75ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழுத்தாளர் முருகபூபதி - செ .பாஸ்கரன்

 .




 75ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழுத்தாளர் முருகபூபதிஅவர்களை தமிழ்முரசு அவுஸ்ரேலியா வாழ்த்துகிறது. இலக்கிய பணிகளில் தன வாழ்நாளின் நீண்ட பகுதியை அர்ப்பணித்த ஒரு இலக்கிய மனிதனை வாழ்த்துவதில் ஆசிரியர் குழு மகிழ்ச்சி கொள்கிறது. நீண்ட காலமாக தமிழ்முரசு அவுஸ்ரேலியாவிற்கு எழுதிக்கொண்டிருக்கும் பூபதி அவர்கள் தொடர்ந்து நீண்டகாலம் வாழவேண்டும் எழுதவேண்டும். 

அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு !

 






























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 


 

வாடாத மல்லிகையாய் ஜானகி வந்தார்
வரமாக வந்தாரே தமிழிசைக்கு அம்மா
தேனான குரலாலே பாடினார் அம்மா
தித்திக்கப் பாடினார் ஜானகி அம்மா 

ஊனுருக்க பலபாடல் அவரெமக்குந் தந்தார்
உளம் இனிக்க உணர்வாக அவரீந்துநின்றார்
வாழ்வதனை இசையாக்கி வாழ்ந்தாரே அம்மா
வானவர்க்குப் பாடுதற்குச் சென்றுவிட்டார் அம்மா  

கலைவாணி குயிலாய் இருந்தாரே அம்மா
கான சரஸ்வதியாய் ஆகிநின்றார்  அம்மா
பலவிருதை பாராட்டைப் பெற்றாரே அம்மா
பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தாரே அம்மா

அஞ்சலிக்குறிப்பு: தன்னலம் கருதாத சிவராசா மாஸ்டர் ! இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அர்ப்பணிப்புமிக்க தோழர் !! முருகபூபதி

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து  முன்னாள் ஆசிரியரும்,  தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.

அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான  முதல் சந்திப்பும்,  அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது.

அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது.  அக்காலப்பகுதியில்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும்  பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.

ஆயுதம் ஏந்திய  இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி,  அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால்,  அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும்  அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு,  பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர்.

கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில்  அமைந்திருந்த சிறைகளில்  தடுத்து வைக்கப்பட்டனர்.

 

பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல்  நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது.

அக்காலப்பகுதியில்  இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  நாடெங்கும் சுவரொட்டிகளும்  ஒட்டப்பட்டு கூட்டங்களும் நடந்தன.

இந்த இயக்கம்  கொழும்பு மலே வீதியில் அப்போது அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையிலிருந்து தொடங்கியது.

தோழர் லீனஸ் திஸாநாயக்கா  இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

ஆசிரியர் சங்கத்தின் தலைவராக தோழர்  எச். என். பெர்னாண்டோ, செயலாளாராக  தோழர் சித்ரால் ஆகியார் இயங்கினர்.

இச்சங்கத்திலிருந்து, சிங்களத்தில் குரு ஹண்ட , தமிழில் ஆசிரியர் குரல் , ஆங்கிலத்தில்   Teachers Voice  ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன.

பெரிதும் பேணிக் காத்து நிற்போம் !


 










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெலபேண் .... அவுஸ்திரேலியா 




பிள்ளைப் பருவம் பெரும் பருவம்
உள்ளம் மலரும் உயர் பருவம்
கள்ளம் கபடம் உள் நுழையா
காப்பது நம் பெருங் கடனாகும்

தங்கச் சுரங்கம் அவர் மனது
தகரச் சுரங்கம் ஆக்கிடா  தீர் 
மண்ணை விண்ணை தொடும் நிலைக்கு
மாற்றி விடுங்கள் அவர் மனதை 

பேதமை தெரியா பெரு மனது
போதனை கேட்டிடும் நல் மனது
சூதும் வாதும் தொட எண்ணா
தூய்மை நிறைந்த பருவம் அது 

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் !


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




ஆடை  இன்றி  அவனியில்  பிறந்தோம்
ஆசை இன்றி பிறந்தவர் இல்லை
ஆசை என்னும் தொட்டிலில் அனைவரும்
ஆடி ஆடியே அவனியில் உழல்கிறோம் 

கருவில் தொடரும் ஆசை என்பது
பெருகிப் பெருகிப் பெருங்கடல் ஆகுது
பெருங்கடல் எழுகின்ற பேராசை அலைகள்
எழும்பிக் குதித்து சதிராட்டம் போடுது

மண்ணில் ஆசை பெண்ணில் ஆசை
மணி மகுடத்தைச்   சூடவும்   ஆசை 
எண்ணில் அடங்கா ஆசைகள் எழுந்து 
எம்மை இழுத்து இன்னற்குள் வீழ்த்துதே

பாராட்டு பழியானதே?

ட்டுரைகள் பல கண்டான்

          சிறந்த கட்டுரையாளன் என்றனர்

கதைகள் எத்தனையோ சமைத்தான்

          நல்ல கதாசிரியன் என்றனர்

கவிதைகள் எண்ணிலடங்கா படைத்ததால்

          கவிஞனானான் அவனும்

சித்திரங்கள் சிறப்பாய் தீட்டியதானை

          ஓவியனாய்  கொண்டாடினர்

விளையாட்டில் பல கோப்பை வென்று

          விளையாட்டு வீரனானான்

பலதொழிலும் செய்து தொழில்வல்லுனன்

          என்றும் பெயரெடுத்தான்

இத்தனை அவன் சிறப்பாய் செய்ய

          இப்படியெல்லாம் பாராட்டியவர்

ற்றவற்றை செய்தபோது மட்டமாய்

          ஏன் சொன்னார்கள் என்றான்

அப்படி நீ என்ன செய்தாய் மற்றோர்  

          அவதூறு செய்யவென்றேன்

மது பலவும் அருந்தி மகிழ்ந்திருந்தேன்

          பெருங்குடிகாரன் என்றனர் என்னை

போதைப் பொருட்களை நாடிச்சென்றேன்

          போதைக்கு அடிமை என பெயரிட்டனர்

ற்றபடி எதுவும் தவறாக செய்யவில்லை

         நான் என்றே சொன்னான் அவனும் 

உள்ளமும் உடலும் கெடும் வண்ணம்

          செய்யும் எதுவும் தவறென்றேன்

உள்ளதைத்தான் சொன்னார்கள் ன்றே

          உண்மையில் அமைதியானான்!

 

-சங்கர சுப்பிரமணியன்.

வல்லவன் ஒருவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

1962ம் வருடம் ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் புது விதமான ரசனைக்கு உள்ளானார்கள். அந்த வருடம் தான் முதலாவது ஜேம்ஸ் பாண்ட் படமான Dr No திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலையும் அள்ளியது. இப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் 007 ரகசிய உளவாளியாக நடித்த சீன் கனரி அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து மேலும் சில ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தொடர்ந்து நடித்தார். இத்தகைய படங்களின் தாக்கம் இந்திய திரையுலகிலும் , குறிப்பாக தமிழ் சினிமாவிலும் பரவத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாக 1966ல் வெளிவந்த படம் தான் வல்லவன் ஒருவன். 


 
நான்காண்டுகள் கழித்தே ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இத்தகைய

படம் ஒன்று உருவானது. காரணம் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் தமிழில் நடிப்பதற்கு தோதான நடிகர் ஒருவர் அதுவரை கிடைக்காததே ஆகும். ஜெய்சங்கர் நடிக்கத் தொடங்கி , இரு வல்லவர்கள் படத்தில் நடித்த பின்னரே அவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக மாற்றும் எண்ணம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் ராமசுந்தரத்துக்கு உருவானது. 26 வயது இளைஞனான , அழகனாக, துடிப்புடன் காணப்பட்ட ஜெய்சங்கரை முதன்மைப் படுத்தி வல்லவன் ஒருவன் திரைக்கு வந்தது. 

 ஆங்கிலப் படங்களில் ஜேம்ஸ் பாண்டுக்கு எவரையும் சுட, எவளுடனும் சரசமாட, எந்த நாட்டுக்கும் போக, எந்த வாகனத்தையும் செலுத்த நிரந்தர அனுமதி உண்டு. ஆனால் தமிழில் இந்த சுதந்திரம் சற்று மட்டுப்படுத்தப் பட்டது. குறிப்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க அழகிகளை வலையில் வீழ்த்துவது, அல்லது அவர்களின் வலையில் வீழ்ந்தது போல் நடிப்பது என்பன ஓர் எல்லைக்கு உட்பட்டே காண்பிக்கப்பட்டன. பாடல் காட்சிகள் மூலம் அவை ரசிகர்கள் மத்தியில் கடத்தப் பட்டன. 


இலங்கைச் செய்திகள்

 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; சிறைச்சாலை வளாகம் குற்ற பிரதேசமாக அறிவிப்பு

டெங்கு அபாயம்: அதிக ஆபத்துள்ள வலய பாடசாலை, பல்கலைகழகங்களை இரு வாரங்களுக்கு மூடுமாறு கோரிக்கை - வைத்தியர் சமல் சஞ்சீவ

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின் மூன்று பிரதான விமான நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்



நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; சிறைச்சாலை வளாகம் குற்ற பிரதேசமாக அறிவிப்பு

Published By: Vishnu

10 Jul, 2026 | 04:51 AM

(செ.சுபதர்ஷனி)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்ன சிறைச்சாலை வளாகம் கைதிகளை தடுத்து வைப்பதுக்கு ஏற்ற இடமில்லை எனவும், குறித்த சிறைச்சாலை குற்றப் பிரதேசமாக அடையளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு  தெரிவித்துள்ளது.  

கடந்த  5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை  அதிகாரிகள்  விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக் கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையளரும் ஊடகப் பேச்சாளருமான எ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் ; 90 இலக்குகள் குறிவைப்பு

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் தீவிரம்

சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டுவெடிப்பு

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம் ஜூன் மாதத்தில் 5,000 பேர் உயிரிழப்பு! 


ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் ; 90 இலக்குகள் குறிவைப்பு 

Published By: Digital Desk 3

09 Jul, 2026 | 01:48 PM

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு துறைமுக நகரமான சபஹார் மீது அமெரிக்கா இன்று சரமாரியான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான United States Central Command, இந்த நடவடிக்கையின் போது ஈரானின் சுமார் 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானின் கடல்சார் கட்டமைப்புகள் மற்றும் இராணுவ வசதிகளே தாக்குதலின் பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ashadana Navarathri - 15th July 2026- 23rd July 2026


 



தேகாபிமானத்திலிருந்து ஆத்மாபிமானத்திற்கு – உண்மையான சாதனையின் பாதை

 இந்த உடல் என்னும் ஆலயத்தில் இறைவன் உறைகிறார் என்ற புனிதமான உணர்வை எப்போதும் மனதில் நிலைநிறுத்துங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கே அர்ப்பணமாகும் என்ற எண்ணத்துடன் வாழுங்கள். இத்தகைய தெய்வீக உணர்வுகள் வளரும்போதுதான் உங்கள் உடலும், அந்தக்கரணம் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய உள் கருவிகள்) ஆகியவையும் புனிதமடையும்.

எனவே, தேகாபிமானத்தை (உடலின் மீது கொண்ட பற்றை) ஆத்மாபிமானமாக (ஆத்மாவின் மீது கொண்ட பற்றாக) மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே உண்மையான சாதனை. ஆத்மாபிமானம் உருவாகாமல் வேறு எந்த ஆன்மிக சாதனையையும் செய்தாலும் அதன் முழுப் பயனை அடைய முடியாது.

பலர், “நாங்கள் பஜனைகள் செய்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆத்மாபிமான நிலையை அடையும் வரையில் இத்தகைய அனைத்து ஆன்மிகப் பயிற்சிகளும் அவசியமானவையே. உயர்தர மாமரக் கன்றை நட்டால், சில காலத்திற்குப் பிறகு அது காய்களைத் தரும். ஆனால் அவை பழுக்காத வரை புளிப்பாகவே இருக்கும். நன்கு பழுத்த பிறகுதான் அவை இனிமையும் சுவையும் பெறுகின்றன.

அதுபோலவே, உங்கள் சாதனை முதிர்ச்சியடையும்போது ஆத்ம உணர்வு இயல்பாக மலர்கிறது. அந்த பாக்கியமான நிலையை அடையும் வரை, உங்கள் வாழ்க்கைக் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டே, உங்கள் உயர்ந்த இலக்கை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். “இந்த இலக்கை நான் அடைய வேண்டும்” என்ற நினைவை எப்போதும் மனதில் உயிர்ப்புடன் வைத்திருங்கள்.

படிப்படியாக உடலின் மீதுள்ள பற்றைக் குறைத்து, ஆத்மாவின் மீது பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நிலையான, அழியாத ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். சத்தியமும் ஞானமும் நிறைந்த இந்தப் பாதையில் உறுதியாக முன்னேறி, தெய்வீக ஆனந்தத்தில் முழுமையாக மூழ்கி வாழுங்கள்.

அன்பே இறைவன் – ஆத்மானந்தத்தை அடையும் வழி

 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் பெறும் கல்வி பெரும்பாலும் தகவல்களைச் சேகரிப்பதற்கே உதவுகிறது. வெறும் புத்தக அறிவு மட்டுமே வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடையப் போதுமானதல்ல. உண்மையில் வளர வேண்டியது அன்பின் விரிவாக்கமே.

உங்கள் எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையான இதயமுள்ளவர்களே இறைவனை உணர முடியும். வெறும் அறிவாற்றலாலும், தர்க்கத்தாலும், புத்திக்கூர்மையாலும் இறைவனை அறிய முடியாது. தூய எண்ணங்களே தூய வாழ்க்கையின் அடையாளமாகும்.

அன்பே இறைவன். அன்பைத் தவிர இறைவனுக்கு வேறு எந்த வடிவமும் இல்லை. எனவே, உங்கள் இதயத்தின் ஆழத்தில் அன்பு என்னும் தெய்வீகக் கொள்கையை நிலைநிறுத்துங்கள். அன்பே உங்கள் உயிர்மூச்சு. அன்பு மட்டுமே இருந்தால் போதும்; அது அனைத்தையும் புனிதப்படுத்தும்.

அன்பு எல்லோரையும் கரையேற்றும். அது துன்பங்களையும், கஷ்டங்களையும், வேதனைகளையும், மனவேதனைகளையும் அகற்றும். அன்பே அமுத வடிவமானது.

நீங்கள் அமிர்தபுத்திரர்கள் (அழியாத ஆன்மாவின் பிள்ளைகள்); அநிர்தபுத்திரர்கள் (பொய்மையின் பிள்ளைகள்) அல்ல. உங்களைப் பொய்மையின் பிள்ளைகளாக எண்ணி பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள். “நான் அமிர்தபுத்திரன்; அழியாத ஆத்மாவின் பிள்ளை” என்ற உறுதியான உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அப்போது உங்கள் இதயத்தில் அன்பு என்னும் மரம் செழித்து வளர்ந்து, ஆத்மானந்தம் என்னும் இனிய கனியை அளிக்கும்.

உடலின் மீது அளவுக்கு மீறிய பற்றுக் கொள்ளாதீர்கள். தேகாபிமானத்தை முற்றிலும் நீக்குங்கள். உங்கள் உண்மையான இயல்பான ஆத்ம தத்துவத்தை உணர்ந்து வாழுங்கள். அதுவே மனித வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளும், நிலையான ஆனந்தத்தை அடையும் நிச்சயமான பாதையும் ஆகும்.

உரிமைகளுக்கு அடித்தளம் கடமைகளே

 இன்றைய கல்வியறிவு பெற்ற மனிதன், தனது உரிமைகளுக்காக போராடுகிறான்; ஆனால் அவற்றுடன் இணைந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. கடமைகளைப் புறக்கணிப்பவன், இறுதியில் தனது உரிமைகளையும் இழக்க நேரிடும். உரிமைகளும் கடமைகளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்தவை. அவற்றை இணைத்து நிறுத்தும் பாலம் அன்பே.

ஆன்மிகப் பாதையில் செல்லும் பலரும் ஆனந்தத்தையும், அமைதியையும், மனநிறைவையும் விரும்புகிறார்கள். ஆனால் அவற்றை எவ்வாறு பெறுவது என்பதை உணர்ந்து அதற்கேற்ப முயற்சி செய்வதில்லை. இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இல்லை; பக்தியை வளர்த்துக் கொள்ளவும் விரும்புவதில்லை. இருந்தபோதிலும், இறைவன் தமக்குச் சாந்தியையும் தெய்வீக ஆனந்தத்தையும் அருள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நமக்கு அமைதி வேண்டுமானால், அமைதியை வளர்க்கும் வழியில் நம் வாழ்க்கையை நடத்த வேண்டும். தீய செயல்களிலும், அதர்மமான வழிகளிலும் ஈடுபடும் ஒருவர் எவ்வாறு அமைதியையும், சத்தியத்தையும், ஆனந்தத்தையும் பெற முடியும்?

மாம்பழத்தை உண்டுவிட்டு, சுரைக்காயின் ஏப்பம் வருமா? எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ, அதற்கேற்பவே பலன்களும் அமையும். நம் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறதோ, அதற்கேற்பவே இறைவனின் அருளும் வெளிப்படும்.

எனவே, நமது நோக்கங்கள் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். நமது செயல்கள் தர்மத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். தூய எண்ணங்களுடனும் நீதிநெறி நிறைந்த செயல்களுடனும் வாழும்போதுதான், அமைதி, ஆனந்தம் மற்றும் இறையருள் இயல்பாக நம் வாழ்க்கையில் மலரும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தெய்வீக இனிமையை உணருங்கள்

 கோதுமை மாவிலோ அல்லது அரிசி மாவிலோ சர்க்கரையைக் கலந்து இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்தால், அவற்றைச் சுவைக்கும்போது இனிமை உணரப்படுகிறது. கோதுமையிலோ அரிசியிலோ இயல்பாக இனிப்புச் சுவை இல்லை. ஆனால், அவற்றுடன் கலந்துள்ள சர்க்கரையே அந்த இனிமையை அளிக்கிறது.

அதுபோலவே, உயிரற்ற பொருளாகத் தோன்றினாலும், அதனுள்ளும் விஷ்ணுத்துவம் – அதாவது எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகத் தத்துவம் – இருப்பதாக நாம் உணர்ந்து தியானித்தால், அந்தப் பொருள்கூட தெய்வீக இனிமை நிறைந்ததாக நமக்குத் தோன்றும்.

நாம் தயாரித்து உண்ணும் இனிப்புப் பலகாரங்கள் பல்வேறு வடிவங்களிலும், பெயர்களிலும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்திலும் பொதுவாக இருப்பது சர்க்கரை என்ற ஒரே பொருள்தான். அதுவே அவற்றிற்கு இனிமையை அளிக்கிறது.

அதேபோல், இந்த உலகில் எண்ணற்ற மனிதர்கள் பலவிதமான உருவங்களுடனும் பெயர்களுடனும் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரிலும் பொதுவாக நிறைந்திருப்பது விஷ்ணுத்துவம், அதாவது எங்கும் வியாபித்திருக்கும் ஆத்ம தத்துவமே ஆகும்.

இந்த ஆத்ம தத்துவமே மனிதர்களிடையே அன்பை வளர்க்கிறது. பலவிதமான உறவுகளும், பாசப் பிணைப்புகளும் உருவாகக் காரணமாக இருப்பதும் இதுவே. எனவே, எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் இந்த தெய்வீக வியாபகத்தின் இனிமையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்த உண்மையை நீங்கள் உங்கள் சொந்த ஆன்மிக முயற்சியின் மூலம் உணரலாம். அல்லது பெரியோர்களின் உபதேசங்களைக் கேட்டு அறியலாம். மேலும், மகான்களின் தரிசனம், ஸ்பரிசம், சம்பாஷணம் – அதாவது அவர்களைக் காணுதல், அவர்களின் புனிதத் தொடுதலைப் பெறுதல், அவர்களுடைய அருளுரைகளைக் கேட்பது – இவற்றின் மூலமும் இந்த தெய்வீக அனுபவத்தைப் பெறலாம்.

இவ்வாறு எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் ஒரே ஆத்ம தத்துவத்தை உணரும்போது, வேற்றுமை மறைந்து ஒற்றுமை மலர்கிறது; அந்த ஒற்றுமையில்தான் அன்பும், அமைதியும், தெய்வீக ஆனந்தமும் இயல்பாக வெளிப்படுகின்றன.

இறைவனின் சோதனைகள் நம்மை உயர்த்துவதற்கே

 வாழ்க்கையில் துன்பங்களும் சோதனைகளும் வரும்போது, “இறைவன் என்னை ஏன் இவ்வளவு சோதிக்கிறார்?” என்று வருந்தாதீர்கள். சோதிக்கப்படும்போதுதான் நமது உண்மையான நிலையை நாமே அறிந்து கொள்ள முடியும். நமது பலம் எது, பலவீனம் எது என்பது தெளிவாகும்.

அப்போது எதில் நாம் குறைவாக இருக்கிறோமோ, அதில் கூடுதல் கவனம் செலுத்தி, நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் அதே சோதனை மீண்டும் வரும்போது, அதில் வெற்றி பெறும் தகுதியையும் நாம் பெறுவோம்.

