Redcome Function Centreல்
…ஒக்ரோபர் 30 ஆம் திகதி. 31 ஆம் திகதி நவம்பர் 1ஆம் திகதி .மாலை
பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்
(வாழ்நாட் சாதனையாளர்)
மோகரித்து உரைபகரப் பாரதி பாஸ்கர்!
முத்தமிழால் முழங்கிடப் பர்வின்சுல் தானா!
சேகரித்த புலமைதனைச் தேறலாய் ஊட்டத்
தேடிவந்த சீரிலங்கை ஜெயராஜ் ஐயா!
ஆதரித்து ஆண்டாண்டாய் விழாவெ டுக்கும்
அழகனன்பு ஜெயராம்ஜெக தீசன் தம்பி!
தாகந்தீர இவர்கள்தரும் விருந்த ருந்தத்
தவறாது கூடிடுவீர் விழாஅரங்கில்!
பார்போற்றும் பாரதியின் தலைமை தன்னில்
பல்சுவைவி ருந்தளிக்க விவாத அரங்கு!
சீர்பூத்த பர்வின்சுல் தானா சிறப்பாய்ச்
செந்தமிழில் எழிலுரையை இதமாய்த் தருவார்
யார்இவர்கள் எனவியக்கப் பட்டி மன்றம்
நடத்தவுள்ளோர் பெற்றிதனைச் சொல்லப் போமோ?
கார்ஆனை முகத்தானின் கருணையால் விழாவும்
களைகட்டும்! கம்பரசம் சுவைத்திடத் திரள்வீர்!
உயர்தமிழின் ஆழங்கண்ட ஜெயராஜ் ஐயனவன்
ஒப்பரிய கம்பன்புகழ் கவிநலம் விஞ்ச
நயமிகுந்த சொற்பொழிவை நலமாய்த் தருவார்
நன்றிசொல வார்த்தைகாணா தேங்கி நிற்போம்!
அயர்வுயிர்த்து நாமெல்லாம் மாந்தி மகிழ
அரியபல சேதிகளை விகடத் தோடு
வியந்தpடவே கம்பநாடன் கவிதைக ளோடு
வித்தகனார் பொருள்விரிப்பர்! கேட்க வாரீர்!
விஞ்சிடும் தமிழரின் விருந்து ஓம்பலை
விலைமதிப் பற்றநற் குறள்களால் விளக்கியும்
அஞ்சித நடுவராய் நடுநிலை ஓம்பி
அற்புதத் தீர்ப்பினைச் செப்பி மகிழ்ந்தும்
செஞ்சொல் குழைத்தே தேனிற் கலந்து
திகட்டு மட்டும் திருமிகு ஜெயராஜ்
நெஞ்சங் களிப்புற நிறைவாய்த் தருவார்
நேயரே! நேரிலே மாந்திடக் கூடுவீர்!


No comments:
Post a Comment