பெருமனது தருவாயே பெருமாளே !




    
















மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



கொடியவினை எனையகல
குடிமுழுது விடிவுபெற
அடிதொழுது பரவிவிட - அருளாயே

மனமுருகி தினமுமுனை
தொழுதழுது பாடிவிட
அருகிலெனை அணையவிடு - பெருமாளே

உலகிடையே நாளுமுனை
ஒருபொழுது மறவாத
பெருமனது தருவாயே - பெருமாளே

தவமுதல்வர் சம்பந்தர் !

 














மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



சிவபாத விருதயர் செய்ததவப் பயனாலே
தவமுதல்வர் சம்பந்தர் புவியினுக்கு வந்தார்
உமையோடு சிவனுமே சேர்ந்துமே வந்து
ஊட்டிய பாலாலே உயர்ஞானம் பெற்றார்

உயர்ஞானம் பெற்றதனால் தவமுதல்வர் ஆனார்
தவமுதல்வர் ஆனதனால் உமைபிள்ளை ஆனார்
அவர்பெற்ற ஞானத்தை வழியாயாக்கி நின்று
அதனூடாய் தவமுதல்வர் நடைபயின்று நின்றார்

வைதீகக் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார்
மனமுழுக்கச் சைவத்தை தூக்கியே சுமந்தார்
அந்தணராய் பிறந்தாலும் அனைவரையும் அணைத்தார்
அரனடியார் அனைவரையும் போற்றியவர் நின்றார் 

கவிதை..."அம்மையோ அப்பனோ"... மெல்போர்ன் அறவேந்தன்



இமில் தழுவி நின்றாடிய இனமென அறிக! - சங்கர சுப்பிரமணியன்.


எத்தனை துயரங்கள் எத்தனை வரினும்
எத்தனை வடிவங்களில் வந்து நிற்பினும்
அத்தனையும் வந்தும் அவற்றை மறந்திட
இத்தரை வாழ்வு இனிமையாய் உள்ளதே

என்னவென்று நான் எண்ணிய பொழுதில்
உன்னதமான உயர்தனிச் செம்மொழியாம்
என்னினத்தின் தாய்மொழியென அறிந்தே
தன்மானமாய் தலைநிமிரவும் வைத்திடுதே

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்றான்
இனிய கருத்தை இயம்பினான் வள்ளுவன்
இனியும் நம்மாந்தரில் ஏனிங்கே சிலரும்
கனியிருப்பக் காய்கவர்ந்து மகிழ்கிறாரே

விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 8…..சங்கர சுப்பிரமணியன்.

 சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!


இப்படி நிறுவிய டோரிகேட் ஒவ்வொன்றிலும் அதை வழங்கியவர்களைப் பற்றிய விபரங்கள் இருக்கும். நம் ஊரிலும் இதைப் போன்று காணிக்கையா வழங்கியவற்றைக் காணலாம். சில ஆலயங்களில் காணிக்கையாக கொடுக்கும் பொருட்களில் கொடுப்பவர்களின் பெயர், ஊர் போன்ற  விபரத்தை எழுதி இருப்பதை கண்டிருப்போம். சான்றாக குழல் விளக்கை அன்பளிப்பு செய்திருப்பவர்கள் அதில் விளக்கின் வெளிச்சமே தெரியாதபடி தம்மைப்பற்றி விளம்பரப்படுத்தி இருப்பார்கள்.

திரும்பவும் டோரிகேட்டுக்கு வருகிறேன். கியோட்டாவிலுள்ள பியூசிமி

இனாரி டெய்ஷாவிலுள்ள காணிக்கையாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான டோரி கேட்டுகள் மலையேறுவதற்கு வழியாக படிகளுடன் அமைக்கப் பட்டுள்ளன. நெருக்கமாக ஒன்றையடுத்து ஒன்றாக அமைக்கப் பட்டிருப்பதால் குகைபோன்ற தோற்றத்தை கொடுக்கும்.

இப்படி குகை போன்று அமைக்கப் பட்டிருக்கும் வழி ஏறுவதற்கு வலது புறமாகவும் இறங்குவதற்கு இடது புறமாகவும் இருக்கும். அருகருகே அமைக்கப் பட்டிருக்கும் இதற்கு சென்பன் டோரி என்று பெயர். இதற்கு ஆயிரம் டோரி கேட்டுகள் என்று பொருள் என்றாலும் இந்த வழியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டோரி கேட்டுகள் உள்ளன.

நம் கோவில்களில் அர்ச்சனை நடப்பது போல் இங்கும் ஒரு நூதன முறை உள்ளது. இங்கு பல அர்ச்சனைகள் பணத்திற்கு ஏற்ப நடப்பதுபோல் அங்கும் நடக்கிறது. இதை சற்று விரிவாகப் பார்ப்போம். செதுக்கப்பட்ட மரக்கட்டைகள் பல அளவுகளில் உள்ளன.
இவை ஒவ்வொன்றுக்கும் 500 யென் 1000 மற்றும் 2000 யென் வரை விலை.

தனிப்பிறவி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1966 ம் வருடம் எம் ஜி ஆரின் திரைப் பயணத்தில் ஒரு பொன்


ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வழமைக்கு மாறாக அவர் நடித்த ஒன்பது படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து அவரின் ரசிகர்களை திக்கு முக்காட செய்தன. எம் ஜி ஆரின் இந்த வேகத்தை உடனடியாக அறுவடை செய்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர்தான். ஒரே ஆண்டில் இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டு சாதனை புரிந்தார் தேவர். வருட தொடக்கத்தில் முகராசி வெளி வந்தது. அதில் இருந்து ஏழு மாதங்களில் தனிப்பிறவி வெளியானது. முருக பக்தன் என்ற போதும் அவரின் செயல்கள் எல்லாம் அசுர சாதனைதான்! 


 வேக வேகமாக படத்தை தயாரித்த போதும் விவேகமாக சில

காரியங்களை செய்தார் தேவர். அவற்றுள் குறிப்பிட வேண்டியது எம் ஜி ஆரை முருகப் பெருமானாக தோன்றச் செய்ததாகும். ஆரம்ப காலத்தில் புராண படங்களில், கடவுள் தோற்றங்களில் எம் ஜி ஆர் நடித்திருந்த போதும் நட்சத்திர நடிகரான பின் , தி மு க வில் தன்னை இணைத்த பிறகு பக்திப் படங்கள் , கடவுள் வேடம் தரிப்பதை அவர் தவிர்த்தே வந்தார். ஆனாலும் அவரிடம் குடியிருக்கும் இறை பக்தியை நன்கு உணர்ந்திருந்த தேவர் தான் தயாரிக்கும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகனாக தோன்றச் செய்து விட்டார். 

 அதே போல் ஆதித்தன், ஆனந்தன் என்ற இரண்டு ஹீரோ நடிகர்களை இதில் எம் ஜி ஆருக்கு வில்லனாக்கி , வில்லன் நடிகர்களான அசோகன், நம்பியார் இருவரையும் நல்லவர்களாக்கி விட்டார். பின் நாட்களில் எம் ஜி ஆரின் கட்சி சார்பாக சட்டசபை உறுப்பினரான திருச்சி சௌந்தரராஜன் இப் படத்தில் தான் எம் ஜி ஆருடன் முதன் முறையாக நடித்தார். அவருக்கும் வில்லன் ரோல் தான். 

சிட்னி தமிழ் அறிவகம் - கொடி தினம் - 13/06/2026

 


இலங்கைச் செய்திகள்

கோட்டாவுக்கு பயணத்தடை: கேர்னல் அன்சார், உதலாகமவும் பட்டியலில் சலே தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையில் வெளிப்பட்டுள்ள தகவல்கள்

துவான் சுரேஸ் சலேயின் உடல் மற்றும் மனநிலை தொடர்பான உத்தரவு ஜூன் 10ஆம் திகதி

யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூலை 9 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்: பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதான இளைஞனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் போராட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது : கிளிநொச்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 



கோட்டாவுக்கு பயணத்தடை: கேர்னல் அன்சார், உதலாகமவும் பட்டியலில் சலே தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையில் வெளிப்பட்டுள்ள தகவல்கள்

Published By: Vishnu

04 Jun, 2026 | 04:32 AM

 (எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, நெறிப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரிகளான கேர்னல் அன்சார் மற்றும் உதலாகம ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதன்கிழமை (3) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

உலகச் செய்திகள்

 முறியடிக்கப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்தம்: லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேலும் ஊடுருவ நெதன்யாகு அவசர உத்தரவு!

ஈரானை நோக்கிச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் 



முறியடிக்கப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்தம்: லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

Published By: Digital Desk 2

04 Jun, 2026 | 01:10 PM

இஸ்ரேல் மற்றும் லெபனான் தங்களின் நிலையற்ற போர் நிறுத்தத்தை புதுப்பிக்கவும், லெபனானுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்குத் தடை விதிக்க பல முன்னோட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கவதற்கு  ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்ட பின்னர்  ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிநேர போர் நிறுத்தத்தைச் சோதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசியதற்கு பிறகு குறித்த இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ் மண்மணம் வீசும் "கண்ணம்மா" திரைப்படம் சிட்னியில் 14 JUN 2026

 .

இலங்கை தயாரிப்பான "கண்ணம்மா" திரைப்படம் சிட்னியில் ஜூன் மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, மாலை 3 மணிக்கு Auburn reading Cinima வில் திரையிடப்படவுள்ளது . யாழ் மண்மணம் வீசும் இத் திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்.




தானமும் தியாகமும் – வேறுபாடு மற்றும் உண்மையான அர்த்தம்

 தானத்திற்கும் தியாகத்திற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஆனால் சிலர் இவ்விரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கருதுகின்றனர். இது ஒரு பெரிய தவறாகும்.

ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தானமாக வழங்கி, தனது சொந்த நலன்களையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலான செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இத்தகைய தானச் செயலின் பின்னணியில் சுயநலமும் தனநல எண்ணமும் இருக்கக்கூடும். ஆனால் உண்மையான தியாகத்தில் சுயநலத்தின் ஒரு சிறு துகள்கூட இருக்காது.

தியாகம் என்பது ஒருவர் மிகவும் விரும்புவதையும் அளவில்லா பாசத்துடன் நேசிப்பதையும் பிறருக்காக வழங்குவதாகும். மனிதனுக்கு மிகவும் பிரியமானது எது? அது அவனுடைய உயிரே. மனிதனுக்கு தனது உயிரைவிட மேலானதும் அன்பானதும் வேறு எதுவும் இல்லை. அப்படியானால் தியாகத்தின் உண்மையான பொருள் என்ன? பிறரின் நலனுக்காகத் தேவையானால் தனது உயிரையே அர்ப்பணிப்பதே உண்மையான தியாகமாகும்.

பலர் தங்கள் நிலத்தை பிறருக்குத் தானமாக வழங்கியதன் மூலம் மிகப் பெரிய தியாகம் செய்ததாகப் பெருமை பேசுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அதை புகழும் பெயரும் பெறுவதற்காகச் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட செயலை உண்மையான தியாகம் என்று கூற முடியாது.

“செயல்களாலும், சந்ததியாலும் அல்லது செல்வத்தாலும் அமரத்துவம் அடைய முடியாது; தியாகத்தினாலேயே அமரத்துவம் பெற முடியும்” என்பது இந்தியப் பண்பாட்டின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்.

உண்மையான தியாகம் மாற்றமற்றதும் ஒப்பற்றதுமாகும். அது மனிதனை அமரத்துவ நிலைக்கு உயர்த்துகிறது. உடல் நிலையற்றதும் அழிவுக்குரியதுமாகும்; அது ஒருநாள் சிதைந்து மறைந்து விடும். ஆனால் ஆத்மா அழியாதது, நித்தியமானது, மாறாதது மற்றும் அமரமானது. அந்த அமரமான ஆத்மாவை அனுபவித்து உணர்வது தியாகத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

கடமையுணர்வே உண்மையான பக்தியின் அடித்தளம்

 நான் உங்கள் கவனத்தை மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தின் மீது திருப்ப விரும்புகிறேன். இன்று நமது நாடான பாரதம் இத்தகைய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் இதுவே. மக்கள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதில்லை.

தன் கடமையைச் சரியாகச் செய்யாத ஒருவன் பக்தியைப் பற்றி எவ்வளவு கேட்டாலும் அதனால் என்ன பயன்? ஒருவர் மருத்துவராக இருந்தாலும், வழக்கறிஞராக இருந்தாலும், அல்லது வேறு எந்தத் தொழிலில் இருந்தாலும், முதன்மையாக அவர் தனது கடமையை அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செய்ய வேண்டும்.

நோயாளிகள் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் அவர்களை விட்டுவிட்டு ஸ்வாமியின் ஆரத்தியில் பங்கேற்பதற்காக கோவிலுக்குச் சென்றால், அதை பக்தி என்று கூற முடியுமா? அது பக்தியே அல்ல. அது வெறும் அறியாமையும் முட்டாள்தனமுமாகும்.

உங்களுடைய பொறுப்பில் உள்ள நோயாளிகளை முழு அக்கறையுடனும் நேர்மையுடனும் கவனித்து, அவர்கள் எந்தவிதமான துன்பத்தையும் அனுபவிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்கள் சேவை; அதுவே உங்கள் கடமை.

இவ்வாறு தங்களின் கடமையைப் புறக்கணிப்பவர்கள், பக்தியைப் பற்றி எவ்வளவு கேட்டாலும் உண்மையான பக்தியை வளர்த்துக் கொள்ள முடியாது. பத்து ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரத்தில் பாயாசத்தை ஊற்றுவதால் என்ன பயன்? எவ்வளவு பாயாசத்தை ஊற்றினாலும் அந்தப் பாத்திரம் நிரம்பாது; அது எப்போதும் காலியாகவே இருக்கும்.

அதேபோல், உங்கள் இதயத்தில் சுயநலமும் தனநலமும் என்ற ஓட்டைகள் இருந்தால், அதனை பக்தியால் நிரப்ப முயல்வதில் என்ன பயன்? அந்தப் பக்தி நிலைத்து நிற்காது.

எனவே, மிக முக்கியமானது என்னவென்றால், ஒருவர் தனது கடமையைச் சரியாகவும், நேர்மையாகவும், மனப்பூர்வமாகவும் நிறைவேற்ற வேண்டும். கடமையை உண்மையுடன் ஆற்றுவதுதான் பக்திக்கான உறுதியான அடித்தளமாகும்.

ப்ரேமை, சரணாகதி மற்றும் க்ஷமையின் மகத்துவம்

 இவ்வுலக வாழ்க்கையில் அன்பு பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தாய்–மகன் அன்பு, கணவன்–மனைவி அன்பு, உறவினர்களுக்கிடையேயான அன்பு போன்றவை அதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் இவ்வகையான அன்புகள் பெரும்பாலும் உடல்ரீதியான உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை; அவை சுயநலமும் தனநல நோக்கங்களும் கலந்தவையாக இருக்கக்கூடும்.

ஆனால் இறைவனிடத்திலான அன்பு அத்தகைய சுயநலத்தின் சிறு சுவடுகூட இல்லாத தூய்மையான அன்பாகும். இதுவே பக்தி எனப்படுகிறது.

இந்தத் தெய்வீக அன்பிற்கு சில முக்கியமான பண்புகள் உள்ளன. முதலாவது, அது பெறுவதற்காக அல்ல; கொடுப்பதற்காகவே வாழ்கிறது. இரண்டாவது, அன்பிற்கு பயம் என்பது கிடையாது. மூன்றாவது, அது எந்தவிதமான தனிப்பட்ட லாபத்திற்காகவும் அல்ல; அன்பிற்காகவே அன்பு செலுத்தப்படுகிறது. இந்த மூன்று அம்சங்களும் ஒன்றிணைந்து “ப்ரபத்தி” அல்லது “சரணாகதி” எனப்படும் உயர்ந்த ஆன்மீக நிலையை உருவாக்குகின்றன.

ஒருவர் இந்த சரணாகதி உணர்வில் திளைத்து வாழும்போது, அவர் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கிறார். ஆனால் இந்த நிலையை அடைவதற்கு மிக முக்கியமான முன் தகுதி “க்ஷமா” அல்லது பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஆகும். க்ஷமையின் பண்பை உடையவரே புனிதமான அன்பைப் பெற்றவராகக் கருதப்பட முடியும்.

இந்த குணத்தைப் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. குருமார்களிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ அதை முழுமையாகப் பெறவும் முடியாது. வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய சிரமங்கள், சோதனைகள் மற்றும் துன்பங்களின் வழியாக ஒருவர் தன்னால் தானே இதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளும் கஷ்டங்களும் உங்களை எதிர்கொள்ளும் போது, மனம் தளர்ந்து கவலையிலும் மனச்சோர்விலும் மூழ்கிவிடக் கூடாது. மனச்சோர்வு என்பது பலவீனத்தின் அடையாளமாகும். அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் பொறுமையையும் மன்னிக்கும் மனப்பான்மையையும் வெளிப்படுத்த வேண்டும். கோபம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் அமைதியுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பலவீனத்தின் உருவங்கள் அல்ல; வலிமையின் வடிவங்கள். எனவே, உங்கள் உள்ளார்ந்த சக்தியை உணர்ந்து, அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகிய உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்.

பக்தியே இறைவனை வெல்லும்

 மனிதனின் உயர்ந்த சில பண்புகளின் மகத்துவத்தை அறியாதிருந்த சத்யபாமாவுக்கு அவற்றை உணர்த்த வேண்டும் என்று நாரதர் விரும்பினார். அதற்காக அவர் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார். அதன்படி, ஒரு தராசில் கிருஷ்ணர் அமர்த்தப்பட்டார்; மறுபுறத் தட்டில் சத்யபாமா காணிக்கைகளை வைத்து கிருஷ்ணரைப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது.

சத்யபாமா தனது அனைத்து நகைகளையும் செல்வங்களையும் தராசில் வைத்தார். ஆனால் அவற்றால் கிருஷ்ணரின் எடையை ஈடுகட்ட முடியவில்லை. இறுதியில், உதவிக்காக ருக்மிணியிடம் பிரார்த்தித்தார்.

ருக்மிணி வந்து கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தாள்:

“அன்புடன் ஒரு இலை, ஒரு மலர், ஒரு பழம் அல்லது சிறிது நீர் அர்ப்பணிக்கும் பக்தனுக்காக இறைவன் தன்னை அர்ப்பணிப்பார் என்பது உண்மையானால், நான் வைக்கும் இந்த துளசி இலை கிருஷ்ணரின் எடையை விட அதிகமாக அமையட்டும்.”

இந்தப் பிரார்த்தனையின் ஆழ்ந்த தத்துவப் பொருள் என்னவெனில்:

  • உடலை ஒரு இலையாகக் கருத வேண்டும்.
  • இதயத்தை ஒரு மலராகக் கருத வேண்டும்.
  • நற்பண்புகளையே பழமாகக் கருத வேண்டும்.
  • பக்தனின் கண்களில் ஆனந்தத்தால் பெருகும் கண்ணீரையே இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் நீராகக் கருத வேண்டும்.

கண்ணீர் இறைவனுக்காக மட்டுமே சிந்தப்பட வேண்டும்; வேறு எதற்காகவும் அல்ல. எவ்வளவு துயரம் வந்தாலும் ஒருவர் கண்ணீர் சிந்தக்கூடாது. ஆனந்தம், உற்சாகம் அல்லது பரவசம் காரணமாகக் கண்ணீர் வரலாம்; ஆனால் துக்கத்தினால் வரக்கூடாது.

ருக்மிணியின் உன்னதமான குணங்களையும், அவளுடைய பக்தியின் மகத்துவத்தையும் சத்யபாமாவுக்கு எடுத்துக்காட்டுவதற்காகவே நாரதர் இந்த நிகழ்ச்சியை முழுமையாக ஏற்பாடு செய்தார்.

இறுதியில் அவர் சத்யபாமாவிடம் கூறினார்:

“இறைவன் செல்வத்திற்குக் கட்டுப்படமாட்டார்; அவர் அடிபணிவது நற்குணத்திற்கும் தூய பக்திக்கும்தான்.”

ஒளியின் வழியில் முன்னேறுதல்

 ஒளி இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த ஒளியின் வழிகாட்டுதலுடன் நாம் முன்னேற முயற்சிக்க வேண்டும். இந்த ஒளி நமக்குக் கிடைத்திருந்தும், அது காட்டும் பாதையில் நாம் செல்லாவிட்டால், நாம் குருடர்களைப் போலவே அறியாமையில் இருப்போம்.

ஒருமுறை, பகவான் கிருஷ்ணர் குருட்டுப் பக்தரான சூர்தாஸின் முன் தோன்றி, “சூர்தாஸ், நீ உலகத்தைப் பார்க்க விரும்பினால், இந்தக் கணமே உனக்குப் பார்வையை மீட்டுத் தருகிறேன்” என்று கூறினார்.

அதற்கு மகாபக்தரான சூர்தாஸ் பதிலளித்தார்:

“கண்கள் இருந்தும், உமது மங்களகரமான அழகிய திருவுருவத்தைப் பார்க்காதவர்கள் உண்மையில் குருடர்களே. காதுகள் இருந்தும், உமது இனிமையான தெய்வீக கீதத்தைச் செவிமடுக்காதவர்கள் செவிடர்களே. தெய்வத்தை அடையும் ஆற்றல் கைகளில் இருந்தும், அவர்கள் சம்சாரமாகிய உலக வாழ்க்கையின் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நீர் அவர்களது இதயங்களில் வாசம் செய்தாலும், உலகின் பொய்யான, கவர்ச்சிகரமான, நிலையற்ற ஈர்ப்புகளால் அவர்கள் மயக்கமடைகிறார்கள். பெரிய கண்கள் இருந்தும், அவர்கள் உம்மைக் காண முடியவில்லை. ஆகையால், அத்தகைய இதயங்களும், கண்களும், காதுகளும் எனக்குத் தேவையில்லை.

ஆண்டவரே! உமது கீதத்தைச் செவிமடுக்கக் கூடிய காதுகளையும், உமது அழகிய திருவுருவத்தைத் தரிசிக்கக் கூடிய கண்களையும், நீர் உறைவதற்கான இதயத்தையும் எனக்குத் தாரும்” என்று சூர்தாஸ் பணிவுடன் வேண்டிக்கொண்டார்.