வெற்றியடா ஒன்றுகூடல்!




 

பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்        

















இன்றுபல ஆண்டுகளுக்கு முன்பொரு நாளிலெம்

    இராமநாதன் தலைமையி    லோர் ஒன்றுகூடல்!

நன்றங்கு சென்றிட்டால் சூடாய் வடையும்

    நாக்கிற்குச் சுவையான மதிய உணவும்

மன்றத்தின் கணக்கினிலே சாப்பிட லாமென

    மனைவியையும் என்னினிய நண்பர் உடனே

வென்றங்கு பரிசெடுக்கா விட்டாலும் நல்ல

    விருந்திருக்கும் எனக்கூட்டி விரைந்து சென்றேன்!.












இடியொடு;மழை வருமென்றே ஏங்கி நின்றோம்

   இயற்கையன்னை இதமான நாளைத் தந்தாள்!

பிடிஊசி என்றோடி நூலுங் கோர்த்தோம்

   பேசிநின்றோம் பாட்டுக்குப் பாட்டி சைத்தோம்!

படிகளிலே அமர்ந்(து)ஆறித் தேநீர் உண்டோம்!

   பாவையர்பழத் தோடோடப் பார்த்து ரசித்தோம்!

அடிசக்கை சங்கீதக் கதிரை சுற்றி

    அதற்கடுத்துப்புதையலொன்றைத் தேடிக் கழைத்தோம்!































தள்ளாத வயதினிலும் போட்டி போட்ட

   தமிழ்மூத்த சங்கத்தோர் ஓடிய ஓட்டம்!

மெள்;ளமெள்;ள விளையாட்டும் களைகட் டிற்று!

   விழுந்தெழுந்து நரைத்த மீ சையிலே ஒட்டிய

வெள்ளைமணல் தனைத்தட்டி விட்டே எழுந்து

   வேங்கைபோற் பாய்ந்து பாய்ந்து ஓடி நானும்

எள்ளிநகை ஆடியோரும் நாணி நிற்க

   எப்படியோ முதலிடத்தை அடைந்து வென்றேன்!











கடித்துண்ணப் பதமான குண்டுத் தோசை!

   காரசாரப் புளியோதரை கட்டிச் சம்பல்!

பிடித்தமான  பலவிதபட் சணங்கள் தன்னைப்

   பிரியத்தொடு பரிமாறப் பெற்றே உண்டோம்!

குடிப்பதற்குத் தந்தநீரைக் குடித்து விட்டுக்

   குதூகலமாய் வீடுசென்றேன்! உறங்கி விட்டேன்!

விடிந்தவுடன் எழுந்திருந்து நினைத்துப் பார்த்தேன்

   வெற்றியடா ஒன்றுகூடல் என்னே  இன்பம்!











ஊசி நூல் கோர்க்க ஓடல் - Threading a Needle Race

பாவையர்பழத்துடன்  ஓடல் - Lime and Spoon Race

சங்கீதக் கதிரை    -     Musical chair

புதையலொன்றைத் தேடி  - Treasure Hunt


No comments: