.
எந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!
எந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!
சாயங்காலம் கிஷோர் வந்து, “மாமா, நம்ம மகேஷ் அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்!” என்று சொன்னதும் அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே? கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... “சேர்த்திட்டானா?”
“இன்னும் இல்லை. நாளைக்கு...”
“கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப் பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!”
“யெஸ், நானும் அவனைப் பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும் அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!”
அதற்குள் அவர் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தார்.
போன இடத்திலும், “வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ் எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து!” என்றவனை மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச விடவில்லை.
“அப்பா விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான் சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி...” கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.
அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.
அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள் சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான்.
நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா பேச்சை குறைத்துவிட்டு,கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.









நண்பன்
வசந்த் எனும் செம்புலி, ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும்
சந்தீப், கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல்
போகிறார்.
குழந்தையோடு,
குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் நாயகன் சந்தீப்பை திருத்த, நாயகி
டிம்பள் தன் கஸின் பிரதரும், மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து
கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் "யாருடா மகேஷ்" படத்தின்
அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை.
நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார்.


