தமிழ் திரையுலகில் கண்ணதாசன் பாட்டு சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பல பாடலாசிரியர்கள் புதிதாக திரையுலகில் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். வாலி, ஆலங்குடி சோமு, திருச்சி தியாகராஜன், பூவை செங்குட்டுவன் , புலமைப்பித்தன் என்ற வரிசையில் அறிமுகமானவர் அவினாசிமணி. இவர் ஆரம்பதில் கண்ணதாசனின் உதவியாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கண்ணதாசன் பாடல்களை சொல்ல சொல்ல எழுதுவது இவரின் வேலை. ஒரு முறை அவசர அவசரமாக பாடல் தேவை என்ற போது காரில் வைத்து கண்ணதாசன் பாடலை சொல்ல ஒரு சிகரெட் பெட்டியின் அட்டையில் இவர் பாடலை குறித்துக் கொண்டார். அந்தப் பாடல்தான் ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே பாடல்.
எம் ஜி ஆரின் அடிமைப் பெண் படத்துக்கு அவினாசிமணி இயற்றிய
காலத்தை வென்றவன் நீ பாடல் இவருக்கு திரை அடையாளத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா பாடல் இவர் மீது ஒளியை பாய்ச்சியது . அதே சமயம் இவர் இயற்றிய கற்பூர நாயகியே கனக வல்லி எல் .ஆர் . ஈஸ்வரி குரலில் பட்டி தொட்டி எல்லாம் பரவியது.
காலத்தை வென்றவன் நீ பாடல் இவருக்கு திரை அடையாளத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா பாடல் இவர் மீது ஒளியை பாய்ச்சியது . அதே சமயம் இவர் இயற்றிய கற்பூர நாயகியே கனக வல்லி எல் .ஆர் . ஈஸ்வரி குரலில் பட்டி தொட்டி எல்லாம் பரவியது.
இப்படி கவிஞராக பேர் பெற்றுக் கொண்டிருந்த அவினாசிமணி திடீரென உதவி டைரக்டராக உரு மாறினார். ப . நீலகண்டனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சில படங்களில் பணியாற்றினார். 1975 ம் ஆண்டு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. ஆயிரத்தில் ஒருத்தி படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து 1976ல் ஜானகி சபதம் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கிராமத்தில் கர்ணமாக பணிபுரியும் ஜானகி , ராஜன் இருவரும் காதலர்கள். இருவருக்கும் கல்யாணம் நடக்கப் போகும் தினத்தில் போலீசார் ராஜனை கைது செய்கிறார்கள். அவசர பணத் தேவைக்கு ஜானகி மாதிரி போலி கையெழுத்து போட்டு பணத்தை அவன் திருடியதே கைதுக்கு காரணம் . ஜானகி அவனை காப்பாற்ற மறுத்து விடுகிறாள் . சில காலம் கழித்து அதே ஊருக்கு பணக்காரனாக திரும்பி வருகிறான் ராஜன் . தன்னை காப்பாற்றாமல் கை விட்ட ஜானகியை சமாதானப் படுத்தி அவளை மணப்பதே அவன் நோக்கம். ஆனால் ஜானகி மறுத்து உதாசீனப் படுத்தி விடுகிறாள். இதன் காரணமாக கிராமத்துக்கு நல்லது செய்ய நினைத்து புதிதாக ரோடு போட தீவிரம் காட்டும் ஜானகியின் முயற்சிக்கு முட்டுக் கட்டை போடுகிறான் ராஜன். இதன் காரணமாக ஜானகியின் தங்கை கௌசல்யாவின் இல்வாழ்வும் பாதிக்கப் படுகிறது. ஜானகி தன் சபதத்தில் வென்றாளா என்பதே படத்தின் மீதி.
கே ஆர் விஜயாவின் ஆதரவில் தயாரான படம் என்பதால் திரை முழுவதும் அவர் காட்சியளித்தார். நடிப்பில் குறை வைக்கவில்லை. சில காட்சிகளில் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். அவரின் ஜோடி ரவிச்சந்திரன் . அலுங்காமல் நலுங்காமல் நடித்திருந்தார். இருவருக்கும் டூயட் இல்லாதது ஆச்சரியம்!
படத்தில் மற்றுமொரு ஜோடி விஜயகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்களுடன் மூன்றாவது ஜோடியாக மாஸ்டர் சேகர், ரோஜாரமணி . விஜயா, நிர்மலா , எஸ் . என். லஷ்மி வரும் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருக்கின்றன.
அதற்கு திருஷ்டி தேங்காய், மனோரமா, சுருளிராஜன் காமெடி! அசோகன் வில்லன் வேலையை வழக்கம் போல் செய்கிறார். இவர்களுடன் வீரராகவன், எஸ் ராமராவ், பேபி இந்திரா, கள்ளபார்ட் நடராஜன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
அதற்கு திருஷ்டி தேங்காய், மனோரமா, சுருளிராஜன் காமெடி! அசோகன் வில்லன் வேலையை வழக்கம் போல் செய்கிறார். இவர்களுடன் வீரராகவன், எஸ் ராமராவ், பேபி இந்திரா, கள்ளபார்ட் நடராஜன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தின் கதை வசனத்தை எழுதியவர் எஸ் . ஜெகதீசன். வசனங்களில் அவரின் திறமை பளிச்சிட்டது. வி . செல்வராஜ், கணேசபாண்டியன் இருவரும் படத்தை ஒளிப்பதிவு செய்தார்கள். பாடல்களை கண்ணதாசன், அவினாசிமணி இருவரும் புனைந்தார்கள். வி . குமாரின் இசையில் இளமை கோயில் ஒன்று, ஒன்னை நெனச்சா இனிக்குது பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாகின.
படத்தை கே ஆர் கங்காதரன் என்ற கே ஆர் ஜி தயாரித்தார். சிறிய தயாரிப்பாளராக இப் படத்தில் தொடங்கிய இவர் பின்னர் பெரிய தயாரிப்பாளரானார் . பின் வந்த ஆண்டுகளில் துடிக்கும் கரங்கள், கடல் மீன்கள், சிவப்பு ரோஜாக்கள் போன்ற ரஜினி, கமல் நடித்த படங்களை எடுத்து பிரபல தயாரிப்பாளரானார். படத்தை அவினாசிமணி சென்டிமென்ட் கலந்து இயக்கியிருந்தார். கிராமத்துக்கு மருத்துவமனை அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி படத்தின் காட்சிகளை நகர்த்தி இருந்தார். படமும் எடுபட்டது!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment