்கள் கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருந்தோம்.

 ஈசன் எனது ஆத்மநண்பன். நானும் அவனும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தோம். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தோம். ஆனால் ஈசனை விட ஏழெட்டு வருடங்கள் முன்பதாகவே நான் திருமணம் செய்துவிட்டேன். ஈசன் தனது தங்கைகளை ஒப்பேற்றக் காலதாமதமாகி விட்டது.

 அரங்கேற்றத்துக்கு இன்னமும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் பெண்கள் இருவரும் பயிற்சிக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். இப்பொழுதுகூட அவர்கள் இருவரையும் 'கொஸ்ற்றியூம்' போட்டுப் பார்க்க என்று கூட்டிக் கொண்டு போய் விட்டான் ஈசன். நானும் கூட வருகிறேன் என்றேன். 'நீ நேர வித்தியாசத்தாலை தூக்கக் கலக்கத்திலை இருக்கிறாய். கொஞ்சம் றெஸ்ற் எடு' என்று மறுத்து விட்டான். 

 ஈசனின் மனைவி மாதுமை குசினிக்குள் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கடைசிப் பையனுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. கடைக்குட்டி மனேஸ் 'செற்றி'க்குள் புதைந்திருந்து சுறுசுறுப்பாக 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தான்.

 இங்கு கனடாவைப் போல இருபது இருபத்தைந்து பேப்பர்கள் வருவதில்லை. ஒன்றிரண்டுதான். ஒன்றை எடுத்துக் கொண்டு மனேசுக்கு எதிர்த்திசையில் இருந்த 'செற்றி'க்குள் புதைந்தேன். மாதுமைக்கு சமையலுக்கு உதவி செய்யும்படி மனைவியைக் கேட்டுக் கொண்டேன். வசந்தி அதற்கு முன் 'சாயி பஜன்' செய்வதற்கு விரும்பினாள். 'சாயி பஜன்' செய்வதென்றால் அவளுக்கொரு புல் பாய் வேண்டும். மாதுமையிடம் ஒரு 'பாய்' கேட்டாள்.

 "மனேஸ்! அன்ரிக்கு ஒரு பாய் எடுத்துக் குடு" குரல் குசினிக்குள் இருந்து வந்தது. மனேஸ் விளையாட்டில் மூழ்கி இருந்தான். அந்தச் செய்தி அவனின் காதிற்குள் போய்ச் சேரவில்லை. கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் வசந்தி. அவன் அசைவதாக இல்லை.

 "தம்பி மனேஸ், பாய்" என்றாள் வசந்தி.

 மூன்றாவது முறை சொன்னபோதுதான் அவன் மூளை கிரகித்தது. அவன் 'செற்றி'க்குள்ளிருந்து கீழே இறங்கி, 'கேமை'ப் பொத்திக் கொண்டு ஒரு தடவை நிலத்திலே பாய்ந்தான்.

 "தம்பீ! பா ஆ ய்!" செல்லமாக இராகமிழுத்தாள் வசந்தி.

 மனேஸ் பாய்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு 'எட்டுப்' பாய்ந்தான்.

 "இதென்ன தம்பி! பாய்" மூன்றாவது தடவை சொன்னபோது அவன் சிணுங்கினான்.

 "அம்மா! அன்ரி நெடுகலும் என்னைப் பாயச் சொல்லுறா. கால் நோகுது"

பெருநிலத்தில் சில நாட்கள் (கன்பரா யோகன்)


கடந்த மார்ச் மாதக் கடைசியில் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் வட பகுதியையும், மேற்குப் பகுதியையும் உலுப்பி விட்டுச் சென்ற ‘நரெல்லே’ புயல்காற்றின் அதிர்வுகள் தணிந்திருந்த சில நாட்களின் பின் பேர்த் நகரத்துக்கு ஒரு வார விடுமுறையில் சென்றிருந்தோம்.

அப்போதும் வட பகுதி குறிப்பாக எக்ஸ்மவுத் போன்ற சுற்றுலாத்தலங்கள் செல்லமுடியாத அளவுக்கு அங்கிருந்த விமானத்தளம் சேதமடைந்திருந்தது. இதனால் நாம் அங்கு செல்ல முடியாது போய்விட்டபோதிலும் ஒரு வாரம் பேர்த் நகரத்தை சுற்றிப் பார்த்த அனுபவ நிறைவுடன் இதை எழுதுகிறேன்.  

கன்பரா அமைந்திருக்கும் ஒரு குறுணி நிலப்பரப்பிலிருந்து இந்த விரிந்த மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சென்றது முதல் தடவை. இந்தப் மாநிலமே நாட்டின் 40 சத வீத நிலப் பரப்பை உள்ளடக்கிய மிகப் பெரிய மாநிலம். மிக சிறியது எமது தலை நகர பிராந்தியம் - ACT. 

விமானத்தில் சிட்னியிலிருந்து 4 மணி 20 நிமிடம் எடுக்கும் இந்த பயண செலவை கணக்கிட்டுப் பார்க்கும் எம்மில் பலரும் பேர்த்துக்குப் போவதிலும் பார்க்க மலேசியா அல்லது சிங்கப்பூர் சென்று திரும்பிவிடலாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் விரிந்த இந்த பிரதேசத்தின் நிலக் காட்சிகளை தவற விடுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

எமது தூரத்து உறவினரொருவர் பேர்த்திலிருக்கிறார் என்று


அறிந்திருந்தேன்.  ஆனால் அவரது கைத் தொலைபேசி இலக்கத்தை தவறவிட்டிருந்ததால் ஜெர்மனியிலுள்ள இன்னொரு உறவினரிடம் இருந்து அதை வாங்கியிருந்தேன்.

சரி அவரை சந்திக்கலாமே என்று பேர்த்தில் நின்று போன் எடுத்தேன்.

அவரோ தான் Newman என்ற இடத்தில் - பேர்த்திலிருந்து 1200 கிமீ தூரத்திலிருக்கிறார் என்றும் காரில் வர 13 மணி நேரமெடுக்கும் என்று சொல்லக் கேட்டுத் திகைத்துப் போனேன். இரவு நேர பயணங்களில் கங்காருகளுடன் விபத்துக்குள்ளாகும் ஆபத்துமுண்டு என்று எச்சரித்தார். கன்பராவில் காரில் கங்காருகளுடன் மோதிக் களைத்த எமக்கு இன்னொரு அனுபவம் தேவையா? அந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.    

அது கிடக்க வேலை எப்படிப் போகிறது என்று கேட்டேன். BHP இன் சப் ஏஜென்சி ஒன்றுக்கு தான் வேலை பார்ப்பதாகவும், Iron Ore அகழ்வில் முதன்மையான இடத்திலிருக்கும் அப்பகுதியில் தனது வேலை அகழ்வுக் கழிவுகளை பராமரிப்பதுதான் என்கிறார். மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்று கொண்டே போனில் பேசினார். இலகுவில் எவைரையும் சந்தித்துவிடக்கூடிய தூரங்களில் இல்லாதிருக்கக்கூடிய பெருந்தேசம் பேர்த்.

இலங்கைச் செய்திகள்

 தமிழர் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு : கட்சிகள் இடையே ஒருமித்த நிலைப்பாடு

வடக்கு ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுகிறது : அபிவிருத்திப் பணிகள் நாளை ஆரம்பம் !

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! 



தமிழர் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பு : கட்சிகள் இடையே ஒருமித்த நிலைப்பாடு

10 Apr, 2026 | 09:42 AM

(இணையத்தள செய்திப் பிரிவு )

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பில், இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது முக்கிய கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கட்சிகள் இடையே ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகச் செய்திகள்

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈரான் வெளியுறவு அமைச்சர்

எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - மெலனியா ட்ரம்ப்

ஆர்த்தடாக்ஸ் உயிர்த்த ஞாயிறு ; ரஷ்யா - உக்ரேன் 32 மணித்தியால போர்நிறுத்தம்

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது: ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் கண்டனம்



லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈரான் வெளியுறவு அமைச்சர்

Published By: Vishnu

11 Apr, 2026 | 02:04 AM

லெபனான் உட்பட, ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகளை அமெரிக்கா பாதுகாக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

லெபனானுக்கான ஈரான் தூதர் முகமது ரெசா ஷிபானியுடன் தொலைபேசியில் உரையாடியபோது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்நிறுத்த ஒப்பந்தங்களின்படி லெபனானில் சண்டை நிறுத்தப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.

சந்திரோதயம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் எம் ஜி ஆர். அதே


போல் தமிழ் பத்திரிக்கை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சி . பா. ஆதித்தனார். இவர் ஆரம்பித்து நடத்திய தினத் தந்தி நாளிதழ் பத்திரிகை உலகில் ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது. எம் ஜி ஆர் படங்களை எப்படி பாமர மக்கள் பார்த்து ரசித்தார்களோ அதே போல் பாமர மக்களும் படித்து செய்திகளை புரிந்து கொள்ள கூடிய விதத்தில் அவரின் தினத் தந்தி சாதனை நிலை நாட்டியது. இவ்வாறு பாமர, சாதாரண மக்களின் வழிகாட்டிகளாக விளங்கிய திரை நட்சத்திரமும், பத்திரிகை நட்சத்திரமும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் காலமும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்தேறியது. இந்த மோதலின் ஒரு வெளிப்பாடே எம் ஜி ஆரின் சந்திரோதயம் திரைப் படம். 


 எம் ஜி ஆருடன் தொடர்ந்து நடித்து வந்தவர் எம் . ஆர் . ராதா. தொழிலாளி படப்பிடிப்பின் போது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தொடர்ந்து எம் ஜி ஆர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு ராதாவுக்கு கிடைக்கவில்லை. 

இந்த மோதலின் பின் ஏற்கனவே அவர்கள் நடித்துக் கொண்டிருந்த

தாழம்பூ படத்தில் மட்டுமே ராதா நடித்தார். தேவர் படம் உட்பட வேறு படங்கள் எதுவும் எம் ஜி ஆருடன் அவருக்கு கிட்டவில்லை. இந்த நிலையில் சந்திரோதயம் படத்தில் எம் ஜி ஆருடன் நடிக்கும் திடீர் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்படி அவருக்கு கிடைத்த பாத்திரம் ஆதித்தனாரை பிரதிபடுத்துவதாக அமைந்தது. ஆக ஒரு எதிரியை படத்தில் மட்டம் தட்ட தன்னுடன் முரண்டு பிடித்த மற்றொருவரை எம் ஜி ஆர் சாமர்த்தியமாக பயன் படுத்திக் கொண்டார்!  

எம் ஜி ஆர், ஆதித்தனார் இருவரும் தி மு கவை சேர்ந்தவர்கள். சினிமா மூலம் ஒருவரும், பத்திரிகை மூலம் ஒருவரும் கட்சியை அடித்தட்டு மக்கள் வரை எடுத்து சென்று சேர்த்தார்கள். இதனால் அறிஞர் அண்ணாவுக்கு இருவரும் வேண்டப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனாலும் இருவரிடமும் நீண்ட கால பனிப் போர் நிகழ்ந்த வண்ணமே இருந்தது. எம் ஜி ஆரை கிண்டல் செய்தும், மட்டம் தட்டியும் கார்ட்டூன்கள் தந்தியில் அடிக்கடி வெளிவரும். அவர் நடித்த படங்களும் மோசமாக விமர்சிக்கப் படும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் நடிக்கும் படத்தின் கதையை உருவாக்க எண்ணிய எம் ஜி ஆர் அதற்காக ரவீந்தர் மூலம் ஒரு கதையை உருவாக்கினார். காஜா முகைதீன் என்ற பேர் கொண்ட ரவீந்தர் எம் ஜி ஆரின் அறிமுகம் கிடைத்த நாள் தொட்டு அவருடனேயே சேர்ந்து பயணித்தவர். ரவீந்தர் என்ற பெயரும் எம் ஜி ஆரால் அவருக்கு சூட்டப்பட்டது. எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன், காலை அரசி போன்ற படங்களுக்கு இவர் வசனம் எழுதியும் உள்ளார். இந்த ரவீந்தர் எம் ஜி ஆரின் வேண்டுகோளுக்கு அமைய ஆதித்தனாரை மட்டம் தட்டி சந்திரோதயம் படத்தின் கதையை எழுதினார்.

தேன் மழை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி தொடர்ந்து பனித் திரை,


இதயத்தில் நீ , பூஜைக்கு வந்த மலர் , தேன் மழை ஆகிய படங்களை ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கி வெற்றி கண்டவர் முக்தா சீனிவாசன். ஆனாலும் ஜெமினியுடனான அவர்களின் திரைப் பட உறவு முறிய காரணமாக தேன் மழை படம் அமைந்தது. 1966ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் வெற்றி பெற்ற போதும் முக்தா, ஜெமினி இப் படத்துக்கு பிறகு அவர்கள் இணையவில்லை . இதற்கு காரணமானவர் வேறு யாருமில்லை சோ தான்! 


தேன் மழை படத் தயாரிப்பு தொடங்கிய போது அதற்கு கதை, வசனம் எழுத அமர்த்தப்பட்டவர் சோ. ஆரம்பத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரையும் சுற்றி கதை அமைக்கப் பட்ட போதும் படத்துக்கு சோ எழுதிய நகைச்சுவை வசனங்கள் ராமசமி, சீனிவாசன் சகோதரர்களை கவரவே படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையமைக்கும் படி சோவை கேட்டுக் கொண்டார்கள். சோவும் அதன் படியே கதை, வசனங்களை அமைத்தார். இந்த மாற்றத்தை பற்றி ஜெமினிடம் சீனிவாசன் சொன்ன போது ஜெமினி அதனை ஏற்றுக் கொண்டார். இதனால் தங்கு தடையின்றி படப்பிடிப்பு நடந்தது. 

தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு உள்ளான பாஸ்கர் ஒரு கொலையை

செய்து விட்டதாக நாகலிங்கம் மிரட்டுகிறான். அப்பாவியான பாஸ்கரும் பயந்து, நடுங்கி நாகலிங்கத்தின் தாளத்துக்கு ஆடுகிறான். நிர்மலா , பாஸ்கர் இருவரும் காதலர்கள் என்பதை அறிந்த நாகலிங்கம் அக் காதலை வரவேற்கிறான். காரணம் கல்யாணம் மூலம் கிடைக்கும் சீதனம் அனைத்தையும் பாஸ்கரை மிரட்டி தானே அபேஸ் செய்யலாம் என்ற எண்ணம்தான். இதனிடையே வாசு, வேணு என்ற இரு நண்பர்களும் அரைக் கிறுக்குத்தனமாக திட்டம் போட்டு இந்திரா என்ற பணக்கார பெண்ணை ஏமாற்றி பணம் பண்ணப் பார்க்கிறார்கள். இது விஷயமாக அவர்கள் பண்ணும் கிறுக்குத்தனங்கள், அசட்டுத்தனங்கள் தான் படத்தின் காமெடி ! நாகலிங்கத்திடம் இருந்து உண்மையை வரவழைக்க வாசு, வேணு பண்ணும் ரகளையில் ரசிகர்களின் சிரிப்பொலி அடங்க நீண்ட நேரம் எடுத்தது. அந்த வகையில் வசனகர்த்தா சோவுக்கு வெற்றிதான். 

படம் முழுவதும் நாகேஷ், சோ, மனோரமா இவர்கள் பண்ணும் ரகளைத்தான் ரசிகர்களை கட்டிப் போட்டது. குறிப்பாக மனோரமா நாகேஷ், சோ இருவருக்கும் ஈடு கொடுத்து நடித்திருந்தார். 


பயிற்சி — நல்ல பழக்கங்களை உருவாக்கும் அடிப்படை

 நாம் அடையும் அனைத்தும் பயிற்சியின் மூலமே கிடைக்கின்றன. நடப்பது, பேசுவது, படிப்பது, சாப்பிடுவது போன்றவை அனைத்தும் பயிற்சியின் மூலம் நாம் கற்றுக் கொண்டவையே. இவற்றில் பல, நமக்குத் தெரியாமலேயே, தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடுகின்றன.

இதற்கான ஒரு சிறிய உதாரணம்: சில முதியவர்கள் பல ஆண்டுகளாக ஜபமாலையை (மாலை) தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த பழக்கம் மிகவும் இயந்திரமாக மாறி, அவர்கள் பிறருடன் பேசிக்கொண்டிருந்தாலும் கூட அதைச் செய்வார்கள். இதனால், எல்லா பழக்கங்களுக்கும் அடிப்படை காரணம் பயிற்சி என்பதைக் காணலாம்.

எனவே, நாம் நல்ல பழக்கங்களைப் பயிற்சி செய்ய வேண்டும். எப்படி தீய பழக்கங்கள் நமக்குத் தெரியாமலேயே செயல்படுகின்றனவோ, அதேபோல் நல்ல பழக்கங்களும் நமக்குள் நல்ல எண்ணங்களை உருவாக்கும் வகையில் செயல்படும். நாம் தினசரி வாழ்க்கையில் உண்மையுடன் வாழும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒழுக்கமும் நடப்பும் மிகவும் அவசியமானவை. நல்ல மரியாதையும் ஒழுக்கமும் மனிதனின் உயிர் சக்தி போன்றவை. ஆனால் இன்று நாம் இம்மூன்றையும் இழந்துவிட்டோம். மனிதனின் முக்கிய குறைகள் என்னவென்றால்: பெரியவர்களுக்கு மரியாதை இல்லாதது, பெற்றோருக்கு அன்பு இல்லாதது, நண்பர்களுக்கு உரிய இடம் வழங்காதது ஆகியவையாகும்.

இந்த அனைத்தையும் மீட்டெடுக்க, நாம் நல்ல பழக்கங்களையும் நம்பிக்கைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தெய்வீக அன்பு — தியாகத்தின் வடிவமும் க்ஷமாவின் அவசியமும்

 உண்மையானதும் சுயநலமற்றதுமான அன்பு தியாகமாக வெளிப்படும். அத்தகைய அன்பில் வெறுப்பு என்றதே இல்லை. அது முழு பிரபஞ்சத்தையும் சூழ்ந்து, தொலைவில் இருப்பவர்களையும் நெருக்கமாக கொண்டு வரக்கூடிய சக்தி உடையது. மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்துவது அன்பே ஆகும். அது “பசு” (மிருக இயல்புடையவன்) என்பவனை “பசுபதி” (தெய்வீக நிலை) ஆக மாற்றும் வல்லமை கொண்டது.

இந்த உலக வாழ்க்கையில், இந்த ஆதாரமான அன்பின் பல வடிவங்களையும் நிழல்களையும் நாம் காண்கிறோம். தந்தை, தாய், சகோதரர், சகோதரி, நண்பர்கள் போன்றவர்களிடம் நாம் அன்பு கொள்கிறோம். ஆனால் இத்தகைய அன்புகளில் எங்காவது ஒரு இடத்தில் சுயநலத்தின் சுவடு காணப்படும். ஆனால் தெய்வீக அன்பு என்றால், அதில் சுயநலத்தின் சிறிய தடயம்கூட இருக்காது.

அத்தகைய அன்பிற்கு நாம் சரணாகதி அடைய வேண்டும். அதில் முழுமையாக மூழ்கி, அது அளிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும். இப்படிப்பட்ட அன்பைப் பெறுவதற்கு, க்ஷமா அல்லது பொறுமை என்ற குணம் மிக அவசியமானது. ஒவ்வொருவரும் இந்த உயர்ந்த குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

க்ஷமா என்பது புத்தகங்களை வாசிப்பதன் மூலம் கிடைக்காது; அல்லது ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடியதுமல்ல. அது யாரிடமிருந்தும் பரிசாகப் பெறப்படுவதில்லை. இந்த முதன்மையான நற்குணமான க்ஷமா, நமது சொந்த முயற்சியினால் மட்டுமே பெறப்பட முடியும். வாழ்க்கையில் வரும் பல்வேறு பிரச்சினைகள், சிரமங்கள், கவலைகள், துன்பங்கள் மற்றும் துக்கங்களை தைரியமாக எதிர்கொள்வதன் மூலம் தான் இதை அடைய முடியும்.

பிரேமா — உயிரின் மூலமும் தெய்வீக ஆனந்தத்தின் பாதையும்

 பிரேமா (அன்பு) மனிதனின் பிராணன் (உயிர்சக்தி) ஆகும்; அதேபோல் பிராணனே பிரேமா ஆகும். அன்பில்லாதவன் உயிரற்ற சடலத்துடன் ஒப்பிடப்படுகிறான். உயிருடன் இருப்பவர்களிடமே அன்பு வெளிப்படும்; ஒரு சடலத்தை யாரும் நேசிப்பதில்லை. ஆகவே அன்பும் உயிரும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.

இந்த உலக வாழ்க்கையில், அன்பு பல வடிவங்களில் வெளிப்படுகிறது—தாய்-மகன், கணவன்-மனைவி, உறவினர்கள் ஆகியோருக்கிடையிலான அன்பாக. இத்தகைய அன்புகள் உடல் சார்ந்த உறவுகளின் அடிப்படையில் உருவாகி, பெரும்பாலும் சுயநலமும் தனநலமும் கலந்தவையாக இருக்கும். ஆனால் தெய்வீக அன்பு முற்றிலும் சுயநலமற்றது; அது அன்பிற்காகவே அன்பு செலுத்தும் தன்மையுடையது. இதுவே பக்தி எனப்படுகிறது.

இந்த அன்பின் ஒரு முக்கிய பண்பு — கொடுப்பதே அன்றி பெறுவது அல்ல. இரண்டாவது, அன்புக்கு பயம் இல்லை. மூன்றாவது, அது எந்த சுயநல நோக்கத்திற்காகவும் அல்ல; அன்புக்காகவே அன்பு. இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்து “ப்ரபத்தி” (சரணாகதி) எனப்படும் நிலையை குறிக்கின்றன.

ஒருவர் இந்த ப்ரபத்தி நிலையை அனுபவிக்கும்போது, அவர் தெய்வீக ஆனந்தத்தை உணர்கிறார். இதற்கான முதன்மையான அவசியம் க்ஷமா (மன்னிப்பு / பொறுமை) ஆகும்.

உணர்வு உறுப்புகளின் ஒற்றுமை — பொறுமையின் முக்கியத்துவம்

 நமது உணர்வு உறுப்புகளின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். அவற்றில் ஏதாவது ஒரு உறுப்பு ஒற்றுமையுடன் செயல்படாமல் இருந்தால், வாழ்க்கை தடுமாறும். மனதில் ஒரு எண்ணம் தோன்றும் போது, அந்த எண்ணத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. உணர்வுகள் மனத்தின் எண்ணங்களைப் பின்பற்றாவிட்டால், வாழ்க்கை துன்பகரமாக மாறிவிடும்.

பொறுமை (க்ஷமா) இருக்கும் போது, அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக இணைந்து ஒரே நோக்கில் செயல்படும். ஒரு உதாரணம்: ஒருமுறை கண்கள், காதுகள், கை, கால் போன்ற உறுப்புகள் நாவைப் பார்த்து பொறாமை கொண்டன. “நாங்கள் எல்லோரும் உணவைப் பெற கடினமாக உழைக்கிறோம்; ஆனால் நாவே அதை அனுபவிக்கிறது” என்று அவை குறை கூறின.

ஆனால் உண்மையில் நாவு உணவைச் சுவைத்து, சாப்பிட ஏற்றவற்றை மட்டுமே உடலுக்குள் அனுப்புகிறது. அதன் பிறகு உடலின் உள்ளுறுப்புகள் அதை சக்தி அளிக்கும் இரத்தமாக மாற்றுகின்றன. நாவு அதைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை. நாவு செய்யும் இந்த முக்கியமான பணியில்லாமல், மற்ற உறுப்புகள் எதுவும் செயல்பட முடியாது.

இதை உணராமல், மற்ற உறுப்புகள் பொறாமையால் உணவை அனுப்புவதை நிறுத்தின. அதன் விளைவாக, அவை தங்களுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டன; உணவு இல்லாமல் சக்தி கிடைக்காமல், அவற்றால் செயல்பட முடியாமல் போனது.

அதேபோல், ஒரு மனிதனின் பொறாமை இறுதியில் அவனையே அழிவுக்குக் கொண்டு செல்லும்.

எண்ணங்களின் சக்தி — மனித வாழ்க்கையின் அடிப்படை

 எண்ணங்களே மனிதனின் உயிர் மூச்சாகும். வெறுப்பு, பொறாமை, கோபம், அகம்பாவம் போன்ற தீய எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்வதன் மூலம் மனிதன் தன் வீழ்ச்சியைத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான்.

