அவருடைய உண்மைக் கதைகளில் ஒன்றாக ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டுகிறது தினமணி கதிரில் தொடராக வெளி வந்தது. இதுவே படமாகவும் வெளியானது.
அன்றைய சீசனில் புதிதாக படம் எடுக்க வரும் பலர் எஸ் பி முத்துராமனை அணுகி தங்கள் படத்தை உருவாக்கும் படி கேட்பது வழக்கம் . குறைந்த பஜட்டில் துரித வேகத்தில் அவர் உருவாக்கும் படங்கள் வெற்றி பெறுவதே அதற்கான காரணமாகும். இந்த வரிசையில் இணைந்து கொண்டவர் தான் எஸ்.சங்கரன். மல்லிகை பதிப்பகம் என்ற புத்தக வெளியீட்டு நிலையத்தை நடத்தி வந்த இவர் படம் தயாரிக்கும் ஆவலில் எஸ் பி எம்மை அணுகினார். ஊதா பூ கண் சிமிட்டுகிறது நாவலை கொடுத்து அதனை படமாக்க ஆர்வம் காட்டினார்.
முத்துராமனும் இதற்கு இணங்க புஷ்பா தங்கதுரையை அணுக
அவரே படத்தின் திரைக் கதையையும் எழுதி கொடுத்தார். நாவலின் முடிவில் இருந்து படத்தின் முடிவை மட்டும் அவரிடம் சொல்லி மாற்றி கொண்டார் எஸ் பி எம்.

ரவி, ராதா இருவரும் காதலர்கள். காதலிக்கத் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே ரவியின் நண்பன் வில்லனாக குறுக்கிடுகிறான். ஒரு நாள் அவன் ராதாவை வன் புணர்ச்சி செய்ய முற் படும் போது ரவி அவன் மீது கல்லை தூக்கிப் போட அவன் இறந்து விடுகிறான். வழக்கின் போது ராதாவை சம்பந்தப் படுத்தாது தனிப்பட்ட கோபமே கொலைக்கு காரணம் என்று சொல்லி தண்டனை பெறுகிறான் ரவி. தண்டனை காலம் முடிந்து திரும்பும் ரவியை எல்லோரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் .
இதனிடையே சுந்தரத்தின் மனைவியாகி விட்ட ராதா ரவியை கண்டு
தன் வாழ்வில் குறுக்கிட வேண்டாம் என கோருகிறாள். அவனோ அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான். என்னுடன் ஒரு நாள் மட்டும் நீ வாழ வேண்டும் அந்த நினைவில் என் மீதி வாழ்வை கழித்து விடுகிறேன் என்று ரவி கெஞ்ச ராதாவும் சம்மதிக்கிறாள். இந்த ஒரு நாள் அனுபவத்தைத் தொடர்ந்து ராதாவும் , ரவியும் புது வாழ்வு தொடங்க தீர்மானிக்கிறார்கள். ஒரு நாள் இரவு ராதா வீட்டை விட்டு புறப்படுகிறாள். இது சாத்தியமாயிற்றா என்பதே மீதி படம். நாவலில் புஷ்பா தங்கதுரை முடிவை வேறு விதமாக எழுதிய போதும் படத்துக்காக அது மாற்றப் பட்டது.

புது முகங்களை போட்டு படத்தை எடுக்க தயாரிப்பாளர் ஆசை பட்ட
போதும் எஸ் பி எம் விருப்பப் படி படத்தில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தில் தான் எஸ் பி எம் இயக்கத்தில் கமல் முதன் முறையாக நடித்தார். பாத்திரத்துடன் ஒன்றியிருந்தார் அவர் படத்தில் லட்சணத்துடனும் காட்சியளித்தார் . சுஜாதா தன்னுடைய இயல்பான நடிப்பை வழங்கி இருந்தார். இறுதி காட்சிகளில் இருவர் நடிப்பும் நன்கு பரிணமித்தது. இவர்கள் இருவரையும் தேந்தெடுத்த எஸ் பி எம்மை பாராட்டலாம். வில்லனாக திலக் நடித்திருந்தார். விஜயலஷ்மியின் பாத்திரம் பரிதாபத்தை தூண்டுகிறது. விஜயகுமார் ஓகே .இவர்களுடன் ஏ கே வீராசாமி, தாம்பரம் லலிதா, ஐ எஸ் ஆர், ஆகியோரும் நடித்திருந்தனர்.

கண்ணதாசன் இயற்றிய ஆண்டவன் இல்லா உலகம் எது பாடல்
காட்சியுடன் கவனம் பெற்றது . இப் பாடல் காட்சியில் பழைய நடிகர் கள்ளபார்ட் நடராஜன் நடித்திருந்தார். நல்ல மனம் வாழ்க பாடல் ஜேசுதாஸ் குரலில் உருக்கமாக ஒலித்து கவர்ந்தது. நீண்ட காலத்துக்கு பின் வி . தட்சணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.

படத்தின் ஒளிப்பதிவு பாபு. எடிட்டிங் விட்டல் . விவாகரத்துக்கு உரிய
கதையை வில்லங்கம் இல்லாமல் டைரக்ட் செய்திருந்தார் முத்துராமன். ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து நாவலில் கதை முடிவு வேறாக இருந்த போதும் படத்துக்காக அதனை மாற்றி எடுத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டார் அவர்.

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment