இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள் - முருகபூபதி


                                    " தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு.
ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம்  சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது"
இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு  முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன்.
மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!??
இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றதா...?1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு "கையசைத்துவிட்டு" ,  அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் "கைகுலுக்க" வந்தபோது  அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு - (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை.
ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?
எனது  கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள்,  தெருக்கள் யாவும் " மாவத்தைகளா"கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, "கிராமோதய மண்டலய" என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட  இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன்.
இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!!
அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்:
ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்‌ஷபதி.
இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்)  இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில்  தமிழைத்தேடவேண்டும்.
சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் "ரண் கெகுளு" என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில்  எழுதியிருக்கும், " கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்" என்ற ஆய்வை பார்க்கலாம்.
அதிலிருந்து ஒரு பந்தி: எமது பண்டைய " வன்னிமைகள்" சிங்களத்தில் "ரட்ட" எனவாகிவிட்டன. குளம் " வெவ" எனவும் - உதாரணம்: கலாவெவ.   மாதுறை என்பது" மாத்தற" ,தேவேந்திரமுனை என்பது "தெவினுவர",மாயவனாறு என்பது, "தெதுறு ஓயா",  காளி தேசம் என்பது " காலி", கடம்ப நதி என்பது " மல்வத்து ஓயா", பட்டிப்பளையாறு என்பது "கல்லோயா", முதலிக்குளம் என்பது "மொரவெவ" , மணலாறு என்பது " வெலிஓயா", பார்வதி கிராமம் என்பது " பதவியா",  திருகோணமலை என்பது "திருக்கிணாமலை", அரிப்புச்சந்தி என்பது " அலியொலுவ" , யாழ்ப்பாணம் என்பது " யாப்பனே" , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன.
(மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இன்றைய பதவியா முன்னர் வண்ணாத்திக்குளம் என அழைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.)
"இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன கிராமங்களைத் தேடுவதும்  தமது கட்டுரையின் நோக்கமாகும்"- என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வரி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.
இன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான செயல்தான் இல்லை.
" நாட்டை விட்டே ஓடிவிட்டீர்கள், நிலம் பறிபோவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?, ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள்?" என்று இந்தப்பதிவைப்பார்க்கும் எவரும் எனக்கு எதிர்வினையாற்றலாம்!!!
எங்கிருந்தாலும் எங்கள் தாயகம் என்ற உணர்வுடன் வாழ்வதனால், எமது தேசத்தின் கோலம் பற்றி அங்கிருந்தே ஆய்வுசெய்தவர் பற்றி நான் எழுதிவரும் " பெண்ணிய ஆளுமைகள்" தொடரில் இங்கு எழுதவிரும்புகின்றேன்.

மெல்பன் வாசகர் வட்டத்தில் Mary Mcleod Bethune வாழ்க்ககைச்சரிதம்






"மனிதர்களிடையே பரஸ்பரம் நிலவும் வெறுப்பிற்கு எதிராக பணியாற்றியே தீர வேண்டும் " --  மேரி மெக்லாய்ட் பெத்யூன் 

 

கருப்பையா ராஜா




அமெரிக்காவின்  அடிமைத்தளையிலிருந்து மீண்ட ஆபிரிக்க கருப்பினத்தவரின்  வாழ்க்கை உயர்வுக்கு கல்வி மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என அசைக்க முடியாத கனவுகளுடன் தன் இன மக்களின் கல்வி உயர்விற்காக  தன் வாழ்வில் எதிர் நோக்கிய தடைகளை தகர்த்து தன் கனவுகளை சாத்யமாக்கியும் இயங்கிய  இரும்புப் பெண் மேரி பெத்யூன்.

கமலாலயன் எழுத்துக்களில் மேரி பெத்யூனின் வாழ்க்கை சரிதம் குறித்து மெல்பன் வாசகர் வட்ட உரையாடலில் பேசிக்கொண்டு இருந்த வேளையில்,  சிரியாவில் இரசாயன குண்டு மழை பொழிந்து எண்ணற்ற  இளம் தாய்களும் நம் குழந்தைகளின் சாயல் கொண்ட  பள்ளி சென்று திரும்பாத குழந்தைகளும் ரத்தச் சகதியில் ....

பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றறைக்கோடி ஆபிரிக்கர்களை அடித்து சங்கிலியால் பூட்டி அடிமைகளாக்கி அமெரிக்கா கொண்டு வருவதற்காக  அதை விட பல மடங்கு ஆபிரிக்கர்களை கொன்றனர் அமெரிக்க வெள்ளையர்.

மேரி பெத்யூன் சொல்கிறார்:-

1900களில்  இன மோதல்களை அன்றைய ஊடகங்கள் சரியான முறையில் வெளிக்கொண்டு வராமல் பார பட்சமாகவே நடந்து கொண்டனவாம் .  இன்றுவரையில்  அதே நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம்.

ஆணவம், வெறுப்பு  ஆகிய இரண்டின் சாட்சியாக இரண்டு உலகப்போர்களை கடந்து வந்து விட்டோம்.
ஜப்பான்மீதான அணுகுண்டு சோதனையை அது தந்த அழிவை மறந்து விட்டோம், 

கடந்த சில வருடங்களில் வளைகுடா நாடுகளில்  ஏற்பட்ட போர்களையும் அழிவுகளையும் மறந்தே போய்விட்டோம், இத்தனைக்கும் மேல் நம் இன மக்களின் மேல் கொண்ட வெறுப்பால் இலங்கை இன படுகொலையையும் அதற்கு துணை நின்ற பேரினவாதங்களையும் மறந்தே போனோம்,...!?
இதோ இன்றைய தினத்தில்  சிரியா....!?
இந்தப்பின்னணிகளிலிருந்துதான் கமலாலயனின் எழுத்தில் " "உனக்குப்படிக்கத்தெரியாது" என்ற நூலை மெல்பன் வாசகர் வட்டம் அண்மையில் ஆய்வுசெய்தது.

இலங்கைச் செய்திகள்


ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!!!

பிரிகேடியர் பிரியங்கவின் நிலை என்ன ? மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படமாட்டாராம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த ஜப்பான் பௌத்த துறவிகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது..!




ஆண்டொன்று கடந்த நிலையில் விடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்.!

01/03/2018


உலகச் செய்திகள்


ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

ஸ்ரீதேவியின் உடல் எம்போமிங் செய்வதில் தாமதம் : போனி கபூரிடம் துபாய் பொலிஸார் விசாரணை!!!

வெளியானது ! ஸ்ரீதேவியின் மரணத்திற்கான காரணம்!!!

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி




ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது : நாளை இறுதிக் கிரியை

28/02/2018 டுபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது.
நடிகை ஸ்ரீதேவி, டுபாயில் உள்ள ஹோட்டல் அறையின் குளியலறையிலுள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் டுபாய் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சவரக்கத்தி – திரை விமர்சனம்


பார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.

அதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.
இந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.
ஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.
ராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.
இறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா? ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா? அந்த திருமணம் நடந்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.
படத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.
படத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
அரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.
மொத்தத்தில் `சவரக்கத்தி’ கூர்மை.   நன்றி tamilcinema.news







மரண அறிவித்தல்




கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்)

1ம் கட்டை ஒழுங்கை, புலோலி கிழக்கு, பருத்தித்துறையினை வதிவிடமாகவும், காணிப்பதிவாளர் அலுவலகத்தில் கடமையாற்றி அரச ஓய்வூதியம் பெற்றவருமாகிய திரு. கோபாலகிருஷ்ணர் சிவகுமாரசாமி (சிவஞானம்) அவர்கள் கடந்த (17.02.2018) சனிக்கிழமை அன்று காலமாகி விட்டார். அன்னார் காலஞ் சென்ற கோபாலகிருஷ்ணர் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்ற சந்திரசேகரம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஜெயராணியின் அன்புக் கணவரும் இரத்தினம் கனகசபாபதி, கனகம்மா சுப்பிரமணியம், விஜயம் விக்கினேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் சுமதி(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சந்திரகுமார்(பிரான்ஸ்), குமரேசன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும் கஜன் சந்திரகுமார், ஜனகன் சந்திரகுமார், சுவேதா சந்திரகுமார், மீரா தயாபரன், விக்னேஷ் குமரேசன், விதுஷா குமரேசன், விந்துஷா குமரேசன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (22.02.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: தயாபரன் (0411 024 506)

சிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா 20/03/2018 - 03/03/2018


சிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா இம் மாதம் 20ம் திகதி புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் முதல் முறையாக கொடியேறீ   மிக சிறப்பாக நடைபெறுகின்றது.  தேர்த் திருவிழா 28ம் திகதியும் தீர்த்த திருவிழா மார்ச் மாதம் 1ம் திகதியும் நடைபெறும்.

படப்பிடிப்பு ; ராஜன்

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

.
இந்தியாவின் மிகச்சிறந்த பொலிவூட் நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
54 வயதுடைய ஸ்ரீதேவி டுபாயில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது மாரடைப்பினால் மரணமுற்றதாக இந்திய ஊடகங்கள் மேலும்  செய்திவெளியிட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 



ஶ்ரீதேவி நினைவலைகளில் - கானா பிரபா



“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்”

 இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து இன்றும் காண முடிகின்றதொன்று.
பாலிவூட் எனும் ஹிந்தித் திரையுலகில் வைஜெயந்திமாலா, ஹேமமாலினி காலத்துக்குப் பின் அவர்களைத் தாண்டிய பெரியதொரு அலை ஶ்ரீதேவியினால் தான் நிகழ்ந்தது. இன்று வட நாட்டில் 
இசைத்துறையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர்.ரஹ்மானை மையப்படுத்திய உச்சபட்ச அங்கீகாரம் போன்றதொரு நிலையைத் தமிழுலகில் இருந்து சென்று எண்பதுகளில் நடிப்புத்துறையில் நிறுவினார் ஶ்ரீதேவி.

“ஶ்ரீதேவி செத்துப் போனார்” என்ற செய்தி மனசு முரசறிவித்த போது, தன் முகத்தை ஒருக்களித்துச் சாய்த்து வாய் விட்டுக் கொடுக்கும் அவரின்
அந்த டைப்ரைட்டர் முத்திரைச் சிரிப்புத் தான் ஞாபகத்தில் வந்து போனது. குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு அறிமுகமாகிப் பின்னர் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தன் இளவயதிலேயே கனமானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்த வகையில் அவரின் அடுத்த சுற்று ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் திரை வாழ்வில் மறக்கமுடியாத உயர் படைப்புகளில் ஶ்ரீதேவியின் பங்களிப்பு வெகு சிறப்பாக அமைந்து விட்டது.

நாத சங்கமம் 03/03/2018

.
kumaran Panchabikesan என்று நாதஸ்வர கலைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது . இது தவறுதலாக இடம்பெற்றிருக்க வேண்டும் . ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். kumaran Pachchamoorththi என்று திருத்தி கொள்ளலாம் .


ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயம் 03/03/2018










விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் பற்றிய விமர்சனம்

.
ஆனந்த யாழை மீட்டிய விபுலாநந்த அடிகளார்.


முனைவர் மு.பழனியப்பன்,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி
திருவாடானை, 623407,
9442913985

       யாழ்நூல் யாத்த பெரும்புலவர் விபுலாநந்த அடிகளார் பற்றிய ஆவணப்படம்  இலக்கிய வரலாற்று ஆவணமாகத் தற்போது வெளிவந்துள்ளது. இப்படைப்பினைப் பெருமையுடன் வயல்வெளித்திரைக்களம்  வெளியிட்டுள்ளது. இவ்வாவணப் படத்தின் எழுத்து, எண்ணம், இயக்கம் அத்தனைக்கும் உரியவர் இளம் செம்மொழி அறிஞர் மு. இளங்கோவன் ஆவார்.  இவரது இனிய குரலாலும் ஆவணப்படம் அழுத்தம் பெறுகிறது. 

    இமயம் முதல் குமரி வரை என்ற இந்திய எல்லையை விபுலாநந்த அடிகளாருக்காகச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். இமயம் முதல் இலங்கைக் காரைதீவு வரை என்பதே அந்த எல்லையின் விரிவாக்கம். அடிகளாரின் வாழ்க்கைப் பயணம் இலக்கியத் தேடல் பயணமாக, கல்வி பரப்பும் பயணமாக, இராமகிருஷ்ண போதனைகளை விளக்கும் பயணமாக இமயம் முதல் இலங்கை வரை நிகழ்ந்துள்ளது. 

இமயம் முதல் இலங்கை வரை என்ற இணைப்பு நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. அரசுகள் மாறலாம். அதிகாரங்கள் வேறுபடலாம். அன்பு ஒன்றே மாறாதது.


வீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? "மலையக மக்கள் கவிமணி" சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள் - முருகபூபதி


"பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம்.
பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை." இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை.
இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார்.
உலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார்.