கொண்டாடி மகிழ்வோம் நன்றியை நவில்வோம் ! 


 

























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்  ….. அவுஸ்திரேலியா 





உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
ஓய்வாய் உறங்க உதவும் கட்டிலும்
ஒவ்வொரு நாளும் உதவும் பொருட்களும்
உழைப்பவர் உழைப்பின்  உன்னத மாகும் 

எண்ணெய் நிலக்கரி எல்லாம் உழைப்பே 
எல்லோர் விரும்பும் தங்கம் உழைப்பே
மண்ணுள் கிடக்கும் மாயங்கள் அனைத்தையும்
பயனுடை ஆக்கிடும் பக்குவம் உழைப்பே

பாலை நிலத்தைப் பசுமை ஆக்கி
பாறையைப் பிளந்து பற்பல செய்து
ஆழக் கடலினுள் முத்தை எடுத்து
அளவிலா அனைத்தும் செய்வது உழைப்பே

நிமலனுமே பார்த்திடுவான் !


 


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்  ….. அவுஸ்திரேலியா 






கோவிலுக்குச் செல்லுகின்றோம் 
குறைகளைய வேண்டுகின்றோம்
வீடு திரும்புகிறோம்
மீண்டும்குறை செய்கின்றோம்
ஆண்டவனும் பார்ப்பான்
அசையாமல் இருந்திடுவான்
அழுக்கேற்றி அழுக்கேற்றி
அனுதினமும் இருக்கின்றோம்

அகந்தையும் ஆணவமும் 
அகநிறைய அமர்கிறது
ஆசையோ கடலாக
ஆகியே இருக்கிறது 
இருக்கின்ற பற்றுக்கள்
இறுக்கியே நிற்கிறது
எப்பத்தான் குறைகள்
எமைவிட்டு அகன்றிடுமோ  ? 

நிறைகுடங்கள் தழும்பாது
நீண்டதூரம் சென்றாலும்
குறைகுடங்கள் தழும்பிவிடும்
குடந்தூக்கி நின்றவுடன்
நிறைகுடமாய் இருந்திடுவார்
நிமலனையே கண்டிடுவார்
குறைகுடமாய் இருப்பார்கள்
கடுமிருளில் மூழ்கிடுவார்

கவிதை..."அதுவா?... இதுவா?..."... மெல்போர்ன் அறவேந்தன்


 










இலங்கைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!

ஊர்காவற்துறை பகுதியில் கடும் வெப்பத்தினால் மாடுகள் பாதிப்பு

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்!

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; அர்ச்சுனா எம்.பிக்கு பிணை

 110 கோடி போதைப்பொருள் விவகாரம்: கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை ஆலயத்திற்கு வழங்குமாறு கோரி தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு...!


செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!

01 May, 2026 | 12:40 PM

(யாழ் செய்தியாளர்) 

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (மே 01) மேதினம் மற்றும் முழு பூரணை தினம் என்பதால் அகழ்வுப் பணிகளை அரை நாள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு, பணிகள் இடம்பெறுகின்றன.

நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு ஒரு பதின்ம வயதுடைய ஒருவருடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு: கைதான இளைஞரின் திடுக்கிடும் பின்னணி வெளியானது !

ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் ; கருங்கடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தல்

ஜேர்மனிலிருந்து 5 ஆயிரம் இராணுவ வீரர்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா

மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றம்: இராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு!

காசாவில் 14 கிலோமீற்றர் நீளமான ஹமாஸின் நிலத்தடி சுரங்கப்பாதைகள் அழிப்பு - இஸ்ரேல்



அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு: கைதான இளைஞரின் திடுக்கிடும் பின்னணி வெளியானது !

Published By: Digital Desk 3

27 Apr, 2026 | 10:18 AM

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை  நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி மற்றும் மென்பொருள் உருவாக்குநர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனத் தரவுகளின்படி, ஆலன் ஒரு சாதாரணத் தாக்குதல்தாரியாகத் தெரியவில்லை. 

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இயந்திரவியல் பொறியியலில் இளநிலைப் பட்டமும், கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

"ததிங்கிணதோம்" - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில்  குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.

 "அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே! விட்டுத் துலை."

 நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாக தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடூழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட. வந்த களை ஆறமுன் அந்தக் குருவி நாரசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம் - சர்வநாசம். பயத்தின் விதை நெஞ்சுக்கூட்டுக்குள் விழ நெஞ்சு அடைப்பது போல திணறியது.

 "தம்பி! தம்பி!! பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? சுடலைக்குருவி ஒண்டு கத்திக்கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா உலாத்துது" என்று அந்தரப்பட்டார். மருமகள் சுமதி வெளியே எட்டிப் பார்த்து தலையிலே கையை வைத்தாள். மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.

 "மாமா, இஞ்சாலை 'ஹாவ் எ கிலோமீற்றர்' பக்கமாப் போனா 'புறுவேவா' எண்டொரு 'சிமெற்றி' இருக்கு. உங்கை பாருங்கோ… பாருங்கோ… ஒரு தாய் இரண்டு பிள்ளையளை அணைச்சுக் கொண்டிருக்கிற மாதிரித் தெரியுதல்லே, அதுதான் 'மிசன்பேய்'(Mission Bay)"

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர் - 5…..சங்கர சுப்பிரமணியன்.

ஷிண்டோ வழிவந்த கோவில்களில் நுழைவதற்கு முன் அலங்கார வளைவுபோல் இருக்கும் ஒரு அமைப்பே டோரி கேட் ஆகும். இதன் அமைப்பில் செங்குத்தாக இடைவெளியிட்டு அமைக்கப் பட்டிருக்கும் இருதூண்கள் இருக்கும். அவற்றை இணைக்கும் வண்ணம் அவற்றின் மேல் இரண்டு விட்டங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டு அலங்கார வளைவு போல் இருக்கும்.

இவற்றை பொதுவாக மரம் மற்றும் கல்லில் அமைத்தாலும் இப்போது வெங்கலம், எஃகு, காங்ங்ரீட் மற்றும் மரப்பிசின் போன்றவற்றாலும் இதை அமைக்கிறார்கள். இதன் நிறம் சிவப்பு மற்றும் காவி நிறத்தில் இருக்கும்.

இரு தூண்களும் விட்டங்களோடு இணையுமிடம் அடிப்புறத்தை விட மேற்புற இடைவெளி சற்று குறைவாக தூண்கள் உட்புறம் சாய்ந்தபடி தோற்றமளிக்கும். தூண்களில் இணக்கப் பட்ட இரு விட்டங்களும் நேராக அல்லது மேலுள்ள விட்டம் மேல்நோக்கி இரு ஓரங்களிலும் சற்று வளைந்தும் காணப்படும். மேலும் இந்த டோரி கேட் எனப்படுபவை பல அமைப்புக்களில் காணப்படுகின்றன.

இப்படி வேறுபட்ட அமைப்புக்களுக்கு காரணம் கோவிலுள்ள கடவுள்,

கோவிலின் பாரம்பரியம், அக்கோவில் அமந்துள்ள இடத்தின் செல்வாக்கு மற்றும் வரலாற்று பரிமாணம் போன்றவைகளாகும். இந்த டோரி கேட்டின் முதன்மை நிலைப்பாடு டோரி கேட்டிற்கு வெளிப்புறத்தையும் மற்றும் அதைக்கடந்த உட்புறத்தையும் வேறுபடுத்துவதாகும்.

அப்படியென்ன அந்த நுழைவு வாயிலின் உட்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் உள்ள வேறுபாடு என்கிறீர்களா? டோரி கேட்டைத் தாண்டும் முன் உள்ள நிலம் சாதாரண மனிதர்கள் இருக்கும் நிலமென்றும் டோரி கேட்டைக் கடந்ததும் அது கடவுள் வாழும் புனித நிலமென்றும் கருதப் படுகிறது. அதனால் மதநம்பிக்கை கொண்டவர்கள் டோரி கேட்டை கடக்கும் முன் உடலை முன் நோக்கி வளைத்து குனிந்தபடி சென்று மரியாதை செய்து டோரி கேட்டைக் கடந்ததும் நிமிர்கிறார்கள்.

இது கடவுளுக்கு செய்யும் பணிவான மரியாதையாகும். ஆனால் இதை அங்கு வரும் பயணிகள் யாரும் கடைப் பிடிப்பதில்லை. எல்லா ஜப்பானியர்களும் அவ்வாறு செய்து நான் பார்த்ததில்லை. இது அவரவர் மனதைப் பொருத்தது என்பதால் கட்டாயம் இல்லை என்பது தெரிகிறது. இன்னும் ஒன்றையும் நான் குறிப்பிட வேண்டும்.

இந்த டோரி கேட் என்று சொல்லப்படும் கோவில் வாசல் அல்லது புனித வாசலை ஜப்பானிலுள்ள எல்லா ஜிண்டோ மதக் கோவில்களிலும் காணலாம். இதைத் தவிர இவற்றை ஜப்பானிலுள்ள புத்த கோவில்களிலும் காணலாம். இதற்குக் காரணம் வணிகம், குடிபெயர்தல் மற்றும் போரின் வெற்றி போன்றவற்றால் மக்கள் இணையும்போது பண்பாட்டுத் தொடர்பும் உண்டாகிறது.

யார் நீ? - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

தமிழில் மர்மம், திகில், கொலை இவற்றை அடிப்படையாக கொண்டு வெளிவரும் படங்கள் குறைவு. அப்படியே வந்தாலும் அப் படங்கள் பெரியளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனால் விதி விலக்காக 1966 ல் ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றது . அந்தப் படம்தான் யார் நீ! 


புது நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாகி , பின்னர் அரசியலிலும் நுழைந்து தமிழக முதல்வராகி சாதனை புரிந்த ஜெயலலிதா தான் யார் நீ என்று எல்லோரையும் கேட்க வைத்தவர்! 


கொட்டும் மழை , நள்ளிரவு, நாடு ரோட்டில் வெண்ணிற ஆடை அணிந்து ஓர் இளம் நங்கை இளம் டாக்டர் ஒருவரின் காரை நிறுத்தி லிப்ட் கேட்கிறாள். அவள் செல்லும் இடமோ சுடுகாடு. அவள் விரலில் வழிவது இரத்தம், அவள் காரில் ஏறியவுடன் நின்று விடுகிறது கார் வைப்பர் . காரில் இருந்து அவள் இறங்கி நடக்கும் போது சுடுகாட்டின் கேட் தானாக திறந்து வழி விடுகிறது. 

இவற்றை பார்த்து விழி விரியும் டாக்டர் தன் அனுபவத்தை தன்னுடைய காதலியிடம் சொல்கிறான். ஒரு நாள் இரவு காதலியை அவள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இறக்கி விட்டு அவள் மாடியில் தன்னுடைய அப்பார்ட்மென்டுக்கு சென்று கையசைக்கும் காத்திருக்கிறான். ஆனால் கால தாமதமாகவே சென்று பார்க்க லிப்ட்டினுள் அவள் மாண்டு கிடக்கிறாள். 

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் தாயின் வற்புறுத்தலுக்கு சம்மதித்து ஒருத்திக்கு அவள் முகம் கூட பாராமல் தாலி கட்டுகிறான் . ஆ இது என்ன அநியாயம் , சுடுகாட்டுக்கு போக நள்ளிரவில் லிப்ட் கேட்டவள் அவனின் மனைவியாக அவன் முன் அமர்ந்திருக்கிறாள் . யார் நீ என்று அலறுகிறது அவன் மனம்! 

