| அ .முத்துலிங்கம் | |||
| |||
இன்றைய நாள் (நாட்குறிப்புகள்)- 2012-06-28
தமிழ் சினிமா
சகுனி - விமர்சனம்
- Wednesday, 27 June 2012
அடிச்சு
'தூள்' கிளப்பப் போகிறார்கள் என்று தியேட்டருக்குள் நுழைந்தால், நிஜமாகவே
'தூள்' படத்திலிருந்து கொஞ்சத்தை அடித்திருக்கிறார்கள்?!
கிராமத்திலிருக்கும் இவரது சொந்த வீட்டை
இடித்துத் தள்ளிவிட்டு அங்குதான் ரயில்வே டிராக் போட திட்டமிடுகிறது
அரசு. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற பொதுநல நோக்கத்தோடு (?)
முதல்வரை சந்திக்க வருகிறார் ஹீரோ கார்த்தி. வந்த இடத்தில் இவர் பண்ணும்
சகுனி வேலைகள்தான் முழு படமும்.
கோட், சூட் சகிதமாக வந்திறங்கும் கார்த்தியை 'வெயிட்
பார்ட்டி' என்று கருதி அவருக்கு செலவு செய்யும் சந்தானம், கடைசியில்
ஏமாந்து தொலைப்பது ஜாலி துவக்கம். ரஜினி கமல் ரசிகர்களையும் பாக்கெட்டில்
வைத்துக் கொள்ள துடிக்கும் இவர்களது யுக்தி, காலத்திற்கேற்ற சமயோஜித
புத்தி! அப்புறம் திடீரென்று தான் வந்த வேலை கார்த்தியின் நினைவுக்கு வர,
அவர் வைக்கும் ஸ்டெப்புகள் அத்தனையிலும் கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் வறட்சி.
ஆப்பக்கடை ராதிகாவை அந்த ஊருக்கே மேயராக்குகிறார்.
எலக்ஷன் நேரத்தில் தன் வீட்டில் கை நனைத்து பின்பு நன்றி மறந்த முதல்வர்
பிரகாஷ்ராஜை ஆட்சி கட்டிலில் இருந்து தள்ளிவிடுகிறார். ஜெயிலில் ஜால்ரா
வாத்தியத்தில் மெய் மறந்து கிடக்கும் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா
சீனிவாசராவை முதல்வராக்குகிறார். இறுதியில் டில்லிக்கே ராஜாவாக
துடிக்கிறார். இப்படியாக கார்த்தியின் டிரேட்மார்க் எண்ட் சிரிப்போடு
படத்திற்கு எண்ட் போடப்படுகிறது.
முதல் படத்திலிருந்து, சகுனிக்கு முந்தைய படம்
வரைக்கும் கார்த்தியின் கதை கேட்கும் இலாகாவிலிருந்த முக்கிய நபர்
தலைமறைவாகியிருக்கிறார் போலும்... ஆனால் அவரை தேடிப்பிடிக்க வேண்டிய நேரம்
வந்தாச்சு கார்த்தி.
அரசியல் படம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஊசியை
வளைத்து வளைத்து குத்துவதற்குதான் இங்கு ஆயிரமாயிரம் சம்பவங்கள்
இருக்கிறதே, அப்புறம் என்ன தயக்கம்? மற்றபடி கார்த்தியின் சிரிப்பும்,
அந்த நக்கலும் என்றும் மாறா இளமையோடு துள்ளித்திரிகிறது படம் முழுக்க.
சந்தானத்தின் ட்ரிப்பிள் மீனிங் பஞ்ச்சுகளை புரிந்து
கொண்டு, 'அடக்கடவுளே' என்று அதிர்வதற்குள் அடுத்ததை போட்டுத் தாக்குகிறார்
மனிதர்.
மசாலா படத்தில் கதாநாயகிக்கு என்ன பெரிசாக வேலை
இருந்துவிடப் போகிறது? ப்ரணிதாவின் கோழிமுட்டை கண்களும், கொழுக் மொழுக்
சமாச்சாரங்களும் நாலைந்து டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.
நடிப்பை பொழிஞ்சாதான் பார்ப்போம்னு யாரும் துடிக்காத போது அவரும்தான் என்ன
செய்வார் பாவம்?
மேயராகிவிட்ட ராதிகா, ஒவ்வொரு படியேறும்போதும் தனது
வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கிற காட்சியில்
டைரக்டரின் சரக்கு பளிச்சிடுகிறது. ஆனால் அவ்ளோ பெரிய ஸ்டோரிக்கு இவ்ளோ
சரக்கு போதுமா பிரதர்?
