ஆசைகளை அடக்கி, அன்பின் மூலம் மனதை வெல்வோம்!

 விஷ்ணு பகவானைப் போற்றும் ஒரு புகழ்பெற்ற பிரார்த்தனை:

“சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேசம்...”

என்பதாகும்.

இதன் பொருள்: தாமரை மலர் தொப்புளிலிருந்து தோன்றியவரும், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகளைக் கொண்ட நாகத்தின் மீது சாந்தமாகப் பள்ளிகொண்டிருப்பவரும், தேவர்களின் தலைவருமான ஸ்ரீமன் நாராயணனை வணங்குகிறோம் என்பதாகும்.

இந்தப் பிரார்த்தனையின் உள்ளார்ந்த தத்துவம் என்ன?

ஆயிரம் தலைகளைக் கொண்ட நாகத்தின் மீது பள்ளிகொண்டிருந்தாலும், பகவான் விஷ்ணு எப்போதும் அமைதியும் சாந்தமும் நிறைந்தவராக இருக்கிறார். இத்தகைய ஆழ்ந்த அமைதியை அவரால் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ள முடிகிறது?

அதற்குக் காரணம், அவர் அந்த ஆயிரம் தலை நாகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்பதேயாகும்.

வாழ்க்கை ஒரு நீண்ட ஆன்மிகத் திருத்தேர்ப் பயணம்!

 நீங்கள் நமது நாட்டில் பல்வேறு திருத்தேர்த் திருவிழாக்களையும் (ரத யாத்திரை) கண்டிருப்பீர்கள். அத்தகைய தேர்ப் பவனிகள் பொதுவாக மிகவும் கோலாகலமாகவும் நீண்ட ஊர்வலமாகவும் நடைபெறுகின்றன.

முன்னால் மேளதாளங்கள், ஜால்ராக்கள், பஜனைப் பாடல்கள், இசைக் கலைஞர்களின் குழுக்கள், ஏன் கோமாளிகள்கூட அணிவகுத்துச் செல்வார்கள். தேர்ச் செல்லும் பாதை முழுவதும் கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அழகிய அலங்காரங்களுடன் யானைகளும், வெள்ளி மணிகள் ஒலிக்க கம்பீரமாகச் செல்லும் குதிரைகளும், கிராமிய நடனங்களை ஆடும் மக்களும் அந்த ஊர்வலத்தில் இடம்பெறலாம்.

ஆனால், இத்தனை ஏற்பாடுகளும் எதற்காக?

பெண்மையின் பெருமையும் மகத்துவமும்!

 இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் மனிதப் பிறவி மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதப் பிறவியிலும் பெண்ணாகப் பிறப்பது ஒரு பெரும் பேறாகும். பெண்களின் உயர்வையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதற்குப் பல சிறந்த உதாரணங்கள் உள்ளன.

இறைவனின் அவதாரமான ஸ்ரீராமர், அன்னை கௌசல்யாவின் கருவில்தானே அவதரித்தார்? லவனும் குசனும் அன்னை சீதையின் மைந்தர்களாகப் பிறந்ததால்தானே பெருமையும் புகழும் பெற்றனர்? ஜீஜாபாயின் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் சிவாஜியை ஒரு மாவீரனாக உருவாக்கவில்லையா? புத்திரபக்தியும் இறைநம்பிக்கையும் நிறைந்த புத்திலிபாயின் (Putlibai) நற்பண்புகள்தானே காந்தியை மகாத்மாவாக உயர்த்தின?

சேவை செய்வதே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு!

 மகாபாரதப் போரின் உச்சக்கட்டமான குருக்ஷேத்திரப் போரின்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும் அர்ஜுனனின் தேரோட்டியாகப் பணியாற்றினார். போரின் முடிவில் மாலைப் பொழுது வந்ததும் போர் நிறுத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணர் குதிரைகளை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அவற்றிற்கு இதமான நீராடல் செய்வித்து, போரின்போது ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துத் தைலங்களைப் பூசினார். மேலும், கடிவாளங்களையும் குதிரைகளுக்கான கட்டுகளையும் சீரமைத்து, மறுநாள் மீண்டும் போருக்குத் தயாராகும் வகையில் தேரையும் செப்பனிட்டார்.

இறைவனே இவ்வாறு சேவையின் மகத்துவத்தைத் தமது செயல்களின் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வோர் உயிரினத்திற்கும் நாம் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யப்படும் சேவையாகும்; அத்தகைய சேவையை இறைவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அவர் உணர்த்துகிறார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 63 யுகங்களின் குரல் "மஹாகவி உருத்திரமூர்த்தி " பதிவும் பகிர்வும்

 


நாள்:  சனிக்கிழமை 28-11-2026

 நேரம்:

 இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09&omn=89908160430

 சிறப்புப் பேச்சாளர்கள்:

பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்

கலாநிதி  சு.குணேஸ்வரன்

 விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்

ஆய்வாளர்  யோ. ஜோன்சன் ராஜ்குமார்

ஆய்வாளர்  சி.ரமேஷ்

ஒருங்கிணைப்பு:   கலாநிதி எம். எம். ஜெயசீலன்

மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

இனிய இலக்கிய சந்திப் 29/11/2026

 



கர்ணன் – விதியைத் தாண்டி 06/12/2026


 

டிசம்பர் 6 | மாலை 4:30 மணி – இரவு 9:00 மணி

நுழைவுக் கட்டணம்: A$45.00 – A$150.00

கர்ணன் – விதியைத் தாண்டி: மறுவடிவம் பெறும் தலைவிதி

கர்ணனின் வலிமைமிக்க வாழ்க்கைக் கதையைப் பரதநாட்டியம், அசல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் நடன அமைப்பு மற்றும் நாடக வடிவிலான கதைசொல்லல் ஆகியவற்றின் மூலம் உயிரோட்டத்துடன் மேடைக்குக் கொண்டுவரும் ஒரு சிறப்பான கூட்டு நடன நிகழ்வாகும் கர்ணன் – விதியைத் தாண்டி: மறுவடிவம் பெறும் தலைவிதி.

மெல்பேர்ன் நாட்டியாலயா நடனப் பள்ளியின் திருமதி உஷாந்தினி ஸ்ரீபத்மநாதன் (நாட்டிய கலா ரத்னம்) மற்றும் லயதாண்டவம் பரதநாட்டிய நடனப் பள்ளியின் திருமதி ரம்யா ஸ்ரீஷ்யாம் ஆகியோரால் வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, விதி, அடையாளம், விசுவாசம் மற்றும் தியாகம் ஆகிய கருப்பொருள்களைப் புதிய கலைநோக்கில் ஆராய்கிறது.

இந்நிகழ்ச்சிக்கான இசையை அகிலன் சிவானந்தன் அமைத்துள்ளார். பாடல் வரிகளைப் பேராசிரியர் முனைவர் மௌனகுரு சின்னையா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் அடிப்படைக் கருத்தைத் திருமதி ரம்யா ஸ்ரீஷ்யாம் மற்றும் முனைவர் ஸ்ரீஷ்யாம் ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். நடன அமைப்பு, படைப்பாற்றல் மிக்க வழிநடத்தல் மற்றும் கருத்தாக்கம் ஆகியவற்றைத் திருமதி உஷாந்தினி ஸ்ரீபத்மநாதன் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் வாழ்வில் நீடித்த, நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் வன்னி ஹோப் (Vanni Hope) அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஒரு தொண்டு நிதி திரட்டும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலை, கலாசாரம், கதைசொல்லல் மற்றும் நடனம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த மறக்க முடியாத மாலைப் பொழுதில் கலந்துகொண்டு, ஒரு சிறந்த சமூக நோக்கத்திற்கும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகோற்சவம் 13/01/2027 - 23/01/2027


 


வருடாந்த மாசிமகப் பெருந்திருவிழா 11/02/2027 - 23/02/2027


 



கந்தசஷ்டிச் சிந்தனைகள் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .

   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
     மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
      மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா



சந்ததமும் செந்தமிழால் சிந்து கவிபாட
செந்திருவே கந்தவேளே என்றுந் துணைநீயே
வந்தவினை போயகல வைத்திடுவாய் வேலா
வருகின்ற வினைகளையும் அழித்திடுவாய் வேலா 

அசுரராய் பலபேரும் ஆகுகிறார் முருகா
அறமற்ற அத்தனையும் ஆற்றுகிறார் முருகா
தருமதை மனமேற்றா வாழுகிறார் முருகா
தவறிழைப்பார் திருந்திவிட வைத்திடுவாய் முருகா

கலியுகம் உய்யவே அவதாரம் எடுத்தாய்
கருணையின் உருவாகி இருக்கிறாய் கந்தா
அழுகையும் அவலமும் அவனியில் பெருகுது
அரனார் மைந்தா அனைத்தையும் அகிற்றிவிடு 

அன்போடி மறைகிறது அரவணைப்பும் குறைகிறது
நானென்னும் அகங்காரம் தலைவிரித்து நிற்கிறது
வேலோடு வந்தவனே வேரோடு வெட்டுவிடு
வேலவனே வேண்டுகிறோம் வெளிச்சத்தைக் காட்டிவிடு ! 
                           
கனலாகி வந்தாய்  மலர்தேடி அமர்ந்தாய்
கார்த்திகைப் பெண்கள் கரஞ்சேர இணைந்தாய்
சிவனாரின் மைந்தன் ஆகியே நின்றாய்
சிறப்பான அவதாரம் எடுத்துமே வந்தாய்

தேவரைக் காத்திட அவதாரம் எடுத்தாய்
தேசமே வணங்கிடும் தெய்வமும் ஆகினாய்
கலியுகம் முழுவதும் காத்திடும் கடவுளாய்
ஆகியே இருக்கிறார் அரனாரின் மைந்தனே

வரமுடை  சூரரின் அளவிலாக் கொடுமையால்
வாடிய தேவரைக் காத்திட வந்தனை
தேவரைக் காத்தாய் தெளிவினைக் கொடுத்தாய்
மாறாத சூரரை மாற்றியே விட்டாய் 

ஆணவம் போக்கினாய் அஞ்ஞானம் நீக்கினாய்
அருளிடும் பாங்கிலே அனைத்தையும் ஆற்றினாய்
அழித்திடும் வேலினை அற்புதம் ஆக்கினாய்
ஆதலால் வேலவன் ஆகியே நிற்கிறாய்  ! 

                                                            
       காவடி என்றதும் கந்தனே தெரிகிறாய் 
       சேவடி நாடியே யாவரும் வருகிறார்
       மாவடி போற்றிட வாழ்த்தியே பாடுறார்
       மாபெரும் ஜோதியாய் வந்தவன் நீயன்றோ 

Tapasya Academy of Dance படைப்பில் சிட்னியில் அரங்கேறிய மாயவனம் நாட்டிய நிகழ்வு - கானா பிரபா

 .

சிட்னியில் அரங்கேறிய மாயவனம் நாட்டிய நிகழ்வு

ரசனைப் பகிர்வு : கானா பிரபா

 


ஊதா நிறத்தைப் போர்த்திய (Jacaranda) மரங்கள், பகட்டான நீள ஆடையை அணிந்தது போலப் பொங்கிப் பூத்திருக்கும்,  முற்றத்தில் வீற்றிருக்கும் Joan Sutherland அரங்கம்.

மறு வாரத்தில் தீபாவளி தினம் வருகிறது.

 

இங்கே அக்டோபர் 31 ஆம் திகதி தபஸ்யா நடனப் பள்ளியின் “மாயவனம்” எனும் நடன நிகழ்வு,

இயற்கையும், கால நேரமும் கூடி வந்தது போல அமைந்ததொரு நிகழ்ச்சி அரங்கேறுகிறது.

என்னவொரு பொருத்தம் என்று மனம் சொல்லிக் கொண்டு அதே எதிர்பார்ப்போடு நடனப் பள்ளி மாணவர்களின் மேடை நிகழ்வில் ஐக்கியப்படுகிறது.

Tapasya Academy of Dance  இன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான குரு திருமதி. தர்மினி சுமித்ரன் அவர்களால் நடனப்பள்ளி 2016 இல்  Girraween இல் வெறும் மூன்று சிறுமிகளும், ஒரு கனவும் மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் பிறந்து வளர்ந்த தன் பால்ய காலத்திலேயே பரத நாட்டியம் மீது ஈடுபாடுகொண்ட ஶ்ரீமதி தர்மினி சுமித்ரன், திருமதி. அம்பிகாவதி மற்றும் திருமதி. துஷ்யந்தி வேலுப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பகாலப் பயிற்சியைப் பெற்றவர்.  இந்தியாவின் சென்னையில் உள்ள புகழ்பெற்ற 'கலாக்ஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில்' (Kalakshetra College of Fine Arts) 2008-ஆம் ஆண்டு அங்கு தனது பயிற்சியைத் தொடங்கினார்.

குறும்படம். - ''குடும்பஸ்தன்''

 .

அண்ணன் என்றால் அள்ளிக்கொட்டும் இயந்திரம் என்று வாழும்  தங்கைமாருக்கு ஒரு அண்ணனின் நிலையினை எடுத்துக் கூறும் குறும்படம்.



https://www.facebook.com/100000046698787/posts/29783513391233491/?mibextid=wwXIfr&rdid=ydZglqnwPEBRMB00#

சத்தியம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 .

சிவாஜியின் ஆரம்ப கால நண்பர்களில் ஒருவர் எஸ் .ஏ .கண்ணன். சிவாஜியின் இளமை காலம் தொட்டு அவருடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் சிவாஜி திரை நடிகரான பிறகு அவரின் பெரும்பாலன படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். ஆனாலும் நாடகங்களை எழுதி அவற்றை இயக்குவதில் தன் திறமையை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதி இயக்கிய விதி என்ற நாடகம் சத்தியம் என்ற பெயரில் படமானது. 


 யார் யாரையோ எல்லாம் டைரக்டராக்கி அழகு பார்த்த சிவாஜி மிக நீண்ட காலத்துக்கு பிறகு பழைய நண்பனை இப் படத்தின் மூலம் டைரக்டராக்கினார். படத்தையும் தனது சொந்த பட நிறுவனங்கள் ஒன்றின் மூலம் தயாரித்தார். 

 கிராமத்தின் தலைவரான தர்மலிங்கம், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதிலும் அமைதி காப்பதிலும் பெயர் பெற்றவர். அவரது மனைவி சிவகாமி, படித்த சகோதரன் குமரன் மற்றும் குமரனின் வருங்கால மனைவி வாணி ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்கின்றனர். குமரனின் கல்லூரித் தோழியும், கிராமத்தின் பெரும் செல்வந்தப் பெண்ணுமான கௌரி, குமரனைக் காதலிக்கிறாள்.

சொக்கநாதன் கௌரியின் பாதுகாவலர் மற்றும் ஒரு வர்க்கப் பாகுபாடு கொண்டவர். ஏழைகள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறார். அவரது சூழ்ச்சிகளால், ஏழை கிராம மக்களின் வீடுகள் தீக்கிரையாகின்றன. தர்மலிங்கத்தின் அவல நிலையையும் கண்ணீரையும் கண்டு, கௌரி அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாகவும், தன்னிடம் உபரியாக உள்ள நிலங்களை அவர்களுக்குக் கொடுப்பதாகவும் உறுதியளிக்கிறாள். இது சொக்கநாதனுக்கு வருத்தத்தை அளிக்கிறது. தனது பதினெட்டாவது பிறந்தநாளில், அவள் சொக்கநாதனைத் தனது முகவர் பதவியிலிருந்து நீக்கி, அவனைத் திசையறியாமல் தவிக்க விடுகிறாள். 

"வேலெடுத்து வினைமுடிப்பாய் வேலவா!" -மெல்போர்ன் அறவேந்தன்

 .





அனுராதபுரத்தில் துறவிகள் போர்க்கொடி

 .





https://www.youtube.com/watch?v=Kesq4rceh0o


நினைவே நீட்சியா? -சங்கர சுப்பிரமணியன்.

 .

எண்ணமே மீண்டும் வந்துமே

தென்றலால் தாலாட்டுவாயா
வண்ணமே வாழ்வாய் மலரவே
வாழ்த்துப் பாடவும் மாட்டாயா

அந்த நினைவால் வந்த சுகமும்
இந்த நாளில் என்னை தினமும்
உந்தன் அன்பில் புதைக்கிறதே

எந்தன் மனமும் அதில் அமிழ்ந்தே
மந்த மாருதமாய் மகிழ்வதை நீ
சிந்தையில் உணர மாட்டாயோ

வெள்ளிக் கிழமை வீதி வலம்வந்து
உள்ளங் கவர்ந்த நாளும் வாராதா
கிள்ளை மொழியை காதும் கேளாதா

வான் நீந்தும் ஆதவனும் ஆழ்கடல்
தன்னில் மூழ்கி மறைவதைப் போல்
உன் நினைவால் நான் மறைவேனோ

பால்நிலா மேகமதில் மூழ்குதல் போல்
வாலைக் குமரியின் உள்ளமதில் மூழ்கி
எல்லையில்லா மகிழ்வை புசிப்பேனா?



போராட்டம் திரைப்படம் என் பார்வையில் - செ .பாஸ்கரன் (c.Paskaran)

 .

போராட்டம் காலம் காலமாக நமது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று.

இன்று கந்தையா பாஸ்கரனின் தயாரிப்பில் ராஜ் சிவராஜ் அவர்களின் எழுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் போராட்டம். சிட்னியிலே நவம்பர் மாதம் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை    மாலை 3 மணிக்கு Blacktown Hoyst சினிமாவிலேயே திரையிடப்பட்டது. அந்த சினிமாவை பார்ப்பதற்கு சென்றிருந்தேன் அதன் விளைவுதான் இந்த பதிவு. மில்லர் என்கின்ற கடலோரக் கிராம இளைஞனின் உதை பந்தாட்ட National Team தேர்வுக்கான கற்பனையோடு வாழும் ஒருவனின் கதை தான் இந்த திரைப்படம். இது ஒரு மில்லருடைய கதை அல்ல ஆயிரம் ஆயிரம் நம் இளைஞர்களின் கதை. மில்லராக ரீகன் பாஸ்கரன் வாழ்ந்துள்ளார். புதுமுகம் அல்லது அறிமுகம் என்று கூற முடியாத அளவுக்கு அவருடைய நடிப்பு அமைந்திருந்தது.

சமூகப் பிரச்சினைகளையும் உதை பந்தாட்டத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களையும், ஊழல்களையும் ,முகமூடி அணிந்த பெரிய மனிதர்களின் குள்ளத்தனங்களையும் உரித்து காட்டுகின்றார் கதை ஆசிரியரும் இயக்குனருமான ராஜ் சிவராஜ் அவர்கள். இந்தப் போராட்ட்ங்களுக்கு மத்தியிலே அந்த இளைஞனின் காதல், அவனுடைய காதலியாக நிவேதிகா வருகிறார். இயல்பான நடிப்பு, காதல், உணர்ச்சி, கோபம் என்று எல்லாவற்றையுமே அழகிய முகத்தில் பிரதிபலித்து விடுகின்றார்.

ஒரு கயிற்றின் மேல் நடப்பது போல் எல்லாவற்றையுமே எல்லா ரசிகர்களையுமே கவர்ந்திழுத்து இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும் ராஜ் சிவராஜ் அவர்கள்.

விளையாட்ரங்கை ரசிக்க வைக்க பூவன் மதீசன் கையாண்டிருக்கும் இசை வெற்றிக்கிண்ண மைதானமாகவே மாறி இருந்தது திரை அரங்கம். அருமையான பல பாடல்கள் அந்த பாடல்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது. எங்களுடைய ஈழத்து மண்ணிலே அருமையான இசையமைப்பாளர்கள் எல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பூவன் மதீசன் மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்திருக்கின்றார். பாடல்களாக

இருந்தாலும் சரி, பின்னணி இசை ஆக இருந்தாலும் சரி மிக அருமையாக கொண்டு வந்திருக்கின்றார்.


பெரிய உலகம் – சீனமொழித் திரைப்பட அறிமுகம் - கே.எஸ்.சுதாகர்

 .

படம் ஆரம்பித்தவுடன் ஒரு இளைஞன் தன் கால்கள் சரியச் சரியத் தள்ளாடியபடியே படிக்கட்டுகளில் ஏறி, ஒரு கட்டடத்தின் உச்சியில் நின்று இந்தப் பரந்த உலகைப் பார்க்கின்றான். ஆம் பெரிய உலகம்.

இந்தப் படம் சொல்லும் `பெரிய உலகம்’ எது?

பிக் வேர்ல்ட்(Big World) `Xiao Xiao De Wo’ சீன மொழியில் 2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம். Youtube இல் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்ப்பதற்குக் கிடைக்கின்றது.

படத்தின் முக்கிய கதாபாத்திரம் லியு சுன்ஹே (Liu Chunhe) மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்டவன். அவனால் சரியாக - நடக்க முடியாது, பேச முடியாது, சாப்பிட முடியாது. இந்தச் சமூகம் தன்னை ஒரு சுமையாகப் பார்ப்பதை எதிர்த்து, சுயமாக தனித்து வாழப் போராடுகின்றான். அவனுக்குப் பாட்டி உற்ற துணை. அம்மாவும் பாசமானவள் தான். ஆனால் அவனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடக்க நினைக்கின்றாள். ஏறத்தாழ 2 மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அவனது அப்பா சில நொடிகள்தான் வந்து போகின்றார். ஏன் அவர் தனது மகனைக் கவனிக்கவில்லை? சில குடும்பங்களில் இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்துவிட்டால், அதன் முழுப்பொறுப்பையும் தாயின் மீதே சுமத்தி விடுகின்றார்கள். இதனால் இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் யாங் லினா (Yang Lina), தந்தையின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் குடுக்காமல், திட்டமிட்டே செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

படத்தில் இளைஞனதும் (ஜாக்சன் யீ / Jackson Yee) பாட்டியினதும் (Diana Lin) நடிப்பு அற்புதம். அதுவும் இளைஞனாக நடித்தவர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கின்றார். அதற்காக அவர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சில மாதங்கள் பழகியிருக்கின்றார். தனது பாத்திரம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக - உடல் எடையைக் குறைத்து, தன்னை மிகவும் வருத்திக் கொண்டிருக்கின்றார்.

படத்தில் அடிக்கடி அவன் தனது படுக்கையின் கீழ் இருக்கும் மனித எலும்புக்கூட்டை எடுத்து அணைத்துக் கொள்கின்றான். அது அவனது விளையாட்டுப் பொருள் அல்ல, அவனது உடலமைப்பை குறிப்பிடும் ஒரு குறியீடு.


போராட்டம் ⚽ எனது பார்வையில் ⚽ கானா பிரபா

 .

சிட்னியில் தீபாவளி விருந்து போல “போராட்டம்" திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
தீபாவளி நாளில் விருந்துண்டு, அலைந்து திரிந்து மதியம் மூன்று மணி காட்சிக்குப் படம் பார்ப்பதே போராட்டம் தான் ஆனாலும்
நம்மவர் படைப்புக்காக நம்மாலான ஆதரவு என்று படம் துவங்கும் வரை நித்திரையோடு போராடி வெற்றி கண்டேன்.
சரி இனி என் பார்வையில் போராட்டம்
⚽ படம் ஆரம்பித்து நம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவேலமரத்தைக் காவு எடுக்கும் அந்த முதற்காட்சி பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. பூவன் மதீசன் வெகு யதார்த்தமாக அந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.
⚽ தான் விரும்பிய காற்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முனைப்பெடுக்கும் இளைஞனின் கதை.
ஒரு பக்கம் அவன் காதலில் சாதிக்க முனைவது தான் அதிகம் பிரயத்தனப்படுத்தப்படுகிறது. காற்பந்திலேயே அதிக கவனம் எடுத்திருக்கலாம். இது ஈழத்தவரின் பொதுவான பிரச்சனை. எனக்கும் கூட 🙂
⚽ கிளைக் கதைகளாக, நம்மவரின் போதைக் கலாசாரம், அவுஸ்திரேலியா பயணம் போன்ற அவல நடப்புகளையும் பின்னப்பட்டிருப்பது படத்தின் மையவோட்டத்தோடு சிறப்பாகப் பொருந்துகிறது.
⚽ இளவட்டங்களின் டியூசன் காதல் நம்மை அந்தப் பழைய உலகுக்குக் கொண்டு போனது. அந்த அளவிலேயே அவர்களின் நட்பைக் காட்சிப்படுத்தி இருந்தால் அதுவொரு அழகியல்.
படம் ஆரம்பித்து இடைவேளை வரை தேவை இல்லாத ஆணிகளாக, அந்தக் காதலிக்கும் காட்சிகள், காதலியின் அண்ணனோடு மோதல் போன்றவற்றை நறுக்கி இருக்கலாம்.
⚽ ஆக மொத்தத்தில் இந்தப் படத்தில் இடைவேளைக்கு முந்திய பாகத்தில் அரை மணி நேரத்தை நறுக்க வேண்டிய இடங்களை இலகுவாக அடையாளம் காட்டலாம்.
⚽ அதுவரை என்னைப் போல மதிய நேரத் தூக்கக் கலக்கத்தில் இருந்த படத்தொகுப்பாளரின் கத்திரி திடுக்கிட்டு எழுந்து நறுக்கித் தள்ளியது போல
இடைவேளைக்குப் பின்னர் வெகு விறுவிறுப்பு. அதையே முன் பாகத்தில் செய்திருக்கலாம்.
⚽️ இடைவேளைக்குப் பின் ஒரு சில யதார்த்த மீறலும் உண்டு, குறிப்பாக பலி வாங்கப்பட்ட பையனின் போன் ஐ காவல்துறை தேடமாட்டார்களா? அந்த கோல்கீப்பர் வேறு மைதானத்தை விட்டு மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கிறார்.
⚽ ஈழத்து சினிமாவில் காதல் பாட்டுகளைக் கண்டால் அந்தக் காதலர்களைத் தாண்டி அலறி அடித்து ஓடவேண்டி இருக்கிறது. பாடல் இனிமை தான் ஆனால் இதெல்லாம் படத்தின் மைய நீரோட்டத்தைக் குழப்பும் பந்தாடிகள்.
⚽ நாயகன் றீகன் இப்போதுதான் க.பொ.த சாதாரண தர மாணவன் போல முகவெட்டு. அவரைப் பள்ளிப் பையனாகவே, பள்ளிகளுக்கு இடையிலான போட்டி வீரனாகவே காட்டியிருக்கலாமோ?
தன் காதலியின் அவல அழைப்பைக் கேட்டதும், துடிதுடித்துப் போயிருக்க வேண்டாமோ? இசையமைப்பாளர் கவனித்துக் கொள்வார் என்று அப்படியே உறைந்த மீனாட்டம் இருக்கிறார். அல்லது அந்த நேரம் தயாரிப்பாளரான அப்பா ஷூட்டிங் பார்க்க வந்து விட்டதால் வந்த பயபக்தியோ