புத்தரின் கருணை மற்றும் ஒன்றுபாட்டு போதனை

 புத்தர், நாம் கோபம் கொள்ளக்கூடாது, பிறரின் குறைகளைத் தேடக்கூடாது, மற்றவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது என்று போதித்தார். ஏனெனில், அனைவரும் பரிசுத்தமான, நித்தியமான ஆத்ம தத்துவத்தின் வெளிப்பாடுகளாக இருக்கிறார்கள். ஏழைகளிடம் கருணையுடன் நடந்து, இயன்றவரை அவர்களுக்கு உதவ வேண்டும்.

உணவு இல்லாதவர்களையே நீங்கள் ஏழைகள் என்று நினைக்கிறீர்கள். பணம் அல்லது உணவு இல்லாதவரை மட்டும் ஏழை என்று சொல்ல முடியாது. உண்மையில் பார்த்தால், யாரும் ஏழைகள் அல்லர்; அனைவரும் செல்வந்தர்களே. நீங்கள் ஏழைகள் என்று கருதுகிறவர்களுக்கு பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனைவரும் இதயம் என்ற செல்வத்தால் நிரம்பியவர்களே.

இந்த அடிப்படையான ஒன்றுபாடு மற்றும் தெய்வீகத்தைக் கவனித்து மதியுங்கள்; அப்போது நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். “இவர் என் நண்பர்”, “இவர் என் பகைவர்”, “இவர் என் உறவினர்” போன்ற குறுகிய எண்ணங்களை வைத்திருக்க வேண்டாம். அனைவரும் ஒன்றே; எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் முதன்மை கடமையாகும்.

இதுவே புத்தரின் மிக முக்கியமான போதனையாகும்.

நல்லொழுக்கமும் கடமையும் – மனித வாழ்வின் அடித்தளம்

 ஒரு கூர்மையான கத்தியைத் தீட்டுவதற்கு அரைக்கல் பயன்படுத்தப்படுகிறது; கல்லை மென்மையாக்குவதற்காக அல்ல. அதுபோல, மனிதனின் இயல்பை மேம்படுத்த நல்ல குணங்கள் வளர்க்கப்பட வேண்டும். உடலின் ஒவ்வொரு உறுப்பும் அதன் முழுமையான நலனுக்குத் தேவையானதுபோல, நல்ல குணங்களும் வாழ்க்கையின் முழுமையான நலனுக்குத் தேவையானவை.

மனிதப் பிறவி உயர்ந்த வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். நல்ல குணங்களே நல்ல வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. ஆனால் நல்ல வாழ்க்கைக்குக் கூட ஒரு விலை செலுத்த வேண்டியுள்ளது. அந்த விலை நல்ல நடத்தை ஆகும். அதாவது, நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்தால்தான் நல்ல வாழ்க்கையால் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

இன்பங்கள் இரண்டு வகைப்படும்: தற்காலிகமானவை மற்றும் நிலையானவை. நிலையான சந்தோஷம் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே கிடைக்கும். முதலில் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; பின்னர் அதன் பலனை அனுபவிக்குங்கள். இன்று, மக்கள் தங்கள் கடமைகளைச் செய்யாமல், அதன் பலனை அனுபவிக்க விரும்புகின்றனர். இது அவர்களுக்கு உண்மையான சந்தோஷத்தை அளிக்காது.

ஒவ்வொருவரும் தமக்கு பல கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே பிறப்பு கிடைத்துள்ளது என்பதை உணர வேண்டும்; செய்திடாத சேவைகளுக்கான பலனை அனுபவிப்பதற்காக அல்ல. மனிதன் தமக்குரிய உரிமைகள் உள்ளன என்று நினைக்காமல், தன் கடமைகளைச் செய்வதே தனது பங்கு என்பதை உணர வேண்டும். அவன் தனது கடமைகளைச் செய்தால், அதற்கான பலனை அவன் சரியான நேரத்தில் நிச்சயமாகப் பெறுவான்.

அன்பே இறைவன் – பிரேமையின் தத்துவம்

 இறைவன் பிரேமஸ்வரூபன் (அன்பின் உருவம்); இறைவன் ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளான். ஆகவே, ஒவ்வொரு வாழ்க்கையின் கனியும் அந்தப் பிரேமையின் இனிமையால் நிரம்பியுள்ளது. இனிமையான கனிக்கு ஒரு கசப்பான தோல் இருப்பது போல, அந்த தோல் உள்ளேயுள்ள சாறின் இனிமையை மறைப்பது போலவே, பொறாமை, அகங்காரம், வெறுப்பு, தீய எண்ணம், பேராசை, காமம், ஆடம்பரம் ஆகிய கசப்பான குணங்கள் உள்ளார்ந்த அன்பின் இனிமையை வெளிப்பட விடாமல் தடுக்கின்றன.

தேசியம், நிறம், மதம் அல்லது சமூக நிலை போன்ற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொருவருக்கும் அந்தப் பிரேமையை அனுபவிக்கும் உரிமை உண்டு. இறைவனும் அவருடைய அன்பும் ஒவ்வொரு அணுவிலும் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, யாரைத் தள்ளி வைக்க முடியும்? “ஈசாவாஸ்யமிதம் சர்வம்” – இவ்வையகம் அனைத்தும் இறைவனே; அனைத்தும் அன்பே.

இந்த மகத்தான உண்மையை வெளிப்படுத்த வியாசர் ஏற்ற விளக்குகள் இன்று மங்கியுள்ளன; அந்த விளக்கிற்கு எண்ணெய் ஊற்ற யாரும் முன்வரவில்லை. அனைவரும் பொய்யான இலக்குகளையும் நிலையற்ற இன்பங்களையும் பின்தொடருகின்றனர்.

வியாசர் மகாபாரதத்தில் தர்மத்தை (நீதியை), பகவதத்தில் பக்தியை, பதினெட்டு புராணங்களில் சாந்தியையும் பிரேமையையும் போதித்தார். மேலும், பிரம்ம சூத்திரத்தில் “அறிவு, அறிந்தவன், அறியப்படுவது” என்ற தத்துவத்தை விளக்கினார். பிறருக்கு தீங்கு செய்வதே பாவத்தின் விதை என்றும், பிறருக்கு சேவை செய்வதே புண்ணியத்தின் விதை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுவே பிரேமையின் எளிய மற்றும் தூய போதனையாகும்.

மன உறுதி, விவேகம் மற்றும் சிந்தனையின் தூய்மை

 மனதில் எடுக்கப்படும் ஒரு உறுதி, ஒரு ஏரியில் வீசப்படும் கல் போன்றது. அது அலைகளை உருவாக்கி, நீரின் முழு மேற்பரப்பையும் பாதித்து அதன் அமைதியைக் குலைக்கிறது. அதுபோலவே, நல்ல சங்கல்பம் (உறுதி) தொடர்ச்சியான சிந்தனைகளின் ஓட்டத்தை உருவாக்குகிறது; ஒவ்வொரு சிந்தனையும் தன் பங்காக மனதின் தூய்மையையும் வலிமையையும் வளர்க்கிறது.

பாரதிய கலாசாரம் சங்கல்பத்தின் தூய்மையை மிக முக்கியமாக வலியுறுத்துகிறது. ஏனெனில், கையில் இருக்கும் மணமுள்ள மலர் போல, அது பிறரிலும் அதன் நற்செயல் தாக்கத்தை பரப்புகிறது; அதன் வழியாக சமூகத்திலும், சமூகத்தின் செயல்பாடுகளிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதே சமயம், தீய சிந்தனை தனிமனிதனையும் சமூகத்தையும் களங்கப்படுத்துகிறது. துயரம் கூட பரவக்கூடியது; உங்கள் மன அழுக்கே மற்றவர்களையும் பாதிக்கக்கூடும்.

மனம் புத்தி (விவேகமான பகுத்தறிவு)க்கு கீழ்ப்படிந்து செயல்பட்டால், அது உள்ளார்ந்த உண்மையை உணர்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் அது இன்ப-இச்சைகளின் இழுப்புக்கு அடிமையாகினால், அது பந்தங்களை மேலும் வலுப்படுத்தும்.

நல்ல எண்ணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்; தீய எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சிந்தனையும் விவேகத்தின் உயர்ந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும். அந்த தீர்ப்பை மாற்ற முடியாத உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்மா, உபாசனை, ஞானம் – மனித வாழ்வின் மார்க்கம்

 இறைவன் மனிதனின் நலனுக்காக உலகில் தேவையான அனைத்தையும் வழங்கியுள்ளார். ஆனால், ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது: உங்கள் செயல்களின் பலன், அவை நல்லவையா கெட்டவையா என்பதன் அடிப்படையில் அமையும். இன்று மனிதர்கள் நல்ல செயல்களைச் செய்யாமல், அதன் பலனை மட்டும் பெற விரும்புகின்றனர். இது இயலாதது. அதேபோல், தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவும் முடியாது. இறைவன் சாட்சியாக மட்டுமே உள்ளான்.

இதனால், இன்றிலிருந்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, நல்ல செயல்களைச் செய்து, உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். நீங்கள் கர்ம மார்க்கத்தால் (செயல்களின் பாதை) தொடங்கி, ஞான மார்க்கத்தில் (அறிவின் பாதை) முடிக்க வேண்டும். இதன் நடுவில் உபாசனை மார்க்கம் (வழிபாட்டு பாதை) உள்ளது. இதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய மார்க்கம்.

இதற்காக, இறைவன் எங்கும் இருப்பவன் என்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் பெற வேண்டும். அந்த நம்பிக்கை உங்களிடம் ஏற்பட்டால், நீங்கள் பொய் பேச மாட்டீர்கள், ஏமாற்றம் செய்ய மாட்டீர்கள், பிறரை இகழ மாட்டீர்கள் அல்லது அவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டீர்கள். இவ்வாறு, அனைத்து நல்ல குணங்களையும் நீங்கள் இயல்பாகப் பெறுவீர்கள்.

முற்றத்து மரச் சிலை - குமுதினி கலையழகன் சிட்னி,அவுஸ்திரேலியா.

 மென்குளிர், சிலிர்ப்புக் கரங்களால் தடித்த போர்வையையும் தாண்டி, அவனைத் தொட்டு எழுப்பிற்று. இலையுதிர் காலமும் குளிர்காலமும் சந்தித்துக் கொள்கின்ற இடைப்பட்ட மாதம். கண்களை விழித்தான் நரேன். சில விநாடிகள் சிந்தனை திகைத்தது;

இன்று அப்பாவா, அம்மாவா…’

சட்டென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். வெள்ளைக் கண்ணாடி தாண்டி பசேலென மெல்லச் சரிவோடு ஏறும் மலையடிவாரம் கண்ணில் விழத் தெளிவு பிறந்தது. இன்று அப்பா.

ஒரு பெருமூச்சொன்று அடிவயிற்றில் எழுந்தது. விழித்தெழுந்த கணத்தில் இருந்த புத்துணர்வைப் பறித்து எடுத்துக் கொண்டு காற்றில் மறைந்தது. அவன் பலமிழந்தது போல உணர்ந்தான். மறுபடியும் கட்டிலில் சாய்ந்து போர்வையுள் புகுந்தான்.

அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்

நூற்றைம்பது கிலோ மீட்டர்கள் நெடுஞ்சாலை கடந்து அம்மாவின் வீடு இருக்கிறது. ஆறு மாதமாகத்தான் இந்த ஏற்பாடு. சட்டம் கண்களால் பார்த்துக் கைகளால் எழுதிற்று. அது இருதயம் இல்லாது நடந்து கொண்டதாய் அம்மா அழுதது ஞாபகம் வரக் கண்கள் ஈரமாகின.

அம்மா அம்மா மெல்ல உச்சரித்தான்.

இந்நேரம் அவள் கண் விழித்திருப்பாள். உற்சாகமும் மகிழ்வுமற்று வரண்டிருப்பாள். அவன் அவற்றை எடுத்துக் கொண்டு போய்விடுவதாக அவள் ஏதோ ஒரு நாளின் உரையாடல் மத்தியில் சொன்னது அவனுக்குக் கல்லெழுத்தாக விழுந்து விட்டிருந்தது. குற்றவுணர்வைச் சுமந்து நடக்கின்ற நாட்கள் கனமானவை.

நெடிய உடலைக் குறுக்கிப் போர்வையுள் மறைவது கொஞ்சம் இதம் தந்தது.

நரேன்…’

கதவைத் தட்டும் சத்தம் அவனை எழுப்பி நடக்க வைத்தது. பதின்மூன்று முடிந்து பதின்நான்கு தொடங்கும் பையனை மரியாதையுடன் அணுகும் தந்தைமை.

கதவைத் திறந்து குட்மோனிங் அப்பா என்றான்.

சட்டென சந்தேகம் எழுந்தது கண் ஈரமாயிருக்குமோ முகத்தைத் தேய்ப்பது போலக் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஆறடியில் நிமிர்ந்து நிற்கின்ற தந்தையை அவன் சின்னக் கண்ணீர் முழுதாக உடைத்துவிடும். அதுவும் தாங்க முடியாத ஒன்றுதான்.

நேரமாகி விட்டது; புறப்பட வேண்டும் நரேன்

ஓகே அப்பா. நான் தயாராகின்றேன்

ஜீவாவின் கண்கள் நரேனை அளந்திருக்க வேண்டும். கைகளை நீட்டி அவனைத் தன் தோளில் அணைத்துக் கொண்டான். இருவர் நெஞ்சிலும் இருந்த ஏதோ ஒரு வெறுமையை இருவரும் உணர்ந்து ஒத்துக் கொள்ளும் தருணம். இது நீண்டு விட அனுமதிக்க முடியாது.

ஜீவா சட்டென விலகிக் கடிகாரத்தைப் பார்த்தான். முப்பது நிமிடத்தில் புறப்பட வேண்டும்.

நரேன் தலையசைத்து அறைக்குள்ளே சென்றான். குனிந்து துவாலையை எடுத்தபோது சுவரில் நரேன் எழுதப்பழகிய காலத்தில் தன் உயரத்தில் கலர்ப் பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் விழுந்தன.

ஜீவா ஜெனா

சுவரெழுத்துக்களை யாரும் கவனிக்கவில்லைப் போல. நிஜத்தில் காலம் உலகறிய அவர்களின் பிரிதலை அறிவித்து ஆறுமாதங்களாய் விட்டது. ஒரு அழகிய தூக்கணாங் குருவிக் கூட்டுள் இருந்த இதமான வாழ்வு மறைந்து போன ஆறு மாதங்கள்.

நரேன் ஷவரை அளவாகத் திறந்து விட இதமான சூட்டுடன் விழுந்த நீரில் நினைவுகள் மெல்லத் தணிந்தன. குளித்து வெளியே வந்தபோது அம்மா மீள நினைவுள் புகுந்தாள்.

அம்மா இப்போது முன்னறையில் மௌனமாய் இருந்து தேநீர் அருந்துவாள். இவன் இல்லாத நாட்களில் அவள் காலையுணவு தயாரிப்பதில்லை என்பதை அவன் அவதானித்திருந்தான். அவள் மெலிந்து விட்டிருந்தாள் கூட. அம்மா கஷ்டப்படுகிறாள்,பல விஷயங்களில்.