விஜய தசமி வெற்றியின் வெளிச்சம் !

 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்  ........  அவுஸ்திரேலியா 






வீரமும் வேண்டும் விவேகமும் வேண்டும்
பணிவும் வேண்டும் துணிவும் வேண்டும்
பொருளும் வேண்டும் பொறுமையும் வேண்டும்
அருளும் வேண்டும்  அறிவும் வேண்டும் 

வீரம் மட்டும் வாழ்க்கை அல்ல
வெற்றியும் செல்வமும் வாழ்க்கை அல்ல 
அறிவுடன் அமையும் நிலையே சிறப்பு
அருளும் இணைந்தால் அதுவே நிறைவு

சமயம் என்பது சடங்குகள் அல்ல
சமயம் என்பது வாழ்வியல் ஆகும்
எப்படி வாழ்வது என்பதை உணர்த்தும்
தத்துவ நெறியே சமயம் ஆகும்

விரதம் என்றால் வார்த்தை அல்ல
விரதம் என்பது ஆதார சுருதி
உடலை உள்ளத்தைப் புனிதப் படுத்தும்
உன்னதம் என்பதே விரதம் ஆகும்

நாளும் விரதம் கிழமை விரதம்
மாதந் தோறும் பற்பல விரதம்
வருடம் முழுவதும் வந்திடும் விரதம்
புனிதம் புனிதம் புகன்றிடும் வாழ்வியல்

ஒன்பது நாளும் அமைந்திடும் பாங்கில்
உருவான விரதம் உட்பொருள் நிறைந்தது
பத்தாம் நாளை வெற்றியின் நாளாய்
பக்குவம் ஆக்கிக் கொண்டாடி மகிழ்கின்றோம் 

விஜய தசமி வெற்றியின் வெளிச்சம்
சக்திகள் இணையும் தத்துவத் திருநாள்
புனிதத் தினத்தைப் போற்றியே மகிழ்வோம்
அனைவரும் அம்பிகை அடியினைத் தொழுவோம் ! 

No comments: