அரசியல் ஆய்வாளர், சட்டதரணி , ஆசிரியர் , சமூக சேவையாளர்
சோதிலிங்கம் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் உண்மையிலேயே மனவருத்தமாக இருந்தது. நான் இலங்கைக்கு செல்லும்போதெல்லாம் அவரிடம் சென்று அவரைப் பார்த்து அவரோடு பேசிக் கொண்டிருப்பது வழமை, ஆரம்ப காலத்தில் விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே ஒரு சிறு பழக்கம். மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பின்பு சந்திப்பு, ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத தோற்ற வேறுபாடுகள் ஆனால் சிந்தனை ஒன்றாகவே இருந்தது. அண்மை காலங்களாக அவருடைய சிந்தனை மக்களுக்கு எப்படி ஒரு நல் வாழ்வை எடுத்துக் கொடுக்க முடியும் என்ற சிந்தனையாகவே தொடர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் சென்று அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கின்ற பொழுது அவர் சொல்லுகின்ற விடயங்கள், எங்களுடைய தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்பட மறுக்கின்றது, மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் கூட ஒன்றுபட மறுக்கின்றார்கள், இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டும்தான் நம்முடைய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க முடியும். ஏனென்றால் சிங்கள இனவாத தலைமைகள் எப்போதுமே பௌத்த சிங்கள, இன, மத வாதத்தை மேற்கொண்டு நடக்கின்றவர்கள் ஆகவே அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டார்கள். அதற்கு ஏற்றது போல் எங்களுடைய தமிழ்த் தலைமைகளும் பிரிந்து நின்று கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக, ஆளுக்கு ஒரு விடயத்தை பேசிக் கொண்டிருப்பதும், அவர்களோடு சேர்ந்து கொண்டு தங்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொண்டிருப்பதும் நமது மக்களுக்குரிய விடிவைக் கொண்டு வர முடியாது. தமிழ்ப் பொது அமைப்புக்கள் சேர்ந்து இவர்களை ஒரு வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் இதுதான் தன்னுடைய சிந்தனையென்றே கூறிக் கொண்டிருப்பார். இதிலிருந்து நான் வேறு கருத்துக் கொண்டவன் என்றாலும் அவரோடு நட்போடு பேசலாம் .
கடைசித் தடவை நான் அங்கு சென்றபோது, நாங்கள் உரையாடிக்
கொண்டிருக்கின்ற போது நான் கேட்கின்றேன். அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக இருகின்றார், அவருடைய அரசாங்கம் ஒரு இடதுசாரி கொள்கைகளை முன்வைக்கின்ற அரசாங்கம் இந்த அரசாங்கத்தோடு தமிழ் தலைமைகள் கூட்டடாக பேசினால் ஓரளவுக்காவது எங்களுடைய பிரச்சனைகளை கேட்பதற்கு முன்வருவார்களே என்று நான் கேட்டபோது அவர் கூறிய விடயம், இந்த பௌத்த மதவாதிகள் சிங்கள இனவாதிகள் இருக்கும் வரைக்கும் அது எந்த அரசாங்கமாக இருந்தால் என்ன, எங்களுடைய எங்களுக்கு தேவையான அல்லது எங்களுக்கு தரப்பட வேண்டிய உரிமைகளை தர மாட்டார்கள் என்று ஆணித்தரமாக எடுத்துப் போடுவார். அப்ப இதற்கு என்ன மறுமொழி என்று கேட்டால் அவர் முன்வைக்கின்ற ஒரு விடயம், அரசியல்வாதிகள் மக்களுக்கு தலைமை தாங்க கூடாது, பொது சன அமைப்புகள் உடைய தலைமை அரசியல்வாதிகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அவர் கூறுவது போலவே அவர் மக்கள் அமைப்புகளோடு கூடுதலாக செயல்பட்டு வந்தவர், அது மட்டுமல்ல நீண்ட காலமாக இந்த தமிழ் பிரச்சினைகளைப் பற்றி, மக்களுக்கு எதிரான அரசாங்கங்களுடைய நடவடிக்கைகள் பற்றி சேகரித்த பல விடயங்களை, எழுத்துக்களை பத்திரிகை துண்டுகளை பெட்டகம் என்ற அமைப்பு ஊடாக சேமித்து வைத்திருக்கின்றார். அதற்காக தனி ஒரு மனிதனாக இருந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருந்தவர்.
கொண்டிருக்கின்ற போது நான் கேட்கின்றேன். அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக இருகின்றார், அவருடைய அரசாங்கம் ஒரு இடதுசாரி கொள்கைகளை முன்வைக்கின்ற அரசாங்கம் இந்த அரசாங்கத்தோடு தமிழ் தலைமைகள் கூட்டடாக பேசினால் ஓரளவுக்காவது எங்களுடைய பிரச்சனைகளை கேட்பதற்கு முன்வருவார்களே என்று நான் கேட்டபோது அவர் கூறிய விடயம், இந்த பௌத்த மதவாதிகள் சிங்கள இனவாதிகள் இருக்கும் வரைக்கும் அது எந்த அரசாங்கமாக இருந்தால் என்ன, எங்களுடைய எங்களுக்கு தேவையான அல்லது எங்களுக்கு தரப்பட வேண்டிய உரிமைகளை தர மாட்டார்கள் என்று ஆணித்தரமாக எடுத்துப் போடுவார். அப்ப இதற்கு என்ன மறுமொழி என்று கேட்டால் அவர் முன்வைக்கின்ற ஒரு விடயம், அரசியல்வாதிகள் மக்களுக்கு தலைமை தாங்க கூடாது, பொது சன அமைப்புகள் உடைய தலைமை அரசியல்வாதிகளை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அவர் கூறுவது போலவே அவர் மக்கள் அமைப்புகளோடு கூடுதலாக செயல்பட்டு வந்தவர், அது மட்டுமல்ல நீண்ட காலமாக இந்த தமிழ் பிரச்சினைகளைப் பற்றி, மக்களுக்கு எதிரான அரசாங்கங்களுடைய நடவடிக்கைகள் பற்றி சேகரித்த பல விடயங்களை, எழுத்துக்களை பத்திரிகை துண்டுகளை பெட்டகம் என்ற அமைப்பு ஊடாக சேமித்து வைத்திருக்கின்றார். அதற்காக தனி ஒரு மனிதனாக இருந்து தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருந்தவர்.
சென்ற ஆகஸ்ட் மாதம் நானும் மனைவியும் சென்று அவரோடு பேசிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் நான் அவரோடு பேசிக் கொண்டிருக்கின்ற போது அவரை ஒரு நேர்காணல் செய்ய வேண்டும், ஆழமான ஒரு நேர்காணலாக இருக்கும் என்று எண்ணியபோதும் அது நிறைவேறாமலே முடிந்து விட்டது. அவர் ஏற்கனவே இடதுசாரி போராட்ட அமைப்பிலே ஆரம்பத்திலே உதவிகள் செய்து பணியாற்றியவர் அதன் பின்பு நீண்ட காலமாக அந்தக் கொள்கைகளோடு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், மிகவும் அமைதியாக, மிகவும் பண்பாக எவரைப் பற்றியும் தரக்குறைவாக பேசாத ஒரு மனிதராக, அரசியலை முன்னிறுத்திக் கொண்டு சென்றவர் சோதிலிங்கம் அவர்கள்.
தமிழர்களின் விடயங்களை எல்லாம் பாதுகாத்து வைக்கின்ற அந்த பெட்டகம் அமைப்பு குப்புளானில் புதுப்பிக்கப்பட வேண்டும் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் முன்னெடுத்த நிகழ்ச்சியின் போது நாங்களும் கலந்து கொள்ள கூடியதாக இருந்தது. இதில் ஈழத் தமிழர்களுக்கான சேவைகள் புரிந்தவர்கள் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் உரையாற்றுகின்ற போது கூட அவருடைய பார்வை ஒரு வித்தியாசமான பார்வையாக இருந்தது . ஏனென்றால் மக்கள் அமைப்புகளை முன்வைத்து, அதற்கு ஊடாக முன்வைக்கப்படுகின்ற விடயங்களை ஒருமித்த கருத்தாக முன்வைத்தால் மட்டுமே உங்களுக்கான தீர்வுகள், உங்களுக்கான தேவைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பிரச்சினைகள் ஒரு குரலாக இருக்கும் என்று கூறியதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அவருடைய இடதுசாரி சிந்தனையின் வெளிப்பாடவே மக்கள் மீதும் மக்கள் அமைப்பின் மீதும் அவர் கொண்ட நம்பிக்கை இருந்தது .
நண்பர் ஜோதிலிங்கம் அவர்கள் சொன்னது போல தமிழ் மக்களுடைய அமைப்புக்களின் தலைமைகள் ஒரு ஒற்றுமையான ஒரு கோரிக்கையை இன்னது தான் தேவை தமிழ் மக்களுக்கு என்று தமிழ் தலைமைகளிடம் எடுத்துச் சென்று அந்த தமிழ் தலைமைகளை அதனையும் ஏற்றுக்கொள்ள வைத்து அதை அரசாங்கத்திடம் கொண்டு சென்றால் அது சோதிலிங்கம் அவர்களுடைய கனவை நினைவாக்கக்கூடிய ஒரு சொற்ப ஒளியாவது கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இலங்கை செல்லுகின்ற போது நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்களோடு சென்று பேசலாம் அவர்களோடு உரையாடலாம் அரசியல் விடயங்களை மக்கள் சம்பந்தமான விடயங்களை எல்லாம் பேசுவதற்கு நல்ல நண்பர்கள், விடுதலையோடு சம்பந்தப்பட்ட நிறைய பேர் இருக்கின்றார்கள் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் அடிக்கடி சமீப காலமாக அங்கே சென்று வந்தேன் சென்று வந்தது மட்டுமல்ல அவர்களோடு உரையாடி உறவாடியது மகிழ்வாக இருந்தது . ஆனால் இன்று சோதிலிங்கம் அவர்கள் மறைந்து விட்டார் என்ற போது ஒரு இழப்பு என்பது ஒரு குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை போல இப்போது தெரிகின்றது. இறுதியாக சந்தித்தபோது அவர் கூறினார் அடுத்த முறை நீங்கள் வரும்போது நான் இருப்பேனோ தெரியாது என்று கூறினார். ஒரு வருத்தத்துக்காக வைத்தியசாலை செல்லவுள்ளேன் அங்கு என்ன நடக்குமோ எனக்கு என்று குறிப்பிட்டார். எனக்கு வயது போய்விட்டது 70 வயதாகிவிட்டது, இந்த வைத்தியத்துக்கு நான் போகின்றேன் என்னுடைய உடல் இதை தாங்குமோ தெரியாது அடுத்த முறை நீங்கள் வருகின்ற போது நான்...... என்று கவலைப்பட்டபோது நான் கூறினேன் 70 வயது என்ன பெரிய வயதா இதெல்லாம் இலக்கம் மட்டும் தான் வயது என்பது இலக்கம் மட்டும்தான் நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள், மக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றீர்கள், இந்த வேளையிலும் நல்ல சிந்தனையோடு நல்ல வடிவத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆகவே நிச்சயமாக உங்களுக்கு எதுவும் நடக்காது நீங்கள் பயப்படாமல் இந்த வைத்தியத்தை செய்யுங்கள் இது ஒரு சிறிய வைத்தியம் தான் ஆகவே நிச்சயமாக இதை குணப்படுத்திக் கொண்டு வரலாம் நீங்கள் பயப்படாமல் சென்று வாருங்கள் என்று கூறியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பின்பு நான் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வீதியிலே நின்ற போது ஒரு கை ஒன்று என்னுடைய தோளிலே தட்டியது திரும்பி பார்த்தேன் சோதிலிங்கம் அவர்கள் வேட்டியும் சால்வையும் அணிந்து கொண்டு என்னுடைய பக்கத்திலே, எப்படி என்றார் நன்றாக இருக்கின்றேன் என்று கூறிவிட்டு சில நிமிட நேரம் அளவளாவி விட்டு ஒவ்வொரு பக்கமாக நாங்கள் பிரிந்து சென்றோம் அதுதான் அவரை நான் இறுதியாக பார்த்தது. அதற்கு பின்பு இங்கு வந்து நான் அவருடன் கதைக்க வேண்டும் அவரை ஒரு நேர்காணல் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட பல வேலைப் பழுக்களுக்கு மத்தியிலே அதை செய்ய முடியாமல் போனது மிக மன வருத்தமாக கூட இருக்கின்றது. ஏனென்றால் அவர் சொல்ல வேண்டிய பல விடயங்கள் எனக்குத் தெரிந்த அவர் என்னோடு பழகிய விதத்திலே அவர் ஒரு வித்தியாசமானவர் மட்டுமல்ல இரண்டு முகங்கள் அவருக்கு இருக்கின்றது ஜனநாயகவாதியாக மக்கள் வாதியாக இருந்த ஒரு முகம் போராட்ட காலத்திலே இருந்த இன்னும் ஒரு மனிதனாக இவற்றையெல்லாம் அவரோடு பேசி சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விடயம் இருந்தது.
இலங்கையிலே எமது பிரதேசத்திலே பல இளைஞர்கள் யுவதிகள் தற்கொலை செய்கின்றார்கள் இந்த தற்கொலைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்று பல பேருக்கு தெரியாமல் இருக்கின்றது. ஒரு இளம் பெண்னுடைய மரண வீட்டிட்கு போனேன் அங்கே போகின்ற போது சோதிலிங்கம் அமர்ந்திருந்தார் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது நான் கேட்டேன் இந்த பிள்ளைகள் இப்படி எல்லாம் தற்கொலை செய்கின்றார்கள். தமிழ் பிரதேசங்கள் எங்குமே இந்த தற்கொலைகள் நடக்கின்றது. இதற்கு ஏன் எங்களுடைய தமிழ் தலைமைகள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்றேன். ஏன் இந்த இளம் இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு முன்னெடுப்புகள் ஒன்றும் செய்யப்படாமல் இருக்கின்றது இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டேன். அப்போது ஜோதிலிங்கம் கூறினார் நிச்சயமாக இதெல்லாம் பார்க்கப்பட வேண்டிய ஒரு விடயம்,நாங்கள் மக்களோடு இருந்த காலத்திலேயே இப்படியான விடயங்கள் பலவற்றை முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இன்றுள்ள தலைமைகள் இதைப் பற்றி எல்லாம் கவனிப்பதற்கு நேரமில்லாமல் இருக்கின்றது. அவர்கள் இதைப் பற்றி சிந்திப்பதில்லை அவர்கள்தான் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஆனால் எங்களால் அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை நாங்கள் வழங்க முடியும், இதெல்லாம் பார்க்கப்பட வேண்டிய விடயம், ஆனால் எங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை, ஏனென்றால் பொது அமைப்புகளோடு சேர்ந்து இயங்குவதற்கான ஆட்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றது ஆனால் அரசியல் கட்சிகளோடு சேர்ந்து இயங்குவதற்கு நிறைய பேர் இருக்கின்றார்கள். ஆகவே இப்படியான விடயங்கள் பார்க்கப்பட வேண்டும் அதற்காக இன்னும் பலர் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மையிலேயே ஒரு நல்ல கருத்து இப்போது கூட பார்த்தால் தற்கொலைகள் கொலைகள் என்று நடந்து கொண்டிருக்கின்றது 18, 19, 20 வயது யுவதிகள், இளைஞர்கள் இப்படியான சம்பவங்களில் ஈடுபடுகின்றார்கள், இவர்களுக்கு விரக்தி, இவர்கள் பேசுவதற்கு சரியான ஆட்கள் இல்லை, தங்களுடைய பிரச்சினையை சொல்லுவதற்கு, அதைக் கேட்டு அதற்கு விளக்கம் சொல்வதற்கு ஆட்கள் இல்லை இது எல்லாம் பற்றி சிந்திக்க வேண்டும், இதைப் பற்றி எல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் கூட அவருக்கு இருந்தது, ஆனால் இவ்வளவு விரைவாக இந்த செய்தி வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை .
அடுத்த முறை நான் போகின்ற போது அவரோடு பல விடயங்களை பேச வேண்டும் என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தேன் ஆனால் இன்று அவர் இறந்து விட்டார், அந்த செய்தியை கேட்டவுடன் உண்மையிலேயே கண்ணீர் வந்தது . ஒரு நல்ல மனிதர், யாருக்குமே தீங்கு செய்யாத ஒரு மனிதர் நல்லதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மனிதர், நம்மை விட்டு போய்விட்டார், அவருடைய தற்போதைய கருத்துக்களில் நாம் மாற்றுக கருத்துக் கொண்டிருந்தாலும் , எதையும் அவரோடு பேசலாம் , விவாதிக்கலாம் . அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். மக்களை விரும்பிய மனிதன் மறைந்து விட்டார். சோதிலிங்கம் இனி நினைவாக இருப்பார் .
2 comments:
பகிர்வுக்கு நன்றிகள். குப்புளான் அல்ல, குப்பிழான் அல்லது குப்பிளான்
nantri I will change
Post a Comment