கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம் !


 












 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



கீதை சொல்லக் கண்ணன் தேரேறி வந்தான்
பார்த்தனுக்குப் பாதை காட்டியவன் நின்றான்
பார்த்தனவன் தெளிந்தான் பக்குவத்தை அடைந்தான்
பாரிலுள்ளார் விழிக்கப் படித்திடுவோம் கீதை 

கீதையைப் படித்தால் பாதை தெளிவாகும்
பாதை தெளிவானால் பயணம் சிறப்பாகும்
பயணம் சிறப்பானால் மனது மகிழ்வடையும்
மனது மகிழ்வடைந்தால் நிறைவுவங்கே பொலியும்

எண்ணுகின்ற எண்ணம் இழுக்ககற்ற வேண்டும்
இழுக்ககன்று நிற்க இறைநினைப்பு வேண்டும்
இறைநினைப்பை ஊட்ட கீதை வழிகாட்டும்
வழிகாட்டும் கீதை வாழ்க்கைத் துணையாகும்

கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்
வாழும் நெறியாக்கினால் வாழ்வு வளமாகிடும்
வாழ்வு வளமாகிட  மனிதமனம் நினைக்குது
மனிதமனம் துலங்கிட கீதை வழிக்காட்டிடும்

கீதைசொல்லக் கண்ணன் நாளும் வருகின்றான்
பார்த்தனாய் இருப்பார் பக்கம் வருகின்றான்
உயர்வான கீதையை உபதேசம் செய்து
மகிழ்வாகக் கண்ணனும் வருகின்றான் தினமும்

பார்த்தனாய் நாமும் பக்குவமாய் இருந்தால்
கண்ணனது கீதை கருத்தினிலே பதியும்
கருத்தினிலே பதிந்தால் கண்ணனுமே தெரிவான்
கண்ணனது கீதை கண்ணனையே காட்டும்  !







No comments: