அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
Published By: Vishnu
03 Apr, 2026 | 07:21 PM
அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நன்றி வீரகேசரி
ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
03 Apr, 2026 | 02:56 PM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது.
அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (2) இரவு ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுடைய மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது.
அதற்கு முன்னதாக, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் போடப்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளிவிடுமளவு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கடுத்த நாளே ஈரான் பாலம் தாக்கப்பட்டது.
அதன் பின்னர், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கும் ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் 8 பெரிய பாலங்களை அழிக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. நன்றி வீரகேசரி
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
Published By: Digital Desk 3
03 Apr, 2026 | 11:15 AM
(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார்.
இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும்.
இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை.
ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்:
இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment