நட்சத்திர நடிகர்களின் படங்கள் பெரும் செலவில் தயாராகி
தோல்வியடையும் போது சாதாரண நடிகர்களின் சிறிய பஜட்டிலான படம் பெரும் வெற்றியை பெற்று விடுவது உண்டு. அவ்வாறு 1976 ல் வெளியாகி சாதனை படைத்த படம் அன்னக்கிளி. கதாசிரியர் செல்வராஜ், வசனகர்த்தா பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், இயக்குனர்கள் தேவராஜ் மோகன் இவர்கள் எல்லோருடனும் சேர்த்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இப் படம் திருப்பு முனையாக அமைந்தது.
சிறிய பஜெட்டில் ஐந்து இலட்ச ரூபாய் செலவில் படத்தை எடுத்த போதும் ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு கூட எவரும் வாங்க முன் வரவில்லை . இதனால் புதிதாக இசையமைத்த இளையராஜாவின் நிலை மட்டுமன்றி அவரை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாசலத்தின் நிலை கூட வில்லங்கமாகத் தான் இருந்தது. ஆனால் படம் திரைக்கு வந்து ஒரு வாரம் கழித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற பின்னர்தான் இளையராஜா உட்பட அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.
படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை காரணம் என்றால்
அன்னமாக நடித்த சுஜாதாவின் நடிப்பும் ஒரு காரணம் என்பதை குறிப்பிட வேண்டும். பாத்திரமாகவே மாறி விட்டார். ஏற்கனவே நடித்த சில படங்களில் நாகரீக பெண்ணாக நடித்தவர் இதில் கிராமத்து மருத்துவச்சியாக பாத்திரத்துடன் ஒன்றியிருந்தார்.

அவரின் இணை சிவகுமார். கதாநாயகனாக அமைதியான மென்மையான வேடத்தில் நடித்திருந்தார் அவர். ஹீரோவாக அவர் நடிக்கத் தொடங்கிய பின் இப் படத்தில் தான் இப்படி ஒரு வெற்றியை அவர் கண்டார். வில்லனாக வந்து கொண்டிருந்த ஸ்ரீகாந்த் இதில் நல்லவராக வந்து ஆச்சரியப் படுத்துகிறார். ஆனாலும் அவரது பாத்திரம் அழுத்தமாகவே அமைந்திருந்தது. படாபட் ஜெயலஷ்மியும் நிறைவாக செய்திருந்தார்.
வில்லனாக வருபவர் தேங்காய் சீனிவாசன். ஏற்கனவே
மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் வில்லனாக வந்தவர் இதிலும் அதே நடிப்பை தொடர்கிறார். எஸ் வி சுப்பையா, எம் என் ராஜம், ஜோடி இதிலும் தொடர்ந்தனர் . செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் வில்லனாக வந்தவர் இதிலும் அதே நடிப்பை தொடர்கிறார். எஸ் வி சுப்பையா, எம் என் ராஜம், ஜோடி இதிலும் தொடர்ந்தனர் . செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
பின் தங்கிய கிராமத்தில் அமைதியாக வாழும் ஒர் இளம் பெண், சாந்தமே உருவான பள்ளி வாத்தியார் இவர்களிடையே வளரும் காதலை மென்மையாக படமாக்கியிருந்தார்கள். பாரதிராஜா கிராமத்துக்கு போகும் முன் அன்னக்கிளி குக்கிராமத்தில் உருவாகி விட்டது.
படத்தில் அன்னத்தின் கதா பாத்திரம் ஆண்டாளாகத் தொடங்கி கண்ணகியாக முடிகிறது! ஆர். செல்வராஜா எழுதிய கதைக்கு திரைக் கதை வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். பாடல்களையும் அவரே எழுதினார். அன்னக்கிளி உன்னைத் தேடுதே , மச்சானை பார்த்தீங்களா , முத்து முத்து பச்சரிசி கொட்டத் தன வேணும், உட்பட படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழகம் கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று எல்லா இடங்களிலும் ஒரே வேகத்தில் ரசிகர்களால் ரசிக்கப் பட்டு ஒரே இரவில் இளையராஜா சிகரம் தொட்டார். இந்த அபரிதமான வெற்றிக்கு இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் பங்களிப்பும் மகத்தானது. இப் படத்தில் பாடியது முதல் எஸ் ஜானகி, இளையராஜா இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஜானகியின் இசை வாழ்வில் புது அத்தியாயம் எழுதப் பட்டது.
கிராமத்தில் இயல்பான கட்சிகளுடன் படம் நகர்கிறது. அன்னம் ,
வாத்தியார் காதல் வரம்பு மீராமல் காண்பிக்கப்படுகிறது. படதின் கிளைமாக்ஸ் காட்சி , டூரிங் டாக்சில் கண்ணகி படம் காண்பிக்கையில் அதில் கண்ணகி தன் கற்பை நிரூபித்து சீறும் போது , அன்னம் வில்லன் பிடியில் இருந்து தன் கற்பை காக்க போராடும் காட்சியோடு இணைத்து காண்பிக்கப்பட்டது நல்ல யுக்தி . ஆனாலும் படத்தில் சினிமா கொட்டகை ஓனர் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு எல்லாம் ஓசி டிக்கெட் கொடுத்து தன்னுடன் சல்லாபிக்க பஞ்சணைக்கு அழைக்கும் காட்சி அபத்தம் , கிராமியப் பெண்களை இழிவு செய்வது போல் அமைந்திருந்தது .

பிரபல ஒளிப்பதிவாளர் பி .என் .சுந்தரத்திடம் நீண்ட காலம் உதவியாளராக பணிபுரிந்த ஏ. சோமசுந்தரம் ஒளிப்பதிவை கையாண்டார். கருப்பு வெள்ளை படத்தினுள் கிராமத்தின் அழகை காட்டியிருந்தார் அவர்.
பி. மாதவனிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் தேவராஜ் மோகன் இருவரும் . 50ம் ஆண்டுகளில் வெளிவந்த சர்ச்சைக்குரிய மனிதன் படத்தின் கதாசிரியரான சோமசுந்தரத்தின் மகனான தேவராஜ், நடிகர் முத்துராமனின் மைத்துனரான மோகனும் இணைந்து பொண்ணுக்குத் தங்க மனசு , உறவு சொல்ல ஒருவன் படத்தை தொடர்ந்து இப் படத்தை டைரக்ட் செய்தார்கள். இந்தப் படம் அவர்களின் மூன்றாவது வெற்றி படமானது.
மதுரையில் இப்படத்தை ஒரு இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு வினியோகஸ்தர் பதின்னைத்து இலட்சம் ரூபாய் இலாபம் பார்த்தார்.
கண்ணதாசனிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலம் எம் .எஸ் . விஸ்வநாதனின் இசையில் சில பாடல்கள் எழுதியிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் கண்ணதாசன் , விசுவநாதன் இடையில் மன முறிவு ஏற்பட்டிருந்தது. அச் சூழலில் பஞ்சு அருணாசலத்தின் குடும்ப நிகழ்வொன்றில் இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ் இருவரும் அமர்த்தப் பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் எம் எஸ் வியின் சீடர்கள். கண்ணதாசனுடனான மோதலால் அவரின் அண்ணன் மகனான பஞ்சு அருணாசலத்தின் நிகழ்வில் இசை வழங்க வேண்டாம் என எம் எஸ் வி
, சங்கர் கணேஷை தடுத்து விட்டார். இது பஞ்சு அருணாசலத்துக்கு பெரும் அவமானமாக போய் விட்டது. இதனை மனதில் வைத்தே அவர் இளையராஜா என்ற புது இசையமைப்பாளரை அறிமுகப் படுத்தினார் என்று அன்னக்கிளி படத்துக்கு கதை எழுதிய ஆர் செல்வராஜ் தனது அனுபவத் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி என்றாலும் இளையராஜாவின் வருகை காலத்தின் கட்டாயம் தான்! அவரின் வரவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இசை புதிய பரிணாமத்தைப் பெற்றது. பொன் விழா ஆண்டின் இந்தப் படங்கள் வரிசையில் அன்னக்கிளி படம் இடம் பெறும் போது இளையராஜாவுக்கும் திரையுலகில் இது பொன் விழா தான் !
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment