அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்திற்கு 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்.

அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்யும்போது, தமிழ்ச் சமூகத்தினர் வீட்டில் உள்ள அனைவருக்கும் பின்வருமாறு பதிவு செய்யுமாறு வேண்டப்படுகிறீர்கள் :

கேள்வி - வீட்டில் பேசப்படும் மொழி எது ? : TAMIL 

கேள்வி உங்களது பூர்வீகங்கள் எது ?

பூர்வீகம் 1 : TAMIL

பூர்வீகம் 2 : SRI LANKAN TAMIL அல்லது INDIAN TAMIL

பூர்வீகமாக Tamil என்று பதிவு செய்வது, பல்வேறு நாடுகளையும் தலைமுறைகளையும் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைந்த தமிழ் அடையாளத்தின் கீழ் இணைக்க உதவுகிறது. 

அதேவேளை, நாடு சார்ந்த  Sri Lankan Tamil  அல்லது Indian Tamil என்ற தமிழ் சார்ந்த பூர்வீக பதில்கள் ஒவ்வொரு சமூகத்தினதும் தனித்துவமான பின்னணியைப் பாதுகாக்கின்றன. 

இந்தப் பதில்கள் "நாம் யார்" என்பதை மேலும் முழுமையாகப் பிரதிபலிப்பதுடன், தமிழ் மொழிப் பாடசாலைகள், மொழிபெயர்ப்பு சேவை, முதியோர் பராமரிப்பு, சுகாதாரச் சேவைகள், சமூகத் திட்டங்கள் மற்றும் அரசாங்க நிதியுதவிகளை எமது தமிழ் சமூகத்துக்கு பெறவும் பெருமளவில் உதவுகின்றன.

உங்களின் ஆதரவுக்கு நன்றிகள். 🙏



No comments: