ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

 




கீழே 4 பக்கங்கள் உள்ளன

பக்கத்தை பெரிதாக்கி படிக்கவும்



மருந்தை பார்த்தால் சுத்த மண்!

 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்                   



மண்ணைத் உண்பதில் சில மருத்துவ பலன்கள் இருப்பதாக ஜஸ்ட் போன்ற மேல்நாட்டு வைத்தியர்கள் இப்பொளுது கண்டறிந்துள்ளனர், ஆனால் இயற்கை வைத்தியத்தில் இதன் பலனை விரிவாக கூறிஉள்ளார்கள். அதை மகாத்மா காந்தியும் தன் வாழ்வில் சோதனை செய்து பார்த்து, தாம் கண்ட பலனை ‘ஆரோக்கிய திறவுகோல் ‘என்ற நூலில் எழுதியுள்ளார்.

வைத்தியத்திற்கு மண்ணை பயன்படுத்துவதை  நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அந்த உண்மையை இன்று சில சம்பிரதாய நம்பிக்கைகளிலும் காண முடிகிறது.

நாட்டரசன் கோட்டை கம்பர் சமாதியை சுற்றிலும் கிடக்கும் செம்மண்ணை  எடுத்துப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதை கொஞ்சம் தண்ணீர் போட்டு கரைத்துக் குடிப்பார்கள்.  

தஞ்சாவூர் ஜில்லாவில் வைத்தீஸ்வரன் கோவிலில்  கொடுக்கப்படும் சின்னஞ்சிறு மண் உருண்டைகளை மருந்தாகச் சாப்பிடுக்றார்கள். இதனால் எந்த நோயும் தீர்ந்து விடும் என்ற நம்பிகை இன்றும் பக்தர்கள் இடம் இருந்து வருகிறது .

மண் மருந்து பற்றி காள மேகப் புலவர் தமாஷாக பாடுகிறார்

 

                           மண்டலத்தில் நாளும்

                                வயித்தியராய் தாம் இருந்து

                           கண்டவினை தீர்க்கிறார்

                                 கண்டீரோ? தொண்டார்

                           விருந்தைப்பார்த்(து) உண்(டு) அருளும்

                                 வேளூர் எம்  நாதர்

                           மருந்தைப்பார்த்தால் சுத்த

                                 மண்,!

 

போர்னியோவில் நடந்த கொலைகள்


அவுஸ்திரேலிய , நியூசிலாந்து மற்றும் நேசநாடுகளின் 2428 இளைஞர்கள் ஜப்பானிய போர் வீரர்களால் பட்டினிபோட்டு, சித்திரவதை செய்து  படுகொலை  கொலை செய்யப்பட்ட இடத்தில் நான் நிற்கிறேன்  என்றபோது  இதயம் கனத்தது.

 எண்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களை இரை மீட்டாது கடந்துபோக  முடியாது. இப்படியான சம்பவங்களை மறந்து விடுதல் மீண்டும் அவைகள் நடப்பதற்கு வழிவகுக்கும். முக்கியமாக ஜனநாயக காலத்தில் ஒவ்வொருவரும் அறிவதன் மூலம் தவறானவர்கள்  அரசியல் செய்வதைத் தடுக்க முடியும். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் முறையிலேயே ஆட்சிக்கு வந்தார்கள்.

யுத்தங்கள்,  அதனால் ஏற்படும்  மரணங்களை பத்திரிகைளில்


செய்தியாகவோ,  தொலைக்காட்சியில் காட்சியாகவோ பார்க்கும்போது,  அவை நமக்குத் தூரத்துப் பச்சையாகி விடுகிறது. மனத்தில் நிற்பதில்லை தற்போது காசாவில் நடந்த விடயங்கள் பக்கத்து நாடுகளுக்கே உறைக்கவில்லை. அதேபோல்  இலங்கையில் நடந்த மரணங்கள் பல இலங்கைத் தமிழர்களுக்கே  புரியவில்லை. மரணங்கள் தங்கள் பரப்புரைகளுக்கு வலியூட்டும் என அதிக மரணங்களுக்காகக் காத்திருந்தனர்.  எல்லா நாட்டிலும்  சமூகங்கள்,  காலம் காலமாக துன்பியல் சம்பவங்களாக நடந்தவற்றை இலகுவாக மறந்து விடுகிறது.  ஆனால்   அந்த இடங்களிலிருந்தவர்களுக்கு மன ரீதியில் அல்லது உடல்  ஏற்படும் பாதிப்பு நிரந்தரமானது.  சமீபத்தில்  போர்னியோவிலுள்ள சாபா மாநிலத்திற்குப்  போனபோது எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டது. அதுவும் உடனடியாக அல்ல,  படிப்படியாகவே.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில 1971ம் வருடம் பல்கலைக்கழக புகுமுக வகுப்பான 11-12வருடங்களில் ஒன்றாகப்  படித்த ஐந்து பேர் மற்றொரு நண்பருடன் ஆறு பேராக  மலேசியாவின் சாபா மாகாணத்திற்குப்  போய்ச் சேர்ந்தது ஏப்ரல் 24 மாலையில் ஆனால் ஏப்ரல் 25 அன்சாக்(Anzac)  நாள் எனப்படும். அது அவுஸ்ரேலியர்களுக்கு முக்கியமான நாள்.

சன்டங்கன்(Sandakan) நகரில்  சங்கரி -லா ஹோட்டேலுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் எங்களுடன் வந்தவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள் என்பதால் ‘நாளை அதிகாலை நான்கு மணியளவில் இங்குள்ள மயானத்தில் பிரார்த்தனை நிகழ்வு நடக்க  உள்ளது.  இதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி பாதுகாப்பு அமைச்சர் வந்துள்ளார் ‘ என வழிகாட்டி அழைப்பு விடுத்தார்.

ஊதியம்!


-சங்கர சுப்பிரமணியன்



நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன். இன்றும் அங்கொன்றும்

இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.

​

"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.


"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.


"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.


"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.

 

அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"


"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."


"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

இரண்டே நாள் படப்பிடிப்புத்தான். நடித்து முடுத்து விட்டேன் ஆனால் இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் என் தரித்திரமும் கூடவே சேர்ந்தே வரும் போலிருக்கு. என்ன மனிதர் இவர்? என் நிலைமை தெரிந்தும் இப்படி நடித்ததற்கு உண்டான பணத்தைக்

கொடுக்காமல் இரண்டு நாட்களாயும் பேசாமல் இருக்காரே என்று எண்ணினேன். இரண்டு நாள் போய் ஒரு வாரமும் ஆனது.

 

ஒரு நாள் திடீரென்று வீட்டின் முன் கார் வந்து நின்றது. எட்டிப் பார்த்தேன் அவர் தான் வந்தார்.

 

"அண்ணே மன்னிச்சுடுங்க, இரண்டு மூன்று நாட்களாக வெளி நாட்டில் படப்பிடிப்பு. அதனால் தான் என்னால் உங்களை பார்க்க முடியல" என்று சொல்லி வருந்தினார்.


"பரவாயில்லை தம்பி"


உங்க நடிப்புக்கான ஊதியத்தைக் கொடுக்கத்தான் வந்தேன்" என்று கையில் ஒரு மடித்த தாளையும் சில ரூபா நோட்டுக்களயும் சில நாணயங்களையும் கொடுத்து விட்டு, 


“அண்ணே மறுபடியும் மன்னிச்சுடுங்க. அடுத்த படப்பிடிப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். அப்ப உங்க நினைவு வரவே ஓடோடி வந்தேன்.” என்று சொல்லி மறைந்தார்.

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

 

- திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

September 18, 2024 3:51 pm 

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மாரடைப்பால் மரணமானார். நேற்று (17) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு போது அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.   நன்றி தினகரன் 

கவர்ச்சிக்கு வயது ஓர் எல்லையில்லை என்று நிருப்பித்த சி ஐ டி சகுந்தலா - ச .சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகம் எத்தனையோ விதமான கதாப் பாத்திரங்களை


ஏற்று நடித்த நடிகைகளை பார்த்துள்ளது. குணசித்திர வேடம், நகைச்சுவை வேடம், வில்லி வேடம் என்று மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நடுவில் சில தினங்களுக்கு முன் மறைந்த சி ஐ டி சகுந்தலா இலகுவில் ஓரங்கட்டப்படக் கூடியவர் அல்லர். கவர்ச்சி நடன நடிகையாக அவர் அடையாளம் காணப்பட்ட போதும் அவருக்குள் இருந்த ஆற்றல், வேகம், துடிப்பான நடன அசைவுகள் என்பன அவரை ஏனைய நடிகைகளுக்குள் இருந்து வேறுபடுத்திய போதும் மற்றய நடிகைகளுக்கு அவர் எந்த விதத்திலும் குறைந்தவராக கருதி விட முடியாது.


சகுந்தலா 1950 ம் ஆண்டுகளின் இறுதி பகுதிகளிலேயே திரையுலகிற்குள் இளம் நடன நடிகையாக நுழைந்து விட்டார். பல நடனப் பாடல்களில் கோஷ்டி நடன மாதர்களுக்குள் அவரும் ஆடிக் கொண்டிருந்தார். கதாநாயகியாக நடிப்பவர்களையே கமெரா வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே , ஒண்டிரண்டு குளோஸ் அப் காட்சிகளில் சகுந்தலாவின் அழகிய இளம் முகத்தை காணக் கூடியதாகவே இருந்தது. ஆனாலும் அவரின் திறமை எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயமாகவே கரைந்தது. என்றாலும் அவரின் முயற்சிக்கு பங்கம் வரவில்லை. தொடர்ந்து படங்களில் கோரஸ் நடனம் ஆடிக் கொண்டே இருந்தார்.

அப்படி ஆடிக் கொண்டிருந்தவருக்கு படிக்காத மேதை படத்தில் சிறு

வேடம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின் அவரை ஓரளவு அடையாளம் காட்டிய படம் போலீஸ்காரன் மகள். ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இப் படத்தில் கதாநாயகனால் அச்சுறுத்தப் படும் பெண்ணாக தோன்றி நடித்தார் சகுந்தலா. பீம்சிங், ஸ்ரீதர் படங்களில் நடித்த போதும் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள் ஏதும் அவருக்கு கிட்டவில்லை. தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தவருக்கு 1970 ஆண்டு பொன்னான ஆண்டாக அமைந்தது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் சி ஐ டி சங்கர் படத்துக்கு துணிந்து சகுந்தலாவை கதாநாயகியாக அமர்த்தினர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த இந்த ஆக்ஷ்ன் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சகுந்தலா. குறிப்பாக தை பூசத் திருநாளிலேயே ராஜா பெண் பார்க்க வருவாரடி, பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா ஆகிய பாடல்களில் சகுந்தலாவின் நடனம் தூள் கிளப்பியது. தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஜஸ்டிஸ் விஸ்வநாதன் படத்திலும் ஹீரோயினாக ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்தார் சகுந்தலா. இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்தது ஒரு கனமான வேடம். அதனை குறையின்றி செய்திருந்தார் அவர். இதே ஜஸ்டிஸ் விசுவநாதன் சில ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் பொல்லாதவன் என்று உருவெடுத்த போது சகுந்தலா நடித்த அதே வேடத்தை லஷ்மி நடித்திருந்தார்.

கலியுகக் கண்ணன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 புராணப் படங்களிலும், பக்திப் படங்களிலும் கடவுள் அவப்போவது


தோன்றி பக்தர்களுக்கு அருள் புரிவதை பார்த்துள்ளோம். ஆனால் சமூகப் படம் ஒன்றில் கடவுள் திடீர் திடீர் என்று தோன்றி திருவாய் மலர்ந்தருள்வதை முதல் தடவையாக 1974ம் வருடம் வெளி வந்த ஒரு படத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டியது. அந்தப் படம்தான் கலியுகக் கண்ணன்.


திரையுலகில் பாடலாசிரியராக பயணித்துக் கொண்டிருந்த கவிஞர் வாலி இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தார்.ஏற்கனவே கிருஷ்ண விஜயம் என்ற பெயரில் அவர் எழுதி மேடையேறிய நாடகமே கலியுகக் கண்ணனாக படமானது. வாலி தனது இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கடவுளும், பக்தனும் உரையாடும் காட்சிகளில் அவரின் வசனங்கள் பளிச்சிட்டன.

சாதாரண ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் சாம்பு ஐயர் கடும்

பொருளாதார சிக்கலுக்கு நடுவே தன் மனைவியுடனும், மகனுடனும் வாழ்க்கை நடத்துகிறார். இத்தனைக்கும் முவரும் தொழில் செய்கிறார்கள் , ஆனாலும் குடும்பம் கஷ்ட ஜீவிதமாகவே உள்ளது. ஒரு நாள் பால்காரிக்கு கொடுக்க வேண்டிய ஐம்பத்தொரு ரூபாயை கொடுக்க வழியில்லாத சாம்பு தன் மனைவி கடவுளுக்கு செலுத்த வைத்திருந்த உண்டியலில் இருந்து காணிக்கைப் பணத்தை எடுத்து விடுகிறார். அன்றிரவு கிருஷ்ண பகவான் சாம்பு முன் தோன்றி தனக்குரிய ஐம்பத்தொரு ரூபாயை கேட்கிறார். அது மட்டுமன்றி சாம்புக்கு மறு நாள் இரண்டாயிரம் ருபாய் கிடைக்கப் போவதையும் , அவரின் பணச் சிக்கல் முடிவுக்கு வரப் போவதையும் சொல்கிறார் . அப்படி தனது பணக் கஷ்டம் தீர்ந்தால் பதிலுக்கு ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு தருவதாக சாம்பு வாக்களிக்கிறார்.

மறுநாள் அவர் கலந்து கொண்ட அதிர்ஷ்ட போட்டி ஒன்றில் இரண்டாயிரம் ருபாய் சாம்புவுக்கு அதிர்ஷ்ட பரிசாக விழுகிறது.அத்தோடு அவரின் தரித்திரமும் தொலைகிறது. அடுத்தடுத்து வாழ்வில் முன்னேறி ஐந்து நட்சத்திர ஹோட்டல் முதலாளியாகிறார் சாம்பு. ஆனால் வாக்களித்த மாதிரி ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்துகிறார். கிருஷ்ணரும் அவ்வப்போது சாம்பு முன் தோன்றி பணத்தை கேட்கிறார்.

இலங்கைச் செய்திகள்

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று முதல் ஆரம்பம்

மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

இந்திய துணை தூதர அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பு

“வோக்ஸ்வேகன்” தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறப்பு


இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்ைக

September 16, 2024 6:00 am 
  • எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதனை தீர்மானிக்க வேண்டும் – IMF தெரிவிப்பு 

உலகச் செய்திகள்

ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றம்

பேஜரை அடுத்து வோக்கி டோக்கிகள் வெடிப்பு: இஸ்ரேல்–லெபனான் போர் பதற்றம் அதிகரிப்பு

காசா போர் நிறுத்தத்திற்கு பிளிங்கன் தீவிர முயற்சி: உயிரிழப்பு 41,272 ஆக அதிகரிப்பு

14% வருடாந்த வளர்ச்சியை நோக்கி நகரும் இந்திய பாதுகாப்பு சந்தை

தாய்வானின் கடற்பரப்புக்குள் 835 சீனப் படகுகள் ஊடுருவல்

பங்களாதேஷ் இராணுவத்திற்கு நீதி அதிகாரம்: தேவையெனில் ‘சூடு’ நடத்தவும் அனுமதி

இஸ்ரேலியப் படையினரின் கொடிய செயலால் பரபரப்பு

காசாவில் எகிப்து எல்லையை நோக்கி இஸ்ரேலியப் படையினர் முன்னேற்றம்


ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

- இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு சதி

September 19, 2024 7:28 am 

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 5 மாதங்களுக்கு முன் வாங்கிய 5,000 பேஜர் (Pagers) மற்றும் வால்கி டோக்கி (Walkie Talkie) சாதனங்கள் கடந்த செவ்வாயன்றும் புதன் அன்றும் வெடித்ததில் இதுவரை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பேஜர்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தாய்வான் தொடக்கம் புடபாஸ்ட் வரை தொடர்புபட்டுள்ளது. இவை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பாதுகாப்புக் கட்டமைப்பை முறியடித்துள்ளது. நாடெங்கும் ஆயிரக்கணக்காக பேஜர்கள் வெடித்த நிலையில் சுமார் 3,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் லெபனானுக்கான ஈரான் தூதுவ அதிகாரிகளும் உள்ளனர்.

இலக்கியவெளியின் “வ.ஐ.ச.ஜெயபாலன்” சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு


 



பாரதி தமிழன்னைச் சொத்தாகும் !

 
























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



தாய் நாட்டின் விடுதலைக்காய் 
தமிழெடுத்துக் கவி பாடி
தலை நிமிர்ந்த கவிமன்னன்
தான் எங்கள் பாரதியே 
ஓய் வறியாக் கொடுத்தானே
உணர்வு எழச் செய்தானே
தாய் மண்ணை நேசித்தே
தன் வாழ்வை மறந்தானே !

பெண் போற்றி வாழ்ந்தானே
மண் போற்றி நின்றானே
தன் துன்பம் மறந்தானே
தமிழ் எண்ணி நின்றானே
பொன் பற்றி எண்ணாமல்
பொழுது எல்லாம் தாயகத்தின்
விடிவுதனை மனம் எண்ணி
வெகுண் டெழுந்தான் பாரதியும் !

பன் மொழிகள் கற்றான்
பன் நூல்கள் கற்றான்
என்றாலும் தமிழ் மொழியே
இனிமை எனச் சொன்னான்
தமிழ் என்று சொன்னாலே
அமிழ் தூறும் என்றான்
அவன் வார்த்தை அகமிருத்தி
அவன் நினைவில் நிற்போம்  ! 

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட தியாதீபம் திலீபனின் நினைவேந்தல்

 பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர் வர்த்தக


மையத்தில் “ குட்டி யாழ்ப்பாணம்” எனஅழைக்கப்படு லா சப்பல் La Chapelle பகுதில்  இன்று (15.09.2024) 9:45 மணிக்கு தொடங்கப்பட்ட தியாக தீபம்  திலீபனின் வணக்க நிகழ்வுகள் 26ம் திகதி வரை காலை 10:00மணி முதல் மாலை 18:00மணி வரை நடைபெறும். 

26ம் திகதி வரை காலை 10:00மணி முதல் மாலை 18:00மணி வரை நடைபெறும். (தாயகத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டு சிங்கள அரசால்  அழிக்கப்பட்ட  நினைவுத்துபியின் மாதிரி வடிவத்தில் இம்முறை  இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்திலீபன் அவர்களின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததபிரஞ்சு மக்களைனதும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்ப்பதற்காக

குறித்த நிகழ்வினை பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது . 

தோற்றுப் போன்றவர்களால் மீட்சி பெறுமா இலங்கை! - ச . சுந்தரதாஸ்

 


இலங்கைக்கான ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு  செய்யும்
தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி இடம் பெற நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 38 பேர் போட்டியிடுவதாக பதிவு செய்யப் பட்ட போதும் மூன்று வேட்பாளர்களே வாக்காளர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க இவர்கள் மூவருமே பிரதான வேட்ர்பாளர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் வெவேறு அணியை சார்ந்து, மாறுபட்ட கொள்கைகளை முன் வைத்து போட்டியிடுகின்ற போதும் இவர்கள் மூவரிடமும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. 

கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள்


என்பதே இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை ஆகும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நாட்டினை மீள கட்டியெழுப்பும் பதவிக்கான தேர்தலிலேயே இந்த மூன்று தோல்வியாளர்களும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்! 

அதே போல் இவர்கள் போட்டியிடுவதற்கு அமைத்திருக்கும் அணியும் மிக விசித்திரமாகவே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரணிலும், சஜித்தும் இன்று இரண்டு அணிகளாக பிரிந்து களத்தில் குதித்துள்ளார்கள். ஆக ஐ தே க வின் வாக்குகள் இரு பாதியாக இவர்கள் மத்தியில் பிரிய வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ஐ தே க வுக்கு போட்டியாக கடந்த தேர்தலில் குதித்த மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன இரண்டு அணிகளாக பிரிந்து ஓர் அணி ரணிலுக்கும், மற்றைய அணி நாமலுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளன. பெரமுனாவின் கணிசமான வாக்குகள் அனுரகுமாராவுக்கு போகலாம் என்று அனுமானிக்கவும் இடம் உண்டு. அதே வேளை குறிப்பிட தக்க வாக்குகள் சஜித்துக்கும் விழலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு மூன்று சதா வீத வாக்குகளை பெற்ற அனுரகுமார இந்தத் தேர்தலில் பாரியளவில் வாக்குகளை பெறுவார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த வாக்குகள் அவருக்கான பாரம்பரிய ஜே வி பி யின் வாக்குகளாக மட்டுமன்றி , பொது ஜன பெமுன கட்சிக்கு சென்ற முறை வாக்களித்து ஏமாந்த பலருடைய வாக்குகளாகவும் அமையும் என்றே கருதப்படுகிறது. 

ஆக இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தங்களுக்குரிய பாரம்பரிய , கட்சி சார்ந்த வாக்குகளை மட்டும் நம்பி இராமல் மாற்று கட்சிகளின் வாக்குகளையும் சுவீகரிக்க அல்லது அபகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன் எந்தத் தேர்தலிலும் இல்லாத நிலையே இந்தத் தேர்தலில் காணப்படுகிறது. 

எது எப்படியோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நம்பி அறுபத்தொம்பது இலட்சம் வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாரி வழங்கிய சிங்கள வாக்காளர்கள் இம் முறை அணி மாறி, நிலை மாறி, கட்சி மாறி தங்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து அவரை தங்களின் காப்பாளராக தெரிவு செய்யப் போகிறார்கள்!

வெகுமதி என்னை நோக்கி நகைத்தபோதும்!

 


…..சங்கர சுப்பிரமணியன்.



நான் ஒரு பழம் விற்கும் பழவியாபாரி
ஒருவகை பழங்கள் மட்டும் விற்பதில்லை
பலவகை பழங்கள் நான் விற்றுவந்தேன்
கூடையில் சுமந்தே பழங்கள் விற்பேன்

பழங்களை கடைவைத்தும் விற்றிடுவர்
பணம் சம்பாதிக்க தொழில் செய்திடுவர்
வாழ்க்கைக்காக பழங்களை விற்பதால்
நான் கடைவைத்திட விரும்பவில்லை

பலர் கடைவைத்து பழங்கள் விற்றாலும்
ஒரே வகை பழங்களை மட்டுமே விற்பர்
பலவகை பார்த்து வாங்கத் தெரியாதோ
எனக்கொன்றும் அதைப்பற்றி தெரியாது

கடைவைக்க விருப்பமில்லை என்றாலும்
கூடையில் சுமந்து பழங்கள் விற்றிடுவேன்
கூடை சுமந்து பழங்கள் நான் விற்றாலும்
பலவகைப் பழங்களையும் விற்று வந்தேன்

அறிவை வளர்த்த தாயார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


அறிவை வளர்க்கும் நூல்களை படிக்க வேண்டும். சில சமயம் பெற்றோர் கல்வி அறிவு அற்றவவரர்கள் ஆக இருந்த போதும் அவர்கள் அறிவின் அவசியத்தை உணர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள். அதனால் அந்த பிள்ளைகளை அவர்களால் நல்வழியை காட்ட முடிகிறது.  அண்ணனும்  நானும் எமது தாயாருடன் அரசால் வசதி அற்றோருக்கு வழங்கும் வீட்டில் தயாருடன் வாழ்ந்தோம்.  உணவு பற்றாக்குறை இருக்கவில்லை. இவற்றை எல்லாம் சமாளிக்க எமது தாயார் பட்ட கஷ்டத்தை விளங்கும் பருவம் இல்லை நமக்கு. இதை சமாளிக்க எமது தாயார் மூன்று வீடுகளில் வேலை செய்தார்.

நானும் சகோதரரும் பாடசாலை போவது மாலை foot  ball  விளையாடுவது, வீடு திரும்பியதும் டிவி பார்ப்போம். வேறு எதுவும் செய்ய வேண்டும் என நமக்கு தெரியாது TV எல்லா சேனல்களிலும் என்ன நேரம் எது வரும் என எமக்கு அத்துப்படி. எமக்கு பிடித்த Cowboy படம் பார்த்து அதே போல் குதிரை ஓடி விளையாடுவோம். எமக்கு தந்தை என ஒருவர் வீட்டை விட்டு போய் பல வருஷமாகிவிட்டது அதனால் கண்டிப்பு கிடையா  அதிர்ஷ்டசாலிகள் நாம்.

1961 ஆண்டு நான் ஐந்து வயது, படித்துக் கொண்டிருந்தேன்.  எனது பாடசாலை  புள்ளிகள் குறைவாக இருந்தது. இது பற்றி நான் கவலை ப்படவில்லை.  எனது தாயார் இந்த வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.  எனது புள்ளிகள் அவரை ஆட்டிவிட்டது..  இத்தனைக்கும் எனது தாயார் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். நாம் பையன்கள் அவரை தப்பு கணக்கு போட்டு விட்டோம் நாம் நினைப்பதை விட அவர் புத்தி கூர்மை உடையவராக இருந்தார். அவர் வேலை செய்யும் இடங்களில் புத்தகங்கள் பார்த்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்த வேகத்தில் டிவி வயரை பிடுங்கி அறிந்தார் எங்கள் இருவரையும் இருக்கச் சொல்லி பிள்ளைகளே இன்றிலிருந்து நீங்கள் சில காரியங்கள் செய்ய போகிறீர்கள்.  நீங்கள் வாரம் இரு புத்தகத்தை படித்து எனக்கு எழுதி காட்ட போகிறீர்கள். அவரோ விடுவதாக இல்லை, மாலை வந்ததும் உங்களை நூல் நிலையம் அழைத்து போகிறேன் என்றார். மறுநாள் அண்ணாவும் நானும் வேறு  வழி இன்றி அவரது கட புட என  ஒலி எழுப்பும் காரில் ஏறி public library க்கு செல்லத் தொடங்கினோம்.  நான் சிறுவர் நூல்களை புரட்ட ஆரம்பித்தேன், எனக்கு மிருகங்களை பிடிக்கும் சிறிய மிருகம் தொட்டு எனது ஆர்வம் பெரிய மிருகம் Dinosaur எனவி்ரிய ஆரம்பமானது.

இந்த பாதையில் நான் பயணத்தை தொடர என்னை சுற்றி பல மாற்றங்கள் நிகழ்ந்தன, எனது ஆசிரியர் எனது மாற்றத்தை கவனிக்க தொடங்கினர்.  நாம் எழுதிய குறிப்பு வாசிக்கும் அறிவு கூட  எமது தாயாருக்கு இருக்கவில்லை என அறிய எமக்கு பல காலம் ஆகியது.         

அவள் ஒரு தொடர்கதை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


தமிழ் படங்களில் கதாநாயகி பெரும்பாலும் அப்பாவி குடும்பப் பெண்ணாக , கணவனின் காதலனுக்காக எதையும் செய்யக் கூடியவளாக வருவாள், அல்லது திமிர் பிடித்த பெண்ணாக வருவாள் . இந்த நடைமுறை சம்பிரதாயத்தை மாற்றி எடுக்கப் பட்ட படம்தான் அவள் ஒரு தொடர்கதை. இதில் கதாநாயகி நெருப்பாக சுடுகிறாள். திமிர் பிடித்தவளாக எடுத்தெறிந்து பேசுகிறாள், எல்லாரையும் அலட்சிய படுத்துகிறாள் . ஆனால் அவளிடமும் பெண்மையும், மென்மையும் இருக்கிறது. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் தன்மையும் இருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு இவள் ஒரு புது படைப்புதான்.


இந்தப் படம் வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கே எஸ்

கோபாலகிருஷ்ணன் குலவிளக்கு என்று ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதிலும் கதாநாயகி குடும்பத்துக்காக ஓடாய் உழைத்து துரும்பாய் இளைத்து தன்னையே தியாகம் செய்கிறாள். ஆனால் அவள் பலவீனமானவள். சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் அவள் ஒரு தொடர்கதை நாயகி தன்னுடைய ஆளுமையை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் நடந்து அனுதாபத்தை விட, அங்கீகாரத்தை பெற்று விடுகிறாள்.

படத்தின் கதாநாயகி கவிதாவாக நடிப்பவர் புது முகம் சுஜாதா. புதுமுகம் என்று சொல்ல முடியாவண்ணம் கவிதாவாகவே மாறி விட்டார் எனலாம். காட்சிக்கு காட்சி அவர் காட்டும் முகபாவம், வசனம், சிரிப்பு, கடுமை எல்லாமே அவரின் திறமைக்கு அணிகலன்களாக மாறுகின்றன. இவருக்கு அடுத்த படியாக கவருபவர் படாபட் ஜெயலஷ்மி.

கமல்ஹாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ் மூவரும் தங்களின் பாத்திரங்களை சமமாக பங்கு போட்டுக் கொண்டு டைரக்டர் போட்ட ரோட்டில் சமத்தாய் நடந்திருக்கிறார்கள். இவர்களோடு ஸ்ரீப்ரியா, லீலாவதி, ரீனா, சோமன் ஆகியோரும் நடித்திருந்தனர். இவ்வளவு பேர் இருந்தும் படதில் காமெடிக்கென்று யாரும் பிரத்தியேகமாக இல்லை. அதுவும் வசதியாகி விட்டது. நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லாத பாலசந்தரின் முதல் படம் என்றும் இப் படத்தை சொல்லலாம்.

தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம்!

 September 10, 2024


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளைகள் நிராகரித்திருக்கின்றன. திருகோணமலையில் தொடங்கிய பகிஷ்கரிப்பு தற்போது கிளிநெச்சி மாவட்டக் கிளையிலும் பிரதிபலித்திருக்கின்றது.

இதே போன்று, மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அவ்வாறாயின் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு என்ன பெறுமதி உண்டு? தமிழ் அரசுக் கட்சி தற்போது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது? எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையா? தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் ‘நாளொரு மேனி பொழுதொரு மேனி’ என்பதுபோல் நடந்து கொள்கின்றார்.

சுயவிருப்பு – சுயநல அரசியல்!

 September 9, 2024


ஈழத்தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக நீட்சிகொண்ட காலத்திலிருந்து உள்முரண்பாடுகளும் – குத்து வெட்டுக்களும் ஒட்டிப்பிறந்த குழந்தையாகவே இருந்தது. இறுதியில் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் உள்மோதலாக விரிவுகொண்டது. இதில் அந்த இயக்கம் – இந்த இயக்கம் என்னும் பாகுபாடுகள் இன்றி ஒருவரையொருவர் கொன்று கொண்ட வரலாறு ஏடுகளில் பதிவாகியிருக்கின்றது. இன்றும் அதன் எச்சசொச்சங்கள் அரசியலை ஆக்கிரமித்துத்தான் இருக்கின்றன.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய சூழலில்கூட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இது எதனைக் காண்பிக்கின்றது? இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகின்றதா? ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு கோடரி காம்பாக அந்தக் கட்சி மாறிவிட்டதா? இதுவரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயரில் இயங்கிவரும் சைக்கிள் அணியினர் மட்டும்தான் ஒற்றுமையை சீர்குலைக்கும் கோடரி காம்பாக இருந்தனர். இப்போது அவர்களுடன் தமிழ் அரசுக் கட்சியும் இணைந்திருக்கின்றது. இன்று நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ்த் தேசிய அரசியல் என்று ஓர் அடையாளமே இருக்கப்போவதில்லை.

அநுரவுக்கு மட்டுமல்ல…!

 September 14, 2024


தேசிய மக்கள் சக்தி (ஜே. வி. பி.) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவுக்கு வடக்குக்கு சென்று வாக்குக் கேட்கும் தகுதி இல்லையென்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருக்கின்றது. இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் தங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றதா? அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் மும்முனைப் போட்டி தீவிரமடைந்திருக்கின்றது. கணிப்புகளில் அநுரகுமார திஸநாயக்க முன்னணி வகிக்கக்கூடிய வேட்பாளராகவே நோக்கப்படுகின்றார்.

இந்த நிலையில் ஏனைய வேட்பாளர்களின் கவனம் முழுவதும் அநுரவின் பக்கமாகவே சென்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அநுரவுக்கு வடக்கு மக்களிடம் வாக்குக் கேட்கும் தகுதி இல்லையென்று சஜித் தரப்பு கூறுகின்றது. அநுரவுக்கு மட்டுமல்ல – மாறாக எந்தவொரு பிரதான வேட்பாளர்களுக்கும் வடக்கு மக்களின் வாக்குகளைக் கோரும் தகுதி இல்லை. அப்படியிருப்பதாக அவர்கள் கருதிக்கொள்வதற்கு பிரதான காரணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பலவீனமான அரசியல் செயல்பாடுகள்தான். முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கே வாக்களித்திருந்தனர்.