ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை
களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும்
விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம்
அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும்
முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம்
அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம்.
நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம்
ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய
வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும். - - நெல்சன்
மண்டேலா
Nelson-Mandela’s-Top-Five-Contributions-to-Humanityசிறையில்
இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to
Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த
புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென்
ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று
மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் விடுதலை தேவை.
ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான
நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால்
ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும்
வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன்
பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.
நான்கு
இந்து கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மலையகத்தில்
நடைபெற்றுள்ளன. வடபகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம்
மலையகத்துக்கும் பரவி, இப்போது மேல்மாகாணத்துக்கும் வந்துவிட்டதா, என்ற
கேள்வி இப்போது எம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இருவருக்கும்
சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு
முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது.
பின்
தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா
ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது.
அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம்.
அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார்.
படத்தின்
திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு
சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார்
எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்!









