தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே !




   










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா




திருவாத வூரார் சிறப்பினை அறிந்து
அரசனே நாடி அமைச்சர் ஆக்கினான்
அமைச்சராய் இருந்தார் அலங்காரம் வெறுத்தார்
அவரது அகமோ புனிதமாய் இருந்தது

ஆடம் பரங்கள் அரசுச் சுகங்கள்
அமைச்சராய் இருந்தும் அகமேற்க வில்லை
ஆண்டவன் நினைப்பு ஆன்மீகச் சிந்தனை
திருவாத வூரரின் சிந்தையை நிறைத்தது

பொன்னையும் பொருளையும்  பொருட்டென எண்ணா
மன்னனின் அவையில் இருந்தார் அவரும்
மன்னனின் மனத்தின் மாறு பாட்டினால்
அமைச்சராய் இருந்தவர் அல்லற் பட்டார் 

படித்தோம் சொல்கின்றோம்: மாவை நித்தியானந்தனின் இரண்டு நாடகங்கள் முருகபூபதி

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது.  அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில்  நதியாக்குவதில்தான்  அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.

இவ்வாறு  சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின்  பவள விழா நடைபெற்ற வேளையில்  எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மாவை நித்தியானந்தன்,  மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதும், கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றிருப்பவர்.

அண்மையில் மாவை நித்தியானந்தன் வெளியிட்டிருக்கும் இரண்டு 


நாடக நூல்களப்பற்றி எழுதும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது.

இனிச்சரிவராது,  ஐயா லெக்சன் கேட்கிறார் ஆகிய இரண்டு நூல்களும் மாவை நித்தியின் புதிய வரவுகள்.  ஏற்கனவே மேடையேற்றப்பட்ட நாடகங்கள்தான் இவை இரண்டும்.

நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள்,  படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள் என இரண்டு வகை இருப்பதாக  அறிஞர் மு. வரதராசன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாவை நித்தியின் நாடகங்களும் அத்தகையன.

ஐயா லெக்சன் கேட்கிறார் நாடகம் 1973 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில்,  கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் விழா நடந்தவேளையில் அங்கு மேடையேறியது.  அன்று அங்கே பார்த்த இந்த நாடகத்தை பலவருடங்களுக்குப்பின்னர் மெல்பனிலும் பார்த்திருக்கின்றேன்.

ஒரே நாடகப்பிரதியில் இரண்டு நாடுகளிலும் வேறு வேறு கலைஞர்கள் பங்கேற்ற நாடகம் இது.

மாவை நித்தி,  படைப்பிலக்கியவாதி. சிறுகதை,  கவிதை,  கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பவர்.

அத்துடன் மெல்பனில் 1990 களில் தொடங்கப்பட்ட  பாரதி பள்ளியின் ஸ்தாபகர். அத்துடன் அதன் அதிபர். பாப்பா பாரதி என்ற சிறுவர்களுக்கான ஒளி – ஒலி நாடாவையும் வெளியிட்டிருப்பவர். சிறுவர்  நாடக நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

அவர் உருவாக்கிய மற்றும் ஒரு அமைப்பு மெல்பன் கலை வட்டம்.  இந்த அமைப்பும் பல நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் அரங்காற்றியிருக்கிறது.

அண்மையில் அவர் வெளியிட்டுள்ள இரண்டு நாடக நூல்களைப்பற்றி பார்ப்போம்.

தேர்தலை நோக்காகக்கொண்டு  இலங்கையில்  நடக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் அவற்றில் இரண்டறக்கலந்துள்ள பொய், ஏமாற்று, போலித்தனம், ஆணவம் முதலான அம்சங்களையும்   அங்கதச்சுவையுடன் சித்திரிக்கும் நாடகமே ஐயா லெக்‌ஷன் கேட்கிறார்.

இந்த நாடகப் பிரதி யாழ். பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு நாடக நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இதன் உறைபொருளும்  மறைபொருளும் சமகால அரசியலையும் சித்திரிக்கின்றமையால்,  காலத்தையும் வென்று வாழும் நாடகப் பிரதியாகவும் பேசப்படுகிறது.

இந்த நாடகம், இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.

உங்களுடன் சில வார்த்தைகள் – என்ற குறிப்பில், மாவை நித்தி இவ்வாறு பதிவுசெய்கிறார்:

மலரும் மாலையும் !

























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




காலையிலும் மலர்வேன் மாலையிலும் மலர்வேன்
கவலையின்றி இருப்பேன் களிப்பதனைக் கொடுப்பேன் 
நாரெடுத்து என்னைக் கட்டிடுவார் மனத்தில் 
நானெடுப்பேன் அப்போ மாலையெனும் பெயரை 

மலர்மாலை சூட்டி மகிழ்ந்தாள் ஓர்மங்கை 
மாலவனும் அதனை வாஞ்சையுடன் ஏற்றான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகினாள் 
கொண்டாடி மகிழுந்திடும் கோதை நாச்சியார்

பூமாலை புனைந்தேத்தப் புகன்றார் நம்மப்பர்
பாமாலை பூமாலை பரமனுக்குச் சாற்றினார் 
ஆழ்வார்கள் அடியார்கள் அனைவருமே கரமேந்தி
பூமாலை கட்டினார் புனிதமுடன் சாற்றினார்

யார் மறவன் என்றறி ஏந்திழையே! -சங்கர சுப்பிரமணியன்.
















வலிய முதலையின் வலிமையும்

வற்றாது கிடக்கும் நீரில் மட்டுமே
வலிமையுள்ள சிங்கத்தின் வீரமும்
வனமாம் அதன் உறைவிடத்திலே

நீர்வற்றிய இடத்தில் முதலையும்
ஊர்பார்க்க கூண்டின் சிங்கமும்
வலிமையை கொண்டிருப்பினும்
நிலைமையோ நிர்க்கதி ஆக்கும்

தன்னைச் சார்ந்தவர் சூழ்ந்தவிடத்து
தனிப்பெருமை கொள்வதிலா சிறப்பு
தன்னைச்சாரார் சேர்ந்திடாவிடத்து
தனியாளாய் வலம்வருவதே சிறப்பு

என்ன செய்யப் போகிறாய்? (கன்பரா யோகன்)


உங்களில் எவரேனும் ஏற்கனவே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவரானால் மேலே தலைப்பிலுள்ள கேள்வி உங்களுக்கு மிகவும் பரிச்சியமானதாகவிருக்கும். அதிலும் குறிப்பாக நீங்கள் ஒய்வு பெற்ற இறுதிநாளில் இதை எல்லோரும் அடிக்கடி கேட்டு உங்களை சலிப்படைய வைத்திருப்பார்கள்  

எனக்கு அண்மையில் இப்படியான கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டி வந்தது. உண்மையில் நான் இன்னும் ஒய்வு பெற்றுக் கொள்ள வில்லையாயினும் நீண்ட சேவை விடுமுறையில் நின்று அதன் முடிவில் பிறகு ஒய்வு பெறலாம் என்று எண்ணியிருந்தேன். இதை தெரிவித்த போது வீட்டில் முதலாவது கேள்விக்கணை மனைவியிடமிருந்து வந்தது.

‘வீட்டில் நின்று என்ன செய்யப் போகிறீர்கள்?’

எமது குடும்ப வைத்தியரிடம் போனபோது ‘ஓய்வெடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்? நான் உம்மில் பார்க்க வயது கூடியவன் இன்னும் வேலை செய்கிறேனே!’ என்றார்.

இன்னொரு பெண்மணி ‘உமக்கு இன்னும் வயதாகவில்லையே என் அதற்குள் அவசரப்பட்டு ஒய்வு பெருகிறீர்?’ என்றார் - அவருக்கு ஒருவேளை என் வயது தெரியாமலிருக்கலாம்

முதலிலேயே சொல்லி விடுகிறேன் - நான் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்ததை விட என்னென்ன சுவாரஸ்யமான கேள்விகள் வந்தன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

இன்னொரு சுவாரஸ்யமான கேள்வியை வேலையில் எனது குழுவில் வேலை செய்த டான் என்று நாம் சுருக்கமாக அழைக்கும் டானியல் கேட்டான்.

டான் இளம் பொடியன், அவனுக்கு இந்த வருடம் வயது முப்பது. அவன் பிறந்த அதே வருடமே நான் வேலையில் சேர்ந்திருந்தேன் என்றாலே உங்களுக்கு புரியும் என் வயது.

' நீ நாளாந்தம் வேலைக்கு அணிந்து வரும் நீளக்கை ஷேர்ட்டுகளை ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறாய்? என்று டான் கேட்டான்

எனது உடைகளை நன்கு அவதானித்திருக்கிறான் என்று தெரிந்தது. உண்மையில் நான் கடும் கோடையிலும் முழுக்கை ஷேர்ட் அணிந்து தொப்பி போடாமல் வேலைக்கு சென்றது குறைவு.

அதைவிட கன்பராவில் நிலவும் குளிர் காலநிலைக்கு இது அவசியமல்லவா? தலை முடி உதிர்ந்து போன தலைக்குள் வின்டர் குளிர் ஊடுருவல் செய்வதால் வரும் தடிமன் தாக்குதல்களிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டுமல்லவா?

நான் வெளிநாட்டுக்குப் புறப்படப் போகிறேன் என்று 1990 இல் எமது நாடக ஆசிரியர் சிதம்பரநாதன் அவர்களிடம் சொன்னாபோது அவர் சற்று சலிப்புற்று என்னிடம் பகிர்ந்து கொண்டது இன்று உண்மையாகிவிட்டது என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.

‘நீ அங்கு வெளிநாட்டில் முழுக்கை ஷேர்ட்டுடன் திரிவாய்’ என்றார் அவர்.

அவர் அன்று சொன்னபோது அதன் விளக்கம் எனக்குத் தெரியவில்லை.

வெளிநாடுகளில் முழுக்கை ஷேர்ட்டுடன் அவர் அவதானித்த பலரை வைத்தே இப்படிச் சொல்லியிருக்கிறார் போலும்.

வெங்கலக் குரலோன் விண்ணில் மறைந்தார்! -சங்கர சுப்பிரமணியன்.

 

அன்றொரு நாள் மாலை ஆஸ்திரேலிய இலக்கிய கலைச் சங்க நிகழ்வொன்றில் அவர் எங்கள் அருகில் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. என் நினைவு சரியாக இருக்குமெனில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் என்று பரவலாக அறியப்படும் ATLAS அமைப்பு கவிதா மண்டலம் என்ற நிகழ்ச்சி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் நடத்தியது.


அன்று தலைவராக இருந்தவர் கவிதை என்றால் என்ன? கவிதை எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை விளக்கமாக தன் உரையில் எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கவிஞர்கள் தம் படைப்புகளான கவிதைகள் அல்லது பிற கவிஞர்களின் படைப்புகளான கவிதைகளை வாசித்து அந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர்.

இந்த நிகழ்ச்சி மெருகேறி வெற்றிபெற ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் முதுகெழும்பாக நின்று உழைத்தவர் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றவரும் பல நூல்களை வெளியிட்டவருமான  புகழ்பெற்ற திரு லெ. முருகபூபதி அவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

அன்று நடைபெற்ற கவிதா மண்டல நிகழ்ச்சியில் ஒருவர் கவிதை ஒன்றை வாசித்தர். அது சாதாரண நான்கு ஐந்து சதுக்கங்களோடு வரும் கவிதை அல்ல. மிகவும் நீண்ட நெடுங்கவிதை. அந்ந கவிதையை அவர் ஏற்ற இறக்கங்களுடன் வெளிக்கொணர்ந்த முறை அபாரமானது. அதைவிட அவர் சிங்கமென கர்ஜித்தது
இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எல்லோராலும் கவிதை எழுத முடியும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. எதுகை மோனை, பொருள் போன்ற சங்கதிகளை கவிதை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். வீடுகட்ட அடித்தளம் அமைப்பது போல் இருக்க வேண்டும். எல்லோரும் வீடு கட்டினாலும் நான்கு சுவரும் கூரையும் இருப்பதெல்லாம் வீடாகாதல்லவா?

பெற்றால்தான் பிள்ளையா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


சில சமயம் படத்தில் நிகழும் சம்பவங்களை விட படம் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பையும், திருப்பங்களையும் ஏற்படுத்தி விடும்.. அதுதான் பெற்றால்தான் பிள்ளையா படத்துக்கும் நடந்தது. படம் வெளி வந்து நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டு விழாவும் நடந்தேறிய போதும் அதில் கதாநாயகனாக நடித்தவர் துப்பாக்கி குண்டுக்கு உள்ளாகி குரல் கெட்டு சிகிச்சைக்கு உள்ளாகியிருந்தார் . அவரை சுட்ட மற்றைய நடிகரும் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி சிறையில் இருந்தார். படத்தை தயாரித்தவரும் அதன் பின் படம் தயாரிக்கவில்லை. இவ்வளவு களோபரத்துக்கும் காரணமான பெற்றால்தான் பிள்ளையா படம் வெளி வந்து அறுபது ஆண்டுகளாகி விட்டன. 