அட... கொஞ்சம் அழகாக, மெருகு குலையாமல் கிரண்!
ஹ்ம்ம்... ஜெமினியில் அறிமுகமாகி தமிழ்சினிமாவில் பிழிந்தெடுக்கப்பட்ட அதே
கிரண்தான். பிரகாஷ்ராஜின் தயவால் மேயராக நினைத்தவர் குண்டுக்கு தப்பி
எதிரி முகாமில் சரணடைந்து படத்தின் 'கொண்டை வளைவு' திருப்பத்திற்கும்
உதவியிருக்கிறார்.

நாசர் 'பேஷா' நடித்து அந்த ஜீன்ஸ் சாமியாரை
தோற்றப்படுத்துகிறார். பீடியில் ஆரம்பித்து கோடியில் புரளும் அவரது ஆன்மீக
பிசினெஸ் கடைந்தெடுத்த உண்மை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் சில மெலடிகளுக்கு உயிர்
இருக்கிறது. பூ படத்தின் மூலம் அறிமுகமாகி 'கெத்தய்யா'வாக வலம் வந்த
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இப்படத்தை பொறுத்தவரை வெறும் வெ...!
சூரிய நமஸ்காரத்தை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு மினுக்கட்டாம் பூச்சியின் வெளிச்சமே மிச்சம்!
நன்றி தினக்குரல்
மறுபடியும் ஒரு காதல்
மறுபடியும் ஒரு காதல்
'மறுபடியும் ஒரு காதல்
கோட்டை' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். 'ஈயடிச்சான்...' விஷயத்தில்தான்
அப்படியொரு ஒற்றுமை. பார்க்காத காதலால் பரவசப்படும் ஒரு ஜோடி,
சந்தர்ப்பவசத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறது. தான் காதலித்த அதே
இதயத்தோடுதான் இணைந்திருக்கிறோம் என்பதே புரியாமல் எண்ணையும் தண்ணீருமாக
திரியும் இருவரும் உண்மை தெரியவரும்போதாவது ஒன்று சேர்ந்தார்களா என்பது
க்ளைமாக்ஸ்.
லண்டனில் படிக்கும் பணக்கார
பெண் ஜோஷ்னா, இந்தியாவிலிருக்கும் அனிருத்தை காதலிக்கிறார். ஒரு வானொலி
நிகழ்ச்சிக்காக இருவரும் கவிதை எழுதி அனுப்ப, இரு கவிதைகளின் சாயலும் ஒரே
மாதிரியாக அமைகிறது. பய புள்ளைங்க லவ்வுக்கு இந்த ஒரு காரணம் போதாதா?
மெயிலேயே காதல் ரயில் விட்டுக் கொள்கிறார்கள் இருவரும்.
மருத்துவரான அனிருத்
நாட்டின் ஜனாதிபதிக்கே வைத்தியம் பார்க்கிற அளவுக்கு உயர்கிறார்.
லண்டனிலிருந்து இந்தியாவுக்கு படிக்க வரும் ஜோஷ்னா, அனிருத்தின் மெயில்
அட்ரஸ் மற்றும் இன்னபிற ஆவணங்களை லண்டனிலேயே தவறவிட்டு விடுவதால், இங்கு
வந்து தவியாய் தவிக்கிறார். இந்த நிலையில் அனிருத்துக்கும் ஜோஷ்னாவுக்கும்
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. பெயரளவில்தான் புருஷன்
பெண்டாட்டி. மற்றபடி காதல் தோல்வியால் சரக்கடிக்க துவங்கிவிடும் அனிருத்,
வாந்தியும் பிராந்தியுமாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்.
க்ளைமாக்ஸ் நடைபெறும் இடம் மருத்துவமனை. புரிந்திருக்குமே?
அனிருத்துக்கு இது முதல்
படம் என்றால் நம்பவே முடியாது. நடிப்பை பொறுத்தவரை து£க்கல், ஆள்
வில்லனுக்குரிய விசேஷ தகுதிகளுடன் இருப்பதால் இவரது லவ்வில் ஒரு லைவ்வே
இல்லை.
முதல் படம், கதையை பற்றி
கவலைப்பட முடியாது. அட்லீஸ்ட் சதையை பற்றியாவது கவலைப்பட்டிருக்கலாம்
புதுமுகம் ஜோஷ்னா. கிள்ளியெடுக்க முடியாத ஒல்லி. நல்லவேளை, நடிப்பில்
மட்டும் கில்லி!
தாரை, தப்பட்டை, பேண்டு,
வாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட வேண்டிய வடிவேலு, இப்படத்தின்
மூலம் ரீ என்ட்ரி. எப்பவோ துவங்கிய படம் என்றாலும் வடிவேலு தரிசனம் அமையத்
தந்த ஒரே காணத்திற்காகவே டைரக்டர் வாசு.பாஸ்கருக்கு நன்றி. போலி டாக்டராக
வரும் வடிவேலு ஒரு நோயாளி வயிற்றுக்குள் ஹெல்மெட்டை வைத்து
தைத்துவிடுகிறார். இன்னொரு நோயாளியிடம் தருவதற்கு மீதி சில்லரை இல்லை
என்பதற்காகவே நன்றாக இருக்கும் வேறொரு பல்லை பிடுங்கிவிட்டு 'சில்லரை
சரியாப் போச்சு' என்கிறார். குதிரை இளைத்தாலும் ஓட்டத்துக்கு குறையேது?
மிக சோகமான காட்சிகளில்
ஒய்.ஜி.மகேந்திரனின் பர்பாமென்ஸ் வொய் ஜி வொய்? என்று நம்மை கதற வைக்கிறது.
முடியல பாஸ், சினிமாவையே விட்ருங்க. பொழச்சி போகட்டும்...
ஒரு குத்தாட்டம் இருக்கிறது.
தாடி தேவராஜும் லேடி சஞ்சனாவும் ஆடுகிறார்கள். செம என்ஜாய்மென்ட்.
பாடல்களில் தனி கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
ர.கண்ணனின் ஒளிப்பதிவில் லண்டன் அழகோ அழகு. நேரில் பார்த்த மாதிரி
சந்தோஷம்.
மெயிலில் முதல் எழுத்தை டைப்
செய்தாலே நமக்கு பழக்கமான மெயில்கள் வரிசை கட்டி நிற்குமே, ஜோஷ்னா
குழம்புவது ஏன்? குறிப்பிட்ட லண்டன் வானொலியின் போன் நம்பரை நெட்டில்
தேடினால் சட்டென்று கிடைக்குமே, பிறகென்ன சிக்கல்?
இப்படி நொண்டியடிக்கிற கேள்விகள் நமக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வருவதால், இந்த அமர லவ்வு ஒரே ஜவ்வு...
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா
அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும் - கானா பிரபா

தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் தலையாய என்னை அடுத்த ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு விஸா அனுப்ப வைத்துவிட்டது.
கிறிஸ்மஸ் தீவில் 130 பேர் உயிருடன் மீட்பு குடியேற்றவாசிகள் குறித்து பாராளுமன்றில் விவாதம்
Friday, 29 June 2012 கன்பேரா : கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகிலிருந்து 130 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை குடியேற்றவாசிகளின் சட்டவிரோத பிரவேசம் தொடர்பான விவாதம் ஒன்றிற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.குடியேற்றவாசிகளுக்கு புகலிடம் வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் விசாரணைகளை அவுஸ்திரேலியாவின் எல்லைக்கு வெளியில் விசாரணைக்கு உட்படுத்தும் சட்ட மூலம் ஒன்றிற்கு கீழ்ச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைச் செய்திகள்
.
திருமுறிகண்டியில் வேறு இடங்களில் குடியேற மறுத்த பொதுமக்கள் மீது நேற்றிரவு கடுமையான தாக்குதல் லொறிகளில் ஏற்றப்பட்டு மெனிக்பாம் அனுப்பப்பட்டனர்
அலட்சியப்படுத்தப்படும் சட்ட ஆட்சி
"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"
“எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு இராணுவமே வெளியேறு’ பதாகைகள் கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்
1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல்
சௌத்பார் கிராமத்தில் நிலப்பரப்பை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி
ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும்வரை நில மீட்பு போராட்டம் தொடரும் திருமுறிகண்டியில் மாவை சூளுரை
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவர் கைது ஒருவர் இராணுவ வீரர்
இராணுவம் முகாம் அமைக்கும் காணி குறித்து பொலிஸ் விசாரணை
வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா?
திருமுறிகண்டியில் வேறு இடங்களில் குடியேற மறுத்த பொதுமக்கள் மீது நேற்றிரவு கடுமையான தாக்குதல் லொறிகளில் ஏற்றப்பட்டு மெனிக்பாம் அனுப்பப்பட்டனர்
அலட்சியப்படுத்தப்படும் சட்ட ஆட்சி
"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"
“எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு இராணுவமே வெளியேறு’ பதாகைகள் கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்
1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்
வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல்
சௌத்பார் கிராமத்தில் நிலப்பரப்பை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி
ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும்வரை நில மீட்பு போராட்டம் தொடரும் திருமுறிகண்டியில் மாவை சூளுரை
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவர் கைது ஒருவர் இராணுவ வீரர்
இராணுவம் முகாம் அமைக்கும் காணி குறித்து பொலிஸ் விசாரணை
வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா?
வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 38 – நூல்மறப்பர்
ஞானா: அப்பா,
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவா னெனின்”
எண்ட குறளக்கு உரிய பொருள்களைப் பாத்தனாங்கள் தானே. கொடுங்கோன்மை எண்ட 56 வது அதிகாரத்திலை உள்ள 560 தாவது குறள். இந்தக் குறளிலை எவ்வளவோ கருத்துகள் பொதிஞ்சிருக்கு இல்லையே அப்பா?
அப்பா: வேறை என்ன? அதுதானே இந்தக் குறளை வைச்சு இப்ப மூண்டு நாளாய் உரையாடிக் கொண்டிருக்கிறம் ஞானா.
சுந்தரி: குறளிலை குறம்புவிட வெளிக்கிட்ட இவள் பிள்ளை ஞானா இப்ப குறளிலை நல்லாய் மாட்டுப்பட்டுப் போனாள். இல்லையே அப்பா?
அப்பா: அவள் மட்டுமில்லைச் சுந்தரி. நீரும், நானும் சேர்ந்துதான் சிக்கியிருக்கிறம்.
ஞானா: இதிலை ஒரு சிக்கலும் இல்லை அப்பா. நல்ல விஷயங்களை அலசிறது நல்லது தானே. இந்தக் குறளிலை ஆபயன் குன்றிறதைப் பற்றிப் பாத்தாச்சு. அறுதொழிலோர் ஆர் எண்டும் பாத்தாச்சு, இனி அவர்கள் நு}ல் மறப்பர் எண்டதைப் பற்றிச் சொல்லுங்கோவன் பாப்பம்.
அப்பா: இதிலை வந்து ஞானா இந்த அறுதொழிலேர் ஆர் எண்டதை நாங்கள் விளங்கிக் கொண்டம்தானே?
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது
.
தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக.
'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து,
உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு
பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 04-06-2012.
'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து,
உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு
பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 04-06-2012.
உலகச் செய்திகள்
- சீனாவில் நிலநடுக்கம்: 4 பேர் பலி 100 பேர் காயம்
சிரிய இராணுவத்தினரின் தாக்குதலில் கடந்த வாரத்தில் மட்டும் 660 பேர் பலி
சிரியா அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட பலர் வெளியேற்றம்
கொபி அனானின் தீர்வுத் திட்டத்துக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு
சர்தாரி மீதான விசாரணை குறித்து பதிலளிக்குமாறு பிரதமருக்கு நெருக்கடி
ருரேக் போராளிகள் வசமிருந்த காயோ நகர் இஸ்லாமிய படையினர் வசம்
தமிழ் சினிமா
| சகுனி (வீடியோ இணைப்பு) |
ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி,
அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும்
ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று! கதை
ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியது தான்... நடைமுறைக்கு
சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான்
இருக்கும் என்றே தோன்றுகிறது. காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது! முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை. தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ். விடலைத்தனமான
லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை
கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான,
புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை. முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்! முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி! சந்தானமும்
கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான்
சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று
பதிகிறது. என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!" பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும் போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ.1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது! மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை! கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை. இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா
அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில்
கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால்,
அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்! ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்து விட்டது போன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம். கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார். நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர். இசை: ஜீவி பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு: பிஜி முத்தையா. பிஆர்ஓ: ஜான்சன். தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன். இயக்கம்: சங்கர் தயாள். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DIu6kf2EaLM http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DIu6kf2EaLM http://www.youtube.com/watch?v=GQAI2W42Qmo&feature=player_embedded நன்றி விடுப்பு |
மரண அறிவித்தல்
.
புத்திசிகாமணி இராமநாதன் காலமானார்
புத்திசிகாமணி இராமநாதன் காலமானார்
|
பிறப்பு 24 -11- 1935 -இறப்பு 25-06-2012
|
|
|
ஏழாலை வடக்கை பிறப்பிடமாக
கொண்டவரும், அவுஸ்திரேலியாவில் Strathfield ஐ
வசிப்பிடமாகக் கொண்டவரும்,
Spiceland முன்னாள் உரிமையாளருமான புத்திசிகாமணி இராமநாதன் அவர்கள்
25-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற புத்திசிகாமணி இராசம்மா
தம்பதியினரின் அன்பு மகனும், ரத்னாவின் அன்புக் கணவரும், கஜன், சாந்தி ஆகியோரின் பாசமிகு
தந்தையும், சதிஷ் அவர்களின் அன்பு மாமனாரும், இஷான், யுவன் ஆகியோரின் அன்பு பாட்டனுமாவார்.
இவர் பத்மநாதன், சிதம்பரநாதன்,
செல்வராசா, தவமணி ஆகியோரின் சகோதரனும், சித்திரா நடராஜா, மகேசன், கனேசன், ரஞ்சன் கந்தவனம்
ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல்
29-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை Strathfield-Town Hall,
65 Homebush Road,Strathfield என்ற இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ஈமக்கிரியைகளும்,
தகனக்கிரியையும் Macquarie Park
crematorium, corner of Delhi and Plassey Roads, North Ryde என்ற
இடத்தில் 30-06-2012 சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெறும்.
உற்றார், உறவினர்கள்,
நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் விழா 2012 - க சபாநாதன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17-06-2012 அன்று சிட்னி முருகன் கோயில் கல்வி கலாசார மண்டபத்தில் சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்திரேலியாக் கிளையும் இணைந்து சேக்கிழார் விழாவைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். இவ்விழா தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்காக அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவப்படங்களும், நான்கு சந்தானகுரவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகளின் உருவப்படமும் சேக்கிழார் பெருமானது உருவப்படமும் ஆலயத்து வசந்தமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்து மாலை 5.00 மணிப்பூசையுடன் விஷேட பூசை நடைபெற்றது. இப்பூசையைத் தொடர்ந்து இளஞ்சிறுவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து பல்லக்கில் சேக்கிழார் பெருமானையும்; ஏனைய திருத்தொண்டர்களின் திருவுருவப்படங்களையும் கும்பம், விளக்கு, குடை, நந்திக்கொடி, ஆலவட்டம் ஆகியவற்றுடன் மணியோசை முழங்க பெரியோர்கள் ஓம் நமசிவாய எனும் தமிழ்மந்திரம் ஓத ஆலய வீதி வலம் வந்தார்கள்.
உடனே திரும்பவேண்டும் (சிறுகதைகள்) -அ.முத்துலிங்கம்
.
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள்
கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர
ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு
என்ன செய்வதென்று தெரியவில்லை.
அடுத்து அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவ மனைக்கு ஓடினோம். குழந்தை மெலிந்து
உருக்குலைந்து கொண்டு வந்தது. அந்த நேரம் பார்த்து என்னை நைரோபி அலுவலகத்துக்கு அவசரமாக வரும்படி பணித்தார்கள். சியாரா
லியோன் ஆப்பிரிக்காவின் மேற்கு கரையோரம் என்றால் நைரோபி கிழக்கு கரை. நீண்ட தூரம். நேரடியான விமான பறப்பு இல்லை.
போவதற்கும் வருவதற்கும் மூன்று நாள் எடுக்கும். மனைவியை எப்படியும் சமாளிக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நான் திரும்பி வர
எட்டு நாட்கள் ஆகும் என்பது எனக்கு அப்போது தெரியாது. வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு பயணமாக அது அமையும் என்பதும்
நான் நினைத்தும் பார்த்திராத ஒன்று.
இலங்கைச் செய்திகள்
சர்வமத மாநாட்டு தீர்மானங்கள்
கட்டுப்படுத்த முடியாத பெரும் சவாலாக டெங்கு
வறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்
ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும்
இரணைமடுக் குளத்தில் மீன் பிடித்த தொழிலாளர் மீது படையினர் தாக்குதல்
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்களுக்கு இராணுவ முகாமில் செயலமர்வு
முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்!
தமிழ் கல்வி முறையாக இல்லாததால் சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்
மன்னாரில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கலில் முறைகேடு
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம்
ஜூலாம்பிட்டியே அமரேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
Subscribe to:
Posts (Atom)


கதை
ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியது தான்... நடைமுறைக்கு
சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான்
இருக்கும் என்றே தோன்றுகிறது.
விடலைத்தனமான
லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை
கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான,
புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
சந்தானமும்
கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான்
சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று
பதிகிறது.
எல்லா
அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில்
கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால்,
அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்! 
.jpg)
