எம் ஜி ஆரின் நடிப்பில் ஆண்டுக்கொரு படம் எடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்த ஜி என் வேலுமணி , அதே போல் ஆண்டுக்கொரு படத்தை புதிதாக அறிமுகமான நடிகர்களை போட்டும் எடுத்துக் கொண்டிருந்தார் . அந்த வரிசையில் 1966ம் ஆண்டு அவர் தயாரித்த படம் கௌரி கல்யாணம்.
ஏற்கனவே சிவாஜி நடிப்பில் பாகப்பிரிவினை, பாலும் பழமும் போன்ற குடும்பக் கதைகளை படமாக்கிய அவர் இம்முறையும் குடும்பக் கதை ஒன்றையே படமாக்கியிருந்தார். 1965ல் ஜெய்சங்கர், முத்துராமன் நடிப்பில் பஞ்சவர்ணக் கிளி படத்தை தயாரித்தவர் இம்முறையும் இரண்டு கதாநாயகர்களை கொண்ட படத்தை உருவாக்கினார். ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் இதில் நாயகர்களாக நடித்தனர்.
தபால்காரனான ராஜு தன் தங்கை கௌரியை உயிராக பேணி
வளர்க்கிறான். அவளின் கல்லூரியில் பயிலும் சக மாணவன் ராமு செய்யும் குறும்புகளை சகிக்க முடியாத கௌரி அது பற்றி ராஜுவிடம் முறையிட , ராஜு தெருவில் ராமுவுடம் ஆக்ரோஷமாக மோதுகிறான் . ஆனால் சில காலங்களில் கௌரி , ராமு இருவரிடையே காதல் மலர்கிறது. இப்போது அண்ணன் தங்கையின் காதலுக்கு தடை போடுகிறான். இதனிடையே ராஜு பள்ளி ஆசிரியை லஷ்மியை மானசீகமாக காதலித்த போதும் லஷ்மி அவனின் காதலை நிராகரிக்கிறாள் . கௌரி கல்யாணம் தன் வாழ்வின் இலட்சியம் என்று வாழும் ராஜு அவளின் காதலை அங்கீகரித்து கௌரி கல்யாணத்தை நடத்துகிறானா என்பதே படத்தின் முடிச்சு.

1960 ம் ஆண்டுகளில் பிரபல நாடகாசிரியர் பிலஹரி . இவர் எழுதிய பாலாடை, கஸ்தூரி திலகம், ஆலயம் போன்ற மேடை நாடகங்கள் திரைப்படங்களாக வெளி வந்தன. பிலஹரியின் கதைகள் குடும்பங்களில் நிலவும் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவே அமைவதுண்டு. இப் பட கதையும் அவ்வாறே அமைந்தது. அந்த வரிசையில் அவர் இந்தக் கதையை எழுதி அதற்கு வசனங்களையும் எழுதியிருந்தார். இரண்டிலும் அவரின் திறமை வெளிப்பட்டது.
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவரும் தங்களின் பாத்திரத்தை
உணர்ந்து நடித்திருந்தனர். ஜெய் சற்று அடக்கமாக நடிக்க, ரவி ஆடிப் படி, குதித்து ஸ்டைல் காட்டி நடித்திருந்தார். புலந்திரன் நாட்டிய நாடகத்தில் அவரின் டான்ஸ் கவருகிறது. ஜெயலலிதா , ஷீலா என்று இரண்டு ஹீரோயின்கள். இருவரும் நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் ஈடு கொடுக்கிறார்கள். இவர்களுடன் பண்டரிபாய் தாய்ப் பாசத்தை பொழிகிறார். படத்தில் நாகேஷ் இருக்கிறார். தனியாக காமடி செய்கிறார். அதே போல் மனோரமா இருக்கிறார் அவருக்கு ஜோடி எஸ் வி ராமதாஸா! ? தந்தை வேடத்தில் வரும் வி .எஸ் . ராகவன் நடிப்பு ஓகே. இவர்களுடன் எஸ் . என் .லஷ்மி, கே. விஜயன், தனராஜ், கரிக்கோல்ராஜு, பகோடா காதர், மாஸ்டர் பிரபாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

வேலுமணியின் படம் என்றாலே பாடல்கள் தேன் தான். இந்தப்
படத்திலும் அது தொடர்ந்தது. இப் படத்தில் பூவை செங்குட்டுவன் என்ற புதுக் கவிஞரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தார் வேலுமணி. கந்தன் கருணை படத்துதுக்காக அவரின் முதல் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்த போதும் முதலில் இப் படமே வெளியானது. செங்குட்டுவன் இயற்றிய திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் என்ற பாடல் இன்றும் பக்தியுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வரணும் வரணும் மகாராணி பாடலும் நல்லதொரு டூயட் பாடலாக நினைவில் நிற்கிறது. அதே போல் கண்ணதாசன் இயற்றிய ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும்
சேவை இது என்ற பாடலுக்கு மிஞ்சி இனி ஒரு பாடல் தபால்காரரின் சேவையை சிறப்பித்து கூறும் படி வர முடியாது! இது தவிர பாரதியாரின் வெள்ளைக் கமலத்திலே பாடலும் , கனகாவின் நடனமும் காட்சியும் அருமை. எம் .எஸ் . விஸ்வநாதன் இசையும் அருமை. ஆனால் வழக்கமாக அவர் இசையில் இடம் பெரும் எல் .ஆர் . ஈஸ்வரி பாடல் ஒன்று கூட இதில் இல்லை. அதற்கு பதில் அவர் இசையில் அரிதாக பாடும் சூலமங்கலம் ராஜலஷ்மி இதில் இரண்டு பாடல்களை பாடி பாடல்களும் பிரபலமாகின. படத்தின் டைட்டிலில் இடம் பெறும் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரம் இதமாக ஒலிக்கிறது.

படத்தை தம்பு ஒளிப்பதிவு செய்தார். கே. சங்கர் டைரக்ட் செய்தார்.
ரவி, ஜெயலலிதா தோன்றும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன. ஜெய், உணர்ச்சிகரமாக நடித்தார். ஆனாலும் கூடப் பிறந்த அண்ணன் தங்கை பாசம், கூடப் பிறக்காத அண்ணன் தங்கை பாசம், தாய்ப் பாசம் , நண்பனுக்கான நன்றிக் கடன் என்று சில இடங்களில் ஓவர் சென்டிமென்டல் கஷ்டப்படுத்தியது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். ஆனாலும் இளமையான ஜெய் , ரவி, ஜெயலலிதா, ஷீலா நடிப்பை ரசிக்கலாம்!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment