அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் ஆசிரியருமான சி.அ. ஜோதிலிங்கம் அவர்களின் மறைவுக்கு தமிழ்முரசு அவுஸ்திரேலியாவின் அஞ்சலிகள்

 அரசியல் ஆய்வாளர், சட்டதரணி , ஆசிரியர் , சமூக சேவையாளர்


சோதிலிங்கம் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் உண்மையிலேயே மனவருத்தமாக இருந்தது. நான் இலங்கைக்கு செல்லும்போதெல்லாம் அவரிடம் சென்று அவரைப் பார்த்து அவரோடு பேசிக் கொண்டிருப்பது வழமை, ஆரம்ப காலத்தில் விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே ஒரு சிறு பழக்கம். மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பின்பு சந்திப்பு, ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத தோற்ற வேறுபாடுகள் ஆனால் சிந்தனை ஒன்றாகவே இருந்தது.   அண்மை காலங்களாக அவருடைய சிந்தனை மக்களுக்கு எப்படி ஒரு நல் வாழ்வை எடுத்துக் கொடுக்க முடியும் என்ற சிந்தனையாகவே தொடர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நான்  சென்று அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர் சொல்லுகின்ற விடயங்கள், எங்களுடைய தமிழ்த்  தலைமைகள் ஒன்றுபட்டு செயல்பட மறுக்கின்றது, மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் கூட ஒன்றுபட மறுக்கின்றார்கள், இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டும்தான் நம்முடைய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க முடியும். ஏனென்றால் சிங்கள இனவாத தலைமைகள் எப்போதுமே பௌத்த சிங்கள, இன, மத வாதத்தை மேற்கொண்டு நடக்கின்றவர்கள் ஆகவே அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டார்கள். அதற்கு ஏற்றது போல் எங்களுடைய தமிழ்த்  தலைமைகளும் பிரிந்து நின்று கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக, ஆளுக்கு ஒரு விடயத்தை பேசிக் கொண்டிருப்பதும், அவர்களோடு சேர்ந்து கொண்டு தங்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொண்டிருப்பதும் நமது மக்களுக்குரிய விடிவைக் கொண்டு வர முடியாது. தமிழ்ப் பொது அமைப்புக்கள்  சேர்ந்து இவர்களை ஒரு வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் இதுதான் தன்னுடைய சிந்தனையென்றே கூறிக் கொண்டிருப்பார். இதிலிருந்து நான் வேறு கருத்துக் கொண்டவன் என்றாலும் அவரோடு நட்போடு பேசலாம் .


கடைசித்  தடவை நான் அங்கு சென்றபோது, நாங்கள் உரையாடிக்

கொண்டிருக்கின்ற போது நான் கேட்கின்றேன்.  அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக இருகின்றார், அவருடைய  அரசாங்கம் ஒரு இடதுசாரி கொள்கைகளை முன்வைக்கின்ற அரசாங்கம் இந்த அரசாங்கத்தோடு தமிழ் தலைமைகள் கூட்டடாக  பேசினால் ஓரளவுக்காவது எங்களுடைய பிரச்சனைகளை கேட்பதற்கு முன்வருவார்களே என்று நான் கேட்டபோது அவர் கூறிய விடயம்,  இந்த பௌத்த மதவாதிகள் சிங்கள இனவாதிகள்   இருக்கும் வரைக்கும் அது எந்த அரசாங்கமாக இருந்தால் என்ன, எங்களுடைய எங்களுக்கு தேவையான அல்லது எங்களுக்கு தரப்பட வேண்டிய உரிமைகளை தர மாட்டார்கள் என்று ஆணித்தரமாக எடுத்துப் போடுவார். அப்ப இதற்கு என்ன மறுமொழி என்று கேட்டால் அவர் முன்வைக்கின்ற ஒரு விடயம், அரசியல்வாதிகள் மக்களுக்கு தலைமை தாங்க கூடாது, பொது சன அமைப்புகள் உடைய தலைமை அரசியல்வாதிகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அவர் கூறுவது போலவே அவர் மக்கள் அமைப்புகளோடு கூடுதலாக செயல்பட்டு வந்தவர், அது மட்டுமல்ல நீண்ட காலமாக இந்த தமிழ் பிரச்சினைகளைப் பற்றி, மக்களுக்கு எதிரான அரசாங்கங்களுடைய நடவடிக்கைகள் பற்றி சேகரித்த பல விடயங்களை, எழுத்துக்களை பத்திரிகை துண்டுகளை பெட்டகம் என்ற அமைப்பு ஊடாக சேமித்து  வைத்திருக்கின்றார். அதற்காக தனி ஒரு மனிதனாக இருந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருந்தவர். 

அண்மையிலே சிவபதம் எய்திய சபாரத்தினம் சிவாசாரியார் அவர்களுக்கு ஒரு கவிதை அஞ்சலி!

 























அஞ்சலிக் கவிதை

 

நனவினிலே நானுன்னை நற்கவியால்; வாழ்த்திவந்தேன்

நனிசிறந்த வுன்வாழ்த்தைச் சுவைத்தவண்ணம் தூங்கிவிட்டேன்

கனவினிலே துயிலெழுப்பி; அஞ்சலிக்கா கவிகேட்டாய்?

கண்ணிரண்டை நீர்மறைக்கக் கனத்தநெஞ்சோ டெழுதுகிறேன்

 

 

   மருகியவள் விருந்திடவென் மைந்தனவன் இல்லத்தில்

   விருந்தினனாய்த் தங்கிச்சிவ ஞானபோதம் கற்பித்தாய்!

   அரும்பேறு பெற்றுயர்ந்த மாணவர்கள் தவித்தேங்கப்

   பெரும்பேறாய்ப் பிறவாப்பே ரின்பநிலை அடைந்தனையோ?

 

 

   மண்ணிலுழல் எம்மவர்கள் மறுமையிலும் உய்வடைய

   எண்ணரிய ஆனந்த நூல்தேர்ந்து பொருளுரைத்தாய்

   எண்பதொடு நான்ககவை எய்தியதும் சிவகுருவே

   கண்ணுதலான் பேரின்பக் கழல்நாடிக் கலந்தனையே!

மலைமகள் துதி அருள்வாய் துர்க்கை அம்மா தாயே !


 























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா






ஆணவம் இல்லா வீரம் வேண்டும்
அகந்தை இல்லாத் துணிவு வேண்டும்
மாநிலம் வாழ்ந்திட  உறுதி வேண்டும்
மனமுருகி வேண்டுகிறேன் தந்திடு தாயே

உடலில் உறுதி உள்ளத்தி லுறுதி
அமைந்திடத் துர்க்கையே அருளிடு தாயே
தயவும் வேண்டும் தாட்சண்யம் வேண்டும்
தளரா வாழ்வும் அமைந்திட  வேண்டும்

குலையா உறுதி அலையா மனது
நிலையாய் இருக்க அருளிடு தாயே
சிதையா பக்தி நிலையாய் இருக்க
அருள்வாய் துர்க்கை அம்மா தாயே 

கள்ளம் இல்லா வீரம் வேண்டும்
கசடு அறியா வாழ்ந்திட வேண்டும்
உள்ளம் உயர்வாய் எண்ணிட வேண்டும்
உருகிக் கேட்கிறேன் தந்திடு தாயே  ! 




அலைமகள் துதி என்றுமே தந்திடுவாய் இலக்குமித் தாயே !


 























அளவுக்கு மிஞ்சிப் பொருளெனக்கு வேண்டாம்
அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா
ஆசையும் அளவோடு அமைந்து விடவேண்டும்
அம்மாவுன் திருவடியே அடைக்கலமே அம்மா

அன்றாடம் சீவிக்கும் அளவுக்குப் பொருளும்
அடுத்தவர்க்குக் கொடுப்பதற்கு அளவுக்குப் பொருளும்
கேட்டவர்க்குக் கொடுப்பதற்கு அளவான பொருளும்
கிடைத்துவிட வழிவகுப்பாய் இலக்குமித் தாயே

மாடிமனை வீடுநிலம் வேண்டாமே தாயே
மழைவெயிலுக் கொதுங்கிவிட  வீடுதா தாயே 
ஏழ்மையிலும் இரந்திடா வாழ்ந்துவிடும் வாழ்வை
என்றுமே தந்திடுவாய் இலக்குமித் தாயே

பேராசை எழாவண்ணம் பார்த்திடுவாய் தாயே
பெரும்பொருளை எண்ணாமல் செய்திடுவாய் தாயே
உற்றவர்க்கு ஊரார்க்கு உதவிவிடும் வகையில்
உன்னருளால் செல்வத்தை உவந்தளிப்பாய் தாயே !












சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்! விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!! தொடர்- 18…..சங்கர சுப்பிரமணியன்.


ஷின்சாய்பஷிசுஜியின் மற்றொருசிறப்பு இந்த கடைவீதி முழுக்க மிகவும் உயரமான கூரை உள்ளது.ஆதலால் மழை வெயில் என்று எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் ஷாப்பிங் செய்யலாம். இரவில் கேட்கவே வேண்டாம் மின் விளக்குகளின் ஒளியுடன் பிரபிப்பை ஏற்படுத்தும். என் மனைவி பல பொருட்களை வாங்கினாள். பணத்தை பிடுங்குவதற்காகவே சொல்லி வைத்தபடி சில கடைகள் இருந்தன.


அதில் ஒன்று பெண்கள் அதிகம் பயன்படுத்தும் கைப்பைகள் மற்றும் சூட்கேஸ்கள் விற்கும் கடை. ஒரு புடவை எடுத்தால் ஒரு புடவை இலவசம் என்ற கவர்ச்சி இல்லாத இடமில்லை. அதுபோல் அங்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும்  இங்கும் இருந்தது இருந்தது. ஒரு சூட்கேஸ் என் கண்ணில் திரும்பத் திரும்ப விழுந்து வாங்கு என்றது. இலவசத்துக்கு ஆசைப்பட்டு இரண்டு வாங்கவா முடியும்?

பாதி விலையில் ஒன்று மட்டும் கேட்டுப் பாருங்கள் என்று மனைவி

வற்புறுத்த காசா பணமா கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன். எதையோ கட்ட எதையோ இழுப்பதுபோல் வந்தால் மலை கிடைக்குமே என்ற எண்ணமே கேட்க வைத்தது.  அப்படி கேட்டதில் மலையே கிடைத்ததுபோல் பாதி விலைக்கு ஒரு சூட்கேஸ் தருவதாக
கடைக்காரர் சம்மதித்தார்.

இன்னும் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள் இருப்பதால் அப்புறம் வருகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். அடுத்து பார்க்க வேண்டிய இடம் டோடன்போரி. பெயர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தேடிப்பிடிப்பதுதான் கடினம். டோடன்போரி என்ற இடம் ஷின்பாஷிசுஜி கடைவீதியின் தென்கோடியில் அம்படயே தொடர்ந்து ஏழுமுதல் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளது.

இபிசுபஜி பாலத்தை தாண்டியதும் டோடன்போரி வருகிறது. ரொம்பவம் பில்டப் பண்ணுகிறாயே அது என்ன என்கிறார் மாடசாமி அண்ணாச்சி. அவரின் ஆர்வம் அவருக்கு. சொல்கிறேன் அண்ணாச்சிக்காக கதை சொல்ல ஆரம்பிக்கிறேன். 1612ஆம் இ
ஆண்டு யசூய் டோடன் என்ற அங்குள்ள வியாபாரி ஒருவர் அங்கு ஓடிக்கொண்டிருந்த க்வை ஆற்றை கால்வாயாக விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கினார்.

அதை அடுத்து அந்த பகுதி பாரம்பரிய நடனமான கபுகி மற்றும் பொம்மலாட்டங்களை நிகழ்த்தும் அரங்கங்கள் நிறைந்த இடமாக வளர்ந்தது. நாளடைவில் அப்பகுதியில் இருந்த அரங்கங்கள் யாவும் மதுக்கடைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் என்று மாறியுள்ளதை இன்று நாம் காண்கிறோம். இன்று அந்த கால்வாயின் இருபுறங்களிலும்
பல தரப்பட்ட உணவகங்களுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகத் திகழ்கிறது.

ஊருக்கு உழைப்பவன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கிய பட நிறுவனங்களில் ஒன்று வீனஸ் பிக்சர்ஸ் . இயக்குனர் ஸ்ரீதர் , கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் மூவரும் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி சிவாஜியின் தயவில் அமரதீபம் படத்தை தயாரித்தார்கள். அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர்கள் தயாரித்த உத்தம புத்திரன் சக்கை போடு போட்டது. தொடர்ந்து எடுத்த கல்யாணப் பரிசு வெள்ளி விழா கண்டது. பின்னர் ஸ்ரீதர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி சொந்த பட நிறுவனம் ஆரம்பிக்க மற்ற இருவரும் வீனஸ் நிறுவனத்தை நடத்தி தமிழிலும், ஹிந்தியிலும் பல படங்களை தயாரித்தார்கள் . அந்த வரிசையில் எம் ஜி ஆரின் நடிப்பில் அவர்கள் தயாரித்த என் அண்ணன் படம் வெற்றி கண்டது. ஆறாண்டுகள் கழித்து மீண்டும் 1976ல் எம் ஜி ஆர் நடிப்பில் அவர்கள் தயாரித்த படம் ஊருக்கு உழைப்பவன். 


 தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர் நோக்கியிருந்த எம் ஜி ஆர்

அதற்கு ஏதுவாக தன் படங்களின் பெயர்களையும் தெரிவு செய்து கொண்டிருந்தார். அதற்கமைய அமைந்த டைடில் ஊருக்கு உழைப்பவன். படத்தில் இரண்டு எம் ஜி ஆர் கள் ! ஒருவர் படத்தின் ஆரம்பத்திலேயே டூயட் கூட பாடாமல் ஜெயிலுக்கு போய் விட மற்றைய எம் ஜி ஆர் தான் ஊருக்கு உழைக்கிறார். 

 ஒரே முக சாயலை கொண்ட செல்வம், ராஜா என்ற இரு நண்பர்கள் . ஒரு விபத்தில் பணக்கார நண்பன் ராஜாவின் மனைவியின் புத்தி பேதலித்து விடுகிறது. அதே கையேடு கொலை குற்றச்சாட்டில் அவனும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றன் . உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க மற்றைய நண்பன் செல்வம் கங்கணம் கட்டுகிறான். அவன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதும் அவன் முயற்சிக்கு துணையாகிறது. இதனிடையே அவனுக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறக்கிறது. 

 இப்போது ஒரு சங்கடம் ஏற்படுகிறது . புத்தி பேதலித்து ராஜாவின் மனைவி காஞ்சனாவுக்கு சுய நினைவு திரும்புகிறது. அவளுக்கு மீண்டும் புத்தி மாறாட்டம் ஏற்படக் கூடாது என்பதால் ஜெயிலில் இருக்கும் அவளின் கணவன் ராஜாவாக நடிக்கிறான் செல்வம். அதே சமயம் தன் மனைவி மல்லிகாவுடனும் குழந்தையுடனும் குடித்தனம் நடத்துகிறான். இது போதாதென்று குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரம் காட்டுகிறான். 

இலங்கைச் செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த சி. அ. யோதிலிங்கம் காலமானார்

தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிரந்தி ராஜபக்‌ஷ

போதைப்பொருள் பாவனையால் நாட்டில் எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் தொற்று ஆபத்து அதிகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு - கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

தேரர்கள் சிறையில் தடுத்து வைக்கப்படும் மற்றும் வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் புதிய விதிமுறைகள் – ஜனாதிபதி



தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த சி. அ. யோதிலிங்கம் காலமானார்

09 Oct, 2026 | 10:00 AM

வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்கள், மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளரான சி. அ. யோதிலிங்கம் காலமானார்.

நேற்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக  நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்ட் விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடு

யேமன் விமான நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைகள், ட்ரோன்களால் தாக்குதல்

ஆய்வகத்தில் ஆபத்தான தொற்று பரவி ரஷ்ய பெண் ஆய்வாளர் உயிரிழப்பு

ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 309 பேர் காயம்

நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேரைக் காணவில்லை ; 06 பேர் மீட்பு  


அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்ட் விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடு

09 Oct, 2026 | 12:19 PM

மைக்ரோசொப்ட் , அடோப் மற்றும் முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) இருந்து இடைநீக்கம் செய்ய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு மாணவர் மற்றும் தொழிலாளர் விசாக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஹார்வர்ட், யேல், ஸ்டான்போர்ட், எம்.ஐ.டி உட்பட 09 முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசொப்ட் மற்றும் அடோப் தவிர, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப  சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சேர்வீசஸ் , இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல்  மற்றும் காக்னிசன்ட் , கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இந்தத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 62 யுகங்களின் குரல் "கவிஞர் மீரா" பதிவும் பகிர்வும்

 


நாள்:  சனிக்கிழமை 24-10-2026

 நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

பேரா. பா. இரவிக்குமார்

ஆய்வாளர் சி.ரமேஷ்

முனைவர் இரா. ஸ்ரீவித்தியா

 ஒருங்கிணைப்பு:   பேரா. க. பஞ்சாங்கம்

  மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

 




இறைவன் திருநாமத்தை நினைப்போம் – அக இருளை அகற்றுவோம்

 இறைவனின் திருநாமத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அந்தத் திருநாமத்தை இறைவனின் திருவுருவத்துடன் இணைத்து, அந்தத் திருவுருவத்தை உங்கள் மனக்கண்ணில் நிலைநிறுத்துங்கள். அது உங்கள் இதயத்தின் ஆழத்தில் ஒளி வீசும் ஓர் அகல் விளக்காகத் திகழும்.

இறைவனின் திருநாமம் நாவில் ஒலித்துக்கொண்டிருந்தால், அது உள்ளத்திலும் வெளியிலும் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றும். உள்ளத்தில் அமைதி, வெளியுலகில் சகோதரத்துவம் — இதுவே இறைவனின் திருநாமத்தைத் தொடர்ந்து ஜபிக்கும் (நாமஜபம்) ஒருவரின் அடையாளமாகும்.

இறைவனின் திருநாமத்திற்கு அளவற்ற ஆற்றல் உண்டு. இதை விளக்கும் ஒரு நிகழ்வைக் கூறுகிறேன்.

ஒருமுறை, ஞானதேவரும் நாமதேவரும் காட்டுப் பாதை வழியாக ஒன்றாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். இருவருக்கும் தாங்க முடியாத தாகம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஆனால், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துக் குடிப்பதற்குத் தேவையான கயிறோ, பாத்திரமோ அங்கு இல்லை.

அந்தக் கிணறு மிகவும் ஆழமானது. அதில் இறங்குவதற்குப் படிக்கட்டுகளும் இல்லை. தண்ணீரோ வெகு ஆழத்தில் இருந்தது.

பிரம்ம ஞானத்தைப் (பிரம்ம ஞானம்) அடைந்திருந்த ஞானதேவர், தம்மையே ஒரு பறவையாகப் பாவித்துக்கொண்டார். அந்தப் பறவையின் உருவில் கிணற்றுக்குள் பறந்து சென்று, தண்ணீரைப் பருகித் தனது தாகத்தைத் தணித்துக்கொண்டார்.

ஆனால், நாமதேவர் இறைவனின் திருநாமத்தை அழைத்து வேண்டினார். இறைவனும் அந்த அழைப்பிற்குச் செவிசாய்த்தார். கிணற்றிலிருந்த தண்ணீர் மேலே உயரத் தொடங்கியது. இறுதியில், நாமதேவர் தமது கைகளால் தண்ணீரை எட்டிப் பருகி, தாகத்தைத் தணித்துக்கொள்ளும் அளவிற்குத் தண்ணீர் மேலே வந்தது.

இறைவனின் திருநாமத்தை உண்மையான பக்தியுடன் அழைக்கும்போது, அந்தத் திருநாமம் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. எனவே, இறைவனின் திருநாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் இடைவிடாமல் நினைத்து ஜபிப்போம். அது நம் உள்ளத்தில் அமைதியையும், வாழ்வில் நம்பிக்கையையும், பிறரிடம் அன்பையும் வளர்க்கும்.

புலன்களின் வழியே ஆனந்தத்தை அனுபவித்து, தெய்வீகத்தை உணர்வோம்!

 மனிதன் தனது புலன்களைப் பயன்படுத்தி ஆன்மிக ஆனந்தத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். ஒரு கோப்பையில் பழச்சாறு ஊற்றப்படும்போது, அந்தக் கோப்பை அதன் சுவையை உணர்வதில்லை. ஒரு உறிஞ்சு குழாய் (Straw) மூலம் அந்தப் பழச்சாற்றை நாம் பருகும்போதுதான், நாக்கு அதன் இனிமையை உணர்கிறது. இங்கு நாக்கு புத்தியின் அடையாளமாகக் குறிப்பிடப்படுகிறது.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையே அந்தப் பழச்சாறைப் போன்றது. இயற்கையில் நிறைந்துள்ள தெய்வீகத்தின் இனிமையை நாம் அனுபவிக்க வேண்டும். இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் தெய்வீகத் தன்மையை உணர்வதே இதன் நோக்கமும் உட்பொருளுமாகும்.

இயற்கை என்பது இறைவனின் திருவிளையாடலே ஆகும். இறைவனுடைய மகிமையையும் பேரொளியையும் நாம் உணர்ந்துகொள்வதற்காகவே இயற்கை நம் முன்னே விரிந்து கிடக்கிறது.

மனம் புத்தியின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டால், தனிமனிதன் நன்மை அடைகிறான். டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ஒவ்வொரு மாநிலமும் முறையாகப் பின்பற்றினால், நாட்டின் வலிமையும் ஒற்றுமையும் அதிகரிக்கும். அதுபோலவே, மனம் புத்தியின் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும்போது, மனிதனின் வாழ்வும் உயர்வடைகிறது.

ஆனால், மனம் புலன்களுக்கு அடிமையாகிவிட்டால், மனிதனுக்குத் துன்பமே ஏற்படும். புலன்கள் காட்டும் வெளிப்புற உலகத்தின் பின்னால் மனம் சென்று, உண்மையான இறைநிலையை மறந்துவிடும்போது, மனிதன் பொய்மையான கற்பனை உலகில் மூழ்கிவிடுகிறான்.

அத்தகைய நிலையில், தெய்வத் தாயாகிய சிவதாயி, அன்புடன் தன் குழந்தையைத் தட்டியெழுப்புவதைப் போல, மனிதனை அறியாமையிலிருந்து விழிப்படையச் செய்கிறாள். அவன் விழித்தெழுந்த பிறகு, வேறு எதையும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. விழிப்புணர்வு பெற்றவுடன், உண்மை தானாகவே வெளிப்படும்.

எனவே, புலன்களின் அடிமையாகாமல், புத்தியின் வழிகாட்டுதலுடன் மனதைச் செலுத்தி, இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனின் தெய்வீகத்தை உணர்வோம். அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, உண்மையை உணர்ந்து, ஆன்மிக ஆனந்தத்தை அனுபவிப்போம்.

நவராத்திரி – மனிதனுள் உறையும் தெய்வீகத்தை உணர்வோம்!

 நவராத்திரி விழாவின்போது, மனிதனிடம் உள்ள அசுர குணங்களை அகற்றும் நோக்கத்துடன், இறைவிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். குங்குமம் சிவப்பு நிறத்தைக் கொண்டது; அது இரத்தத்தின் அடையாளமாக விளங்குகிறது. இந்த வழிபாட்டின் உட்பொருள், நமது இரத்தத்தையே இறைவனுக்கு அர்ப்பணித்து, அதற்குப் பதிலாக இறைவனிடமிருந்து அமைதியைப் பரிசாகப் பெறுவதாகும்.

மனிதனிடம் நான்கு வகையான இயல்புகள் காணப்படுகின்றன. அவை மிருக இயல்பு, அசுர இயல்பு, மனித இயல்பு மற்றும் தெய்வீக இயல்பு என்பனவாகும். மனிதனின் மூன்று முக்கிய அம்சங்களாகிய உடல், மனம், ஆத்மா ஆகியவற்றில், மனத்தையும் ஆத்மாவையும் புறக்கணித்து, உடலையே தனது அடையாளமாகக் கருதும்போது, அவனிடம் மிருக குணங்கள் வெளிப்படுகின்றன.

உடலையும் ஆத்மாவையும் மறந்து, மனத்தின் ஆதிக்கத்திற்கு மட்டும் ஒருவர் உட்படும்போது, அவரிடம் அசுர குணங்கள் மேலோங்குகின்றன. அதேவேளை, உடலையும் மனத்தையும் கடந்து, ஆத்ம உணர்வில் ஒருவர் ஆழ்ந்திருக்கும்போது, அவரிடம் தெய்வீக இயல்பு வெளிப்படுகிறது.

இவ்வாறு மனிதனிடம் பொதிந்துள்ள ஆற்றல்களையும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவனுள் அனைத்தும் அடங்கியிருப்பதை உணர முடியும். எனவே, மனிதன் முதலில் தன்னைத் தானே அறிந்துகொள்ள வேண்டும். தன்னுள் ஆழ்ந்து நோக்கும்போது, அனைத்தையும் அவன் அங்கேயே கண்டறிய முடியும்.

பகவான் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தின்போது, அர்ஜுனன் அண்டங்கள் அனைத்தையும் இறைவனின் திருவுருவத்தில் கண்டான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உறைகிறார் என்பதையும் அவன் உணர்ந்தான். இறைவன் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களைவிட நெருக்கமானவர்; அனைவரையும் விட அன்புக்குரியவர். மனிதகுலம் முழுவதற்கும் அவரே ஒரே பாதுகாவலரும் சரணடையத் தகுந்த புகலிடமும் ஆவார்.

எனவே, நவராத்திரி விழா பத்து நாட்கள் இறைவனைத் தொடர்ந்து சிந்தித்து, நம்முள் உள்ள மாசுகளையும் தீய குணங்களையும் அகற்றி, உள்ளத்தில் தூய்மையை வளர்த்து, நமக்குள்ளேயே உறையும் தெய்வீகத்தை அனுபவிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நவராத்திரியில், நமது தீய குணங்களை நீக்கி, மனதைத் தூய்மைப்படுத்தி, ஒவ்வொரு உயிரிலும் இறைவனைக் காண்போம். நமக்குள் உறையும் தெய்வீகத்தை உணர்ந்து, அன்பு, அமைதி, தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வோம்.

உண்மையான ஆனந்தம் நம்முள் உறையும் இறைவனிடமிருந்தே கிடைக்கிறது!

 உண்மையில், மனிதன் உடல் (தேகம்) அல்ல. அவன் அந்த உடலுக்குள் உறையும் ஆன்மாவான தேஹி ஆவான். தனிப்பட்ட ஆன்மாவான ஜீவாத்மா, இயல்பிலேயே தெய்வீக உணர்வும் பேரானந்தமும் நிறைந்த சின்மய ஸ்வரூபம் ஆகும்.

தேஹி எனப்படும் ஆன்மாவின் இயல்புக்கும், சின்மயத்துவம் எனப்படும் தெய்வீக ஆனந்த இயல்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடலுக்குள் உறையும் புனிதமான ஆன்மிகத் தன்மையிலிருந்தே உண்மையான ஆனந்தத்தைப் பெற முடியும். ஆனால், வெறும் ஜடப்பொருளான உடலிலிருந்து நிலையான ஆனந்தத்தைப் பெற முடியாது.

ஒரு குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரத்திற்கு மகிழ்ச்சியடைகிறது. ஆனால், அந்தக் குழந்தை தனது தாயைக் கண்டவுடன், எல்லாப் பொம்மைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தாயை நோக்கி ஓடுகிறது. ஏனெனில், தாயின் அருகில் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் அதற்குப் பொம்மைகள் தரும் மகிழ்ச்சியைவிட ஆழமான, நிறைவான மகிழ்ச்சியை அளிக்கின்றன.

அதேபோல், செல்வமும் பொருள் வளங்களும் தற்காலிகமான மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஆனால், நீடித்த பேரானந்தம் இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

இதனால்தான், செல்வச் செழிப்புமிக்க நாடுகளிலிருந்து பலர் மன அமைதியைத் தேடி ஆன்மிக இயக்கங்களில் பங்கேற்க வருகின்றனர். வெளிப்புற வசதிகளும் பொருளாதார வளமும் இருந்தாலும், மன அமைதியையும் உண்மையான ஆனந்தத்தையும் அவை மட்டும் அளித்துவிட முடியாது.

அமைதியும் ஆனந்தமும் உங்களுக்கு வெளியே இல்லை; அவை உங்களுக்குள்ளேயே உறைந்திருக்கின்றன. அவற்றை வெளி உலகில் தேடுவதைவிட, நம் உள்ளத்தில் உறையும் இறை உணர்வை அனுபவிக்க முயல வேண்டும்.

மனிதன் உணவால் மட்டுமே வாழ்வதில்லை. அவன் ஆன்மாவின் (ஆத்மா) அனுபவத்தாலும் வாழ்கிறான். ஆன்மிக உணர்வை வளர்த்து, நமக்குள் உறையும் தெய்வீகத் தன்மையை உணரும்போதுதான் வாழ்வில் உண்மையான நிறைவையும் நிலையான ஆனந்தத்தையும் பெற முடியும்.

இளைஞர்களின் வாழ்வைச் சீரழிக்கும் தீய பழக்கங்கள் – ஆன்மிகமும் ஒழுக்கமும் அவசியம்!

 கரையான்கள் ஆரம்பத்தில் மிகச் சிறியவையாகவும், தீங்கற்றவையாகவும் தோன்றுகின்றன. அவை ‘வெள்ளை எறும்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பெயரைக் கேட்டால், அவற்றை அழிக்க வேண்டியவை என்பதைவிட, பாராட்டி கவனிக்க வேண்டியவை என்ற எண்ணமே தோன்றலாம். ஆனால், அவை மிக வேகமாகப் பெருகி, மனிதன் கட்டிய வீடுகளின் கட்டமைப்பையே வெளியில் தெரியாமல் உள்ளிருந்து அழித்துவிடுகின்றன.

அதேபோல, மது அருந்துதல், போதைப்பொருள் பழக்கம், சூதாட்டம், ரௌடித்தனம் போன்ற தீய பழக்கங்களும் ஆரம்பத்தில் சிறிய குறைகளாகத் தோன்றலாம். பிறரைப் பின்பற்றும் மனப்பான்மையால் இத்தகைய பழக்கங்கள் தனிமனித மற்றும் சமூக வாழ்க்கைக்குள் பல்வேறு வேடங்களில், எவ்வித ஆரவாரமுமின்றி நுழைகின்றன. பின்னர், எவ்வளவு உறுதியான மனப்பான்மையும் நேர்மையான பண்புகளும் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீரழித்துவிடுகின்றன.

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டுக் கலாசாரத்தின் கவர்ச்சிகரமான அழைப்புகளுக்கு மயங்கி, அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, தங்களுடைய மதிப்புமிக்க பண்பாட்டு மரபுகளைக் கைவிட்டு வருகின்றனர்.

பெரியோர்களை மதித்தல், பெற்றோருக்குச் சேவை செய்தல், துன்பத்தில் வாடும் அனைத்து உயிர்களிடமும் கருணை காட்டுதல், பணிவு, எளிமை, வாய்மை, சுயமரியாதையைக் காத்தல் போன்ற உயரிய பண்புகள் நமது பாரம்பரியத்தின் அடித்தளங்களாகும். ஆனால், இன்றைய இளைஞர்களில் சிலர் இத்தகைய நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றிலிருந்து விலகிச் செல்கின்றனர்.

அறிவியலும் தொழில்நுட்பமும் மனித வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், அவற்றின் வளர்ச்சி பொருள்சார்ந்த சிந்தனையை அதிகரித்து, வாழ்க்கையின் நோக்கத்தைப் புறவசதிகளைப் பெறுவதிலேயே குவிக்கச் செய்துள்ளது. இதனால், மனிதனின் அகந்தையும் ஆணவமும் அதிகரிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

இத்தகைய வருத்தத்திற்குரிய வீழ்ச்சி இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

இந்தத் துயரமான நிலைக்கு முக்கியக் காரணம், மனித ஆளுமையின் ஆன்மிக மற்றும் ஒழுக்கப் பண்புகள் புறக்கணிக்கப்படுவதுதான்.

அறிவும் தொழில்நுட்பமும் மட்டும் மனிதனை முழுமையாக்க முடியாது. அவற்றுடன் ஆன்மிக உணர்வும், ஒழுக்கமும், மனிதநேயமும் இணைந்திருக்க வேண்டும். பெரியோர்களை மதித்தல், பெற்றோரைப் போற்றுதல், பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல், உண்மையைக் கடைப்பிடித்தல், எளிமையுடன் வாழ்தல் போன்ற நற்பண்புகளை இளமையிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கரையான்கள் ஒரு கட்டடத்தை உள்ளிருந்து அரிப்பதுபோல, தீய பழக்கங்களும் மனிதனின் குணநலன்களையும் எதிர்காலத்தையும் மெதுவாகச் சிதைத்துவிடும். எனவே, அவை வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்பே விழிப்புடன் இருந்து அவற்றைத் தவிர்ப்போம்.

பொருள் வளர்ச்சியுடன் ஆன்மிக வளர்ச்சியும், அறிவுடன் ஒழுக்கமும், தனிமனித முன்னேற்றத்துடன் மனிதநேயமும் இணைந்தால்தான் மனித வாழ்க்கை உண்மையான மேன்மையை அடையும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் தெய்வீக உணர்வு – நம்மை நாமே திருத்திக்கொள்வோம்!

 நமது பார்வையில் சில பொருள்கள் உயிரற்றவையாகத் தோன்றலாம். ஆனால், வேதங்களின் பார்வையில், அனைத்திலும் சைதன்யம் (Chaitanya) எனப்படும் தெய்வீக உணர்வு நிறைந்துள்ளது.

சைதன்யம் எங்கும் நிறைந்திருக்கிறது என்றால், அதை நம் வெறும் கண்களால் ஏன் காண முடிவதில்லை என்று ஒருவர் கேட்கலாம்.

பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். வெண்ணெய் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக, அது பாலில் இல்லை என்று மறுக்க முடியுமா?

பாலிலிருந்து வெண்ணெயைப் பெறுவதற்கு, முதலில் பாலைத் தயிராக்கி, பின்னர் அதைக் கடைய வேண்டும். அப்போதுதான் பாலில் மறைந்திருக்கும் வெண்ணெய் வெளிப்படுகிறது.

அதேபோல, நம்முள் உறைந்திருக்கும் தெய்வீக உணர்வை உணர்வதற்கும் நாம் சில குறைகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.

மனிதனால் இந்தச் சைதன்யத் தத்துவத்தை உணர முடியாமல் போவதற்கு இரண்டு முக்கியமான குறைகள் காரணமாகின்றன:

  1. தன்னுடைய எண்ணற்ற தவறுகளை அலட்சியப்படுத்துவது.

  2. பிறருடைய மிகச் சிறிய தவறுகளைக்கூட பெரிதுபடுத்திப் பார்ப்பது.

இந்த இரண்டு குறைகளையும் அகற்றிக்கொள்ளாமல் ஒருவர் தெய்வீக நிலையை அடைய முடியாது. தன்னுடைய தவறுகளை மறைப்பதையும், பிறருடைய குறைகளைப் பெரிதுபடுத்துவதையும் நிறுத்தும்போதுதான் மனிதன் தெய்வீகத் தன்மையை உணரத் தொடங்குகிறான்.

இந்த இரண்டு குறைகளும் இதயத்திலிருந்து நீங்கிவிட்டால், மனிதன் உண்மையிலேயே தெய்வீகத்தின் வடிவமாகத் திகழ்கிறான்.

பிறருடைய குறைகளைக் கண்டறிவதில் ஈடுபடுவது பெரும் தவறாகும். அதற்குப் பதிலாக, முதலில் நம்முடைய குறைகளை ஆராய வேண்டும். நம்மிடம் காணப்படும் மிகச் சிறிய குறையைக்கூட மிகப் பெரிய தவறாகக் கருதி, அதைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

பிறரிடம் எவ்வளவு பெரிய குறைகள் இருந்தாலும், அவற்றைப் பெரிதுபடுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறரை விமர்சிப்பதைத் தவிர்த்து, நம்மையே நாம் விமர்சித்து ஆராய வேண்டும்.

“ஒரு மனிதனாகப் பிறந்த நான் இவ்வாறு நடந்துகொள்வது சரிதானா?” என்று ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை நேர்மையாக ஆராய்ந்து, அவற்றில் காணப்படும் தவறுகளைத் திருத்திக்கொள்வதே உண்மையான ஆன்மிகப் பயிற்சியாகும்.

ஆன்மிகச் சிந்தனை

வெண்ணெய் பாலில் மறைந்திருப்பதைப் போல, தெய்வீகம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கிறது. பாலைத் தயிராக்கிக் கடைந்தால் வெண்ணெய் வெளிப்படுகிறது; அதுபோல, நமது அகந்தை, பொறாமை, கோபம், பிறரைக் குறைகூறும் மனப்பான்மை ஆகியவற்றை நீக்கி, அன்பையும் பணிவையும் வளர்த்துக்கொண்டால் நம்முள் உறையும் தெய்வீகத்தை உணர முடியும்.

பிறருடைய குறைகளைத் தேடும் கண்களை விட, நம்முடைய குறைகளை உணரும் மனமே நமக்கு அவசியம். நம்மை நாமே திருத்திக்கொள்வதே இறைவனை உணர்வதற்கான உண்மையான பாதையாகும்.

நம்முள் உறையும் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் ஆன்மிக அட்டவணை

 நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மிக அட்டவணை அல்லது திட்டம் என்ன? பகவான் இன்று அதை நமக்காக அன்புடன் வகுத்துக் காட்டுகிறார்.

மனிதன் இந்த உலகிற்கு உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வரவில்லை. மாறாக, ஒழுக்கமான ஆன்மிகச் சாதனைகளின் மூலம் தனக்குள் உறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்தவே பிறந்துள்ளான். அதனால்தான் மனிதன் ‘வ்யக்தி’ என்று அழைக்கப்படுகிறான். அதாவது, தனக்குள் இருந்து இயக்கும் தெய்வீகச் சக்தியை வெளிப்படுத்துபவன் என்பதே இதன் பொருள்.

இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே மனிதன் உடலையும், அந்த உடலைச் சரியான வழியில் நெறிப்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான புத்தியையும் பெற்றுள்ளான். இதனைத் தர்மநிஷ்டை மற்றும் கர்மநிஷ்டை ஆகியவற்றின் மூலம், அதாவது அறநெறியை உறுதியாகக் கடைப்பிடித்தும் நற்செயல்களைத் தொடர்ந்து செய்தும் நாம் அடைய வேண்டும்.

சுட்டெரிக்கும் வெயிலால் நீங்கள் அவதிப்படும்போது, கோதாவரி ஆற்றில் நீராடுவது உங்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதுபோல, மனச்சமநிலைக்கான ஏக்கத்தால் உங்கள் இதயங்கள் வறண்டு போகும்போது, ஆன்மிகத்தில் உயர்ந்த பெரியோர்களின் அன்பான நல்லுறவில் திளைக்க வேண்டும். அவர்களுடைய உயர்ந்த சிந்தனைகளும் ஆன்மிக அனுபவங்களும் உங்கள் உள்ளத்திற்கு அமைதியையும் தெளிவையும் அளிக்கும்.

உடல் நலத்தைப் பேணுவதற்காக நாம் ஒரு கால அட்டவணையைப் பின்பற்றுகிறோம். அதேபோல, ஆன்மிக நலத்தைப் பேணுவதற்கும் ஒரு முறையான அட்டவணையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று பகவான் அறிவுறுத்துகிறார்.

அதற்கான ஆன்மிக அட்டவணை இதோ:

  • காலை உணவு – ஜபம், தியானம்: இறைவனின் திருநாமத்தை ஜபித்தும் தியானத்தில் ஈடுபட்டும் நாளைத் தொடங்குங்கள்.

  • மதிய உணவு – பூஜை: இறைவனை வழிபட்டு, நன்றியுணர்வுடன் அவரை நினைத்து மனதைப் புனிதப்படுத்துங்கள்.

  • மாலைத் தேநீர் மற்றும் சிற்றுண்டி – சாஸ்திரங்கள் அல்லது புனித நூல்களை வாசித்தல்: ஆன்மிக நூல்களைப் படித்து, அவற்றின் உயர்ந்த கருத்துகளைச் சிந்தித்து, வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயலுங்கள்.

  • இரவின் தொடக்கத்தில் எளிய உணவு – பஜனை: இறைவனின் திருநாமங்களைப் பாடி, பக்தியிலும் இறைநினைவிலும் மனதை ஈடுபடுத்துங்கள்.

இந்த ஆன்மிக அட்டவணையைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், மனம் அமைதியடையும்; உள்ளம் தூய்மையடையும்; வாழ்க்கையில் ஒழுக்கமும் சமநிலையும் வளரும். இதன் மூலம் நிம்மதியாக உறங்கவும், மறுநாள் புத்துணர்ச்சியுடன் விழித்தெழவும் முடியும்.

ஆன்மிகச் சிந்தனை

உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதேபோல ஆன்மாவிற்கு ஆன்மிகச் சாதனைகளும் அவசியம். உடலைப் பேணுவதில் காட்டும் அக்கறையைப் போலவே, நம் உள்ளத்தைப் புனிதப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும்.

ஜபம், தியானம், பூஜை, புனித நூல்களை வாசித்தல், பஜனை ஆகியவற்றை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்வோம். இச்சாதனைகளை வெறும் சடங்குகளாகச் செய்யாமல், அன்புடனும் பக்தியுடனும் கடைப்பிடிப்போம்.

நமது வாழ்வின் உண்மையான நோக்கம் நம்முள் உறையும் தெய்வீகத்தை உணர்வதே. அதற்கான வழி, ஒழுங்கான ஆன்மிகச் சாதனைகளும் அறநெறி நிறைந்த வாழ்க்கையுமே ஆகும்.

நவராத்திரி விழா: 11.10.2026, ஞாயிற்றுக்கிழமை முதல் 20.10.2026, செவ்வாய்க்கிழமை வரை. மஹா சண்டி யாகம்: 18.10.2026, ஞாயிற்றுக்கிழமை.

 அக்டோபர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை, சிட்னி துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நவராத்திரி விழாவில் பக்தர்கள் அனைவரும் அன்புடன் கலந்து கொண்டு, அன்னை துர்க்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியரின் அருளையும் ஆசியையும் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

சிறப்பு மஹா சண்டி ஹோமம் 2026 அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், மஹா சண்டி யாகம் மற்றும் தீப பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, அன்னை துர்க்கையின் அருளாசியைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றது.





நவராத்திரி விழா 2026 கலை நிகழ்ச்சிகள் – பேர்த் பாலமுருகன் ஆலயம்


 நவராத்திரி என்பது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க ஒன்பது நாள் இந்து சமயத் திருவிழாவாகும். வழமைபோல், இவ்வாண்டும் பேர்த் பாலமுருகன் ஆலயத்தில் 11 அக்டோபர் 2026 முதல் 20 அக்டோபர் 2026 வரை நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

இச்சுபமான திருவிழாவின் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து “ஆர்வ வெளிப்பாடு” (Expression of Interest) வரவேற்கப்படுகிறது.

நிகழ்ச்சிகளின் வகைகள்

  • பரதநாட்டியம் / பாரம்பரிய நடனம்
  • கர்நாடக / பக்திப் பாடல்கள்
  • கர்நாடக / பக்தி இசைக் கருவி வாசிப்பு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

  • திருமதி நித்யா முருகவேல் – தொலைபேசி: 0469 396 749
  • திரு. சதீசன் பசுபதீஸ்வரன் – தொலைபேசி: 0402 562 486

ஆர்வ வெளிப்பாட்டிற்கான இறுதித் தேதி : 25/09/2026