Published By: Digital Desk 1
10 May, 2026 | 08:23 AM
( இணையத்தள செய்திப் பிரிவு )
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனடபோது பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
அதில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்கவுள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கவுள்ளார். அவருடன் புஸ்ஸி ஆநந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 10பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment