அப்பா எந்தன் அகத்துள் இருக்கிறார் !


 
















 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 




இப்படி அப்பா இருப்பார் என்று
எண்ணியே நானும் இருந்ததே இல்லை
மருந்தாய் இருப்பார் மருத்துவ ராவார்
விருந்தாய் இருப்பார் வீழ்ந்திடா காப்பார்

கண்ணுள் இருக்கும் மணியே அப்பா
கஷ்டங்கள் அணுகா காவலாய் இருப்பார்
எண்ணாய் இருப்பார் எழுத்தாய் இருப்பார்
எழுந்து நிற்க ஊன்றுகோல் ஆகுவார்

தானும் படிப்பார் படித்திட  வைப்பார்
தலைமைப் பண்பை உணர்த்தியே நிற்பார்
கற்றவர் அவையில் முன்னிலை வகியென
கனிவாய் கண்டிப்பாய் சொல்லுவார் அப்பா 

திருவருள் மழை பொழியும் நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா!

 


சிவஞானச்சுடர் பல்மருத்துவக் கலாநிதி

பாரதி இளமுருகனார்.















(படம்-  2025ஆம் ஆண்டு தேரில் வந்த திருப்பெருங் காட்சி)


தீராத வினைதீர்க்கும் சரவண சண்முகன்

  தேரிலேறி வீதிவரும் பவனி காண

ஆராத காதலுடன் பத்தர் கூட்டம்

  அரோகரா கந்தனுக்கு அரோகரா வென்ற

பேரோசை ஒலித்தபடி நல்லூர்ப் பதியைப்

  பெருந்திரளாய்ச்  சென்றடைந்து நற்கதி தன்னைத்

தாராயோ என்றிறைஞ்சி ஆண்டு தோறும்

  தவறாது கூடுவதோ கண்கொளாக் காட்சி!

இடருக்கு மேலிடர்கள் எமைநோக்கி வருகிறது !


 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 




அலைகடல் ஆர்ப்பரித்தால் அனைத்தையும் அழித்து விடும் 
அடைமழை பெய்துவிட்டால் அடித்துக்கொண்டே போய்விடும்
இடிமின்னல் வந்துவிட்டால் எத்தனையோ நடந்திடலாம்
இயற்கையது சீற்றத்தை எல்லோரும் அறிந்திடுவோம்

காட்டை அழித்தோம் கடலையும் விட  வில்லை 
ஆற்றை மறித்தோம் அணைகளைக் கட்டினோம்
மண்ணையும் விடவில்லை விண்ணையும் விடவில்லை
கண்பட்ட  இடமெல்லாம் காசாக்கி நின்றோம்

வானுயர்ந்த் கட்டிடங்கள்  மலைமீதும் மாடிகள்
மண்ணுக்குள் சுரங்கம் தோண்டுகிறோம் தோண்டுகிறோம்
விஞ்ஞானம் எனும்விருட்சம் வியாபித்து வளர்ந்து
இயற்கைக்கு எதிராக எத்தனையோ செய்கிறது 

இரக்கங்கொள்வீர்! – அன்பு ஜெயா, சிட்னி (பா வகை: ஆசிரியத் துறை)

 

இரக்கம் என்பதே எல்லோர் மனத்திலும்

பரந்தே இருந்தால் பாரினில் என்றுமே

இரந்து வாழ்பவர் இருப்பரோ

இரக்கமே கொள்வீர் இன்னலை நீக்கவே!

 

துன்பம் எவரையும் துவளச் செய்தால்

அன்புடன் அவர்க்கும் அளித்திடே உதவி

என்றும் வாழ்வோர் எல்லாம்

இன்பமாய் இருந்திட ஏற்றவை செய்திடு!

 

இருப்பதில் பகுதியை இரப்போர்க் கீதல்

இருத்தும் உன்னை இறையின் அருகில்

பெருகிடும் நல்வினைப் பேறுமே

நெருங்கிடும் அமைதியே நெஞ்சினில் நிறுத்திடு!

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 14…..சங்கர சுப்பிரமணியன்.

 ஷிபுயா கிராஸிங்குக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ஷிபியா


ஸ்கிராம்பிள் என்ற பெயர்தான்.ஷிபியா கிராஸிங்கின் பிரமிப்பை பார்வையிட்ட பின் ஷிபியா ஸ்கை சென்றோம். ஷிபியா ஸ்கை என்பது அங்கிருந்து நடக்கும் தூரத்தில் உள்ள வானுயர்ந்த கட்டிடம். அதன் கடைசி மேல்தளத்தில் உள்ள திறந்த வெளியாகும்.

இந்த இடத்திலிருந்து டோக்கியோ நகரம் முழுவதையும் எல்லா கோணங்களிலும் இருந்து பார்க்கலாம். இதேபோல் டோக்கியோ டவர் என்ற வானுயர்ந்த கட்டடத்தில் இருந்தும் டோக்கியோ நகரம் முழுவதையும் காணலாம். ஆனால் இந்த இடத்தின் சிறப்பு இங்கிருந்து கீழேயுள்ள ஷிபுயா கி

ராஸிங்கை பார்க்கும்போது ஒரு பதிய அனுபவத்தைப் பெறலாம்.

இக்கட்டிடம் தரைமட்டத்தில் இருந்து 229 மீட்டர் உயரம் உள்ளது. 46 தளங்களுடன் கூடிய இக்கட்டிடத்தில் 14வது  தளம் வரை லிப்டில் செல்லலாம். அங்கிருந்து 45, 46வது தளம் செல்ல வேண்டுமானால் அனுமதிச் சீட்டு வேண்டும். அனுமதிச் சீட்டை நாங்கள் முன்பதிவு செய்திருந்ததால் நீண்டவரிசையில் நிற்கத் தேவையில்லாதிருந்தது. வரிசையில் நின்றாலும் பெருபாலும் அனுமதிச் சீட்டு கிடைக்காது.

ஒருவேளை முன்பதிவும் கிடைக்காமல் வரிசையில் நின்றும் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடவேண்டியதில்லை. ஐந்துநிமிட நடை தூரத்தில் மாகனட் பை ஷிபுயா109 என்ற இன்னொரு பார்வயிடும் தளமும் உள்ளது. இங்கு அனுமதிச் சீட்டு வாங்கவேண்டும். பெரும்பாலும் அனுமதிச்சீட்டு கிடைத்துவிடும். ஆனால் ஷிபுயா ஸ்கைக்கு முன்னுரிமை கொடுங்கள்.

காரணத்தைச் சொல்கிறேன். ஷிபுயா ஸ்கையின் 46வது திறந்தவெளி மாடியில் இருந்து ஷிபுயா கிராஸிங், டோக்யோ டவர், டோக்யோ ஸ்கைட்ரீ மற்றும் மவுண்ட் ப்யூஜி போன்றவற்றை தடைபடாது பார்க்குமளவுக்கும் பாதுகாப்பு கருதியும் கண்ணாடிச்சுவர்கள். 45வது மாடியில் இருந்தும் பார்க்கலாம். காலை பத்து மணியில் இருந்தி இரவு பத்து மணிவரை திறந்திருக்கும்.

46வது மாடியில் ஒரு இடத்தில் மேற்கூரையுடன் ஒரு உணவகம் உள்ளது. இங்கு இலேசான சிற்றுண்டி மற்றும் பானங்கள் கிடைக்கின்றன. இரவு நேரத்தில் ஷிபுயா ஸ்கை சென்றால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தெரியும். அங்கிருந்து அடித்தளத்தின் வழியாக ஷிபுயா ரயில் நிலையத்திற்கு நேரடியாகவே சென்று விடலாம்.

பத்ரகாளி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

திரை படங்களில் கதாநாயகி துன்பத்தில் துடிப்பாள் , கஷ்டங்களை அனுபவிப்பாள் , இறுதியில் சில படங்களில் உயிரையும் இழப்பாள் . ஆனால் படத்திலும் உயிரை இழந்து படம் வெளிவரும் முன் தன் உயிரையும் இழந்த ஒரே கதாநாயகி , நடிகை ராணிசந்திரா! அவர் நடித்த அந்த படம் பத்ரகாளி . 


 தமிழ் சினிமாவில் பிரபல டைரக்டராக திகழ்ந்தவர் ஏ .சி . திருலோகசந்தர். இவர் இயக்கத்தில் உருவான நானும் ஒரு பெண், ராமு, அன்பே வா, இரு மலர்கள் , எங்கிருந்தோ வந்தாள் , தெய்வமகன் போன்ற படங்களின் வெற்றியால் இவர் அங்கீகரிக்கப்பட்ட இயக்குனராக வலம் வந்தார். 70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் படத் தயாரிப்பாளராகவும் இவர் உருவெடுத்தார். 

 சினிபாரத் என்ற தனது பட நிறுவனத்தால் சிவாஜி நடிப்பில் இவர்

எடுத்த பாபு, பாரதவிலாஸ் இரண்டும் வெற்றி கண்டன. ஆனால் அடுத்து எடுத்த டாக்டர் சிவா பொருளாதார ரீதியில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிறிய பஜெட்டில் ஒரு படத்தை எடுக்கத் தீர்மானித்த திருலோக் சிவாஜியை தவிர்த்து சிவாவை அதாவது சிவகுமாரை படத்துக்கு ஹீரோவாக்கினார் . 

 மூன்று மாதங்களில் படத்தை முடித்து திரையிட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த திருலோக்குக்கு இடி விழுந்தாற் போல் விமான விபத்தில் ராணிசந்திரா இறந்து விட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்று பம்பாய் திரும்பியவர் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானம் விபத்துக்குள்ளானதால் உடல் கருகி தன் தாய், மூன்று சகோதரிகளுடன் பலியாகி விட்டார். 

 படத்தின் இறுதிக் காட்சி உட்பட சில காட்சிகள் படமாக்கப் பட வேண்டியிருந்த கட்டத்தில் ராணிசந்திரா மறைந்தது படத்தை அப்படியே முடக்கியது. நிதிப் பிரச்னைகளில் இருந்து மீள எடுக்கப் பட்ட படம் மேலும் சிக்கலில் மாட்டி விட்டதே என்று திருலோக் கலங்கினார். ஆனால் சிவகுமார் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிட்டியது. அவருடன் பட்டிக்காட்டு ராஜா படத்தில் டான்ஸ் காட்சியில் நடித்த புஷ்பா என்பவர் ராணிசந்திரா போன்ற முக ஜாடையில் இருக்கவே அவரை நடிக்க வைத்து படத்தை எடுத்து முடித்தார்கள். படத்தில் இறுதியில் சிவகுமார் மடியில் கதாநாயகி உயிர் துறக்கும் காட்சியில் புஷ்பா நடித்து படத்துக்கு உயிர் கொடுத்தார். ராணிசந்திரா , புஷ்பா இருவருக்குமான சேர்த்து சௌந்திரம் என்பவர் குரல் கொடுத்தார். 

இலங்கைச் செய்திகள்

 நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்" – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

பலாலியில் 12ஆவது வாரமாக தொடரும் போராட்டம்



நாமல் ராஜபக்‌ஷவுக்கு செப்டம்பர் 18 வரை விளக்கமறியல்

04 Sep, 2026 | 06:01 PM

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உலகச் செய்திகள்

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280 ஆக அதிகரிப்பு ; 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் விஜய் பங்கேற்பு

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள்: எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தகர்ப்பு!



நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280 ஆக அதிகரிப்பு ; 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!

Published By: Digital Desk 3

04 Sep, 2026 | 11:50 AM

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,620க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.

இரண்டாவது வாரமாகப் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால், உறவினர்கள் நம்பிக்கையிழந்து அடையாளப் பூதவுடல்களை உருவாக்கி இறுதிச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.

நேபாள தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் தகவலின்படி,

கிருஷ்ணரின் அருளைப் பெறும் வழி

 பக்தி வழிபாட்டு முறைகளில், வீட்டில் இறைவனின் திருவுருவப் படத்தையோ அல்லது திருவிக்கிரகத்தையோ நிறுவி, அதனை வழிபடுவது மட்டுமே மிகவும் குறைந்த பயனளிக்கும் வழியாகும்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் சிறப்பு பூஜைகள் செய்வதிலும், வழக்கத்தைவிட அதிகமான உணவு வகைகளைத் தயாரிப்பதிலும் மட்டும் முடங்கிவிடக் கூடாது. கிருஷ்ணரின் அருளைப் பெறுவதற்காகவே மக்கள் இவ்வாறான வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஆனால், அந்த அருளைப் பெறுவதற்கான உண்மையான வழி கிருஷ்ணர் அருளிய போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே ஆகும்.

வெறும் பெருமிதத்துடனும் ஆடம்பரமான வெளிப்பாட்டுடனும் இறையருள் கிடைக்காது. கிருஷ்ணரை வழிபட்டுக்கொண்டே, அவர் கூறிய போதனைகளைப் புறக்கணிப்பது புனிதத்தன்மைக்கு எதிரான செயலாகும். ஒருவர் வெளிப்புற வழிபாட்டைத் தவிர்த்தாலும் பரவாயில்லை; ஆனால், கிருஷ்ணர் காட்டிய நல்வழியில் உண்மையுடனும் நேர்மையுடனும் நடக்க முயற்சி செய்தால், அவரது அருளைப் பெற முடியும்.

கிருஷ்ணர் அன்பின் திருவுருவமாக விளங்கினார். எனவே, அவர் மிகவும் போற்றும் உயர்ந்த பண்பு அன்பாகும். ஆனால், அன்பு வெறும் உணர்வாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அது பிறர்மீது காட்டப்படும் கருணை நிறைந்த செயல்களாக வெளிப்பட வேண்டும்.

கருணையை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறருடைய துன்பங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் பரிவான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அன்பையும் கருணையையும் வளர்த்துக்கொண்டு, இறுதியில் அன்பின் திருவுருவமான கிருஷ்ணருடன் ஒன்றிணையும் நிலையை அடைய வேண்டும்.

உங்களில் பலர் சாதனை (Sadhana) எனப்படும் ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இந்தச் சாதனையின் அடிப்படை நோக்கம் என்ன?

ஒரு சாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்மிகப் பயிற்சியும், இறையருள் என்னும் பெருங்கடலை நோக்கிச் செல்லும் ஓர் ஆறாகும். நாம் பிறருக்குச் சேவை செய்யவும், அவர்களின் துன்பங்களில் பரிவுடன் பங்கேற்கவும் தூண்டும் அன்பு, இறைவனின் அன்பிலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பொறியே என்பதை நம்புங்கள்.

அந்த அன்பை வளர்த்து, சேவையிலும் கருணையிலும் வெளிப்படுத்துவதே உண்மையான பக்தியின் அடையாளமாகும். அன்பு, கருணை, சேவை ஆகியவற்றின் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறும் பாதையில் நாம் முன்னேறுவோம்.

கிருஷ்ணர் – அருளின் தூய வடிவம்

 ‘கிருஷ்ண’ என்ற பெயர் ‘க்ருஷ்’ (Krish) என்ற மூலச்சொல்லிலிருந்து தோன்றியது. இதற்கு மூன்று முக்கியமான பொருள்கள் உள்ளன:

  1. ஈர்த்தல்,
  2. உழுது பண்படுத்துதல்,
  3. காலம், இடம், காரணம் ஆகியவற்றைக் கடந்த தெய்வீகத் தத்துவம்.

அனைத்து அவதாரங்களைப் போலவே, கிருஷ்ணரும் ஆன்மீகத் தேடலில் இருப்பவர்களையும், சித்தர்களையும், முனிவர்களையும் மட்டுமல்லாது, எளியவர்களையும், அப்பாவிகளையும், நல்ல உள்ளம் கொண்டவர்களையும் தம்மிடம் ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல், ஆர்வமுள்ளவர்களையும், விமர்சகர்களையும், சந்தேகப்படுபவர்களையும், நாத்திக எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் கூட தம்மை நோக்கி ஈர்த்தார்.

தமது தனிப்பட்ட வசீகரத்தாலும், வெல்ல முடியாத காந்தம் போன்ற பார்வையாலும், இனிய குரலாலும், புல்லாங்குழல் இசையாலும், சிறந்த அறிவுரைகளாலும், அஞ்சாத வீரத்தாலும் கிருஷ்ணர் அனைவரையும் தம்மிடம் ஈர்த்தார்.

அவர் எப்போதும் பேரானந்த நிலையில் இருந்து, தம்மைச் சுற்றிலும் ஒற்றுமை, இசை மற்றும் அழகை பரப்பினார். பிருந்தாவனத்தின் அமைதியான மேய்ச்சல் நிலங்களிலும் அவர் பாடினார்; குருக்ஷேத்திரத்தின் இரத்தம் தோய்ந்த போர்க்களத்திலும் அவர் பாடினார். ஓரிடத்தில் அவரது கையில் புல்லாங்குழல் இருந்தது; மற்றோரிடத்தில் போர்த்தேரின் சாட்டை இருந்தது. ஆனால் இரண்டிலிருந்தும் வெளிப்பட்டது அர்த்தமுள்ளதும் உள்ளத்தைத் தொடுவதுமான இசையே — ஒன்று வேணுகானம், மற்றொன்று பகவத் கீதை! ‘கானம்’ மற்றும் ‘கீதை’ ஆகிய இரண்டுமே ‘பாடல்’ என்ற பொருளைக் கொண்டவை.

கிருஷ்ணர் ஏன் அனைவரையும் தம்மிடம் ஈர்க்கிறார்?

மனிதனின் இதயத்தை உழுது பண்படுத்துவதற்காகவே அவர் நம்மைத் தம்மிடம் ஈர்க்கிறார். அருளின் மழையைப் பெறுவதற்காக இதயத்தைத் தயார்படுத்துகிறார். அன்பு என்னும் விதைகளை அதில் விதைத்து வளரச் செய்கிறார். மகிழ்ச்சியின் பயிர்களை அழித்துவிடும் தீய எண்ணங்கள் என்னும் களைகளை அகற்றுகிறார். இறுதியில், ஞானம் என்னும் அறுவடையைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறார்.

அந்த ஞானம் இறுதியில் கிருஷ்ணரிலேயே நிறைவு பெறுகிறது. ஏனெனில் கிருஷ்ணர் என்பது தூய சாரத்தையும், பரம தத்துவத்தையும், சத்–சித்–ஆனந்தம் எனும் இறைநிலையையும் குறிக்கிறது.

எனவே, கிருஷ்ணரை நோக்கி நாம் ஈர்க்கப்படுவது வெறும் பக்தியினால் மட்டுமல்ல; நமது இதயத்தைப் பண்படுத்தி, அன்பையும் ஞானத்தையும் வளர்த்து, இறுதியில் பரமானந்த நிலையை அடையச் செய்வதற்காகவே ஆகும்.

பற்றின்மையே பேரானந்தத்தின் வழி

 பொருள் செல்வம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, துயரத்தையும் கூடவே கொண்டு வருகிறது. செல்வத்தைச் சேர்த்துக் கொண்டே போதலும், ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே போதலும், இறுதியில் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடையிலான மாறி மாறும் நிலைக்கே நம்மை இட்டுச் செல்கின்றன.

பற்றுதலே மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் மூல காரணம்; பற்றின்மையே நம்மைக் காப்பாற்றும் வழியாகும்.

‘ஆசக்தி’ (Asakti) என்பது பற்றுதல்; அது ‘மாரக’ (Maraka) – அழிவை ஏற்படுத்துவது. ‘அனாசக்தி’ (Anasakti) என்பது பற்றின்மை; அது ‘தாரக’ (Taraka) – காப்பாற்றுவது.

ஒரு கோடீஸ்வரர் வருமான வரியைச் செலுத்தும்போது கண்களில் கண்ணீர் வரலாம். ஆனால், ஒரு பள்ளித் தலைமையாசிரியர் வேறு இடத்திற்கு மாற்றலாகிச் செல்லும்போது, தான் பயன்படுத்தி வந்த பள்ளியின் மேசை, நாற்காலி மற்றும் ஆய்வக உபகரணங்களை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறார். ஏன்?

தலைமையாசிரியர் தான் அவற்றின் உரிமையாளர் அல்ல; வெறும் பொறுப்பாளர் என்பதை அறிந்திருக்கிறார். அவற்றின் மீது அவருக்குப் பற்றுதல் இல்லை. அவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதை அவர் நன்கு அறிவார்.

அதேபோல், உங்கள் குடும்பம், உங்கள் வீடு, உங்கள் நிலங்கள், உங்கள் கார் ஆகிய அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவை; நீங்கள் அவற்றின் உரிமையாளர் அல்ல, வெறும் அறங்காவலர் மட்டுமே என்ற உணர்வுடன் வாழுங்கள். அவற்றை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எந்தவிதமான மனக்குறையுமின்றி அவற்றை விட்டுக்கொடுக்கத் தயாராக இருங்கள்.

‘தியாகம்’ (Tyaga) என்பதன் பொருள், பொருட்களுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்பதல்ல. நீங்கள் அவற்றைப் பாதுகாத்துப் பேணலாம்; அவற்றின் மீது அக்கறையும் காட்டலாம். ஆனால், அவை நிலையற்றவை என்பதையும், அவை தரும் மகிழ்ச்சி அற்பமானதும் தற்காலிகமானதுமே என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதாவது, அவற்றின் மீது ‘மோகம்’ (Moha) எனப்படும் அளவற்ற பற்றுதலை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

பொருட்களின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்; அவற்றின் மதிப்பை மிகைப்படுத்தி எண்ணாதீர்கள். உலகப் பொருட்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல; அவை இறைவனால் நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் என்பதை உணர்ந்து வாழ்வதே உண்மையான பற்றின்மையும் தியாகமும் ஆகும்.

கிருஷ்ணர் காட்டிய வெற்றியின் வழி

 இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்ற உணர்வுடன் தொடர்ந்து சாதனை செய்து வந்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை கிருஷ்ணர் தமது வாழ்க்கையின் மூலம் எடுத்துக்காட்டினார்.

கிருஷ்ணரை உங்கள் தேரோட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள்; எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், அவர் உங்களை வெற்றியின் பாதையில் வழிநடத்துவார்.

இறைவனுக்கு விருப்பமானவர்களோ, விரோதமானவர்களோ என்று எவரும் இல்லை. நெருப்பைப் போல, தம்மை அணுகி இருப்பவர்கள் அனைவருக்கும் அவர் வெப்பத்தை அளிக்கிறார். அந்த வெப்பத்தை நீங்கள் உணரவில்லை என்றால், இறைவனைக் குறை கூறாதீர்கள்; அவரிடமிருந்து நீங்கள் விலகி இருப்பதையே காரணமாக எண்ணுங்கள்.

பீஷ்மரைப் பாருங்கள்! தம்மைக் கொல்வதாக உறுதி எடுத்திருந்த கிருஷ்ணரையே அவர் பிரார்த்தித்தார். கிருஷ்ணரின் தெய்வீக மகிமையைத் தரிசிக்கும் பேற்றை அருளுமாறு வேண்டினார். இதுவே உண்மையான பக்தியும், உண்மையான ஞானமும் ஆகும். பீஷ்மரிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் தெய்வீகத் தரிசனமும் இருந்தன; கிருஷ்ணரும் அவரை ஆசீர்வதித்தார்.

இரண்யகசிபு “அவன் எங்கும் இல்லை” என்று கூறினான்; ஆகவே, அவனுக்கு இறைவன் எங்கும் இல்லாதவராகவே இருந்தார். ஆனால் பிரகலாதன், “அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று உறுதியாகக் கூறினான். அவனது கூற்று உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, இறைவன் தூணிலிருந்து வெளிப்பட்டார்.

உண்மையில், தந்தையின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக இறைவன் தூணுக்குள் ஓடிச்சென்று மறைந்திருந்து, பின்னர் அதிலிருந்து வெளிவர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே அங்கேயே இருந்தார் — மற்ற அனைத்துப் பொருட்களிலும் இருப்பதைப் போலவே. அவர் செய்ய வேண்டியது ஒன்றே; தம்மை வெளிப்படுத்திக் காட்டுவது மட்டுமே.

“நானும் அவ்வாறே இருக்கிறேன்.” நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டு, “ஆம்” என்று கூறினால், நானும் பதிலளித்து, “ஆம், ஆம், ஆம்!” என்று கூறுகிறேன். நீங்கள் என்னை மறுத்து, “இல்லை” என்று கூறினால், நானும் அதையே எதிரொலித்து, “இல்லை” என்று கூறுகிறேன்.

எனவே, வாருங்கள்; ஆராயுங்கள், அனுபவியுங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். இதுவே என்னை உண்மையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியாகும்.