மனிதன் தனது சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் அந்த எண்ணங்கள் பிறருக்கு ஏற்படுத்தும் தீங்கு, பத்து மடங்கு வலிமையுடன் திரும்பி அவனையே தாக்கும். பிறரை திட்டுவது, குறை கூறுவது, துரத்துவது, அவதூறு பேசுவது போன்ற செயல்கள், உண்மையில் இறைவனைத் திட்டுவது, குறை கூறுவது, அவதூறு பேசுவது போன்றதே ஆகும்.

மற்றவர்களுள் தெய்வீகத்தின் இருப்பை அறியாத அறியாமையால் மனிதன் இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறான். பட்டையை எடுத்தவன் அதனால் அழிவான்; மற்றவரை காயப்படுத்துகிறவன் தானும் காயப்படுவான்; பிறரை இகழுகிறவன் தானும் இகழப்படுவான். எப்படிப்பட்ட எண்ணம் இருக்கிறதோ அப்படியே அதன் விளைவும் இருக்கும்; எப்படிப்பட்ட உணர்வு இருக்கிறதோ அப்படியே அதன் பலனும் இருக்கும்.

மனத்தின் வலிமையையும் சக்தியையும் அறியாமல், நாம் அதன் முக்கியத்துவத்தை மிகக் குறைவாக மதிக்கிறோம். நம் முழு வாழ்க்கையும் மனத்தின் மீது தான் நிலைத்து நிற்கிறது. ஆகவே, மனத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள நாம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

க்ஷமா (பொறுமை) — உயர்ந்ததும் மாட்சிமையானதும் ஆன ஒரு பண்பு

 க்ஷமா (பொறுமை) என்பது எல்லா நற்குணங்களிலும் மிக உயர்ந்ததும் மாட்சிமையானதும் ஆகும். இது அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு பெரும் பண்பு. மகாபாரதமும் ஸ்ரீமத் பகவதமும், க்ஷமா இழக்கப்படும் போது ஏற்படும் பேரழிவுகளை விளக்கும் பல நிகழ்வுகளை கொண்டுள்ளன.

க்ஷமா நீங்கும் தருணத்தில் முதலில் நுழையும் தீய குணம் பொறாமை ஆகும். மற்றபடி சீராக ஓடும் வாழ்க்கையும், பொறாமையால் எவ்வாறு முற்றிலும் சிதைந்து போகிறது என்பதை மகாபாரதம் தெளிவாக காட்டுகிறது. சொர்க்கத்தைப் போன்ற தங்கத் தீவு இலங்கை, ராவணனின் பொறாமையால் சிதைவடைந்தது.

க்ஷமா ஒருவருக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கக் கூடியது; ஆனால் அதன் இல்லாமை மனிதனை துன்பத்திலும் பேரழிவிலும் தள்ளிவிடும். அவசரம் சுயநலத்தை உருவாக்கி, பொறாமையை வளர்க்கிறது; இவை இணைந்து உட்கலகங்களையும் பிரிவினைப் போக்குகளையும் தூண்டுகின்றன.

இன்றைய உலகில் நாடுகள் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு காரணமாக இருப்பது இந்த உயர்ந்த குணமான க்ஷமாவின் பற்றாக்குறையே ஆகும். அவசரம், பெரிய ஆன்மிக சாதகர்களைக் கூட வீழ்த்தியுள்ளது. அரசர்கள் கூட பிச்சைக்காரர்களாகத் தாழ்த்தப்பட்டுள்ளனர். க்ஷமா இல்லாதபோது, ஒரு யோகி கூட நோயாளியாக மாறலாம்!

க்ஷமா இல்லாமல் மனிதகுலம் வீழ்ச்சியடையும்; ஆனால் இந்த குணம் இருந்தால், அது வேகமாக முன்னேற்றம் அடையும்.

திருமுறை பண்ணிசைப் பேருரைகள் - திருக்கைலாய கந்தப் பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்

 


பேர்த் பால முருகன் கோவில் வருடாந்த மகோற்சவ விழா - 16.04.2026 தொடக்கம் 28.04.2026 வரை