மறுநாள் பொழுது புலர்ந்தது. இன்று ஜப்பானை விட்டு விடைபெற வேண்டும் என்று நினைக்கும் போது திரும்ப இந்த நாட்டுக்கு வருவோமா என்ற ஒரு ஏக்கம் எனக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தென்பகுதியான நெல்லையிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து அதைவிட சிறு கிராமமான ஒரு குக்கிராமத்தில் தாய்வழித் தாத்தா வீட்டில் வளர்ந்த நான் ஆகாய விமானத்தை உள்ளங்கை அளவில் வானில் பார்த்து வியந்திருக்கிறேன்.
எப்போதாவது அப்படி செல்லும் விமானத்தின் சத்தம் காதில் விழும். அப்படி விழும்போது பகலில் வீட்டுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டை பாதியிலேயே விட்டு வெளியே ஓடிவந்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். சில சமயம் இரவு நேரங்களில் விமானம் சென்றால் மின்மினிப் பூச்சி போன்ற வெளிச்சம் மட்டுமே தெரியும்.
அப்படித் தெரியும் வெளிச்சம் உண்மையிலேயே விமானத்தின் வெளிச்சமா அல்லது விண்மீனா என்று விளங்கிக் கொள்ள முடியாத வயது. நாம் ஒரு நிலையில் இருக்கும்போது அதைவிட உயர்ந்த நிலையைக் காணும்போது வியப்பு வருவது இயல்பு அல்லவா? அப்படித்தான் குக்கிராமத்தில் இருந்த நான் ஒரு நகரத்துக்கு புலம்பெயராமல் எடுத்த எடுப்பிலேயே பெருநகரான பெங்களூருக்கு புலம்பெயர்ந்ததும் ஏற்பட்டது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு புலம்பெயரும் போது
கலாச்சார அதிர்ச்சி ஏற்படும் என்று அறிவோம். ஆனால் நான் உள்நாட்டிலேயே ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒரு பெரிய நகரத்துக்கு புலம்பயர்ந்தபோது அந்த கலாச்சார அதிர்ச்சியை உணர்ந்தேன். அது ஒரு வகையான அதிர்ச்சி என்றால் நான் மெல்பனுக்கு புலம்பெயர்ந்ததும் வேறுவிதமான அதிர்ச்சியாக இருந்ததேயன்றி என்னை நிலைதடுமாற வைக்கவில்லை.

ஆனால் இப்போது ஜப்பானுக்கு சுற்றுலாப் பயணமாக வந்து ஒஸாகாவின் ஹன்சாய் இண்டர்நேஷனல் விமான நிலையத்தை வந்தடைந்தும் அதிர்ச்சிக்குப் பதில் மிரட்சியாக இருந்தது. இலேசான மிரட்சியல்ல அது பெரிய மிரட்சி என்பதை ஜப்பானில் இருக்கும்போது உணர்ந்தேன். சீனாவில் நான் கண்ட மிரட்சியையும் மிஞ்சி நின்றது. அந்த நாட்டின் சுற்றுச் சூழல், கட்டுமானம், முன்னேற்றம் மற்றும் மக்களின் சுறுசுறுப்பு என்று என்னை மிரளவைத்தது.
ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதையும் என்னால் உணரமுடிந்தது. என்னதான் வளமான வாழ்வை மெல்பனில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மன அமைதியான வாழ்வு என்று சொல்லிவிட முடியாது. நைந்து போன பாயில் அம்மா பழைய கிழிந்துபோய் பயன்படுத்த முடியாமல் இருக்கும் துணிகளை மூட்டைபோல் கட்டிக் கொடுக்கும் தலையணையில் தலைவைத்து படுத்திருப்பேன்.
அப்ப்போது பல ஓட்டைகளுடன் கூடிய போர்வையை போர்த்தியபடி
கூரையைப் பார்த்தவாறு படுத்திருப்பேன். அப்படிப் படுத்திருக்கும் போது ஏழ்மையின் காரணமாக கூரையைப் பராமரிக்கப் முடியாது போனதால் கூரையின் ஓட்டை வழியாக வந்து பாயும் நிலாக்கதிர் தரும் இன்பத்தைப் போல் வாழ்வில் ஓர் இன்பம் இருந்ததில்லை. கண்ணயர்ந்து தூங்கும்போது நிலவின் ஒளி வந்த பாதையான கூரையில் இருந்து நல்லோர் ஒருவருக்காக பெய்யும் மழை எங்களை எழுப்பி விடும். நீர் சேமிப்பில் அப்போதே நாங்கள் முன்னோடி.

மழைநீர் கூரைவழியாக விழும் இடங்களில் எல்லாம் சிறு சிறு பாத்திரங்களை வைத்து நீரை சேமித்து பாத்திரங்கள் நிறைந்ததும் பெரிய மண்பானையில் சேமிப்போம். பாத்திரங்களில் நீர் வரத்து குறைந்ததும் கண் அயர்ர்ந்து துயிலும்போது கிடைக்கும் சுகம் இப்போது பஞ்சு மெத்தையில் துயிலும் நித்திரையில் கிஞ்சித்தும் இல்லை. கவிஞர்கள் வடிக்கும் கவிதைகளில் எவ்வளவு பொருளுள்ளது.
மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? என்ற பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம் பழைய நாட்கள் நினைவில் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மிரட்சியைத் தந்த ஜப்பானும் அதன் முன்னேற்றமும் சுறுசுறுப்பாய் இருந்த மக்களைப் பார்த்து நான் மிரண்டிருந்தாலும் அவர்களது வாழ்க்கை முறை ஒரு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ரயிலில் பயணம் செய்யும்போது நிற்கக்கூட முடியாத அளவுக்கு கூட்டம். அடுத்தடுத்து ரயில் வந்து கொண்டிருந்தாலும் கூட்டம் அலைமோதுகிறது. சுரங்கப்பாதையில் நடந்து கொண்டே இருப்பதும் படிகளில் ஏறுவதும் இறங்குவதும் மாற்று ரயிலைப்பிடித்து இருப்பிடம் செல்வதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. யாரிடமாவது உதவிகேட்டால் கேட்டால் மொழிப் பிரச்சினையைத் தாண்டி நின்று பதில் சொல்லி உதவ அவர்களுக்கு நேரமில்லை.
இதையெல்லாம் பார்த்ததும் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற
மனநிலை வந்தது. நம்மிடம் ஒன்று இல்லை என்றால் இருப்பதை வைத்து மன நிறைவடைவதுதான் சிறப்பு அல்லவா? ஆதலால் இந்த ஆர்ப்பாட்டமான வாழ்வைவிட அமைதியான மெல்பன் வாழ்வு சிறந்ததாகத் தோன்ற ஒரு நொடியில் மனம் ஒரு குரங்காய் ஏறிவந்த ஏணியை உதறும் மனிதர்போல ஜப்பானின் முன்னேற்றத்தையும் விடாமுயற்சியையும் கண்டு வியந்து மிரண்டவன் பச்சோந்தியானேன்.

இவ்வாறு காலை எழுந்ததிலிருந்தே மனதில் தோன்றிய பலவிதங்களுடன் ஓட்டலில் இருந்து கிளம்பி ஹன்சாய் விமான நிலையம் வந்தடைந்தோம். விமான நிலையத்தில் பயண சம்பந்தப்பட்ட பணிகளை முடித்து விட்டு க்வாங்சௌ செல்லும் சைனா சதர்ன் விமானத்தில் வந்து அமர்ந்தோம். விமானத்தின் இருக்கைகள் வசதியாகவே இருந்தன. க்வாங்சௌவில் இருந்து ஒஸாகாவுக்கு பயணம் வந்தபோது பயணித்த விமானம் போலவே இந்த விமானத்திலும் உபசரிப்பு நன்றாகவே இருந்தது.
சுமார் நான்கு மணி நாற்பது நிமிடங்களில் விமானம் க்வாங்சௌ பையூன் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. சிலமணி நேர தாமதித்திற்கு பின் மாற்று விமானமான மற்றொரு சைனா சதர்ன் விமானமான மெல்பன் செல்லும் விமானத்தில் வந்து அமர்ந்தோம். வசதியும் உபசரிப்பிலும் எந்த வித வேறுபாடும் இல்லையென்றாலும் விமானத்தின் உட்புறத் தோற்றம் வேறுமாதிரியாக இருந்தது.
நாங்கள் பயணத்தை மெல்பனில் இருந்து க்வாங்சௌ வரும்போது வந்த இதே சைனா சதர்ன் விமானத்தில் பயணப் பொதிகளை வைக்குமிடத்தின் கதவுகளில் சைனாவில் தயாராகும் அத்தனை வகையான கார்களின் விளம்பரங்கள் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதேபோல் இந்ந விமானத்திலும் வேறுபாட்டைக் கண்டேன்.
இந்த வேறுபாட்டை க்வாங்சௌவில் இருந்து ஒஸாகா சென்ற
விமானத்திலும் ஒஸாகாவில் இருந்து க்வாங்சௌ வந்த விமானத்தலும் நான் கண்டதில்லை. நான் கிட்டத்தட்ட பதினாறு நாடுகளைச் சார்ந்த விமானங்களில் பயணித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததில்லை.
விமானத்திலும் ஒஸாகாவில் இருந்து க்வாங்சௌ வந்த விமானத்தலும் நான் கண்டதில்லை. நான் கிட்டத்தட்ட பதினாறு நாடுகளைச் சார்ந்த விமானங்களில் பயணித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததில்லை.
இப்போது விளம்பரம் இல்லாவிட்டாலும் இந்த விமானத்தில் பலவகையான நிறங்கள் தோன்றி மறைந்தபடி இருக்க ஒரு இனிய அனுபவத்தை உணர்ந்தேன். இப்படி விமானத்தில் நிறங்கள் மாறி மாறி தோன்றி மறைந்து மாயாஜால வித்தைகள் காட்டியபடி இருக்கும்போதே விமானம் வானில் ஏறி பறக்கத் தொடங்கியது.
என் மனமும் ஜப்பானில் சுற்றிப்பார்த்த வண்ண வண்ண நினைவுகளை சுமந்தபடி அசைபோட்டுக் கொண்டிருந்தது. ஹிரோஷிமாவில் நான் கண்ட இடிபாடுகள் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சால் அழிவைச் சந்தித்ததோடு மட்டுமின்றி தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கதிர் வீச்சால் அவர்கள் அடைந்த துயரங்களையும் சொல்லி மாளாது.
அந்த அழிவை சவாலாக ஏற்றுக் கொண்டு நாட்டுப்பற்றோடு கடினமாக உழைத்து உலகே வியக்கும்படி எல்லா நிலைகளிலும் முன்னேறி இருப்பது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது. அவர்கள் வாழ்வில் அடைந்த உயரத்தை எண்ணி வியந்தபடியே பயணிக்க நாங்கள் வந்த விமானம் மெல்பனின் அருகில் வந்துவிட்டதால் தரையை நோக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
-சங்கர சுப்பிரமணியன்.
(முடிவுற்றது.)
என்னோடு சேர்ந்து பயணித்து என் பயணத்தை அலுப்புத் தட்டாமல் சொல்லும்படியான வாய்ப்பளித்த வாசக அன்பர்களுக்கு நன்றி!

.jpeg)

No comments:
Post a Comment