தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி !

 





 

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்… அவுஸ்திரேலியா 




பண்டிகை அனைத்தும் பண்பாட்டைக் காட்டும்
பக்தியும் பக்குவமும் அதுவுணர்த்தி நிற்கும்
வருடத்தில் வருகின்ற பண்டிகை அனைத்தும்
மக்களது வாழ்வியலில் முக்கியமே  ஆகும் 

வருடத் தொடக்கத்தை கொண்டாடி மகிழ்வார்
அரைவருடம் முடிந்ததும் ஆடிவந் தமையும்
ஆடிப் பிறப்பை அகமிருத்தி அனைவருமே
அரைவருடத் தொடக்கத்தை விழாவாக்கி மகிழ்வார்

ஆதவன் தெற்குத்திசை அடிவைத்து நிற்பான்
அவன் வெப்பந்தணிந்து குளிர்ச்சியங்கே அமரும்
மக்களும் மகிழ்வர் கொண்டாட்டம் தொடங்கும்
ஆடிப் பிறப்பங்கு ஆனந்தம் கொடுக்கும்

முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார் !

 


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





ஈழத்தின் கிழக்கில் எழுந்த தொருமுத்து 
ஆழவே தமிழில் மூழ்கிய நல்முத்து
வாழ்வையே பணியாய் ஆக்கியே நின்று
வரமெனவே மாநிலத்தில் வந்தந்த முத்து 

தந்தைதாய் வைத்த பெயர் மயில்வாகனம் 
தவவாழ்வைத் தேர்ந்ததனால் பெயர் மாறினார்
வெள்ளை நிறமல்லிகையாய் இறை நாடினார்
விபுலானந்த அடிகளாய் நிலை மாறினார் 

பட்டங்கள் பெற்றார் பதவிகள் பெற்றார்
பற்றற்ற வாழ்வையே பற்றியே நின்றார்
பற்றற்று நின்றாலும் பசுந்தமிழைப் பற்றினார்
பாடினார் பேசினார் பலநூல்கள் எழுதினார்

பவளமல்லிகை – படித்தோம் சொல்கின்றோம் : பன்முக ஆற்றல்மிக்க கோகிலா மகேந்திரனின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகச்சொல்லும் சிறப்பு மலர் முருகபூபதி

ஆண்றொன்று போனால் வயது ஒன்று போகும் எனச்சொல்வார்கள்.  ஒருவருடைய  பிறந்த தினம் வரும்போது, குறிப்பிட்ட நபர் தங்களது வயதில் மூத்தவராயின்,  வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்  “ எனச்சொல்வார்கள்.

அல்லது,  வாழ்த்து மடல் அனுப்புவார்கள். வேறும் சிலர், தங்கள் முகநூலில் பதிவுசெய்து வாழ்த்துவார்கள்.  முன்பெல்லாம்  பிறந்ததின வாழ்த்து மடலை தபாலில் அனுப்புவார்கள்.  ஆனால், சமகாலம் புதிய தொழில்நுட்பத்தின் தீவிர முன்னேற்றத்தால்,  மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தங்கள் வாழ்த்துச்செய்தியை பகிர்வார்கள்.

ஒருவரது வாழ்வில்,  மணிவிழா, வைரவிழா, பவளவிழா என சில விழாக்கள் வந்து போகும்.

அவ்வாறு சமகாலத்தில் பவளவிழாவை கடந்து வந்திருப்பவர் எங்கள் கலை, இலக்கிய குடும்பத்தில் ஒருவரான பன்முக ஆற்றல் மிக்க திருமதி கோகிலா மகேந்திரன்.

கடந்த ஆறுதசாப்தங்களுக்கும் மேலாக  கல்வி, கலை, இலக்கியம்,  சமூகப்பணி,  சீர்மியத்தொண்டு முதலானவற்றில் அர்ப்பணிப்புடன் இயங்கிவருபவர் கோகிலா மகேந்திரன்.

சமீபத்தில் ஒரு நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது  கலை, இலக்கியவாதி கலாநிதி மணிவண்ணன், எனக்கு தந்ததுதான்  பவளமல்லிகை – கோகிலா மகேந்திரன் சிறப்பு மலர். இதனை எனது மற்றும் ஒரு நண்பர் சிவசுதன் என்னிடம் சேர்ப்பித்தார். இருவருக்கும் எனது முதற்கண் நன்றி.

இதன்தொகுப்பாசிரியர்கள் :- திருமதிகள் சிவரூபி செல்வநாதன், நளாயினி சுகிர்தன், திரு. மு. சதீஸ் பாலமுருகன் ஆகியோர்.

வழக்கமான பவளவிழா மலர்போன்றில்லாமல், முற்றிலும் தனித்துவமான உள்ளடக்கங்களை கொண்டு  மலர்ந்திருக்கிறது இந்த ஆவணம். மலர்களுக்கு அவற்றின் இதழ்களும்,  அவற்றிலிருந்து புறப்படும் மகரந்தங்களும்தான்  மக்களை பெரிதும் கவருகின்றன. மலர்கள் மாலைகளாகின்றன. மாலைகள்,  ஆண்டனுக்கும் , ஆளுமைகளுக்கும் உருவாக்கப்படுகின்றன.   அவ்வாறு உருவான ஒரு பாரட்டு மலர்தான் இந்த பவளமல்லிகை.

, இந்த பவளமல்லிகையும்  வாசகரை பெரிதும் கவருகின்றது.

முகநக நட்பது நட்பன்று!


உள்ளொன்று வைத்து


புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
என்றார் வடலூர் வள்ளலார்

அத்தகைய உயர் பண்பொடு
வாழ்ந்ததால் பெற்ற பயனோ
இங்கு வாழ்ந்தது போதுமென
வீண்பழி ஏனென்று சென்றீரா

புரட்சியாளனான பாரதியையே
புரியவில்லை உலகு நண்பரே
ஈமச்சடங்கின் போது வந்தோர்
எத்தனை பேர் என்று ஊரறியும்

தாய்  மாம்பழம் வேண்டி கேட்டும்
ஆசையாய் வாங்கித்தராத மகன்
இறந்த பின் வருந்தியே அவனும்
தங்க மாம்பழம் தானம் ஈத்தானாம்

கவிதை..."கருணை உன்னை இறையாக்கும்!"... மெல்போர்ன் அறவேந்தன்


 









மூன்று முடிச்சு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப் படுத்தி ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்த கே . பாலசந்தர் தனது அடுத்த படத்தில் அவரை கதாநாயகனாக்கி ப்ரோமோஷன் கொடுத்தார். அதே போல் அபூர்வ ராகங்களில் கமல்ஹாசனை ஹீரோவாக்கியவர் இந்தப் படத்தில் அவரை சில காட்சிகளில் மட்டும் நடிக்க வைதித்திருந்தார். இப்படி இவர்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தப் படம்தான் மூன்று முடிச்சு. 


 ரஜினிக்கு முதல் தடவையாக ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்பென்ற போதும் Anti Hero வாகத் தான் இதில் அவர் நடித்திருந்தார் . ஆனாலும் கிடைத்த வாய்ப்பை அவர் தவற விடவில்லை . 

 பிரசாத், பாலாஜி இருவரும் ஒரே அறையில் தங்கி ஒரே தட்டில்

உண்ணும் நெருங்கிய நண்பர்கள். இருவர் வாழ்விலும் செல்வி குறுக்கிடுகிறாள். இருவரும் செல்வியை காதலிக்க அவளின் காதல் பாலாஜி மீது போகிறது. பொறாமைத் தீயில் வேகும் பிரசாத் பாலாஜிக்குத் தெரியாமல் செல்வியை எரிச்சல் பட வைக்கிறான். அவனின் கீழ்த்தரமான எண்ணங்கள் , செயல்களை பற்றி செல்வி சொல்லும் எதையும் பாலாஜி காதில் வாங்கி கொள்வதாக இல்லை. நண்பனை நூற்றுக்கு நூறு நம்புகிறான். ஒரு நாள் மூவரும் படகு சவாரி செல்லும் போது பாலாஜி கடலில் விழுந்து விடுகிறான். செல்வி எவ்வளவோ கதறியும் நீச்சல் தெரிந்த பிரசாத் நண்பனை காப்பாற்ற மறுக்கிறான் . பாலாஜி இறக்கிறான். இனி செல்வி தனக்குத் தான் என்று எண்ணும் பிரசாத் செல்விக்கு மூன்று முடிச்சு போட்டானா அடைந்தானா என்பதே படத்தின் முடிச்சு! 

 படத்தில் நல்லவனாக , அப்பாவியாக வரும் கமல் அளந்து நடிக்கிறார் , அளவான காட்சிகளில் வந்து விட்டு போகிறார். படம் முழுதும் வருபவர் கவருபவர் ரஜினிதான். வரும் காட்சிகளில் எல்லாம் சிகரட்டை வாயில் தூக்கி தூக்கி போடுகிறார். வாயில் சிகரெட் இல்லாத போது வசனம் பேசுகிறார். ஆனாலும் முகபாவம் , உடல் மொழி மூலம் தன் வில்லத்தனத்தை பதிவு செய்து விடுகிறார். 

இலங்கைச் செய்திகள்

“சிலோன் டீ வில்லேஜ்” தேசிய வேலைத்திட்டம் இன்று நுவரெலியாவில் ஆரம்பம்

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் குறித்து விசாரணை செய்ய இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்!

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத் தடுக்க அறிவியல் ரீதியான பாலியல் கல்வி அவசியம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான பண மோசடி வழக்கு : ஆகஸ்ட் 31இல் முழுமையான நீதிமன்ற விசாரணை!    



“சிலோன் டீ வில்லேஜ்” தேசிய வேலைத்திட்டம் இன்று நுவரெலியாவில் ஆரம்பம் 

16 Jul, 2026 | 11:59 AM

இலங்கையில் 2030ஆம் ஆண்டுக்குள் தயாரான தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம் அளவிற்கும், தேயிலை ஏற்றுமதி வருவாயை அமெரிக்க டொலர் 2.5 பில்லியன் அளவிற்கும் உயர்த்தும் தேசிய இலக்கை அடைவதற்காக, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் “Ceylon Tea Village” (சிலோன் டீ வில்லேஜ்) எனப்படும் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டது. 

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹல்கொல்ல கிராமத்தில், ஹப்புகஸ்தலாவ நீர்த்தேக்கத்துக்கு முன்பாக அமைச்சர் சமந்த வித்யரத்ன தலைமையில் தேசிய ரீதியில் இத்திட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

உலகச் செய்திகள்

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7 பேர் பலி - ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: 4 ஆண்டுகால போர்நிறுத்தம் முறிந்தது!    



 இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

17 Jul, 2026 | 02:32 PM

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (17) அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் நடைபெற்றது. 

இந்த கூட்டத் தொடரில் ஏராளமான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாதாந்திர சைவ சமய சிந்தனைச் சொற்பொழிவு

 


இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 60 "எழுத்தாளர் தி. ஞானசேகரனின் - பன்முக ஆளுமை"

நாள்:  சனிக்கிழமை 25-07-2026


 நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

கலாநிதி மைதிலி தயாநிதி

கலாநிதி சு.குணேஸ்வரன்

கலாநிதி வாசுகி நகுலராஜா

எழுத்தாளர்  சின்னராஜா விமலன்

வைத்திய கலாநிதி மேரி கியூரி போல்

 

ஒருங்கிணைப்பு:   அகில்

 

தர்ம வாழ்வே இறையுணர்விற்கான பாதை

 தர்மநெறியில் வாழ்வது மனதைத் தூய்மைப்படுத்தி, மனிதனை இறைவனிடம் இட்டுச் செல்கிறது. அது இறைவனின் திருநாமத்திலும் திருவுருவத்திலும் ஆழ்ந்த பக்தியையும் ஈர்ப்பையும் உருவாக்குகிறது. கிருஷ்ணரின் திருநாமத்தையும் திருவுருவத்தையும் நேசிக்கும் ஒருவர், இயல்பாகவே பகவத் கீதையில் அவர் அருளிய தெய்வீக உபதேசங்களை மதித்து, அவற்றின்படி வாழ முற்படுவார்.

நாவில் இறைவனின் திருநாமமும், கண்களில் அவரது திருவுருவமும் நிலைத்திருக்கும்போது, ஆசை என்னும் அரக்கன் மனதை விட்டு அகன்றுவிடும். அதன் இடத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் குடிகொள்ளும்.

உள்ளத்தில் உறையும் இறைவனை இடையறாது நினைத்திருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் மனப்பான்மையை வளர்க்கிறது. அப்போது பிறரிடம் குறைகளைக் காணாமல், அவர்களிடமுள்ள நன்மைகளையே காண்போம். பிறருக்கு நன்மை செய்வதையே வாழ்வின் நோக்கமாகக் கொள்வோம்.

இன்றைய உலகில் அனைத்துப் பொருட்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது; ஆனால் மனிதனின் மதிப்பே குறைந்து விட்டது. பகுத்தறிவு, விவேகம், பற்றின்மை போன்ற அரிய ரத்தினங்களைப் பெற்றிருந்தும், அவற்றை மனிதன் இழந்துவிட்டான். அதன் விளைவாக ஆன்மீக வறுமையிலும் மன அமைதியின்மையிலும் சிக்கித் தவிக்கிறான்.

கோபம், வெறுப்பு, பேராசை ஆகியவை அளவுக்கு மீறி வளர்ந்ததன் காரணமாக, மனிதன் விலங்குகளைவிடக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். மனிதர்கள் தயக்கமின்றி ஒருவரையொருவர் அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. எல்லா மனிதர்களுடனும், எல்லா உயிர்களுடனும், இவ்வுலகமெங்கும் தமக்கு உள்ள ஒருமைப்பாட்டை மனிதன் மறந்துவிட்டான்.

இந்த ஒருமைப்பாட்டு உணர்வை மனதில் நிலைநிறுத்துவதன் மூலமே உலக அமைதியும், சமூக அமைதியும், தனிமனித அமைதியும் நிலைபெற முடியும். இதனைத் தவிர வேறு எந்த முயற்சியும் சாம்பல் மேட்டின் மீது நறுமணப் பன்னீரைத் தெளிப்பதைப் போன்ற பயனற்ற செயலாகும்.

சேவையே இறைவனின் ஆன்மீகப் பாதை

 இறைவனின் தத்துவம் என்பது, பக்தர்களை ஒரு மூலையில் அமர வைத்து, மூச்சைக் கட்டுப்படுத்தி, "சோஹம்! சோஹம்! சோஹம்!" என்று தொடர்ந்து ஜபம் செய்யச் சொல்லுவதல்ல.

இறைவனின் அழைப்பு இதுதான்:

"சாதகனே! எழுந்திரு! இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொள்! சமுதாயச் சேவையில் முழுமனதுடன் ஈடுபடு!"

சோம்பேறித்தனத்திற்கும் அலட்சியத்திற்கும் ஆன்மீக வாழ்வில் இடமில்லை. புலன்களை அடக்கி, மனதை ஒழுங்குபடுத்தி, சமுதாய நலனுக்காக தன்னலமின்றி உழைப்பதே உண்மையான சாதனையாகும்.

சேவைக்கு அர்ப்பணிக்கப்படாத வாழ்க்கை, விளக்கேற்றப்படாத இருண்ட கோயிலைப் போன்றது. அத்தகைய மனம் அறியாமை, சுயநலம், அகங்காரம் போன்ற தீய குணங்கள் குடிகொள்ளும் இடமாக மாறிவிடும். ஆனால், சேவை என்ற தீபமே ஆன்மீக சாதகரின் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது.

எனவே, எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல், சக மனிதர்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும். சேவையே இறைவனை அடையும் எளிய மற்றும் உயர்ந்த வழியாகும்.

பயனற்ற பேச்சுக்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். "இறைவன் சர்வஞ்ஞன்; சர்வவியாபி; சர்வசக்தி வாய்ந்தவர்" என்று கூறுவதால் மட்டும் என்ன பயன்? இவ்வாறான உயர்ந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வது எளிது. ஆனால், அவற்றின்படி வாழ்வது எத்தனை பேரால் முடிகிறது?

சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் ஒற்றுமை நிலவும்போதுதான் ஆன்மீக வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

ஜபம், தியானம் போன்ற அனைத்து ஆன்மீகப் பயிற்சிகளும் மனதைக் கட்டுப்படுத்தி, அதை இறைவனை நோக்கிச் செல்லத் தயார்படுத்தும் கருவிகளாகும். ஆனால், வழியை அறிந்திருப்பது மட்டும் போதாது; அந்த வழியில் நடந்து இலக்கை அடைய வேண்டும்.

அந்தப் பயணமே சமுதாயச் சேவை ஆகும்.

இந்தச் சேவையைச் செய்யும்போது, ஒவ்வொரு இதயத்திலும், ஒவ்வொரு மனிதனிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் இறைவன் உறைகிறார் என்ற உறுதியான உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் சேவை ஒரு சாதாரண நற்பணியாக இல்லாமல், இறைவனுக்கே செய்யப்படும் வழிபாடாக உயர்கிறது.

"மானிட சேவையே மாதவ சேவை" என்ற உயர்ந்த சத்தியத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே சாயியின் ஆன்மீகத் தத்துவத்தின் மையக் கருத்தாகும். தியானமும் ஜபமும் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும்; ஆனால் தன்னலமற்ற சேவையே நம்மை இறைவனோடு ஒன்றிணைக்கிறது.

இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றியுணர்வு செலுத்துவோம்

 மனிதன் தனது அறிவாலும் திறமையாலும் பல அற்புதமான சாதனைகளை உருவாக்கியுள்ளான். ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட எதுவும் இறைவனின் மகிமை, பேரொளி, பேராற்றல் மற்றும் பேரருளுக்கு ஈடாக முடியாது.

எவ்வளவு சக்திவாய்ந்த மின்விளக்காக இருந்தாலும், சூரியனின் ஒப்பற்ற ஒளிக்குச் சமமாக முடியுமா? உலகிலுள்ள எந்த மோட்டார் பம்பாலும், கனமழை பொழியும் அளவுக்கு தண்ணீரை வழங்க முடியுமா? எந்த மின்விசிறியும் இயற்கைக் காற்று தரும் குளிர்ச்சியையும் இதத்தையும் அளிக்க முடியுமா?

இறைவன் வழங்கும் அருட்கொடைகள் அளவற்றவை; ஒப்பற்றவை; என்றும் குறையாதவை.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வசதிக்கும் உரிய கட்டணத்தைச் செலுத்துகிறோம். குடிநீர் வழங்கும் நகராட்சிக்கு நீர்க்கட்டணம் செலுத்துகிறோம். மின்சாரம் வழங்கும் துறைக்கு மின்கட்டணம் செலுத்துகிறோம். இவ்வாறு பல்வேறு சேவைகளுக்காக வரியும் கட்டணமும் செலுத்துவது நமது கடமையாகக் கருதுகிறோம்.

ஆனால், அளவற்ற ஒளியையும், உயிர்க்காற்றையும், நீரையும், இயற்கையின் அருட்செல்வங்களையும் இடைவிடாமல் வழங்கும் பரமாத்மாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்?

அரசுத் துறைகள் வழங்கும் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்துவது நமது பொறுப்பாக இருந்தால், எல்லையற்ற அருளை வழங்கும் இறைவனுக்கு நன்றியுணர்வு செலுத்துவது அதைவிட உயர்ந்த கடமையல்லவா?

நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நம்மை ஒளிரச் செய்யும் சூரியஒளி, நம்மைத் தாங்கும் பூமி, உயிரை வளர்க்கும் ஆகாயம்—இவ்வாறு பஞ்சபூதங்களாகிய இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் இறைவனின் அளவற்ற பரிசுகளாகும். இவை எப்போதும் வற்றாதவை; அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்படுகின்றன.

இத்தகைய அருட்கொடைகளை வழங்கும் இறைவனுக்கு நன்றியுணர்வுடன் வாழ்வது மனிதனின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். நன்றியுணர்வு நிறைந்த இதயமே இறையருளைப் பெறும் தகுதியுடையதாகும்.

இன்றைய உலகில் காணப்படும் அமைதியின்மை, மனக்குழப்பம், குழப்பநிலை ஆகியவற்றிற்குப் பெரும்பாலும் காரணம், மனிதன் இறைவனின் அருளை உணராமல், நன்றியுணர்வை மறந்து வாழ்வதுதான்.

நன்றியுணர்வு என்பது ஒரு நல்ல பண்பு மட்டுமல்ல; அது இறைவனை அணுகும் உயர்ந்த ஆன்மீகப் பாதையாகும். இறைவனின் அருளை உணர்ந்து நன்றியுடன் வாழும் இதயத்தில் அமைதியும் ஆனந்தமும் இயல்பாகவே மலர்கின்றன.

உண்மையான அமைதி உள்ளத்திலிருந்தே மலர்கிறது

 இன்றைய மனித வாழ்க்கை அச்சம், கவலை மற்றும் மனஅமைதியின்மையால் சூழப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், மனிதனின் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒற்றுமை இல்லாததே. மனதில் ஒன்றை நினைத்து, வாயால் வேறொன்றைப் பேசும் நிலை மனிதனை அமைதியிலிருந்து விலக்குகிறது.

அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள். அதைப் பெறுவதற்காக நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றனர். ஆனால், "அமைதி என்றால் என்ன? அது எங்கே கிடைக்கிறது? அதை எவ்வாறு அடையலாம்?" என்று தங்களைத் தாங்களே ஆழமாக ஆராய்பவர்கள் மிகவும் அரிது.

முதலில் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: நான் நாடுவது உலகியல் அமைதியா, அல்லது உள்ளார்ந்த அமைதியா?

உலகியல் அமைதி நிலையற்றது. அது வந்து போகும் இயல்புடையது. இருந்தாலும், அதையே உண்மையான அமைதி என்று மனிதன் தவறாக எண்ணுகிறான். அதனால், அமைதியின் உண்மையான இயல்பு, அதன் வல்லமை, அதன் தெய்வீக மேன்மை ஆகியவற்றை அவனால் உணர முடியவில்லை.

பற்றுதலும் (ராகம்), வெறுப்பும் (த்வேஷம்) அற்ற மனநிலையே உண்மையான அமைதி. மனதில் ராகமும் த்வேஷமும் இருக்கும் வரை, அங்கு அமைதிக்கு இடமில்லை.

அப்படியானால் "பிரசாந்தி" என்றால் என்ன?

"பிர" என்பது மலர்தல் அல்லது முழுமையாக வெளிப்படுதல் என்ற பொருளைக் குறிக்கிறது. எனவே, பற்றுதலும் வெறுப்பும் இல்லாத தூய மனநிலையில், உள்ளார்ந்த அமைதி முழுமையாக மலர்ந்து வெளிப்படுவதே பிரசாந்தி அல்லது பரம அமைதி ஆகும். அது மனிதனின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் தெய்வீக அமைதியின் வெளிப்பாடாகும்.

ஆனால், இவ்வுலகில் இத்தகைய பரம அமைதியை உண்மையாக அனுபவித்தவர்கள் எத்தனை பேர்? இதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், ராகமும் த்வேஷமும் முற்றிலும் நீங்கிய அந்த உயர்ந்த நிலையை சாதாரண மனிதன் அடைவது மிகவும் அரிது என்பதை உணரலாம்.

ஆயினும் அது இயலாத ஒன்றல்ல. அதற்கான பாதை வெளியில் இல்லை; அது நம் உள்ளத்திலேயே உள்ளது. அமைதியை வெளிப்புற உலகிலிருந்து வாங்கவோ பெறவோ முடியாது. அது நம் இதயத்தில் ஏற்கனவே உறைந்திருக்கும் தெய்வீகச் செல்வம். மனத்தைத் தூய்மைப்படுத்தி, பற்றுதலையும் வெறுப்பையும் விலக்கி, அன்பும் கருணையும் வளர்த்துக் கொண்டால், அந்த அமைதி தானாகவே நம் உள்ளத்தில் மலர்ந்து வெளிப்படும்.

உண்மையான அமைதி வெளியிலிருந்து கிடைப்பதல்ல; அது உள்ளத்திலிருந்து வெளிப்பட வேண்டிய தெய்வீக அனுபவமாகும்.

உண்மையான ஆனந்தத்தின் ஊற்று நமக்குள்ளேயே உள்ளது

 உலகாயதக் கொள்கையைப் பின்பற்றிய சார்வாகர்கள் (Charvakas) மனிதன் தற்போதுள்ள இன்பத்தையே அனுபவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். "கையில் இருக்கும் ஒரு பறவை, புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட மேலானது" என்ற பழமொழியை மேற்கோளாகக் கொண்டு, இப்போது கிடைக்கும் இன்பத்தை விட்டுவிட்டு, எதிர்காலத்தில் கிடைக்கும் என்று கூறப்படும் இன்பத்தை நம்புவது அறிவுடைய செயல் அல்ல என்று அவர்கள் வாதிட்டனர்.

ஆனால், துறவால் கிடைக்கும் மகிழ்ச்சி தொலைவில் கிடைக்கப்போகும் ஒன்றல்ல; அதை இங்கேயும் இப்போதேயும் அனுபவிக்க முடியும். மேலும், பற்றுதலாலும் ஆசையாலும் கிடைக்கும் சிற்றின்பத்தைவிட, துறவால் கிடைக்கும் ஆனந்தம் நிலையானதும், மனதை உயர்த்துவதுமானதாகும்.

அதேபோல், புலன்களின் அடிமையாக இருப்பதைவிட, அவற்றின் எஜமானனாக இருப்பதில் ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி உள்ளது. உதாரணமாக, காபி அருந்தும் பழக்கத்திற்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மூன்று நாட்கள் காபி அருந்த மாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்து, அந்த முடிவைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்கள் நாக்கின் எஜமானனாகி விடுவீர்கள்; நாக்கு உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன் பிறகு காபி உங்களை ஆள முடியாது.

உண்மையில், காபிதான் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால், அதைக் குடிக்கும் அனைவரும் ஒரே அளவு மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால் சிலர் தேநீரையே விரும்புகின்றனர்; சிலருக்கு காபியே பிடிக்காது. சிலர் சர்க்கரை இல்லாமல் அருந்துகின்றனர்; வேறு சிலர் பால் சேர்க்காமல் அருந்துவதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதிலிருந்து நாம் உணர வேண்டியது என்னவென்றால், மகிழ்ச்சியை அளிப்பது காபியோ, எந்தப் பொருளோ அல்ல; மனம்தான் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. புலன்களுக்கு இன்பம் தருவது வெளிப்புறப் பொருள்கள் அல்ல; அவற்றைப் பற்றிய மனத்தின் எண்ணங்களே.

எனவே, உண்மையான ஆனந்தத்தின் இரகசியம் வெளியில் இல்லை; அது நமக்குள்ளேயே இருக்கிறது. அந்த ஆனந்த ஊற்றைக் கண்டறிய வேண்டும். அது ஒருபோதும் வற்றாத, எப்போதும் நிரம்பிய, என்றும் குளிர்ச்சியூட்டும் தெய்வீக ஆனந்த ஊற்றாகும். ஏனெனில், அந்த ஊற்று இறைவனிடமிருந்து பொங்கி வழிகிறது.

அந்த அக ஆனந்தத்தை உணர்ந்தவனுக்கு, உலகப் பொருட்களின் மீது சார்ந்திருக்கும் அவசியமே இருக்காது. அவனுடைய வாழ்க்கை சுதந்திரமானதாகவும், அமைதியானதாகவும், நிலையான மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாறும்.

உலக அமைதியே தனி மனிதனின் அமைதிக்கு அடித்தளம்

 நாம் வாழும் சூழலைப் பற்றிய அக்கறையின்றி வாழ முடியாது. தூய்மையான குடிநீரைப் பெற கிணறு தோண்ட விரும்புபவர், மாசடைந்த அல்லது உவர்நிலம் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்க மாட்டார். அதுபோலவே, மன அமைதியை அடைய விரும்புபவர், தன்னைச் சுற்றியுள்ள சூழல் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

இதன் பொருள், நமது தனிப்பட்ட அமைதி உலக அமைதியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்வதாகும். இந்த ஆழ்ந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள்,

“லோகாஃ சமஸ்தாஃ சுகினோ பவந்து”

(உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க!)

என்ற உலக நலப் பிரார்த்தனையை நமக்கு வழங்கியுள்ளனர்.

உலக அமைதிக்காக நாம் பாடுபடும்போதுதான், நமது சொந்த வாழ்க்கையிலும் நிலையான அமைதியை உறுதிப்படுத்த முடியும். உண்மையான இறைநம்பிக்கை கொண்ட மனிதனின் அடையாளம், தனது அமைதி, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றை மட்டும் நாடுவதல்ல; உலக மக்கள் அனைவரின் அமைதி, வளம் மற்றும் நல்வாழ்விற்காகவும் மனமார பாடுபடுவதே ஆகும்.

இறைநெறியில் வாழ்வதற்கு இரண்டு அடிப்படைத் தகுதிகள் அவசியம். அவை நம்பிக்கை மற்றும் அன்பு. இந்த இரண்டும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஒரு பறவை உயரப் பறக்க இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போலவும், ஒரு தேரை முன்னே நகர்த்த இரண்டு சக்கரங்கள் தேவைப்படுவது போலவும், இறைநெறியில் உயர்வதற்கு நம்பிக்கையும் அன்பும் மனிதனுக்கு அவசியமான இரு தூண்களாக விளங்குகின்றன.

தன்னலமற்ற அன்பையும், அசைக்க முடியாத இறைநம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு, உலக நலனுக்காக வாழும் வாழ்க்கையே உண்மையான ஆன்மீக வாழ்க்கையாகும். அத்தகைய வாழ்க்கை மனிதனுக்கு மட்டுமல்ல, உலகிற்கே அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை வழங்கும்.

உண்மையான அமைதி எங்கே?

 இன்றைய உலகில் அனைத்து வசதிகளும், செல்வச் செழிப்பும், சுகபோகங்களும் இருந்தும் மனஅமைதியின்றி வாழும் மனிதர்கள் ஏராளம். ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு பயம், கவலை அல்லது மனக்குழப்பத்துடன் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?

வெளிப்புற வசதிகளும் பொருளாதார வளங்களும் மனிதனுக்கு உண்மையான அமைதியை அளிக்க முடியுமா? பணம், பொன், சொத்துக்கள் மற்றும் உலகியல் செல்வங்கள் மனநிம்மதியைத் தருமா? அவை அமைதியை வழங்கக் கூடியவையாக இருந்தால், அளவற்ற செல்வம் பெற்றவர்கள்கூட ஏன் மனஅமைதியின்றி தவிக்கின்றனர்?

மனிதன் இன்று எல்லா வசதிகளும் இருந்தபோதிலும் அமைதியை அனுபவிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், அவனது மனம் தீய எண்ணங்களால் நிரம்பியிருப்பதுதான். ஒரு வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அங்கு வாழ்பவர்கள் அனைவரும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருப்பார்கள். அதுபோலவே, ராகம் (அளவில்லா பற்றுதல்) மற்றும் த்வேஷம் (வெறுப்பு) என்னும் நச்சுப் பாம்புகள் மனிதனின் இதயத்தில் குடிகொண்டிருக்கும்போது, அவன் எவ்வாறு உண்மையான அமைதியை அடைய முடியும்?

இந்த இரு தீய குணங்களையும் மனிதன் முற்றிலும் அகற்றாதவரை நிலையான அமைதியை அடைவது இயலாது.

பலரிடம் அதிகாரமும், பதவியும், செல்வமும் இருக்கின்றன. இருந்தாலும் அவர்கள் மனஅமைதியை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், தங்களுக்குள் எழும் தீய குணங்களையும் தீய எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் மனவலிமையும் சுயக்கட்டுப்பாடும் அவர்களிடம் இல்லாததே.

எனவே, மனிதன் முதன்மையாக செய்ய வேண்டியது, தீய குணங்களும் தீய எண்ணங்களும் தனது இதயத்திற்குள் நுழையாமல் காத்துக்கொள்வதாகும். மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, அன்பு, கருணை, பொறுமை, மன்னிப்பு போன்ற நற்குணங்களை வளர்த்தால்தான் நிலையான அமைதியும் உண்மையான ஆனந்தமும் வாழ்க்கையில் மலரும்.