ஒரு ரம்யமான அமைதி தவழும் மாலைப் பொழுது.
Riverside Theatres இன் அழகுறு உள்ளரங்கத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாற் போல இருக்கைகள் நம்மை வரவேற்கின்றன.
இப்படியான
மதம் கடந்த, ம(னி)தம் கொண்ட காட்சியைக் காணும் போதே மெய்சிலிர்த்து விடும்.
தேனுகாவின் பரதநாட்டியப் பயணம், தனது எட்டு வயதில் Indian Dance School இல் தொடங்கியது. அங்கு குரு ஶ்ரீமதி. மீனா பீடில்
மற்றும் அவரது மகள் ஶ்ரீமதி ஜனனி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஆரம்பகாலப் பயிற்சியைப் பெற்றார். பின்னர், இளமைப் பருவத்தின் பெரும்பகுதியில் தனது பயிற்சியைத் தொடர்ந்து, பரதநாட்டியத்தின் மீது ஆழமான அடித்தளத்தையும் நீடித்த ஈடுபாட்டையும் வளர்த்துக்கொண்டார்.
ஆலயங்கள் கோவில் திருவிழாக்களில் .தமிழர்களின் சிறப்பு
நிகழ்வுகளிலும் தேனுகாவின் சலங்கை ஒலி கேட்டவண்ணமிருந்தது.
அதற்கெல்லாம் முத்திரை பதித்தாற் போல் சிட்னி முருகன் ஆலய கலாச்சார
மண்டபத்தில் முருகப் பெருமானின் கதை சொல்லும் முழு நீள நாட்டிய நாடகத்தில் முருகப்
பெருமானாக நடனத்தால் அலங்கரித்தார்.
நடனம் பயின்றது 5 வயதில் இருந்து . நடனம் மட்டுமன்றி சிட்னியில் மிகவும் பிரபலம் வாய்ந்த சங்கீத ஆசிரியை கலா சந்திரமோகனிடம் சில வருடங்கள் சங்கீதமும் கற்றுக்கொண்டவர் . இவரின் இளைய சகோதரி தெய்வீகாவும் நடன வகுப்பிலும் சங்கீத வகுப்பிலும் ஒன்றாக சேர்ந்து பயின்றார்.
தமிழ்க் கலாசாரத்திலும் கலைகளிலும் கொண்ட ஆர்வம், நடனத்தைத் தாண்டியும் விரிவடைந்தது. தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்து, உயர்நிலைப் படிப்பை மேற்கொண்டதுடன், தமிழ் மக்களின் கலாசாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதிலும் ஈடுபட்டார். தமிழ் இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டு, பேச்சு மற்றும் எழுத்துப் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நிதித்துறையில் பணியாற்றிய தேனுகா, தனது உயர்
படிப்பு, வேலை, திருமணம் என்ற மாறி வந்த வாழ்க்கைப் படி நிலைகளிலும், தான் சிறுவயதில் கற்ற நடனத்தை அரங்கேற்ற வேண்டும்
என்ற முனைப்புக் கொண்டார், கடந்த
ஒன்பது மாதங்களாக தனது தற்போதைய குருவான ஶ்ரீமதி. ஆர். டிவாஷினி லிபீசன் அவர்களிடம் கற்றுத்தேர்ந்து இன்று தன்னை ஒரு
முழுமையான நடனக் கலைஞராக அரங்கேற்றியிருக்கிறார்.
தேனுகாவின் அரங்கேற்றத்துக்கான படி நிலைக் குருவாக அமைந்த
ஶ்ரீமதி. ஆர். திவ்வாசினி லிபீசன் அவர்கள், ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்ற பல்வேறு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்று, நடனமாடிய சிறப்பு மிக்கவர்.
2021ஆம் ஆண்டு தனது சொந்த நடனப் பள்ளியைத் தொடங்கிய அவர், தற்போது அதன் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களை உருவாக்குவதிலும், இளம் ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் இணைந்து புதிய நடன நிகழ்ச்சிகளையும் கலைப் படைப்புகளையும் உருவாக்குவதிலும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
திரிசூலா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வு ஶ்ரீமதி. ஆர். திவ்வாசினி லிபீசன் அவர்களின் கலைப் பயணத்தில் ஒரு சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்தது. ஆசிரியராக தனது முதல் அரங்கேற்றத்தை வழங்கியிருக்கிறார்.
இந்த நிகழ்வின் வாய்ப்பாட்டுக் கலைஞராகச் சிறப்பித்த, திரு. அகிலன் சிவானந்தன் அவர்கள் மெல்போர்னைத் தளமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகரும், பல இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவரும், இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளரும் ஆவார்.
வாய்ப்பாட்டு, வயலின் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றில் முறையான பயிற்சி பெற்ற இவர், கர்நாடக இசையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பே பல தேசிய அளவிலான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் பெரிதும் விரும்பப்படும் கலைஞரான இவர்,
பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கான முன்னணிப் பாடகராகத் தொடர்ந்து பங்கேற்று வருவதுடன், பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
உலகளவில் மதிப்புமிக்க இசை விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள இவர், தகுதிபெற்ற சிவில் பொறியாளராகவும் விளங்குகிறார். மேலும், மெல்போர்னில் உள்ள ‘கீதாஞ்சலி’ இசைப் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
பக்கவாத்தியமாக, மிருதங்க வாத்தியத்தைக் கையாண்ட திரு. லோஜன் விஜயமனோகரன் அவர்கள், இந்தியாவின் முன்னணி சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள இவர், புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களுடனும் வீணைக் கலைஞர்களுடனும் இணைந்து இசைத்துள்ளார்.
புல்லாங்குழல் வாத்தியத்தைக் கையாண்ட செல்வி திவ்யா சர்வேஸ்வரன் தேர்ந்த வாத்தியக் காரராக, நடன நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருவதுடன், சிட்னி ஓபரா ஹவுஸிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கிய சிறப்பு மிக்கவர்.
வீணை வாத்தியத்தைக் கையாண்ட திருமதி சௌம்யா ஸ்ரீதரன், சிட்னி பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம் பெற்ற இவர், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதுடன், தனது தாயாருடன் இணைந்து மாணவர்களுக்கு வீணை கற்பித்தும் வருகிறார்.
பொருளாகும். நடனக் கலைஞர் தனது நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பு, இறைவன், குரு, இசைக் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக அர்ப்பணிக்கப்படும் பக்திப் படைப்பான புஷ்பாஞ்சலியோடு அரங்கேற்ற நிகழ்வின் முக்கிய பாகம் தொடங்கியது.
தொடர்ந்து, தாள லயத்துடன் கூடிய துடிப்பான நடன அசைவுகளையும், இனிமையான இசை அழகையும் ஒன்றிணைக்கும் படைப்பான ஜதீஸ்வரத்தை வழங்கினார்.
அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்படும் பக்திப் படைப்பு மாதா கவுத்துவம் என்ற படைப்பை அரங்கேற்றியது
புதுமையாக இருந்தது. இந்தப் பாடலுக்கு ஜாகீர் உசைனின் ஜதி அமைப்பில், மூல இசை
வழங்கியவர் ரஞ்சீவ் கிருபைராஜா. கருணைமிக்க அன்னையாகவும், இறை வேண்டுதல்களுக்கு செவிசாய்ப்பவராகவும் போற்றப்படும் மரியாளை வணங்கி, அவரது அருளையும் ஆசீர்வாதத்தையும் வேண்டி இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.
அன்னையின் கருணை, பக்தி மற்றும் அருளைப் போற்றுவதுடன், நம்பிக்கையும் நற்பண்புகளும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுவதே இந்நடனத்தின் மையக் கருத்தாக அமைந்தது.
இசையமைப்பாளர்: ஆர். முரளிதரன் இசையில் அமைந்த, “ஆடும் மயில் மேல்” என்ற பாடலை, இது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்தி வர்ணமாக வழங்கினார் தேனுகா. வெளிப்படுத்தும் பக்தர், அவரது தெய்வீகத் தோற்றத்தையும் அருளையும் வேண்டிப் பாடுகிறார். இந்த வர்ணம் வழியாக, முருகப் பெருமானின் வீரத்தையும் ஞானத்தையும் அருளையும் போற்றி, அவரது தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டி அர்ப்பணித்தார்.
அவள் புறப்படுவதற்கு முன்,தனது
கலை வழியாகக் கற்றுக்கொண்ட கொள்கைகள், தனது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராட
வேண்டிய இந்தத் தருணத்தில் தனக்கு எவ்வாறு வழிகாட்டும் என்ற பிரதிபலிப்பை தேனுகா
தன் ஆற்றொழுக்கான நடனத்தால், உயிரூட்டிக் கண்
முன்னே கொண்டு வந்தார். அந்தப் பாடல் அரங்கேறிய கணம் முதல் நிறைவு வரை வன்னி
மண்ணிலே இருந்ததோர் உணர்வு.
திரௌபதியை கிருஷ்ணர் காப்பாற்றிய நிகழ்வும், பிரகலாதனைக் காப்பாற்ற நரசிம்மர் தோன்றிய நிகழ்வாக தேனுகா அந்த உக்கிரமான தோற்றத்தில் தோன்றிப் பிரமிக்க வைத்தார். பார்வையாளர்கள் பலத்த கைதட்டல் வழங்கித் தம் மகிழ்ச்சியையும், பிரமிப்பயும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளரராக திரு. ரஞ்சீவ் கிருபைராஜா
கச்சிதமான அறிமுகத்தையும், நிகழ்வோட்டத்தையும்
வழங்கினார். மேடை நிர்வாகத்தை டாக்டர். பிரதீப் சோழன் மற்றும் திருமதி திஷானி கௌரிதாசன் ஆகியோருடன், பின்னணி அறை (Green Room) ஏற்பாடுகளை செல்வி. தெய்விகா மரியநாயகம் மற்றும் திருமதி. ஹெலன் ரசீயா
ஆகியோர் கவனிக்க, சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையை, திருமதி. நித்யகல்யாணி ரமேஷ் பொறுப்பேற்றார். அபி மாஸ்டர் புரொடக்க்ஷன்
ஒலியமைப்பைக் கவனிக்க, ஒளியமைப்பு உதவி
வழங்கினார் செல்வி. காவ்யா ரேஜி.
இந்த நிகழ்வை ஒரு அதீத கலைத்துவமாக மட்டுமன்றி, ஜனரஞ்சகமாக பார்வையாளர் எல்லோருக்கும் அற்புதமான கலை விருந்தளித்ததால்
சோர்வின்றி ரசிக்க முடிந்தது.
நிகழ்வில் கலந்து
கொண்ட நம் எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தி மகிழ வைத்தது.
தேனுகா
மரியநாயகத்தின் கலைப்பணி தொடர வாழ்த்துகள்.
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment