"அண்ணை றைற்" புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் காலமானார்:-

.

"அண்ணை றைற்" புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் காலமானார்:-
 கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன்  இன்று (26.02.14) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.  10 ஜூலை 1944 கரவெட்டியில்  பிறந்து இணுவிலில் புகுந்து; பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ். புhலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.  தணியாத தாகம்  என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி  நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

உலக மகளிர் தினம் - 08 .03. 2014 -க.ராஜ்குமார்

.

பெண்கள் உரிமை போற்றுவோம் 




இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கைச் செய்திகள்

'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"

மன்னாரில் வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க முயற்சி

சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்
=======================================================================
'இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது"

01/03/2014 இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று  இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Vembadi Night 08 .03 .2014

.



கோடையில் ஒரு விபத்து - நடேசன்

.
dog_on_wheels
அவுஸ்திரேலியா கோடைகாலத்தில் சூரியன் தாமதமாக மேற்கில் அஸ்தமிப்பதால் எங்களது நாட்கள் நீண்டவை. ஐரோப்பா வடஅமெரிக்காபோல் கோடையில் இஙகு நீண்ட விடுமுறை கிடைப்பதில்லை. கோடை வெப்பம் நாற்பது டிகிரிக்கும் மேல் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் வறுத்து எடுத்துவிடும் தன்மையுள்ளது.
மெல்பனில் சூரியன் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மிகவும் மெதுவாக அசைந்தபடி அஸ்தமிப்பதால் எங்களைப் போன்ற சொந்த தொழில்செய்பவர்களது வேலை நேரமும் பகலோடு சேர்ந்து நீண்டு விடுகிறது.
இதனால் உடல் மனம் இரண்டும் களைத்து எப்போது வீடு செல்வோம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால் இன்னும்இரவாகவில்லைத்தானே மிருக வைத்தியர் இன்னமும் இருப்பார் என நினைத்துக்கொண்டு சிலர் தமது செல்லப்பிராணிகளை வைத்தியசாலைக்குகொண்டு வருவார்கள்.
வெள்ளிக்கிழமை எனும்போது மனச்சோர்வு மலையாக மாறுவதால் சரியாக மாலை ஆறரை மணியிருக்கும்போது கிளினிக்கை மூடிக்கொண்டுவீடு செல்வதற்கு நானும் எனது நேர்சும் தயாராகிக் கொண்டிருக்கும்போது வாசலில் எங்களுக்கு மிகவும் அறிமுகமான மிஸ்டர் பாக்கர் தனதுஆறு வயது நாயை கையில் அணைத்தபடி வந்து நின்றார். எமக்குள் அபாயச்சங்கு ஒலித்தது.

படித்தவற்றை என்னசெய்வது ? - முருகபூபதி

.



முன்னர்      அணிந்த       உடைகளை      என்ன     செய்வோம்?       என்பதற்கு  அவரவர்      தரப்பில்       பதில்கள்       இருக்கின்றன.      பொதுவாக  இல்லாதவர்களுக்கு       கொடுப்பார்கள்.       இலங்கையில்      ஒரு    காலத்தில்  பழைய     ஆடைகளை       கொடுத்துவிட்டு       புதிய     பாத்திரங்கள்  வாங்குவதை       சிறுவயதில்      பார்த்திருக்கிறேன்.
தற்பொழுதும்      இந்த     வழக்கம்     இலங்கையிலிருக்கிறதா?      என்பது  தெரியாது.
சுனாமி  கடற்கோள்     பாதிப்புக்கு      உதவுமாறு      அவுஸ்திரேலியா  மெல்பனில்      அன்பர்களிடம்     வேண்டுகோள்      விடுத்தபொழுது -   பெட்டி  பெட்டியாக      பாவித்த      உடைகள்தான்      முதலில்      வந்து     குவிந்தன.  ஏனைய      நிவாரணப்பொருட்கள்      அதன்பிறகுதான்.       இரண்டு  கொள்கலன்களில்      அவற்றை      நிரப்பி       கப்பல்      மார்க்கமாக    இலங்கைக்கு     கொண்டு     சேர்த்ததும் -      பின்னர்      அவற்றை      கொழும்பு       துறைமுகத்திலிருந்து      வெளியே      எடுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு       விநியோகிக்க      பட்ட     கஷ்டங்களும்   நீண்டதொரு     கதை.
 வாசிக்கும்      பழக்கம்      உள்ளவர்களிடம்      நூல்கள்,      பத்திரிகைகள்,     வார- மாத     இதழ்கள்    குவிந்துவிடும்.       இவற்றில்      பத்திரிகைகள்      இதழ்கள்  இலங்கையில்      எடை பார்த்து      கிலோவுக்கு     இன்னவிலை     என்ற  நிர்ணயம்      இருக்கிறது.     பழைய     பேப்பர்கள்      வாங்கும்    கடைகள்  இலங்கையில்      இருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில்      வீடுகளில்     Recycling bin   இருக்கிறது.   மாநகர சபை  அவற்றை      நிலவரி       செலுத்தும்      ஒவ்வொரு      வீடுகளுக்கும்      வழங்கும்.   வாரத்திற்கு      ஒரு     தடவை      நகரசுத்தி     தொழிலாளர்கள்     வீட்டுக்கழிவு  குப்பைகளை      எடுத்துச்செல்லும்பொழுது     குறிப்பிட்ட  Recycling bin  களில்  கொட்டப்பட்டிருக்கும்       பழைய     பேப்பர்கள்       இதழ்கள்       காகிதாதிகள்  மற்றும்      பிளாஸ்ரிக்     போத்தல்கள் -    பொருட்களையும்  எடுத்துச்செல்வார்கள்.
அவை மீள்      உற்பத்திக்குப்பயன்படுகின்றன.

பலேரி மாணிக்கம் "ஒரு பாதிராக் கொலபாதகத்திண்டே கதா" - கானா பிரபா

.

"ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா"
பலேரி மாணிக்கம் படம் வந்து 5 வருஷங்கள் கழிந்து விட்டது. ஒரிஜினல் டிவிடியைக் கூட எப்பவோ வாங்கி வைத்தாலும் ஏனோ இது நாள் வரை நான் பார்க்கவில்லை. இதை மட்டுமல்ல இன்னும் சில படங்களை நான் பார்க்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், இப்படியான படங்களைப் பார்ப்பதற்கேற்ற மனச்சூழலை என்னுள் ஏற்படுத்த வேண்டும் என்பதே. சும்மா கடமைக்காக இப்படியான படங்களைப் பார்த்துக் கழிக்கக் கூடாது. அந்த வகையில் நேற்றுத்தான் "பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா" படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவாரம் நீட்டித்துப் பார்க்கும் எனக்கு, படத்தின் எழுத்தோட்டமே அப்படியே நிலைகொள்ள வைத்து விட்டது, முழுமூச்சாய் முடிவுப் புள்ளி வரை இந்தப் படத்தோடு ஒன்றிப்போனேன்.

சில மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட, சொக்கலிங்கம் என்ற வழக்கறிஞர் எழுதிய "புகழ்பெற்ற வழக்குகள்" என்ற நூலை வாசிக்கும் போது ஒரு புலனாய்வு அதிகாரியாக மனம் கூடு விட்டுக் கூடு பாய்ந்த உணர்வு ஏற்பட்டது அதே உணர்வு தான் இந்தப் படம் தந்த அனுபவமும். படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்தில் வரும் பாடலே பலேரி என்ற ஊரில் உள்ள மாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஐம்பதுகளின் இறுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைப் பற்றிப் பாடலோடு சோக ராகம் பாடுகிறது.

களிப்புடன் உலவிவந்தோம் ! - எம்.ஜெயராமசர்மா ------- மெல்பேண்

.


                  காலிலே செருப்புமின்றி
                       கனதியாய் உடுப்புமின்றி 
                  வேலியால் வந்தமுள்ளு
                        விரலிலே குத்திநிற்கும் 

                 நாமதைப் பார்த்திடாமல் 
                        நடந்திடுவோமே அங்கு 
                  வேர்வையால் நனைந்ததேகம் 
                         வெளியிடும் கள்ளந்தன்னை  

                 ஊரெலாம் நடந்தேசெல்வோம் 
                       உரமுடை தேகத்தோடு 
                  நீர்நிலை கண்டேவிட்டால் 
                        நீச்சலே நீளும்நாளும்

                   பள்ளிக்கும் நடந்தே சென்றோம்
                           பலவிடம் நடந்தே நின்றோம்
                    நல்லன நடந்த தன்று 
                             நாமெலாம் நலமாய் நின்றோம் 
                   

                    கண்டதை உண்டு நின்றோம் 
                          களிப்புடன் உலவி வந்தோம்
                     நண்பர்கள் ஒன்று சேர 
                          நாளெலாம் மகிழ்ந்து நின்றோம்

உலகச் செய்திகள்


ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு

 எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா : பிரதமர் திடீர் அறிவிப்பு


====================================================================

ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு


28/02/2014  தாய்­லாந்து பிர­தமர் யின்லக் ஷின­வட்­ரா­வுக்கு அர­சாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்­பந்­த­மாக அலட்­சி­யத்­துடன் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ர­ணையில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்க அந்­நாட்டு ஊழ­லுக்கு எதி­ரான அமைப்­பொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.
மேற்­படி அரிசி உதவி வழங்கல் திட்­டத்தில் கடும் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தான யின்லக் ஷின­வட்­ராவின் எதி­ரா­ளிகள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.
அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டும்­பட்­சத்தில், அவர் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வ­துடன் அர­சி­யலில் பங்­கேற்ற 5 வருட கால தடை­யையும் எதிர்­கொள்ள நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கடந்த புதன்­கி­ழமை தலை­ந­க­ரி­லி­ருந்து வட­ந­க­ரான சியாங் ராய்க்கு சென்­றுள்ள யின்லக் ஷின­வட்ரா, தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­ய­கத்தில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில் ஆஜ­ரா­க­மாட்டார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் அவ­ருக்கு பதி­லாக அவ­ரது சட்­டத்­த­ரணி விசா­ர­ணை­களில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்­கலாம் என தேசிய ஊழ­லுக்கு எதி­ரான ஆணை­யகம் குறிப்­பிட்­டுள்­ளது.
தனக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள பிர­தமர், எனினும் உண்­மையை வெளிக்­கொ­ணரும் முக­மாக மேற்­படி ஆணை­ய­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வுள்­ள­தாக கூறினார்.
யின்­லக்கின் அர­சாங்­கத்தின் முக்­கிய கொள்­கை­களில் ஒன்­றாக விளங்கும் அரிசி உதவி திட்டம் உலக விலை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 50 மடங்கு அதி­க­மான விலைக்கு விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து அரி­சியை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்ய வழி­வகை செய்­கி­றது.

கவிஞர் மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 15.03.2014

.
மெல்பனில்
மூத்த  கவிஞர்  மர்ஹ_ம்  மருதூர்க்கனியின்
மூன்று    நூல்கள்    வெளியீட்டு   விழா

இலங்கையின்    மூத்த    கவிஞரும்     ஸ்ரீலங்கா    முஸ்லிம்   காங்கிரஸின் ஸ்தாபகர்களில்    ஒருவருமான    (மூத்த   துணைத்தலைவர்)    லங்கா திலகம் - புலவர் நாயகம்     மருதூர்க்கனியின்    மூன்று   நூல்களின்  வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி   சனிக்கிழமை   மாலை  4  மணிக்கு மெல்பனில்     Mulgrave  CCTC         கேட்போர்   கூடம்   (44- 60 Jacksons Road, Mulgrave. - Melway: 80k3)     மண்டபத்தில்      நடைபெறும்.
வெளியிடப்படும்  நூல்கள்:
மருதூர்க்கனி  கவிதைகள்
 சந்தனப்பெட்டகமும்  கிலாபத்  கப்பலும்
 என்னை  நீங்கள்  மன்னிக்கவேண்டும்.
நூல்களின்  வெளியீட்டிலும்  அதனைத்தொடர்ந்து    இடம்பெறும் இராப்போசன    விருந்திலும்    கலந்து    சிறப்பிக்குமாறு   தமிழ் இலக்கிய சுவைஞர்கள்  அனைவரும்  அன்புடன்   அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக   விபரங்களுக்கு:   மருதூர்க்கனி  குடும்பத்தினர்  வஜ்னா - றபீக்
0411 670 943 ,   0449 925 659

E.Mail: maruthoorghani@yahoo.com

நான் பார்த்து இரசித்தது

.

Nantri :Lankasri 

கூழ்-குடிக்கலாம்-வாங்கோ -ஆருத்ரா

.
கூழ்கள்  காய்ச்சப்படுவதில்லை;  ஆக்கப்படுகின்றன. பெருங்கவனத்தோடும்  கலைநயத்துடனும்  ஆக்கப்படுகின்றன. கூழ்களுக்கு  தேவையான  பொருட்களை  தெரிவு  செய்து     வாங்குவதிலிருந்து  பெருங்கவனம்  கடைபிடிக்கப்படுகின்றது. சாதாரண  சிறுவிடயம்   தானே  என   அசிரத்தையோடு  தேவையான   பொருட்களை   வாங்கும் போது  கூழின் சுவை   முற்றிலும் மாறுபட்டு   போய்விடுகின்றது.
A.3எங்கள் வீட்டில் கூழ் காய்ச்சப்படுவதற்கு   தேவையானவை என இரண்டு விடயங்களைச்  சொல்லலாம். முதலாவது  எங்கள் வீட்டில் உள்ளவர்கள்  அனைவருக்கும் அன்று லீவாக இருக்கவேண்டும். அடுத்தது எனது  ஒப்புதலுக்கு மனைவி வழி மொழிய  வேண்டும். கடந்த  சனிக்கிழமை , இருவருக்கும்  லீவாக இருந்தது.வழிமொழிவதும் உடன் நடந்தெய்தியது. தமிழர் கடைகள்  செறிந்த  பகுதியில்  இருந்ததால்  அப்போதே  பொருட்களை  வாங்க  முடிந்தது. தமிழர்கள்  தம் வாழ்வில் இருபெரும்   கூழ்கள்   முக்கியத்துவம்  பெறுகின்றன. ஆடிப் பிறப்பன்று ஆக்கப்படும்   ஆடிக்கூழ். அரிசிமா,  பால் கலவையுடன் வறுத்துப்  போடப்படும்  பயறும், இனிப்புக்கு  சர்க்கரையும் ; அது  அதி  அற்புத சுவை. சோமசுந்தரபுலவரினால் பாடப்பட்ட
ஆடிப் பிறப்புக்கு  நாளை  விடுதலை
ஆனந்தம் ஆனந்தம்  தோழர்களே
கூடிப் பனங்கட்டி  கூழும்  குடிக்கலாம்
கொழுக்கட்டை  தின்னலாம்  தோழர்களே.
என்றபாடல் அந்த கூழின் சுவையையும் அதனது  பேரானந்தத்தையும் சொல்லிச் செல்கின்றது.

THIRUMURAI VIZHA - At Vishnu Siva Mandir, Mawson, Canberra

.
THIRUMURAI VIZHA

At Vishnu Siva Mandir, Mawson, Canberra
On Saturday 12 April 2014 at 5.00 pm.
   THIRUMURAIS are the devotional outpourings of Saiva Saints who surrendered themselves fully to Lord Siva. They are of literary excellence and contribute to the richness of the language and culture of the Tamil people.

கலை - இலக்கியத்தேடலை ஊக்குவித்த மெல்பன் அனுபவப்பகிர்வு

.
கலை - இலக்கியத்தேடலை    ஊக்குவித்த    மெல்பன்    அனுபவப்பகிர்வு
தமிழ்   விக்கிபீடியா    பயிலரங்கு              - முருகபூபதி



அவுஸ்திரேலியா   தமிழ்     இலக்கிய     கலைச்சங்கத்தின்    பணிகளில் நடப்பாண்டுக்கான    இரண்டாவது     அனுபவப்பகிர்வு  -  தமிழ் விக்கிபீடியாவில்    பங்களித்தல்  தொடர்பான    பயிலரங்கு  கடந்த  பெப்ரவரி 23 ஆம்   திகதி     ஞாயிற்றுக்கிழமை   மெல்பனில்  -  பிரஸ்டன்    இன்றர்  கல்சரல்   நிலையத்தில்   சங்கத்தின்   தலைவர்    டொக்டர்  நடேசன் தலைமையில்     நடைபெற்றது.
ஒருவர்    தமது     வாழ்வில்    பெற்றுக்கொண்ட    மகிழ்ச்சியான தருணங்களிலிருந்துதான்    வாழ்வின்    பயன்பாட்டை பெற்றுக்கொள்வாரேயன்றி     தேடிப்பெற்ற     டொலர்    நாணயங்களினால் அல்ல    என்று    அமெரிக்க  தத்துவ   ஆசான்   தோரோ    அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.    மகிழ்ச்சியான     தருணங்களை   வாழ்வின் அனுபவம்தான்     நமக்குத்தருகிறது.     படைப்பிலக்கியவாதிகளும் கலைஞர்களும்     தீவிர வாசகர்களும்    அனுபவப்பகிர்வுகளில் கலந்துகொள்வதன்     மூலம்    அந்த    மகிழ்ச்சியான     தருணங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.     தமிழ்    இன்று    இணையத்துக்குள்    வந்துள்ள சூழலில்     எமது     அவுஸ்திரேலியா     தமிழ்     இலக்கிய     கலைச்சங்கம்   தமிழ்     விக்கிபீடியாவில்    எவ்வாறு    பங்களிக்கலாம்    என்பது    பற்றிய பயலரங்கை     அனுபவப்பகிர்வாக    நடத்துவதற்கு     முன்வந்திருப்பது சிறந்த   பணியாகும் -    என்று      டொக்டர்   நடேசன்  தமது தலைமையுரையில்     குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண டச்சுக்கோட்டை

.



சோர்ந்துவிடல் ஆகாது தாத்தா (பாட்டி)

.

"இவ்வளவு நாளும் ஓடி ஓடி உழைச்சாச்சு. போதும் என்று ஆகிவிட்டது. இனி வீட்டோடை கிடக்கப் போறன். இதுவரை பார்க்காத ரீவி சீரியலுகளைப் பார்த்து நெட்டிலும் உலாவுவன். கட்டிலும் கதிரையும் எண்டு சந்தோசமாக இனி இருக்கப் போறன்."
மனைவியும் ஒத்துப் பாடினா.

"ஓம் பாவம் அவர். வேலை வேலை என்று ஓடித் திரிஞ்சார். பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு. இனியாவது பேசாமல் ஓய்வா வீட்டை இருக்கட்டும்" என்றாள்.

அவர் ஒரு முதியவர். ஆனால் தளர் வயசு அல்ல.  வயசு 65 தான் ஆகிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவருக்கு இனி முழு ஓய்வு தேவையா? வீட்டோடு பேசாது கிடந்தால் மகிழ்ச்சியும் நலமான வாழ்வும் கிட்டுமா?

"இல்லை" என்கிறார்கள் சுவீடிஸ் தேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

ஆண் பெண் என 3800 பேரை 12 வருடங்களாக அவதானித்த ஆய்வு இது. Swedish School of Sport and Health Sciences ;  the Karolinska Institute, in Stockholm இணைந்து செய்த ஆய்வு இது. அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 1937, 1938 ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

தமிழ் - தெலுங்கு மொழிபெயர்ப்பு வரலாற்றில் 5.2.14 அன்று ஒரு சிறப்பு நிகழ்வு‏

.



வரலாற்றுப் பதிவு.திருப்பதியில் நடைபெற்ற நிகழ்வு.பன்னிரு திருமுறையில் 18268 பாடல்கள்.
அவற்றுள் 9343 பாடல்கள் தெலுங்குக்கு மொழிபெயர்ப்பாயின.
நேற்றுத் திருப்பதியில் அப் பாடல்களின் மொழிபெயர்ப்பு ஏற்றதா என ஆராயும் கூட்டம்.
சில மாதங்களுக்கு முன்னரே மொழிபெயர்த்த பகுதிகளை அறிஞருக்குக் கொடுத்தோம்.நேற்று அவர்கள் நேரில் தமது கருத்துரைகளைக் கூட்டத்தில் சொன்னார்கள்.
பாராட்டு ஒருபுறம், சிறுசிறு திருத்தங்கள் மறுபுறம் என அறிஞரின் கருத்துரைகள்மொழிபெயர்ப்பாளர் காதுகளில் தேனாக ஒலித்தன.

தமிழ் சினிமா


இது கதிர்வேலன் காதல்


காதலர் தினத்தன்று காதலை மையப்படுத்தி வெளிவந்துள்ள படமே ‘இது கதிர்வேலன் காதல்’.
தங்களது முதல் படைப்பான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சுந்தர பாண்டியன்’ படங்களின் வெற்றியை இப்படத்திலும் தக்க வைத்திருக்கிறார்களா நடிகர் உதயநிதியும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும்?

படத்தின் ஆரம்பத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஒரு நபரை மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டுக்கு அவசர அவசரமாக கொண்டு செல்கிறார்கள்.

உள்ளே போனவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரின் உறவினர்கள் படபடப்புடன் வெளியில் காத்துக் கொண்டிருக்க.... ‘ஆறு மாதங்களுக்க முன்பு...’ என ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நகர்கின்றன.
காதலித்து கல்யாணம் செய்துகொண்ட கதிர்வேலனின் அக்கா சாயாசிங், வீட்டுக்காரருடன் சண்டை போட்டுக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து மதுரையிலிருக்கும் புகுந்தவீட்டிற்கு வருகிறார்.
மாமாவை சமாதானப்படுத்தி அக்காவை சேர்த்து வைப்பதற்காக மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு கிளம்புகிறான் உதயநிதி ஸ்டாலின்.
அங்கே போனதும் தன் பழைய நண்பன் சந்தானத்தை சந்திக்கிறார். கூடவே பக்கத்து வீட்டில் இருக்கும் நயன்தாராவையும் பார்க்கிறார். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஆஞ்சநேய பக்தனான கதிர்வேலனுக்கு நயன்தாராவைப் பார்த்ததும் காதல் வர, அதற்காக சந்தானத்திடம் ஐடியா கேட்கிறான்.

எல்லாம் கைகூடி நயன்தாராவிடம் காதலைச் சொல்ல உதயநிதி நினைக்கும் நேரத்தில், தன் நண்பன் கௌதமை காதலிப்பதாக நயன்தாரா அதிர்ச்சி தருகிறாள். இதன் பிறகு உதயநிதி காதல் என்னவாகிறது? முதல் காட்சியில் காட்டப்பட்ட அந்த ஸ்ட்ரெச்சர் பேஷன்ட் யார்? என்பதற்கான விடை படத்தின் க்ளைமேக்ஸில்!

கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் ரொம்பவும் மெனக்கெடாமல் காலம் காலமாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட விடயங்களை அப்படியே இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
ஆனாலும், இரண்டரை மணி நேரத்தை எந்த சலிப்பும் இல்லாமல் பார்க்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார். முதல் பாதி சந்தானத்தின் கொமடியோடு கொஞ்சம் மெதுவாக நகர்கிறது.
இரண்டாம் பாதியில் கொமடியையும், சென்டிமென்ட்டையும் சரிவிகிதத்தில் கலந்து சிரிக்கவும், நெகிழவும் வைத்து க்ளைமேக்ஸ் ட்விஸ்டோடு படத்தை ரசிக்கும்படி முடித்து ரசிகர்களை திருப்தியோடு அனுப்பி வைக்கிறது ‘இது கதிர்வேலன் காதல்’ படம்.

முதல் படத்தில் இருந்த தயக்கம் மறைந்து யதார்த்தமான நடிகராக மிளிர்கிறார் உதயநிதி ஸ்டாலின். தனக்கு எந்தக் கதை சரியாக வரும், தான் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுமையாக யோசித்து கதையை தெரிவு செய்திருக்கிறார் ஹீரோ உதய்.

தேவையில்லாத சண்டைக் காட்சிகளோ, ஹீரோ பில்டப்களோ இல்லாதவரை அவருக்கு ஹீரோவாகவும் எதிர்காலம் காத்திருக்கிறது. அதேபோல் ஒரு காட்சியில் சந்தானம் உதயநிதியைப் பார்த்து ‘உன்கிட்டலாம் நான் எக்ஸ்பிரஷன்ஸ் எதிர்பார்த்தது என் தப்புதான். கண்ணாடியைப் போட்டு மேனேஜ் பண்ணு.’ என கொமடி செய்வார்.
ரசிகர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அந்த வசனத்தை வைக்க ஒப்புக்கொண்ட உதயநிதியின் தைரியத்திற்கு ஒரு சபாஷ்.
நயன்தாராவைப் பொறுத்தவரை அவருக்கான கேரக்டர் இப்படத்தில் இல்லை என்பது உண்மை. ஆனாலும் பவித்ரா கேரக்டரில் நயன்தாரா வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கில் விசில் பறக்கிறது. ‘யாரடி நீ மோகினி’யில் பார்த்த அதே பழைய நயன்தாராவை மீண்டும் காட்டியிருக்கிறார்கள். சுடிதார், புடவை, தாவணி என பொண்ணு எந்த உடையில் வந்தாலும் செம அழகு.

தன்னை நம்பி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இப்படத்திலும் டபுள் ‘ஓகே ஓகே’ வாங்குகிறார் சந்தானம்! இருந்தாலும் காட்சிக்கு காட்சி ‘பொண்ணுங்கிறது....’, ‘காதல்ங்கிறது...’ என எதற்கெடுத்தாலும் ஒரு உதாரணம் சொல்வது கொஞ்சம் போரடிக்கிறது.

கொஞ்ச காட்சியில் வந்தாலும் மொத்த திரையரங்கையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிட்டுப் போகிறார் நடிகர் மயில்சாமி. ஜென்மப் பகையோடு சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பேரை மயில்சாமியின் மிமிக்ரி மூலம் சேர்த்து வைக்கும் அந்த கொமடிக் காட்சி அருமை.
சுந்தர் ராம், சாயா சிங், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஜெயபிரகாஷ் என படத்தில் அவரவர்களுக்கான காட்சியில் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அதில் ‘அப்பா கேரக்டருக்கு தன்னை மிஞ்ச ஆளில்லை’ என்பது போல் நெகிழ வைத்திருக்கிறார் நரேன்.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்கு பாடல்கள் எப்படி ப்ளஸாக அமைந்ததோ, அதற்கு நேர்எதிராக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் பாடல்கள் அமைய, பெரிய பிரேக்காக அமைந்திருக்கிறது.

‘மேலே மேலே...’ பாடல் கேட்பதற்கும், ‘அன்பே அன்பே...’ மான்டேஜ் பாடல் பார்ப்தற்கும் ஓகே. பின்னணிக்கும் ஹாரிஸ் பெரிதாக உழைக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.

பாலசுப்ரமணியத்தின் கமெரா கண்களுக்கு குளிர்ச்சி. ஆங்காங்கே போரடிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளை யோசிக்காமல் வெட்டியிருக்கலாமே எடிட்டர், தன் கைவண்ணத்தில் உதயநிதியை ஓரளவு ஆடவும் வைத்திருக்கிறார் நடன இயக்குனர் தினேஷ்.
தயக்கத்தை விட்டுவிட்டால் அடுத்த படத்தில் ஸோலோவாகவும் உதய்யால் ஆட முடியும் என்றே தோன்றுகிறது.
ஆங்காங்கே கொஞ்சம் நாடகத்தனமும், ஏற்கெனவே நாம் பார்த்த பழைய படங்களின் பாதிப்பும் இப்படத்தில் இருந்தாலும் கதிர்வேலனின் காதல் நமக்கு போரடிக்காது.
மொத்தத்தில் குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க ஏற்ற படம் இந்த ‘இது கதிர்வேலன் காதல்’.
இது கதிர்வேலன் காதல் மொத்தத்தில் கொமடி காதல்!

நடிகர்: உதயநிதி ஸ்டாலின் 
நடிகை: நயன்தாரா 
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
இயக்குனர்: எஸ்.ஆர்.பிரபாகரன்
நன்றி விடுப்பு 

Palani Odhuvaar Ganapathipillai Venkatesan - Melbourne Program 05 03 2014

.

Palani Odhuvaar is well versed in reciting Devaram.  He has received the title “Devara Isaimani” from Darumapuram Adhinam Devara Patasalai.  In addition he has received several awards from various temples and Tamil Nadu Associations in India and overseas. His current position is Odhuvaar Moorthi at Palani Thandayuthapani Devasthanam Murugan Temple, Tamil Nadu, India.
 He has been performing daily for Pothigai TV in India over the last 6 years.  He continues to visit Sri Lanka regularly.
Additionally he has participated in many programs overseas.  Palani Odhuvaar has also participated in the World Saiva Conference held in 2007 in London.
He has received the awards ‘Pannisai Arasu’, ‘Saiva Thirumurai Kaavalar’ and ‘Thirumuari Theamuthan’ for his performances in overseas.
 Palani Odhuvar has been invited to Australia second time by the Sri Venkateswara Temple, Helensburgh NSW to recite “Thevara Pannisai” in their Shiva Mohotsavam festival 2014.
We are fortunate to have him in Melbourne for a few days from 6th to 19th March.  He will be performing “Thevara Pannisai” at Shiva Vishnu temple during the Mahothsavam (8th to 18th March).
Additionally “Thevara Pannisai” will be held at the following places as well.  
Date
time
Address
Contact
05/03/2014
Wednesday
8:00 pm
6 Hoadley Crescent Burwood East
(03) 9887 7270
06/03/2014
Thursday
6:30 pm
Vakrathunda viayagar temple
0404 075 784
08/03/2014 – 18/03/2014
during thiruvilla
Shiva Vishnu Temple
0434 146 540


Please inform other interested people.