.
உற்றார் உறவினர்கள் என் உற்றவர் அல்லர் தாயே
உன்னை அல்லாது மற்றார்
யாரும் துணையில்லையே! - சுவாமி கெங்காதரானந்தா
ஸ்ரீ துர்க்காதேவி – புகழ், உயர்வு, மங்களம், சுகம் மோட்சம் ஆகியவற்றை அருள்பவள்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 23/11/2026 - 29/11/ 2026 தமிழ் 17 முரசு 30 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் நினைவு நாள் அக்டோபர் இரண்டாம் திகதி விமர்சையாக கொண்டாட படுகிறது. இது இன்னும் காந்தியை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு . காந்தி என்றாலே "மகாத்மா என்று சொல்லும் அளவிற்கு சிறு குழந்தைகளின் மனதிலும் பதியப்பட்டுள்ளது .ஒரு மிகப் பெரிய தேசமே காந்தி தேசம் என்று அவரின் பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு காந்தி உயர்த்தப்பட்டுள்ளாரா அல்லது உயர்ந்து நின்றரா ?
தமிழ்க் கதை உலகில் ஆரவாரமில்லாத அழுத்தமும்,அமைதியும் கூடிய பல தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருக்கும் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவு காரணமாகப் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்த சூடாமணிக்கு வாசிப்பும்,எழுத்தும் மட்டும்தான் வெளி உலகின் ஜன்னல்களாக இருந்து கொண்டிருந்தன.அது குறித்த கழிவிரக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு ‘மானுட அம்சம்’பற்றிய கரிசனையோடு தனது எழுத்துக்களைச் செதுக்கிக் கொண்டிருந்தவர் அவர்.
கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.