.
போராட்டம் காலம் காலமாக நமது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று.
இருந்தாலும் சரி, பின்னணி இசை ஆக இருந்தாலும் சரி மிக அருமையாக கொண்டு வந்திருக்கின்றார்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 23/11/2026 - 29/11/ 2026 தமிழ் 17 முரசு 30 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.
போராட்டம் காலம் காலமாக நமது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று.
இருந்தாலும் சரி, பின்னணி இசை ஆக இருந்தாலும் சரி மிக அருமையாக கொண்டு வந்திருக்கின்றார்.
.
படம் ஆரம்பித்தவுடன் ஒரு இளைஞன் தன் கால்கள் சரியச் சரியத் தள்ளாடியபடியே படிக்கட்டுகளில் ஏறி, ஒரு கட்டடத்தின் உச்சியில் நின்று இந்தப் பரந்த உலகைப் பார்க்கின்றான். ஆம் பெரிய உலகம்.
இந்தப் படம் சொல்லும் `பெரிய
உலகம்’ எது?
பிக் வேர்ல்ட்(Big World)
`Xiao Xiao De Wo’ சீன மொழியில்
2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம். Youtube இல் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்ப்பதற்குக்
கிடைக்கின்றது.
படத்தின் முக்கிய கதாபாத்திரம்
லியு சுன்ஹே (Liu Chunhe) மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்டவன்.
அவனால் சரியாக - நடக்க முடியாது, பேச முடியாது, சாப்பிட முடியாது. இந்தச் சமூகம் தன்னை
ஒரு சுமையாகப் பார்ப்பதை எதிர்த்து, சுயமாக தனித்து வாழப் போராடுகின்றான். அவனுக்குப்
பாட்டி உற்ற துணை. அம்மாவும் பாசமானவள் தான். ஆனால் அவனின் உடல்நிலையைக் கருத்தில்
கொண்டு வீட்டிற்குள்ளேயே முடக்க நினைக்கின்றாள். ஏறத்தாழ 2 மணி நேரம் ஓடும் இந்தப்
படத்தில் அவனது அப்பா சில நொடிகள்தான் வந்து போகின்றார். ஏன் அவர் தனது மகனைக் கவனிக்கவில்லை?
சில குடும்பங்களில் இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்துவிட்டால், அதன் முழுப்பொறுப்பையும்
தாயின் மீதே சுமத்தி விடுகின்றார்கள். இதனால் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் யாங்
லினா (Yang Lina), தந்தையின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் குடுக்காமல், திட்டமிட்டே
செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
படத்தில் இளைஞனதும் (ஜாக்சன் யீ / Jackson Yee)
பாட்டியினதும் (Diana Lin) நடிப்பு அற்புதம். அதுவும் இளைஞனாக நடித்தவர் மிகவும் சிறப்பாக
நடித்திருக்கின்றார். அதற்காக அவர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சில
மாதங்கள் பழகியிருக்கின்றார். தனது பாத்திரம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக -
உடல் எடையைக் குறைத்து, தன்னை மிகவும் வருத்திக் கொண்டிருக்கின்றார்.
படத்தில் அடிக்கடி அவன் தனது
படுக்கையின் கீழ் இருக்கும் மனித எலும்புக்கூட்டை எடுத்து அணைத்துக் கொள்கின்றான்.
அது அவனது விளையாட்டுப் பொருள் அல்ல, அவனது உடலமைப்பை குறிப்பிடும் ஒரு குறியீடு.
.
.
வேல் என்றாலே அஃது - அஞ்ஞானத்தை அகற்றி. வினையினை வேரறுக்கும். ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மும்மலங்களாய் உருப்பெற்று நின்றவர் கள்தான் சூரபது பதுமனும் அவனின் தம்பியருமான - சிங்கமுகனும் , தாரகனு மாம்.
.
.