கடமையைச் சிறப்பாகச் செய்வதே உண்மையான சேவை

 நாம் செய்யும் அலுவல் பணியில்கூட சமூக சேவையை ஆற்ற முடியும். அதற்காகத் தெருக்களைச் சுத்தம் செய்வதற்காக சந்தைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எந்த அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், எந்தத் தொழிலை அல்லது பணியை மேற்கொண்டாலும், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரியாகவும் திறமையாகவும் நிறைவேற்றினால், அதுவும் ஒரு வகையான சமூக சேவையே ஆகும்.

அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் சேவை செய்வதில் கொண்டிருக்க வேண்டிய சரியான அணுகுமுறை என்னவெனில், “நான் பெறுகின்ற சம்பளத்திற்கு ஏற்ற அளவில், நான் மக்களுக்கு சேவை செய்கிறேனா?” என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வதாகும்.

பணியாளர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், தங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தை நியாயப்படுத்தும் அளவுக்குப் பணியாற்றுபவர்களை நாம் அரிதாகவே காண்கிறோம். அனைவரும் அதிகமான ஊதியத்தை விரும்புகிறார்கள்; ஆனால் அதற்கேற்ப அதிகமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதில்லை.

இத்தகைய மனப்பான்மை நாட்டிற்குச் செய்யும் துரோகம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அவர்கள் சம்பளமாகப் பெறுகின்ற பணம் யாருடையது? அது பொதுமக்களின் பணம். எனவே, பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றத் தவறுவது, அவர்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரிய துரோகமும் தீங்கும் ஆகும்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்கி, அவர்களை நல்ல முறையில் வழிநடத்தினால், அவர் உண்மையான தேச சேவையை ஆற்றுகிறார்.

அதேபோல், ஒரு வணிகர் தமது வியாபாரத்தை நடத்தும்போது, தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டால், அவரும் பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றுகிறார்.

எனவே, சேவை என்பது தனியான ஒரு செயலல்ல; நாம் செய்யும் ஒவ்வொரு கடமையையும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் நிறைவேற்றுவதிலேயே உண்மையான சேவை அடங்கியுள்ளது.

சேவையே வாழ்க்கையின் நிறைவு

 சேவை என்பது பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்யப்படக் கூடாது. தமது உயர்வையும் மேன்மையையும் நிலைநாட்டுவதற்காகவும் சேவையை மேற்கொள்ளக் கூடாது. அதுபோல, மறைமுகமான சுயநல நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் சேவை செய்யக்கூடாது. இத்தகைய செயல்களை உண்மையான சேவை என்று ஒருபோதும் கருத முடியாது. அவை வெறுமனே சுயநல நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்களே ஆகும்.

சேவையின் புனிதத்தன்மையையும், அது மனிதனைத் தூய்மைப்படுத்தும் சக்தியையும் உணராத காரணத்தினாலேயே பலர் சமூக சேவையில் ஈடுபடத் தயங்குகின்றனர்.

நாம் சேவை செய்வதன் மூலம் நாட்டின் நலனை உயர்த்துகிறோம் என்று எண்ணுவது கூட ஒரு தவறான கருத்தாகும். உண்மையில், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் நம்மையே உயர்த்திக் கொள்கிறோம் என்பதை உணர வேண்டும்.

சேவை இல்லாத வாழ்க்கை இருளில் வாழும் வாழ்க்கையாகக் கருதப்பட வேண்டும்.

நமது வாழ்க்கை, நமது பெயர், நமது புகழ், நாம் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் சமூகத்திலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. சமூகத்தின் மூலமே நாம் வாழ்க்கையில் நிறைவை அடைகிறோம்.

அவ்வாறிருக்கையில், நாம் சமூகத்திற்குச் சேவை செய்யாவிட்டால், வேறு யாருக்குச் சேவை செய்யப் போகிறோம்?

நம்மைச் சுற்றியுள்ள இயற்கை, ஆராயவும் சிந்திக்கவும் தூண்டி, அதன் மூலம் தெய்வீகத் தத்துவத்தின் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய இயற்கைக்கும் நாம் சேவை செய்யாவிட்டால், வேறு யாருக்குச் சேவை செய்ய முடியும்?

நாம் கீழே தவறவிட்ட கைக்குட்டையை ஒருவர் எடுத்துக் கொடுத்தால்கூட, அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அப்படியானால், நமது வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற வளங்களையும் வசதிகளையும் வழங்கி வரும் இயற்கைக்கும் சமூகத்திற்கும் நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டாமா?

எனவே, சேவை என்பது பிறருக்காக நாம் செய்யும் ஒரு உதவி மட்டுமல்ல. நாம் சமூகத்திடமிருந்து பெற்றவற்றுக்கு நன்றியுடன் திருப்பிச் செலுத்தும் புனிதமான கடமையாகும். சேவை செய்வதன் மூலம் பிறரின் வாழ்க்கையை உயர்த்துவதோடு, நமது வாழ்க்கையையும் தூய்மைப்படுத்தி உயர்த்திக் கொள்கிறோம்.

குருவின் மகத்தான பணி

 குரு, படைத்தல் எனும் பொறுப்பை ஏற்றுள்ள மும்மூர்த்திகளில் முதல்வரான பிரம்மாவாகவும், காத்தல் எனும் பொறுப்பை ஏற்றுள்ள விஷ்ணுவாகவும், அழித்தல் மற்றும் கலைத்தல் எனும் பொறுப்பை ஏற்றுள்ள மகேஸ்வரராகவும் போற்றப்படுகிறார்.

குருவின் பணியை ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த ஒப்பீடு மிகவும் பொருத்தமானதும் குறியீட்டு ரீதியாகச் சரியானதுமாக இருப்பதை நாம் உணரலாம்.

குரு, மாணவனின் உள்ளத்தில் நற்பண்பு, ஞானம் மற்றும் இறைநம்பிக்கை என்னும் விதைகளை விதைக்கிறார். இதனால் அவர் பிரம்மாவாக விளங்குகிறார். நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில் நாற்றுகளை நடும் விவசாயியைப் போன்றவரே குரு.

ஆனால், நாற்றுகளை நட்டுவிட்டு விவசாயி கைகட்டி உட்கார்ந்துவிடுவதில்லை. நாற்றுகள் நன்றாக வளர்வதற்குத் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார். வளர்ந்து வரும் பயிர்களுக்குத் தேவையான நேரத்தில் நீர் பாய்ச்சுவதோடு, உரமிட்டு அவற்றைச் செழிக்கச் செய்கிறார். இதுவே விஷ்ணுவின் பணியாகும்.

அதேபோல், மாணவனுக்குச் சில பாடங்களைக் கற்பித்துவிட்டு, அதன்பிறகு அவனது நிலைமை என்னவாகிறது என்று குரு அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு நிலையிலும் மாணவனை வழிநடத்த வேண்டும். நல்ல பழக்கங்கள், தெளிவான சிந்தனை, சரியான பகுத்தறிவு மற்றும் உயர்ந்த உணர்வுகள் ஆகியவற்றை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். இவ்வாறு குரு விஷ்ணுவின் பணியை மேற்கொள்கிறார்.

மாணவன் தவறான பாதையில் செல்லும்போது, தீய பழக்கத்தை வளர்த்துக்கொள்ளும்போது அல்லது தீங்கு விளைவிக்கும் சந்தேகங்களை மனதில் வளர்த்துக்கொள்ளும்போது, அவனை எச்சரிப்பதும் குருவின் கடமையாகும்.

விவசாயி தனது வயலில் களைகள் வளர்வதையும், பூச்சிகள் பெருகுவதையும் எப்போதும் விழிப்புடன் கண்காணித்து அவற்றை அகற்ற வேண்டியிருப்பதைப் போல, குருவும் மாணவனின் உள்ளத்தில் தோன்றும் தீய பண்புகள் என்னும் பூச்சிகளையும், சோம்பல் மற்றும் மன உறுதியின்மை என்னும் களைகளையும் அழிப்பதற்கு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எனவே, குரு என்பவர் அறிவைப் போதிப்பவர் மட்டுமல்ல; நற்பண்புகளை விதைத்து, நல்லொழுக்கத்தை வளர்த்து, தீமைகளை அகற்றி, மாணவனை உயர்ந்த வாழ்க்கைப் பாதையில் வழிநடத்தும் சிறந்த வழிகாட்டி ஆவார்.