தொடர்ந்து எம் ஜி ஆரின் படங்கள் பலவற்றில் நடித்து வந்தவர் எம் ஆர்

ராதா. அதே போல் சிவாஜி, ஜெமினி படங்களிலும் நடித்து வந்தார் .அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ராதா இல்லாத படம் சாதா என்று குமுதம் வார இதழில் எழுதியது. எல்லாப் படங்களிலும் ராதா நடித்து வந்தார் . படத்துக்கு முப்பதினாயிரம் என்ற ரேட்டில் அவருடைய வருமானமும் எகிறிக் கொண்டிருந்தது. 

எம் ஆர் ராதா , கே ஏ தங்கவேலு , கிருஷ்ணன் பஞ்சு இவர்களுக்கு எல்லாம் வேண்டியவராக இருந்தார் நடிகை சுசிலா. பராசக்தி படத்தில் எஸ் .வி . சகஸ்ரநாமத்தின் மனைவியாக நடித்த இவர் மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவரின் கணவர் வாசு. 

சுசிலா இவருடைய மூன்றாவது மனைவி ஆவார். சுசீலாவுக்கு உதவும் பொருட்டு வாசுவை தயாரிப்பாளராக்கி ஒரு படத்தை எடுத்து உதவ முன் வந்தார்கள் ராதா, கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர். 

முத்துக்குமரன் பிக்சர்ஸ் என்ற பேரில் சுசிலா , வாசு, கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு படத் தயாரிப்பு தொடங்கியது . ராதா தன் பங்குக்கு ஒரு இலட்சம் ரூபாயை கடனாக வாசுவுக்கு கொடுத்து படத்திலும் இலவசமாக நடித்துக் கொடுத்தார்! அன்றைய கால கட்டத்தில் சிவாஜியின் குங்குமம் படத்தை இயக்கி அதில் உருவான மனக் கசப்பால் சிவாஜியுடன் முரண்பட்டிருந்த கிருஷ்ணன் பஞ்சு இருவரும் இப் படத்தை எம் ஜி ஆரின் நடிப்பில் உருவாக்க ஆர்வம் காட்டினார்கள் . எம் ஜி ஆரின் குணச்சித்திர நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் படத்தை உருவாக்க அவர்கள் விரும்பினார்கள். 1964ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. 

“நூல்களைப் பேசுவோம்”

 




இலங்கைச் செய்திகள்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

இலங்கை – ஜேர்மனி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் - சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் விரிவாக்கம் ; பெண் தொழில்முனைவோருக்கும் சிறப்பு ஆதரவு

டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சொல்லும் திட்டமாக தீவகத்திற்கான மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது - ஈ.பி.டி.பி. பெருமிதம்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இலங்கை வருகை!

சீனா - இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராக உள்ளோம் - சீனத் தூதுவர் கீ சென்ஹொங்


உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

Published By: Vishnu

03 Jul, 2026 | 05:24 AM

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச பயண ஊடகமான பிக் 7 டிராவல் நடத்திய சமீபத்திய மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய புகழ் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை அமைந்துள்ளது.

அதன்படி, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்ட காலமாக கருதப்பட்ட கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை விஞ்சி, இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்

வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் - 12 பேர் பலி    



வெனிசுவேலா பூமியதிர்ச்சி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295ஆக அதிகரிப்பு

02 Jul, 2026 | 10:18 AM

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியின் பேரழிவு ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295ஆக உயர்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின்படி, இதுவரை 11,267 பேர் காயமடைந்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள் இடம்பெயர்வு மற்றும் பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழ்நிலை ஆகியவை நாட்டின் தற்போதைய தற்காலிக அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

மாதாந்திர சைவ சமய சிந்தனைச் சொற்பொழிவு

 


உலகியல் அறிவும் ஆன்மிக அறிவும் – வாழ்க்கையின் இரு தூண்கள்

 மனிதன் கட்டாயம் கற்றறிய வேண்டிய அறிவு இரண்டு வகையானது. முதலாவது உலகியல் அல்லது பொருளியல் அறிவாகும். இந்த அறிவு மனிதனுக்குப் படிக்கவும் எழுதவும், அன்றாடக் கடமைகளைச் செய்யவும், வாழ்வாதாரத்தை ஈட்டவும், தனது புலன்களையும் மன ஆற்றலையும் பயன்படுத்தி உலக வாழ்க்கையை நடத்தவும் உதவுகிறது. எனினும், இது சாதாரண அறிவாக மட்டுமே கருதப்படுகிறது. உண்மையான அறிவு என்பது **ஆத்மவித்யை**, அதாவது ஆன்மிக அறிவாகும். இந்த அறிவே மனிதனை புலன்களையும் மனதையும் கடந்து உயரச் செய்து, தவம், தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்க்கவும், மெய்ஞ்ஞானத்தைப் பெறவும், நிலையான அமைதியையும் உண்மையான ஆனந்தத்தையும் அடையவும் வழிகாட்டுகிறது. உடலின் தேவைகளையும் புலன்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் உலகியல் அறிவால் மனிதனுக்கு உண்மையான அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்க முடியாது. மனித உடல் தன்னலமற்ற நற்செயல்களை ஆற்றுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட அரிய வரமாகும். புனிதமான செயல்களைச் செய்வதற்கு ஒருவர் மிகுந்த கல்வி கற்றவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனை உயர்ந்த பண்புகளுடன் கூடிய உன்னதமான வாழ்க்கையை வாழச் செய்வது ஆன்மிக அறிவே ஆகும். ஆனால், ஆன்மிக அறிவு தவத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஆன்மிக அறிவுக்கும் தவத்திற்கும் உள்ள தொடர்பு, நேர்மறை மற்றும் எதிர்மறை மின்னூட்டங்களின் உறவைப் போன்றது. இரண்டும் ஒன்றிணைந்தால்தான் முழுமையான ஆற்றல் வெளிப்படும். எனவே, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கவும், உயர்ந்த இலட்சியத்துடன் வாழவும், மனிதன் உலகியல் அறிவையும் ஆன்மிக அறிவையும் சமமாகப் பெற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாராயணம் மட்டும் போதாது – போதனைகளை நடைமுறைப்படுத்துங்கள்

 பலர் பகவத்கீதையின் புத்தகத்தையும் அதிலுள்ள வார்த்தைகளையும் பக்தியுடன் வணங்குகின்றனர். ஆனால் அதன் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைக்கும் பேரானந்த அமுதத்தை அவர்கள் சுவைக்கத் தவறுகின்றனர். பைபிள், குர்ஆன், வேதங்கள், உபநிஷத்துகள் போன்ற அனைத்து புனித நூல்களும் வெறுமனே பாராயணம் செய்வதற்காக அல்ல; அவற்றில் கூறப்பட்டுள்ள போதனைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காகவே அருளப்பட்டவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்றைய காலத்தில் பெரும்பாலான பக்தர்களின் கைகளில் **சாய் சச்சரிதம்** காணப்படுகிறது. அவர்கள், “நாங்கள் தினமும் பாராயணம் செய்கிறோம்” என்று பெருமையாகக் கூறுகின்றனர். ஆனால் இதைவிடப் பெரிய அறியாமை வேறு இல்லை. இந்த நூல் வெறுமனே பாராயணம் செய்வதற்காகவா எழுதப்பட்டுள்ளது? இல்லை. ஷீரடி சாய்பாபா இந்த நூலில் போதித்தவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காகவே அது அருளப்பட்டுள்ளது. இதனை விளக்க ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவருக்கு கடுமையான சளி மற்றும் இருமல் ஏற்பட்டது. அவர் ஒரு கிராமத்து வைத்தியரை அணுகியபோது, வைத்தியர் சுக்கு, மிளகு, இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து அருந்துமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்த நோயாளி, “சுக்கு, மிளகு, இஞ்சி கஷாயம் குடிக்க வேண்டும், குடிக்க வேண்டும்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கஷாயத்தைத் தயாரித்து குடிக்கவில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் நோய் குணமாகுமா? அவர் உண்மையில் கஷாயத்தைத் தயாரித்து அருந்தினால்தான் நிவாரணம் கிடைக்கும். அதேபோல், புனித நூல்களில் உள்ள போதனைகளை வெறுமனே வாசித்தோ அல்லது திரும்பத் திரும்ப உச்சரித்தோ பயன் இல்லை. அவற்றை வாழ்வில் செயல்படுத்தும்போதுதான் அவற்றின் உண்மையான பலனை அனுபவிக்க முடியும். நடைமுறையே ஆன்மிக முன்னேற்றத்தின் திறவுகோலாகும்.

அறிஞருக்கும் ஞானிக்கும் உள்ள வேறுபாடு

 உலகியல் கல்வியையும் அறிவையும் நாடுபவர் மாணவராகவோ அறிஞராகவோ இருக்கலாம். ஆனால் அதனால் மட்டும் அவர் ஞானி (ஞானம் பெற்றவர்) ஆக முடியாது. அறிஞருக்கும் ஞானிக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இராவணன் அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால் ஸ்ரீ ராமர் முப்பத்து நான்கு கலைகளை மட்டுமே கற்றிருந்தார். இருந்தபோதிலும், இராவணன் ராமரை விட அதிகமான கல்வி கற்றிருந்தாலும், வால்மீகி இராவணனை 'மூர்க்கன்' என்று வர்ணிக்கிறார். ஏன் இராவணன் மூர்க்கன் என்று அழைக்கப்பட்டான்? அனைத்து கல்விகளிலும் கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தபோதிலும், அவன் தனது புலன்களுக்கு அடிமையாக இருந்தான். புலன்களுக்கு அடிமையானவன் பகுத்தறிவை இழந்த முட்டாளாகிறான். ஆனால் ஸ்ரீ ராமர் தமது புலன்களுக்கு அடிமையாக இருக்கவில்லை. மாறாக, அவற்றை ஆளும் தலைவராக இருந்தார். ராமருக்கும் இராவணனுக்கும் இடையிலான வேறுபாடு மூன்று முக்கிய அம்சங்களில் வெளிப்படுகிறது: - **சர்வலோக ஹிதே ரதஃ (Sarvaloka Hite Ratah)** – உலகம் முழுவதின் நலனிலேயே மகிழ்ச்சி கொள்பவர். - **சர்வ ஞான சம்பன்னஃ (Sarva Jnana Sampannah)** – எல்லா வகையான ஞானமும் பெற்றவர். - **சர்வே சமுதித குணைஃ (Sarve Samudita Gunaih)** – எல்லா நற்குணங்களாலும் நிறைந்தவர். ஸ்ரீ ராமர் சத்தியத்தை உறுதியாகக் கடைப்பிடித்து, தர்மநெறியைத் தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி உலக நலனை மேம்படுத்தினார். தனது வாழ்வின் மூலம் நீதியுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கான உன்னத முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

உண்மையான பிராயச்சித்தமும் தூய வாழ்வின் அவசியமும்

 உண்மையான பிராயச்சித்தம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்களை முற்றிலும் கைவிடுவதோடு, எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு, மனத் தூய்மையைப் பேணுவதாகும். இதனை அடைய முதலில் ஒருவர் தமது உணவுப் பழக்கங்களைச் சீர்செய்ய வேண்டும். இன்றைய காலத்தில் நாம் உட்கொள்ளும் இயற்கைக்கு மாறான மற்றும் செயற்கை உணவுகள் தியானத்தில் மனநிலையின்மையை ஏற்படுத்துவதோடு, ஆன்மிகப் பயிற்சிக்கும் தடையாக அமைகின்றன. ஆகவே, ஆன்மிக சாதகருக்கு உணவின் தூய்மை மிகவும் இன்றியமையாததாகும். உதாரணமாக, இட்லி மற்றும் சாம்பார் தயாரிக்க வேண்டுமெனில் புதிய காய்கறிகள், சுத்தமான பருப்புகள், புளி மற்றும் நறுமணப் பொருட்கள் தேவை. அதேபோல், உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரமும் முற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும். பாத்திரம் சரியான முறையில் பராமரிக்கப்படாவிட்டால், அதில் சமைக்கப்படும் உணவு நஞ்சாக மாறக்கூடும். மேலும், உணவு சமைப்பவர் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதுடன், நல்ல மற்றும் நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்க வேண்டும். மனித உடல் தெய்வீக ஆத்மாவைத் தன்னுள் தாங்கி நிற்கும் இறைவனின் ஆலயத்தைப் போன்றது. உடல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமைதியாக இருக்க முடியும். ஆனால் ஓட வேண்டுமெனில் அதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. இதற்கு மாறாக, மனம் மிக வேகமாக அலைபாய்கிறது; அதை அமைதியாகவும் நிலையாகவும் வைத்திருக்க பெரும் முயற்சி அவசியமாகிறது. எனவே, ஆன்மிக சாதகர் உடலுக்கும் மனதுக்கும் இடையே சமநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக மனதை நிலைபெறச் செய்வதோடு, உடற்பயிற்சியின் மூலம் உடலை வலிமைப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.