தன்னலமல்லவே! சொல் குதம்பாய்!!

நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து
உணவு சமைத்திட முடிவு செய்தோம்
எங்களுக்கு வேண்டியவற்றை வாங்கி
எங்களுக்காக சமையல் செய்தோம்

திருக்குறளை நாங்கள் படித்ததில்லை
எனவே விருந்தோம்பல் பற்றி தெரியாது
நாங்கள் சமைத்ததை நாங்கள் உண்ண
விருந்தோம்பலை ஏன் அறிய வேண்டும்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்போம்
எம்மவரை என்றுமே சேர்க்க மாட்டோம்
எம்மவருக்கு அகராதியில் ஒருபொருள்
வீணய் ஏதும் நீவிர் கற்பனை செய்யாதீர்

எல்லோரையும் ஒன்றென்று நினைத்தால்
எனக்கு என்னதான் ஆதாயம் கிடைக்கும் கூட்டம் எனது பிடிக்குள் இருக்கும்வரை
என்னை மீறி வேறு எதுவும் நடந்திடுமோ

இந்த சங்கதியை  கற்றுக் கொண்டேன் காலத்தை நகர்த்துவது மிக எளிதானது
நானே என்னை முன்னிறுத்திச் செய்தால்
தன்னலமா சொல்லிவிடு நீ என் குதம்பாய்

-சங்கர சுப்பிரமணியன். 



No comments: