அவுஸ்திரேலியாவில்,
விக்ரோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய,விக்ரோறிய கல்விச் சான்றிதழ் (VCE) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவை அவுஸ்திரேலிய,
தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், கடந்த சில வருடங்களாக நடத்தி
வருகின்றது.
கடந்த
வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா 2026 மார்ச் மாதம் 3ம் திகதி திங்கட்கிழமை,
விக்டோரிய மாநிலத்தில் உள்ள கிளேற்றன் மண்டபத்தில்
(Clayton Hall, Clayton) மிகச்
சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்மொழிப்
பாடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருது வழங்கியதுடன், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் இந்த விழாவில், பாராட்டிக்
கௌரவிக்கப்பட்டார்கள்.
கடந்த
22 ஆண்டுகளுக்கு முன் மெல்பேணில் ஆரம்பிக்கப்பட்ட
ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் வெற்றிகரமாக
எழுத்தாளர் விழாக்களையும், படைப்பாளிகளின் கௌரவிப்பு மற்றும் வாசிப்பு அனுபவ பகிர்வுகளையும், நூல் வெளியீடுகளையும், மற்றும்
இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
மேலும், 2019 முதல் இச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறு கதைத்தொகுதி, நாவல், கவிதை, கட்டுரை எனும் நான்கு பிரிவின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த நூல்களுக்கு இலங்கை ரூபா Rs. 50,000 பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவித்து வருகின்றது. சங்கத்தின் இந்த செயற்பாட்டின் நோக்கம் இலங்கைப் படைப்பாளிகளை ஊக்குவித்து கௌரவிப்பதுடன் அவர்கள் படைப்புகளுக்கு உலக அரங்கில் ஒரு களம் அமைத்துக் கொடுப்பதும் ஆகும்.



.jpg)
.png)

.jpg)
.jpg)
.png)
.png)
.jpg)

