மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
அழகு மயிலேறி ஆடிவரும் கந்தா
குறமகளைக் கூடே கூட்டிவரும் கந்தா
அசுரர் களைத்தாட வைத்த முருகையா
அப்பன் சிவனாட அமர்ந்துபார் ஐயா
பொறியாக வந்தாய் போராடி வென்றாய்
பொல்லாத அரக்கரை வென்றாடி நின்றாய்
தேவரைக் காத்தாய் சிறையினைத் தகர்த்தாய்
யாவரும் வணங்கும் தெய்வமாய் ஆகினாய்
தெய்வானை ஆட வள்ளியும் ஆட
தேவரும் சேர்ந்துமே ஆடியே நிற்க
சிவனாரும் ஆட பார்வதியும் ஆட
மயிலாட சேவற் கொடி ஆட
மனம் உருகிப் பக்தர் ஆட
அருணகிரி ஆட ஒளவையும் ஆட
அறுமுகவா நீயும் ஆடிவா அப்பா !
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment