|
 | அவுஸ்திரேலியக் கம்பன் திருநாள்-2026 
பேரன்புடைய தமிழ் அன்பர்களுக்கு, வணக்கம்.
அவுஸ்திரேலியக் கம்பன் திருநாளானது, இராமன் கருணை, அனுமன் அருள், கம்பன் துணை, குருநாதர் ஆசியுடன், சிட்னியில் மாண்புற அரங்கேறவுள்ளது. தாங்கள் அன்புபாராட்டி, எம் அழைப்பையேற்று வருகைதந்து, சிறப்புச் செய்யவேண்டும் என, பணிவன்போடு வேண்டுகின்றோம்.
இளையவர்களையும் அழைத்து வாருங்கள்! தயைகூர்ந்து இவ் விழா அழைப்பு மடலை, தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து, அவர்களையும் இணைக்க உதவுங்கள் எனப் பணிந்து வேண்டுகின்றோம். தங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக. நன்றி.
-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-
அனுமதி இலவசம்.      சிட்னியில் கம்பன் விழா நிகழ்வுகள் பின்வரும் நாட்களில் நடைபெறும்: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30, 2026 சனிக்கிழமை, அக்டோபர் 31, 2026 ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1, 2026
இடம்: Redgum Function Centre, Wentworthville இந்தச் சிறப்புமிக்க விழாவை உங்களுடன் இணைந்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்! |
|
|
|
|
Gnana Velvi 2026 
பேரன்புடையீர், வணக்கம்,
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் நடாத்தும், ஞான வேள்வி – இருநாள் இலக்கியப் பேருரைகள், உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் சிறப்புரைகளுடன் நடைபெறவுள்ளன.
புதன், 28 அக்டோபர் – மாலை 7:00 மணி
வியாழன், 29 அக்டோபர் – மாலை 7:00 மணி
இந்நிகழ்வுகளுக்கு வருகை தந்து, நல்ல தமிழைக் கேட்டு ரசிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
ஞான வேள்விக்கான நுழைவுச் சீட்டுகளை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
இரண்டு நாட்களுக்குமான நுழைவுக் கட்டணம் $30 மட்டுமே.
தாங்கள் வழங்கும் ஆதரவு, ஞான வேள்வி மற்றும் அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2026 நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துவதற்குப் பெருந்துணையாக அமையும்.
ஆதரவு தாருங்கள்; நல்ல தமிழைக் கேட்டு இரசிக்க வாருங்கள்! 
Purchase your tickets online here
No comments:
Post a Comment