Azonway Pictures - லீ முரளி இணையும் புதிய படத்தின் ‘டைட்டில் போஸ்டர்‘ ஏப்ரல் 13 வெளியீடு!

 .

Azonway Pictures - லீ முரளி இணையும் புதிய படத்தின் ‘டைட்டில் போஸ்டர்‘ ஏப்ரல் 13 வெளியீடு!

'கூத்தாடி' திரைப்படத்தை தொடர்ந்து Azonway Pictures தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் #பெயர் #title எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

Azonway Pictures இன் ஐந்தாவது திரைப்படமாக உருவாகும் இதனை லீ முரளி இயக்குகின்றார். இதன் தொடக்க விழா (பூஜை) அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்றதுடன், படப்பிடிப்புக்களும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இதில் செல்வின் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அவருடன் இணைந்து பிரபல சிங்கள நடிகர்களான ரஞ்சன் ராமநாயக்க, உதாரி வர்ணகுலசூரியா, மிச்சல் தில்காரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அதேசமயம், ஈழத்தின் சிறந்த நடிகர்களான அல்விஸ் கிளின்டன், ஆர்.ஜே நெலு, பானுக பெர்னாண்டோ, கிரிஷான் வினோதன், தர்சி பிரியா, பூர்விகா ராஜசிங்கம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், ஹிப் ஹாப் சங்கீ இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இலங்கையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கதிர் ஒளிப்பதிவு செய்கின்றார்.


பல திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி வரும் இந்த திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதை வடிவமைப்பிலும் புதிய தரத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு, அதன் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

இதனை, வருகிற ஏப்ரல் 13 ஆம் திகதி இலங்கையின் பிரபலமான மூத்த நடிகை கலாபூஷணம் ஜெயகௌரி  அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: