உருப்படியான விஷயம்...

.
எந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!


சாயங்காலம் கிஷோர் வந்து, “மாமா, நம்ம மகேஷ் அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்!” என்று சொன்னதும் அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே? கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... “சேர்த்திட்டானா?”

“இன்னும் இல்லை. நாளைக்கு...”

“கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப் பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!”

“யெஸ், நானும் அவனைப் பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும் அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!”

அதற்குள் அவர் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தார்.

போன இடத்திலும், “வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ் எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து!” என்றவனை மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச விடவில்லை.

“அப்பா விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான் சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி...” கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.

அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.

அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள் சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான். 

நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா பேச்சை குறைத்துவிட்டு,கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

உலகச் செய்திகள்


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

பாக். தேர்தல்: நவாஸ் ஷெரீப் வெற்றி!

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்



==================================================================


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

13/05/2013 அமெரிக்காவின் நிவ் ஒர்லியன்ஸ் பகுதியில் அன்னையர் தினத்தையொட்டி நேற்று இடம்பெற்ற பாதயாத்திரையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சிட்னி சைவமன்ற அறிவித்தல்கள்

.


பயணியின் பார்வையில் -15 -- முருகபூபதி

.
சாட்சியங்களுடன் தொடரும் வரலாறு

07122012143“நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லையென்று நம்புவது மனதின் அறியாமை. எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சி இருக்கின்றன.” சமீபத்தில் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் என்ற நாவலில் மேற்படி வார்த்தைகளை ஒரு பாத்திரம் பேசுகிறது.

பயணியின் பார்வையில் 15ஆவது அங்கத்தை எழுதும்பொழுது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சம்பவங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து மறந்துபோகலாம். ஆனால் அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு ஒருவருக்கோ அல்லது தெரிந்த ஒருவருக்கோ மறந்துவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடமுடியாது. இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்டவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் காலப்போக்கில் மறந்துபோகலாம்.

மனக்காயங்கள் காலத்தினால் குணமாகலாம். ஆனால் சாட்சியங்கள் மரணிக்காது. ராமகிருஷ்ணனின் அந்தப்பாத்திரம் பேசுவது போன்று சாட்சிகள் இல்லவே இல்லை என்று சாதிப்பது மனதின் அறியாமைதான்.

வன்னி பெருநிலப்பரப்பில் போரின் சாட்சியங்கள் தடயங்களாகவே இருக்கின்றன. போரிலே எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பெரிய தலைவர்களின் படங்கள் ஓரிடத்தில் சாட்சியங்களாக இருக்கின்றன. அவர்கள் வேறுயாருமல்ல… இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்தான்.

காற்றுவெளி மின்னிதழ்



அன்புடையீர்.

வணக்கம்.
காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட உள்ளது.
எனவே, சிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரை ஒன்றை புதிதாக (வேறெங்கும் வெளிவராத) அனுப்புங்கள். சிறு சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
  mullaiamuthan@gmail.com
நட்புடன்,
முல்லைஅமுதன்

ம .லெ.தங்கப்பா நேர்காணல்

.




தங்கப்பா தெளிதமிழ்வாணர். தனித் தமிழில் தமிழுலகுக்கு படைப்புகளைத் தந்த பாவாணர். பெருஞ்சித்திரனாருக்குப் பின் அத்தடத்தில் பயணிக்கும் இவரது சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அகில இந்திய அளவில்

மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. "கர்ஸ்ங் ள்ற்ஹய்க்ள் ஆப்ர்ய்ங்' எனும் இந்நூலினை லண்டன் பெங்குவின் நிறுவனம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.

படைப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் தனித்துவத்துடன் திகழும் அவரது நேர்காணல் இதோ.

இந்திய அளவில் மொழியாக்கத்துக்கான விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

இச்செய்தியைக் கேட்க என் நண்பர் கோவேந்தன் இல்லையே என்றுதான் உணர்கிறேன். ஏனெனில் அவர்தாம் இதில் என்னிலும் பன்மடங்கு மகிழ்ச்சி அடைவார். என்னைப் பொறுத்தவரை எதையும் வாழ்வியல் பார்வையோடு பார்ப்பவன் ஆதலால், ஒன்று கிடைத்தமைக்கு மகிழ்வதும் கிடைக்காமைக்கு வருந்துவதும் என் இயல்பில் இல்லை. ஆயினும் ஒரு சரியான மதிப்பீடு என்பது மனதுக்கு நிறைவு தருகின்றது. காய்தல், உவத்தல் அற்ற மதிப்பீட்டுக்கு நன்றியுணர்வு கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது. இதன் வாயிலாக, இந்த நூல் வழி, தமிழிலக்கியம் மேலும் பலர் கவனத்தை ஈர்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. குடத்து விளக்காக இருந்த என்னை வெளியே கொண்டுவந்திருப்பது இவ்விருதின் செயலாகும்.

மொழிபெயர்ப்பில் உங்களுக்குத் தூண்டுகோலாயிருந்தவர் யார்- எவர்?

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க யாரும் எனக்குத் தூண்டுகோலாக இருந்ததில்லை. ஆர்வத்தால் நானே மேற்கொண்டேன். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாயிருந்தவர்களுள் ஒருவர் என் உழுவலன்பர் பாவலர் த. கோவேந்தன் ஆவார்.

ஆங்கிலத்தில் நானே சொந்தமாகப் பாடல் எழுதத் தொடங்கியிருந்த காலம். 1957-ல் கோவேந்தனை வேலூரில், அவர் நடத்தி வந்த "வானம்பாடி' பாட்டிதழ் தொடர்பாக நான் சென்று கண்டபொழுது "தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் பெயர்க்க முடியுமா?' என்று வினவினார். "இதுவரை செய்ததில்லை. ஆயினும் செய்யலாம். முடியும்' என்றேன். "வானம்பாடி' இதழுக்கு பாரதிதாசன் பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்களை மொழிபெயர்த்து விடுக்க வேண்டினார்.


வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் -வித்யாசாகர்

.
பசி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் தனது அறிவுத் தந்திரத்தால் மனிதனையே கொல்கிறான். பசி மனிதனை பகுத்தாராய விடுவதில்லை. வயிறு இழுத்துப் பிடித்துக்கொள்ளுமந்த வேதனையிலிருந்து தனை விடுவித்துக்கொள்ள கொலை கொள்ளை வழிப்பறி என எல்லாமே மனிதனுக்கு ஆயுதமாகிவிடுகிறது. பசியொன்றே மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் ஒருசேரக் கொடுத்த கடவுள்..
அப்படிப்பட்ட பசியை இன்று நாம் எப்படி மனிதத் தன்மையற்ற இடத்தில் வைத்திருக்கிறோம்? இருப்பவர் தின்பதும் இல்லாதவர் பட்டினியால் சாவதும் முறையென்று வகுக்க எப்படி நம் மனங்களில் ஈரம் வற்றிப்போனது? தர்மம் பற்றி சிந்திக்கத்தெரிந்த மனிதன் தண்டனை’ பாகுபாடு’ சுயனலமென உயிர் கொன்றுக் குவிக்க பசியை ஆயுதமாக்கிக் கொண்டது எத்தனைப் பெரிய குற்றம்?

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து



அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரின் வீசா இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளருக்கு தற்காலி வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது  நன்றி வீரகேசரி 
.

சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு





பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ்ச் சங்கமும், ஆர்வமோடு தமிழ்வளர்க்கும் ,சிட்னியின் தமிழ் இலக்கியத் தமிழ் மன்றமும் இணைந்து, 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 07 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதியும் - ஆக மூன்று  நாட்களில் தமிழ் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.

தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் அன்பான வேண்டுகோள் -7,8/9/2013





அன்புடையீர் வணக்கம்

சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு – தமிழர் மண்டபம், 21 Rose Crescent, Regents Park
பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ் சங்கமும், ஆர்வமோடு தமிழ் வளர்க்கும் சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றமும் இணைந்து 2013ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதியும் , செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதியும்      , செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியும்       - உலகத் தமிழ் மாநாடு ஒன்றை சிட்னி Regents Park  தமிழ் மணக்கும்  தமிழர் மண்டபத்தில் நடத்தவுள்ளது.
உலகத் தமிழர்களை ஒன்று படுத்தி, உலகப் பொதுமறையை மேன்மைப் படுத்தி, உலகோர்க்குத் தமிழ் இலக்கிய நயம் கூற, நமது இளைய தலைமுறைக்கு தமிழின் மகிமையை எடுத்துரைக்க உன்னத மாநாடொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் - நிதி சேகரிப்பு





தமிழ் சினிமா

யாருடா மகேஷ் 

"யாருடா மகேஷ்" படத்தின் தலைப்பைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் "யாருடா இந்தப்படத்தின் இயக்குனர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல.
கதைப்படி சோம்பேறி கதாபாத்திரமான சிவா என்னும் சந்தீப்புக்கு, தன் கல்லூரியில் படிக்கும் சிந்தியா எனும் டிம்பள் மீது காதல்.
நண்பன் வசந்த் எனும் செம்புலி, ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும் சந்தீப், கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போகிறார்.
அவரது காதலி, டிம்பளோ கல்லூரியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அடுத்த விமானத்திலேயே அமெரிக்கா பறக்கிறார்.
இதில் அதிச்சியாகும் சந்தீப், அரியர்ஸை கிளியர் செய்து அடுத்த ஆறு மாதத்திற்குள் அமெரிக்கா போய் காதல் வளர்ப்பார் எனப் பார்த்தால், ஆறு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் இருந்து டிம்பள் ரிட்டர்ன் ஆகிறார். காரணம், சந்தீப்பின் கரு, டிம்பளின் வயிற்றில் வளருவது தான்.
அச்சச்சோ, அப்புறம்? அப்புறமென்ன...? நாயகன், நாயகியின் அப்பா-அம்மாக்கள் ஆரம்பத்தில் ஈகோ மோதலில் இறங்கி, அதன் பின்னர் வேறு வழியின்றி சம்மந்தி ஆகின்றனர். குழந்தை பிறக்கிறது.
குழந்தையோடு, குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் நாயகன் சந்தீப்பை திருத்த, நாயகி டிம்பள் தன் கஸின் பிரதரும், மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் "யாருடா மகேஷ்" படத்தின் அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை.
சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் சந்தீப், தனது முந்தைய படமான "மறந்தேன் மன்னித்தேன்" படத்தை காட்டிலும், "யாருடா மகேஷ்" படத்தில் யாருடா சந்தீப் எனக் கேட்கும் அளவிற்கு கேஸீவலாக நடித்து ஜொலித்திருக்கிறார்.
டிம்பள் செமயூத்புல், கிளாமர் அப்பீல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர், நயன்தாரா, காஜல் அகர்வாலை எல்லாம் கூடிய விரைவில் ஓரங்கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
நாயகன் நண்பர் வசந்தாக வரும் செம்புலி ஜகன் இனி, டபுள்மீனிங் ஜகன். மனநல மருத்துவராக வரும் ‌கொமெடி ஸ்ரீநாத், மகனிடம் மேற்படி சி.டி. கேட்கும் நாயகனின் அப்பா லிவிங்ஸ்டன், அம்மா உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து உள்ளிட்ட எல்லோரும் "யாருடா மகேஷ்" படத்தை தங்கள் கலர்புல் கொமெடிகள் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்.
புதியவர் கோபிசுந்தரின் புதுமையான இசையும், ராணாவின் இனிமையான ஒளிப்பதிவும், சத்தியநாராயணனின் பளிச் படத்தொகுப்பும், ரா.மதன்குமாரின் எழுத்து-இயக்கத்தில், "யாருடா மகேஷ்" படத்தை மீண்டும் ஒருமுறை "பாருடா" என்று நம்மை தூண்டி விடுகின்றன.
நன்றி விடுப்பு 

மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி - சோனா பிறின்ஸ் .

.


மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .
யாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..



வண்ணங்கள் ஏழு!  எண்ணங்கள் ஆயிரம்!
வாழும் வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களின் குணநலன்களும் பலவிதம்தான்!  சொந்தங்களாலும்
பந்தங்களாலும் மனிதன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்
என்பது கூட மிகையில்லை.

காட்டு மனமிருந்தால் கவலை மறந்துவிடும்
கூட்டைத் திறந்துவிட்டால் குருவி பறந்துவிடும்!
என்பார் மற்றொரு பாடலில் கவியரசர்..
காலில் விலங்குமிட்டோம்..
கடமையென அழைத்தோம்
என்றதும் அவரே!

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் எழுதப்பட்ட வாசகங்களாய் மாறிப் போயின!  உடன் பிறந்த சொந்தம்.. உயிர் வழி வளர்ந்த பந்தம் என்பதெல்லாம் பழைய கணக்காய் தெரிகின்றன! ஆயிரம்தான் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என ஆகிப்போன பூமியில் அட.. என்ன சொல்ல முடிகிறது?  பந்தங்கள் தெறிக்கப்பட்டுத் தனித்தனியாய் வாழ்கின்றனர்!!

ஏட்டுக் கல்வியென்றும் தொழில் கல்வியென்றும் ஆயிரமாயிரம் படிப்புகள் புதிது புதிதாய் துவங்கப்படுகின்றன!  இந்த உறவுகளுக்குள் பாலம் அமைக்கும் எந்த முறையும் இதுவரையில்லை.  ஏன்? இந்தக் குழப்பங்கள்?  எதற்காக இந்தப் பிரச்சினைகள்?  விட்டுக்கொடுப்பதை விட்டுவிட்டு விலகி நிற்பதை ஏன் தேர்ந்தெடுக்கிறோம்?  பரஸ்பர உறவுகளைப் பாதுகாப்பதைவிட தண்டிப்பதை ஏன் விரும்புகிறோம்? 

 மன அழுத்தம், மன பாரம் இவைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், நடைமுறைச் சாத்தியத்தில் வாழ்ந்து பார்க்க ஏன் முயற்சிப்பதில்லை!  பகுத்துப் பார்க்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்போது உறவுகளை மட்டும் ஏன் வகுத்துக்கொண்டே போகிறோம்?  ஈவு என்ன கிடைக்கும்? 
 மீதியென்ன வரும்??

காட்சிப் பிழை - கே.எஸ்.சுதாகர்






பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். 'ஹோல்' மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது.

விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.

குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் 'ஷேவ்' செய்து கொண்டிருந்தான்.  முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.

வாழ்வை எழுதுதல் யாசகம் - முருகபூபதி




அவுஸ்திரேலியாவில் 90 களில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.
அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது.
அவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோது, ஒளவையார் முரண்படுகிறார் என்றான்.
அவனது வாதம் இதுதான். 
அறம்செய விரும்பு, ஐயம் இட்டு உண். இவை இரண்டும் தானதருமங்களை சொல்பவை. அதாவது இல்லை என்று கேட்டுவருபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது பொருள்.
ஆனால் ஏற்பது இகழ்ச்சி என்றும் ஒளவையார் சொல்லிவிட்டாரே. எப்படி இதுசரியாகும்.?
அதாவது பிச்சை எடுக்காதே என்பதுதானே பொருள்.

இலங்கைச் செய்திகள்


வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எமது வற்புறுத்தலின் பேரிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார் : அமீனா அசாத் சாலி

மத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை எயார் அராபியா இரத்து செய்ய தீர்மானம்

பெடியள் விடாயினம்” என்றவர்கள் இன்று பெடியளை (கை)விட்டு விட்டார்களா?: சவாலாகியுள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் மீளொருங்கிணைப்பு

அஸாத் சாலியின் கைதுக்கு எதிராக ஹர்த்தால்

தமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை


வடக்கில் அமையும் தமிழ் அரசாங்கம் சர்வதேச பிரசங்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறும் விடயங்களை பின்னணிக்குத் தள்ளுவதற்கு முயற்சிப்பதன் மூலம்  ஒரு அரசியல் தீர்வுக்கு மீண்டும் வழிவகுக்கலாம்
 - என்.சத்தியமூர்த்தி

அஸாத் சாலி விடுதலை தொடர்பில் தமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக

வெள்ளவத்தை விபத்து : சுவிஸிலிருந்து வந்த சகோதரியும், சகோதரனும் பலி, இருபிள்ளைகளையும் இழந்து பெற்றோர் பரிதவிப்பு

இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட தமிழ் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் 

 காத்தான்குடியில் பதற்றம்: பொலிஸ்,இராணுவம் குவிப்பு
======================================================================

வங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


08/05/2013 தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மே 18 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - May 18 Tamil Genocide Remembrance Day





இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம்.

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.

சர்வதேச அரசுகள் தத்தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தினாலும் அடிப்படையான மனிதாபிமானத்தோடு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஆனாலும் இவை போதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கவில்லை.

கொடியபோர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அரசியல்அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக இருந்துவருகின்றது. அதேவேளையில் தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்வதற்கான திட்டமிட்ட இனவழிப்பை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது.

எனவே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் ஒருமித்த குரலே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தாயகத்தில் வாழும் மக்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய இனத்தின் ஆன்மாவை உலுக்கிப்போட்ட மே மாதத்தின் நினைவுகளைச் சுமந்தபடி, மரணித்துப்போன எம்முறவுகளின் கனவுகளைச் சுமந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெறும் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் ஒன்றுகூடலில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.

சிட்னியில் நினைவு நாள் 18 May 2013