காடும் கடலும் (THE JUNGLE AND THE SEA) அரங்க அனுபவம் - கானா பிரபா
“உங்கள் சமூகம் பட்ட துன்பத்தை ஒரு நாடகமாகப் பார்க்கவே
கஷ்டமாக இருக்கிறது”
கட்டப்பட்ட அந்தத் தாய்க்குச் செய்தி ஒன்று வருகிறது.
சித்தம் தெளிந்தேன் தெரிந்தேன் தத்துவம் !
கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார் !
ஊதியம்! - சங்கர சுப்பிரமணியன்.
- சங்கர சுப்பிரமணியன்.
நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன்,
அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.
"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.
"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.
"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.
"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.
"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"
"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."
"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
இரண்டே நாள் படப்பிடிப்புத்தான். நடித்து முடுத்து விட்டேன் ஆனால் இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் என் தரித்திரமும் கூடவே சேர்ந்தே வரும் போலிருக்கு. என்ன மனிதர் இவர்? என் நிலைமை தெரிந்தும் இப்படி நடித்ததற்கு உண்டான பணத்த்கைக் கொடுக்காமல் இரண்டு நாட்களாகியும் பேசாமல் இருக்காரே என்று எண்ணினேன். இரண்டு நாள் போய் ஒரு வாரமும் ஆனது.
ஒரு நாள் திடீரென்று வீட்டின் முன் கார் வந்து நின்றது. எட்டிப் பார்த்தேன் அவர் தான் வந்தார்.
"அண்ணே மன்னிச்சுடுங்க, இரண்டு மூன்று நாட்களாக வெளி நாட்டில் படப்பிடிப்பு. அதனால் தான் என்னால் உங்களை பார்க்க முடியல" என்று சொல்லி வருந்தினார்.
ஓ மஞ்சு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழில் வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படங்களை
எடுத்து வந்த ஸ்ரீதர் , இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எம் ஜி ஆரின் உரிமைக் குரல் மூலம் சரி செய்து விட்டு மீண்டும் மாறுபட்ட படங்களை டைரக்ட் பண்ணத் தொடங்கினார். அந்த வரிசையில் 1976ம் வருடம் அவர் எடுத்த படம் ஓ மஞ்சு.
டைரக்டராகவும் விளங்கியவர் ராஜ்கபூர். இவர் உருவாக்கிய ஆவாரா, திஷ் தேய்ஷ் மே கங்கா பட்டி ஹே , சங்கம் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தன. ஆனாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் எடுத்த மேரே நாம் ஜோக்கர் படம் தோல்வி கண்டு ராஜ்கபூரை மீளாக் கடனில் தள்ளியது. அதில் இருந்து மீள அவர் டீன் ஏஜ் கதை ஒன்றை படமாக்க தீர்மானித்தார். தன்னுடைய நடிப்பை மூட்டைக் கட்டி வைத்து விட்டு தன் மகன் ரிஷிகபூரை இளம் ஹீரோவாக அறிமுகப் படுத்தினார். நாயகியாக டிம்பிள் கபாடியா அறிமுகமானார். இளமை, அழகு, சிருங்காரம்,செக்ஸ், பாடல்கள், இசை என்று எல்லாம் கலந்த படமாக பாபி வெளிவந்து அகில இந்தியாவிலும் தூள் கிளப்பியது.
இலங்கைச் செய்திகள்
அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி
பிரேசில் வெளியுறவு அமைச்சருடன் அமைச்சர் விஜித்த சந்திப்பு : விவசாயம், கரும்புத் தொழில் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம்
சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை - சட்டத்தரணி வி.எஸ் நிறைஞ்சன்
அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி
24 Jul, 2026 | 10:16 AM
( வீ.பிரியதர்சன் )
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் ஜெயின் ஹோவெல் (Chargé d'Affaires) Jayne Howell, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகரவை (மேஜர் ஜெனரல் (ஓய்வு)) சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – இலங்கை இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இருநாடுகளின் கூட்டுப் பொறுப்பும் வலியுறுத்தப்பட்டது.
உலகச் செய்திகள்
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - ராகுல் காந்தி கைது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - பிரித்தானியப் பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தொலைபேசியில் உரையாடல்
ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன்-ஹுய்
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - ராகுல் காந்தி கைது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் கருத்து
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் புது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை பொலிஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதற்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கைது விவகாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் 'தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என கண்டனம் தெரிவித்துள்ளது.
சிட்னி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் - ஆடிப்பூரத் தேர்த்திருவிழா 2026 ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு ஆடிப்பூர பூஜை 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, பால்குட அபிஷேகத்துடன் நடைபெறும்.
‘சாந்தி’ மூன்று முறை உச்சரிக்கப்படுவதன் ஆழமான பொருள்
இந்துப் பாரம்பரியத்தில் ஒவ்வொரு பிரார்த்தனையின் முடிவிலும், யாகம், பூஜை அல்லது அர்ப்பணிப்பின் இறுதியிலும் “சாந்தி, சாந்தி, சாந்தி” என்று மூன்று முறை உச்சரிக்கப்படுகிறது. இது வெறும் மரபு அல்ல; மனிதனின் முழுமையான அமைதியை வேண்டி கூறப்படும் ஆழமான ஆன்மிகப் பிரார்த்தனையாகும்.
முதல் சாந்தி – உடலின் அமைதிக்காக
முதல் சாந்தி என்பது உடலின் அமைதியை குறிக்கிறது. பொறாமை, வெறுப்பு, பற்றுதல், கோபம் போன்ற தீய உணர்வுகள் உடலையும் மனதையும் பாதிக்கின்றன. எந்தச் செய்தியைக் கேட்டாலும், எந்தச் சூழ்நிலையையும் சந்தித்தாலும், மன அமைதியுடனும் சமநிலையுடனும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் அமைதியாக இருந்தால்தான் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளம் அமையும்.
இரண்டாவது சாந்தி – மனத்தின் அமைதிக்காக
இரண்டாவது சாந்தி என்பது மன அமைதியை வேண்டுவதாகும். யாராவது நம்மைப் பற்றி உண்மையற்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னாலும், அதனால் மனம் கலங்கவோ, கோபப்படவோ கூடாது. அது நம்மைச் சார்ந்ததல்ல என்று எண்ணி விட்டுவிட வேண்டும்.
“உண்மையில்லாத ஒரு வார்த்தைக்காக நான் ஏன் என் மன அமைதியை இழக்க வேண்டும்?” என்று நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். நமது உண்மையில் உறுதியாக நிலைத்து, நமது இயல்பிற்கு உண்மையாக வாழ வேண்டும்.
மூன்றாவது சாந்தி – ஆன்மாவின் அமைதிக்காக
மூன்றாவது சாந்தி என்பது ஆன்மாவின் அமைதியை குறிக்கிறது. இந்த அமைதி அன்பின் மூலம் மட்டுமே அனுபவிக்கப்பட முடியும். இன்று உலகம் பல்வேறு சிக்கல்களாலும் மோதல்களாலும் தடம் புரண்டுள்ளது. அதை மீண்டும் நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடிய சக்தி அன்பும் அமைதியும் மட்டுமே.
எனவே, நமது எண்ணங்களிலும், சொற்களிலும், செயல்களிலும் அன்பு, சத்தியம், அமைதி ஆகிய தெய்வீகப் பண்புகளை நிரப்பிக் கொள்ள வேண்டும். நம்மை வெறுப்பவர்களாக இருந்தாலும், அவர்களிடமும் அன்பையே காட்ட வேண்டும். அன்பு மட்டுமே பகையை கரைத்து, அமைதியை நிலைநிறுத்தும்.
முடிவுரை
“சாந்தி” என்று மூன்று முறை உச்சரிப்பது, உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் முழுமையான அமைதி நிலவ வேண்டும் என்ற பிரார்த்தனையாகும். இந்த மூவகை அமைதியை அடைந்தால்தான் மனிதன் உண்மையான ஆனந்தத்தையும், இறையருளையும், ஆன்மிக நிறைவையும் அடைய முடியும். எனவே, நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அன்பு, சத்தியம், அமைதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதே உயர்ந்த சாதனையாகும்.
இறைநாம ஸ்மரணையின் மகிமையும் அசைக்க முடியாத நம்பிக்கையின் ஆற்றலும்
சத்-சித்-ஆனந்தம் (Sat-Chit-Ananda) என்பது மனிதனில் வெளிப்படும் பரம தெய்வீக பேரின்பமாகும். இந்த ஆனந்தமே மனிதனின் உண்மையான ஆன்மீக சாராம்சமாக விளங்குகிறது. இவ்வாறு தன்னுள்ளேயே அழியாத நித்திய ஆனந்தம் இருக்கும்போது, மனிதன் நிலையற்ற உலக இன்பங்களின் பின்னால் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
ஆனால், மாயையாலும் அறியாமையாலும் தோன்றிய உடல்பற்றை மனிதன் விடுவித்தால்தான், தன்னுள் உறையும் இந்த நித்திய பேரின்பத்தை அனுபவிக்க முடியும். இந்த உயர்ந்த உண்மையை உணர்ந்து, எப்போதும் இறைவனின் திருநாமத்தைத் தியானித்தவர்களில் ஒருவர் சக்குபாய்.
சக்குபாயின் ஆழ்ந்த பக்தியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் கண்டு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருடைய உருவத்தையே ஏற்று, சக்குபாயை பண்டரிபுரத்திற்கு அனுப்பினார். இதுவே பக்தர்மீது பகவான் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பிற்கும் கருணைக்கும் சான்றாகும்.
பக்தையின் உருவத்தைத் தாமே ஏற்றுக் கொண்ட இறைவன், அவளுடைய இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் தாமே செய்து முடித்தார். இதனால், சக்குபாய் எந்தத் தடையும் இன்றி பண்டரிபுரம் சென்று பகவானை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். மேலும், அவள் வீட்டில் இல்லாததை யாரும் குறை கூறவோ, பழி சுமத்தவோ முடியாதபடி, இறைவனே அவளது வடிவில் இருந்து அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து முடித்தார். இறுதியில், சக்குபாய் பண்டரிபுரம் சென்று பகவானுடன் ஐக்கியமானார்.
நம்பிக்கையின் சக்தியை அளவிட முடியாது. உறுதியான நம்பிக்கை இருந்தால், எத்தகைய கடினமான காரியத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். இந்த உண்மையை வெறும் உலக வாழ்க்கையின் அனுபவங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது; அது ஆன்மீக அனுபவத்தின் மூலம் மட்டுமே உணரப்பட வேண்டியது.
எனவே, இறைவனின் திருநாமத்தை ஜபிப்பது மிகவும் புனிதமானதும் மகத்தான பலன் அளிப்பதுமாகும் என்பதை நாம் உணர வேண்டும். இறைநாம ஸ்மரணை மனத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி, தூய்மையான சிந்தனைகளையும் உயர்ந்த பண்புகளையும் வளர்க்கிறது. இறைநாம ஜபம் மனிதனை இறையருளின் பாதைக்கு அழைத்துச் சென்று, அவனது வாழ்க்கையை ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக மாற்றுகிறது.
தெய்வீக வாழ்வை நோக்கி மனிதனின் ஆன்மிகப் பயணம்
இன்று வெளிப்புற தோற்றத்தில் மனிதர்களாகத் தோன்றினாலும், அவர்களின் உள்ளார்ந்த மனப்போக்கில் பலர் மனிதத்தன்மையை விடத் தாழ்ந்த நிலையில் வாழ்கின்றனர். தானம், தியாகம், பிறர்நலம் என்ற உயரிய பண்புகள் இல்லாதவன் தானவன் (அசுரன்) எனப்படுகிறான். ஒவ்வொரு மனிதனிடமும் தேவ குணங்களும் தானவ குணங்களும் கலந்தே உள்ளன. ஆனால் இக்காலத்தில் தெய்வீக குணங்களை விட அசுர குணங்களே மேலோங்கி ஆட்சி செய்கின்றன.
அதனால்தான் மனிதன் தனது இயல்பான ஒளியையும், ஆற்றலையும், தெய்வீக மகிமையையும் இழந்திருக்கிறான். அவற்றை மீண்டும் பெற வேண்டுமென்றால், அவன் சாதனை மூலம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இடைவிடாத ஆன்மிக முயற்சியினால் மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் அருளிய அமிர்தத்தை பருகுவது இந்தப் பயணத்தின் முதல் படி மட்டுமே. அதுவே அனைத்தும் என்று எண்ணிவிடக் கூடாது. அதற்குப் பின் இரண்டாம் படியும், மூன்றாம் படியும் தொடர்ந்து ஏறி, ஆன்ம சாக்ஷாத்காரத்தை (தன்னறிவை) நோக்கி முன்னேற வேண்டும்.
சனாதன தர்மம் வகுத்துள்ள ஒழுக்க நெறிகளிலும், இவ்வுலகப் படைப்பின் அடிப்படையான பரம்பொருளிலும் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள். இவ்வுலகம் தரும் இன்பம் நிலையற்றது என்பதை உணருங்கள். இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
எனவே, இக்கணத்திலிருந்தே முயற்சியைத் தொடங்குங்கள். காலம் வேகமாக ஓடும் வெள்ளநீரைப் போல இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது. என்றும் குறையாத, என்றும் நிறைந்த ஆனந்தத்தை அடைவதற்காக பாடுபடுங்கள்.
உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள். துணிவுடனும், நேர்மையுடனும் வாழுங்கள்.
உண்மையான நிதர்சனம் என்னவென்றால், இந்த உடலென்னும் மரத்தில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகள் போன்றவை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகும். ஜீவாத்மா உலக அனுபவங்களின் இனிமையையும் துன்பத்தையும் அனுபவிக்கிறது; ஆனால் பரமாத்மா எதிலும் பற்றில்லாமல், அசையாமல், சாட்சியாக அனைத்தையும் அமைதியாகக் கண்டு கொண்டிருக்கிறது.
அந்த பரமாத்மாவுடன் ஒன்றிணைவதே மனிதப் பிறவியின் உயர்ந்த இலக்காகும்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.png)
.png)