சிலர் வருத்தத்துடன் கூறுகிறார்கள்: “‘தரிசனம் பாபநாசனம்’ என்று சொல்கிறார்கள். நான் ஒருமுறை அல்ல, பலமுறை இறைவனின் தரிசனம் பெற்றிருக்கிறேன். இருந்தும் என் துன்பங்கள் நீங்கவில்லை; மாறாக முன்பைவிட அதிகமாகவே கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.”

அது உண்மைதான். அவர்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதோடு மட்டுமல்ல; அங்கிருந்து அவர்கள் பிரேமை (அன்பு), ஸ்ரத்தா (உறுதியான நம்பிக்கை), பக்தி, சத்சங்கம் (நல்லோர் சேர்க்கை), சர்வேஸ்வர சிந்தனை (எப்போதும் இறைவனை நினைத்தல்), நாமஸ்மரணம் (இறைநாம ஜபம்) போன்ற உயர்ந்த விதைகளையும் பெற்றுச் செல்கிறார்கள். அவற்றை எவ்வாறு வளர்ப்பது, நிலத்தை எவ்வாறு தயாரிப்பது என்ற ஆன்மிக வேளாண்மையின் கலையையும் கற்றுக் கொள்கிறார்கள்.

இப்போது அவர்கள் அந்த விதைகளை, மனமாசுகள் நீங்கி தூய்மையடைந்த இதயம் என்னும் நன்கு உழுத வயலில் விதைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் புதிய பயிர் விளைந்து அறுவடையாகும் வரை, முன்பு சேமித்து வைத்திருந்த பழைய தானியத்தையே உண்ண வேண்டியிருக்கும்.

அதுபோல, இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்களும், கவலைகளும், வேதனைகளும் கடந்த காலச் செயல்களின் அறுவடையாகும். புதியதாக விதைக்கப்பட்ட நற்செயல்களின் பலன் வெளிப்படுவதற்கு காலம் தேவை.

எனவே, துன்பங்களைக் கண்டு மனம் தளராதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். அன்பு, பக்தி, நம்பிக்கை, இறைநினைவு ஆகிய தெய்வீக விதைகளை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருங்கள். உரிய காலத்தில் அவை நிச்சயமாக அமைதி, ஆனந்தம் மற்றும் இறையருள் என்னும் செழிப்பான அறுவடையை உங்கள் வாழ்க்கையில் அளிக்கும்.

அமைதியின் உண்மையான இருப்பிடம்

 பலர் மனவேதனையுடன் என்னிடம் வந்து, “ஸ்வாமி! எனக்கு மன அமைதி இல்லை. தயவுசெய்து அமைதியை அருளுங்கள்” என்று வேண்டுகிறார்கள். ஆனால் அமைதியை வெளி உலகிலிருந்து பெற முடியாது. அது மனிதனின் சொந்த இதயத்திலேயே தேடப்பட வேண்டியது.

தீய ஆசைகள் துன்பத்தை உருவாக்குகின்றன; நன்மை பயக்கும் உயர்ந்த ஆசைகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால் ஆசைகள் முற்றிலும் நீங்கும்போதுதான் நிலையான அமைதி பிறக்கிறது. ஆசைக்கு மேல் ஆசை மனத்தில் பெருகிக்கொண்டே இருக்கும்போது, அமைதி எவ்வாறு நிலைக்கும்?

பஜனையும் தியானமும் முடிந்தபின், உடலுக்கும், மனத்திற்கும், ஆன்மாவிற்கும் அமைதி வேண்டி “சாந்தி, சாந்தி, சாந்தி” என்று மூன்று முறை உச்சரிக்கிறோம். ஆனால் உண்மையான சாந்தி, அனைத்து உயிர்களிலும் ஒரே ஆத்மாவே நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால்தான் கிடைக்கும்.

ஒரே ஒரு மாம்பழக் கொட்டை விதைக்கப்படுகிறது. அது ஒரு மரமாக வளர்ந்து ஆயிரக்கணக்கான பழங்களைத் தருகிறது. அந்த ஒவ்வொரு பழத்திலும் மீண்டும் ஒரு விதை இருக்கிறது. அதுபோலவே, ஒரே ஆத்மா அனைத்து உயிர்களிலும் நிறைந்திருக்கிறது.

இறைவனே அந்த ஒரே விதை. அவரே எண்ணற்ற உயிர்களாக வெளிப்பட்டிருக்கிறார். அதனால்தான் இறைவன், “ஏகோஹம் பஹுஷ்யாம்”“நான் ஒருவனாக இருக்கிறேன்; பலராக வெளிப்படுவேன்” என்று அறிவித்தார்.

இந்த உண்மையை அறியாமையால் மனிதன் வேற்றுமைகளையும் பிரிவினைகளையும் உருவாக்குகிறான். அந்த அறியாமையிலிருந்தே பயம் தோன்றுகிறது; பயம் தோன்றும் இடத்தில் அமைதி நிலைக்க முடியாது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நம்பாமல், சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்க்கும்போது, உலகில் எவ்வாறு அமைதி நிலவும்? அனைவரிலும் ஒரே தெய்வீக ஆத்மா உறைகிறது என்ற உண்மையை உணரும்போதுதான் அன்பும் நம்பிக்கையும் வளர்கின்றன; அன்பும் நம்பிக்கையும் மலருமிடத்தில்தான் உண்மையான அமைதி நிரந்தரமாக நிலைத்திருக்கும்.   

இதயத்தை இறைவனின் பிரதிபலிப்பாக மாற்றுவோம்

 ஒரு புகழ்பெற்ற ஓவியர் ஒருமுறை ஒரு இளவரசரைச் சந்தித்து, அரண்மனையின் சுவரில் அழகிய சுவரோவியம் (Fresco) ஒன்றை வரைய அனுமதி கேட்டார். அவருக்குப் பின்னால் வந்த மற்றொரு ஓவியர், "முதல் ஓவியர் எந்த ஓவியத்தை வரைந்தாலும், அதற்கு நேரெதிரே உள்ள சுவரில் அதே ஓவியத்தை நான் உருவாக்குவேன். நடுவில் திரை மறைத்திருந்தாலும், அவர் என்ன வரைந்தார் என்பதை நான் அறியாமலேயே அதைச் செய்வேன்," என்று உறுதியளித்தார்.

இளவரசர் இருவரின் திறமையையும் சோதிக்க விரும்பி, அவர்கள் கேட்டபடி பணியை ஒப்படைத்தார். இரு சுவர்களுக்கும் இடையில் தடிமனான ஒரு திரை தொங்கவிடப்பட்டது. முதல் ஓவியர் மிகுந்த உழைப்புடன் தனது ஓவியத்தை வரைந்தார். அதே நேரத்தில், இரண்டாவது ஓவியரும் தனது பணி முடிந்துவிட்டதாக அறிவித்தார்.

பின்னர் இளவரசர் அந்த மண்டபத்திற்கு வந்தார். முதலில் முதல் ஓவியரின் சுவரோவியத்தைப் பார்த்து, அதன் அழகைக் கண்டு மிகவும் வியந்தார். அதன் பிறகு திரையை அகற்றும்படி கட்டளையிட்டார்.

திரை அகற்றப்பட்டவுடன், அனைவரும் அதிசயித்தனர். எதிரே இருந்த சுவரில், முதல் ஓவியரின் படைப்பைப் போலவே அப்படியே பிரதிபலிக்கும் ஒரு ஓவியம் காணப்பட்டது. அது உண்மையில் வரையப்பட்ட ஓவியம் அல்ல. இரண்டாவது ஓவியர் செய்தது ஒன்றே ஒன்று—அந்தச் சுவரை மிகுந்த பொறுமையுடனும் திறமையுடனும் மெருகேற்றி, அது ஒரு பெரிய கண்ணாடியைப் போல பிரதிபலிக்கும் வகையில் மாற்றியிருந்தார்.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான ஆன்மீகப் பாடத்தை எடுத்துரைக்கிறது. நமது இதயங்களும் அந்த மெருகூட்டப்பட்ட சுவரைப் போலத் தூய்மையாகவும், பரிசுத்தமாகவும், மாசற்றதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இறைவனின் மகிமை நம் இதயத்தில் முழுமையாக பிரதிபலிக்கும். நமது உள்ளத்தில் இறைவன் தமது சொந்த உருவத்தையே காணும் அளவிற்கு, நம் மனதைத் தூய்மைப்படுத்தி, அன்பு, கருணை, பணிவு மற்றும் பரிசுத்தம் நிறைந்ததாக மாற்றுவதே உண்மையான ஆன்மீக வாழ்வின் இலக்காகும்.