அன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில்
அன்பாலயம் என்ற அமைப்பினால் மார்ச் மாதம் 2ம்திகதி (02/03/2013) Bowman Hall, Blacktown ல் நடாத்திய “இளம் தென்றல் 2013” க்கு போய்க் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு மண்டபத்துக்கள் நுழையும் பொழுதே எனக்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் நேர்த்தியைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று இசை, வாத்தியம், நடனப்போட்டிகளுக்கான தராதர அட்டைகளையும் (voting card) அன்பாலய இதழையும் அன்புடன் வழங்கினர்.
நிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்
நிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்
ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதமும் தொடர்ந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திரு மகேஸ்வரன் பிரபாகரன் “அந்தப் பார்த்தனின் கீதையுடன்” தொடங்கியது ஒரு பளிச். மகேஸ்வரன் பிரபாவைப் போல அவரது குரலும் கம்பீரம் தான்.
முதல் நிகழ்ச்சியாக “கீதாஞ்சலி” இசைக்குழுவின் பின்னணியுடன் செல்வி அபிஸாயினி பத்மஸ்ரீ யின் வசீகரக் குரலில் “அடி நீ எங்கே” தாஜ்மஹால் பாடலுடன் தொடங்கியது.
பாவலனின் “செந்தமிழ் தேன்மொழியாள்” பாடலின் விருத்தத்திற்கு விசிலும், கரவொலியும் அரங்கத்தை அதிரச் செய்தது. “பாவலா நீர் பாடவல்லவர்” வாழ்க
அத்துடன் என்னை மிகக் கவர்ந்தவர்கள் அந்த அண்ணா, தங்கை “சேயோன், மாயி ராகவன்” குழந்தைகள். என்ன சுட்டித்தனமும், பாசமும். மாயிக்கு அவளது அண்ணாவுடன் அப்படி ஒரு குஷி, இந்தக் குழந்தைகளுக்கு சுற்றி போடவேண்டும்.
அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா
அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா விநாயகர் அனுக்ஞை திருவிழா மார்ச் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து மிக சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு ஞானி
இரவு விழித்திருக்கும் வீடு - எம்.ரிஷான் ஷெரீப்
.
நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை
பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை
இராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்
.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.03.2013 இராகசங்கமம் நிகழ்ச்சி 6.00 மணிக்கு துர்க்ககை அம்மன் ஆலயத்தில் இடம் பெறவிருந்ததால் 5.50 மணிக்கே சென்றுவிட்டேன். சண் குமாரலிங்கம் சப்தஸ்வரா பாலாவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தென்னிந்திய இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் இசையில் உள்ளுர்கலைஞர்களும் இணைந்துகொள்ள இங்குள்ள இசை அறிவுள்ளவர்கள் இராகங்களோடு பாடும் பாடல் போட்டிதான் இந்த இராகசங்கமம்.
6.30 மணிதாண்டி விட்டது நமக்கு பொறுமையும் சற்றுக்குறைந்து கொண்டு போக தொடங்கியது. 6.35 மணிக்கு சண் குமாரலிங்கம் சபையினருக்கு வணக்கம் சொல்லி நிகழ்வை ஆரம்பித்துவைப்பதற்காக மங்கல விளக்கேற்றுவதற்கு துர்க்கையம்மன் ஆலயத் தலைவர் திரு ரட்ணம் மகேந்திரன் அவர்களை அழைக்க அவர் வந்து விளக்கேற்றினார் நான் மண்டபத்தை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் மக்கள் வந்து அமர்ந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா
உலகச் செய்திகள்
மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!
டெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை!
ஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு!
புதிய பாப்பரசர் தெரிவானார்!
மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!
எகிப்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இக்கலவரம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து போட்டித்தொடரொன்றின் போது கலவரம் ஏற்பட்டது.
போர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.
நல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)
.
16. 3. 2013 சனிக்கிழமை அன்று சிட்னி சில்வவாட்டரில் அமைந்துள்ள பஹாய் அரங்கில் நடைபெற்ற நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசருடைய நடனக் கல்லூரி மாணவிகளுடைய நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். வழமையான நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்த நிகழ்ச்சியில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்துது. முதலில் அவற்றைப் பட்டியல் இட்டபின் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.
1. பெரும் பணச்செலவில் நிகழ்ச்சி நிரல்களைக் கவர்ச்சியாக அடித்து நிகழ்ச்சி முடிந்தபின் அவற்றில் சில அங்குமிங்கும் கிடந்து கால்களில் உளக்குப் படாமல் இருந்தது.
2. பங்கு பற்றிய மாணவிகளின் பெயர்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காது கலை கலைக்காகவே பெயருக்காக அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பெற்றோர் ஒத்துழைத்தது.
3. பங்குபற்றிய மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் முடிந்த பின்பும் மேடைக்கு வெளியே ஆடை அலங்காரங்களுடன் வந்து காட்சி தராமல் இருந்தது.
4. எல்லாத் தனித் தனி ஆடல்களும் தங்குதடையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து
முழு ஆடல்களும் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே நிறைவுற்றது.
5. நடனங்களை நீட்டிப் பார்வையாளருடைய முதுகுகள் நோவெடுக்கா வண்ணம் பார்த்துக் கொண்டது.
6. மாணவர்களும் பெற்றோரும் ஒழுங்கையும் அமைதியையும் பேணியமை.
7. அந்த நிதிக்காக இந்த நிதிக்காக என்று சொல்லி ஆதரவு தேடாமல் நிகழ்ச்சியை இலவசமாகவே வழங்கியது.
| Photos by Paskaran |

ஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி
.jpg)
அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யபபட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார். அந்தச் சீட்டில் ஒரு கார் படம் ஒன்று. வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, இரவு பகலாய் கார்க் கனவு. அந்த அதிஸ்டலாபச்சீட்டின் முடிவு வெளிவந்த போது பலரைப் போல் எனது கனவும் கனவாகிப் போய்விட்டது. ஆனால் கார் வைத்திருக்கும் ஆசைமட்டும் விட்டுவிட்டு போகவில்லை.
புலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமதி ஸ்ரீனிவாசன்
.
“இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்.” என்பது உண்மைதான் இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகிவிடுவது இயல்பு ஆகும். 03/03/2013 அதாவது மார்ச் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி மிகவும் சிறப்பாக சிட்னி முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள கல்வி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமன்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதே போல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருக்கின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிட்னியில் இசைக்கல்லூரியினை நடாத்தி வருகின்ற திருமதி பஷ்பா ரமணனின் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தரமான பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து சுருதி, லயத்துடன் இணைந்து வாடி எம்மையெல்லாம் பக்தி பரவசநிலைக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.
சிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்
தி. திருநந்தகுமார், ஹோம்புஷ் தமிழ்க்
கல்வி நிலையம்
நி.ச.வே. தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு
வெளியிடும் தமிழ்ப் பாடநூல்கள் வரிசையில் தமிழ்
ஆறு பாடநூல், சென்ற 23.02.13 மாலை 6.30 மணிக்கு கிரவீன் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில்
அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து
ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எளிமையான வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடநூற்குழுவின்
ஆலோகர்களில் ஒருவரான வானொலி மாமா மகேசன், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள், பாடநூல் குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலவகைப்பட்டோர் குழுமியிருந்த
அவையில் கூட்டமைப்பின் தலைவர் திரு ஜெ.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்க, அறிமுக உரைகள்
இடம்பெற்றன.
இலங்கைச் செய்திகள்
.
கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்
ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்
கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்
வடக்கின் போர் ஆரம்பம்
மத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் "வக்கிரம்'

Subscribe to:
Posts (Atom)