.

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 23/11/2026 - 29/11/ 2026 தமிழ் 17 முரசு 30 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.

.
சிட்னியில் அரங்கேறிய மாயவனம் நாட்டிய நிகழ்வு
ரசனைப்
பகிர்வு : கானா பிரபா
ஊதா நிறத்தைப் போர்த்திய (Jacaranda) மரங்கள், பகட்டான நீள ஆடையை அணிந்தது போலப் பொங்கிப் பூத்திருக்கும், முற்றத்தில் வீற்றிருக்கும் Joan Sutherland அரங்கம்.
மறு வாரத்தில் தீபாவளி தினம் வருகிறது.
இங்கே அக்டோபர் 31 ஆம் திகதி தபஸ்யா நடனப் பள்ளியின் “மாயவனம்”
எனும் நடன நிகழ்வு,
இயற்கையும், கால நேரமும் கூடி வந்தது போல அமைந்ததொரு
நிகழ்ச்சி அரங்கேறுகிறது.
என்னவொரு பொருத்தம் என்று மனம் சொல்லிக் கொண்டு அதே எதிர்பார்ப்போடு நடனப் பள்ளி மாணவர்களின் மேடை நிகழ்வில் ஐக்கியப்படுகிறது.
Tapasya Academy of Dance இன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான குரு திருமதி. தர்மினி சுமித்ரன் அவர்களால் நடனப்பள்ளி 2016 இல் Girraween இல் வெறும் மூன்று சிறுமிகளும், ஒரு கனவும் மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் பிறந்து வளர்ந்த தன் பால்ய காலத்திலேயே பரத
நாட்டியம் மீது ஈடுபாடுகொண்ட ஶ்ரீமதி தர்மினி சுமித்ரன், திருமதி. அம்பிகாவதி மற்றும் திருமதி.
துஷ்யந்தி வேலுப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பகாலப் பயிற்சியைப் பெற்றவர். இந்தியாவின் சென்னையில் உள்ள புகழ்பெற்ற 'கலாக்ஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில்' (Kalakshetra College of Fine Arts) 2008-ஆம்
ஆண்டு அங்கு தனது பயிற்சியைத் தொடங்கினார்.
.
அண்ணன் என்றால் அள்ளிக்கொட்டும் இயந்திரம் என்று வாழும் தங்கைமாருக்கு ஒரு அண்ணனின் நிலையினை எடுத்துக் கூறும் குறும்படம்.
.
சிவாஜியின் ஆரம்ப கால நண்பர்களில் ஒருவர் எஸ் .ஏ .கண்ணன். சிவாஜியின் இளமை காலம் தொட்டு அவருடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் சிவாஜி திரை நடிகரான பிறகு அவரின் பெரும்பாலன படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். ஆனாலும் நாடகங்களை எழுதி அவற்றை இயக்குவதில் தன் திறமையை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதி இயக்கிய விதி என்ற நாடகம் சத்தியம் என்ற பெயரில் படமானது.
.
எண்ணமே மீண்டும் வந்துமே