இந்தியாவின் மிகச் சிறந்த அகிம்சைவாதியும், பூமி தான இயக்கத்தின் முன்னோடியுமான வினோபாவின் கொள்கைகள் சென்ற நூற்றாண்டில் மக்களை பெரியளவில் ஈர்த்திருந்தது. அவரின் அகிம்சை கொள்கையை ஏற்று பல கொள்ளைக்காரர்கள், கொலைக்கைக்காரர்கள் சட்டத்திடம் சரணடைந்தனர். பலர் தம்மிடம் இருந்த மேலதிக நிலத்தை பூமிதானம் செய்தனர். வினோபாவின் இந்தக் கொள்கைகளில் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக அவற்றை அடிப்படையாக வைத்து எம் ஜி ஆர் நடித்த படம் நான் ஆணையிட்டால்.
எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமாக இருந்து அவருடைய மனம் அறிந்து
செயற்படும் ஆர் .எம் . வீரப்பன் தனது சத்யா மூவிஸ் சார்பில் படத்தை எடுத்திருந்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இப் படத்தில் நம்பியார், அசோகன், மனோகர், ஓ .ஏ .கே . தேவர், குண்டுமணி, புத்தூர் நடராஜன் என்று ஒரு வில்லன் கோஷ்டியே நடித்திருந்தது.

படத்தில் பல வில்லன்கள் இருந்த போதும் படத் தயாரிப்பின் போது ஏவி. எம் நிறுவனம், தேவர் பிலிம்ஸ், ஜெயலலிதா, எம் ஜி ஆர் என்று பல வில்லன்களை சமாளிக்க வேண்டிய நிலை வீரப்பனுக்கு ஏற்பட்டது .
படம் தயாராவது உறுதியானவுடன் கதாநாயகியாக ஜெயலலிதா தான் நடிக்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் உறுதியாக இருந்தார். ஆனால் சரோஜாதேவி தான் நடிக்க வேண்டும் என்பதில் வீரப்பன் தெளிவாக இருந்தார். கதாநாயகனுக்கு நல்லுரை கூறி , அவனை சீர்படுத்தும் வேடம் கதாநாயகிக்கு. இதற்கு ஜெயலலிதா பொருந்த மாட்டார், சரோஜாதேவி தான் பாத்திரத்துக்கு பொருந்துவார் என்று வீரப்பன் வலியுறுத்தியதால் இறுதியில் எம் ஜி ஆர் சம்மதித்தார்.
நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு நடக்கும் போதே எம் ஜி ஆரிடம்
கால் க்ஷீட் பெறுவது வீரப்பனுக்கே சவாலானது. இக் கால கட்டத்தில் சின்னப்பா தேவர் எம் ஜி ஆரின் நடிப்பில் கன்னித்தாய், முகராசி படங்களை தயாரித்து விட்டார். படத்தை 1966ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட வீரப்பன் விரும்பிய போது ஏவி எம் நிறுவனம் தங்களின் கலர் படமான அன்பே வா தான் எம் ஜி ஆரின் பொங்கல் பரிசு என்று அழுத்தம் காட்டியது . இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இறுதில் பொங்கல் வெளியீடாக அன்பே வா , மூன்று வாரம் கழித்து நான் ஆணையிட்டால், இரண்டு வாரம் தள்ளி முகராசி என்று அடுத்தடுத்து மூன்று எம் ஜி ஆர் படங்கள் வெளியாகி , அன்பே வா, முகராசி இரண்டுக்கும் நடுவே நான் ஆணையிட்டால் சாண்ட் விட்ச் ஆனது!

சிறு வயதிலேயே கொள்ளைக்காரன் முத்துவேலனால் கடத்தி
செல்லப் பட்டு குற்றவாளியாக வளர்க்கப்படும் பாஷா என்ற பாண்டியன் சிறை சென்று நல்லவனாக திருந்தி திரும்புகிறான். சிறை அதிகாரி வீட்டில் அவன் சந்தித்த கண்ணகியும் அவன் திருந்த காரணமாகிறாள். தன்னை சார்ந்த கொள்ளைக் கூட்டத்தை திருத்தி அவர்களுக்கு மறு வாழ்வளிப்பதை இலட்சியமாக கொண்ட பாஷாவுக்கு கொள்ளை கூட்டத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு வருகிறது. அதே சமயம் அக் கூட்டத்தை சேர்ந்த வேலைய்யா செய்யும் கொலையும் அவன் மீது விழுகிறது. சந்தர்ப்ப வசத்தால் பாஷா கோடிஸ்வரன் சுந்தரமாக கனகரத்தினத்தின் மாளிகைக்குள் நுழைகிறான். அங்கு சென்ற பிறகு தான் குமார் என்ற சதிகாரனின் வஞ்சக திட்டங்கள் அவனுக்கு தெரிய வருகிறது. இதனிடையே கண்ணகி அங்கே காவிரி என்ற பேரில் பணிப் பெண்ணாக சேர்கிறாள். கனகரத்தினமோ தன் மகள் மாலாவை சுந்தரத்திற்கு கல்யாணம் செய்து கொடுக்க முனைகிறார். இத்துணை பிரச்னைகளுக்கும் பாஷா என்ற பாண்டியன் என்ற சுந்தரம் எப்படி தன் மூன்று முகங்களால் சமாளிக்கிறான் என்பதே படத்தின் மிச்ச சொச்சம்!

இப்படி அமைந்த படத்தின் மூலக் கதையை மஞ்சுளா நெடுமாறன்
எழுதினார். அதற்கு வீரப்பன் திரைக் கதை எழுதினார். வட இந்தியாவில் , சாம்பல் பள்ளத்தாக்கில் வாழும் கொள்ளைக்காரர்களை அடிப்படையாக வைத்து ஹிந்தியில் திஸ் தேஷ் மே கங்கா பத்தி ஹே , கங்கா ஜமுனா போன்ற படங்கள் வெளி வந்து வெற்றி பெற்றன. ஆனால் அப் படங்களின் கதை களம் தமிழகத்தில் இல்லாததால் தமிழ் ரசிகர்களுக்கு இப் பட கதை அந்நியமாகவும் ,அனாவசியமானதாகவும் பட்டது. இதனால் படம் பெரியளவில் அவர்களைக் கவரவில்லை. நான் ஆணையிட்டால் கதையும் இதே சிக்கலுக்கு உள்ளானது .

ஆனாலும் அவர்களின் மனம் கவர் எம் ஜி ஆர் படத்தில் காட்சிக்கு காட்சி இருக்கிறாரே! ஆரம்பத்தில் தாடியுடன் வரும் எம் ஜி ஆர் பிறகு கோட் சூட் அணிந்தும், மாறுபட்ட ஆடைகள் அணிந்தும் அழகாக வருகிறார். ஒவ்வொரு கெட் அப்பிலும் ஸ்டைல் காட்டுகிறார். பாடல் காட்சிகளில் ஒரு ஸ்டைல் என்றால் , சண்டைக் காட்சியில் வேறு ஸ்டைல் !
எம் ஜி ஆரின் அசத்தல் நடிப்புக்கு தனது மென்மையான நடிப்பின்
மூலம் ஈடு கொடுக்கிறார் சரோஜாதேவி. அவரோடு இளமை பொங்க நடிப்பை சிந்துகிறார் கே ஆர் விஜயா. நம்பியாரின் மேக் அப் பயமுறுத்துகிறது. அவரின் தெனாவெட்டான நடிப்பும், நடையும் கவனத்தை பெறுகிறது. பல படங்களில் நடித்த சேதுபதிக்கு இதில் நல்ல வேடம். தந்தை வேடம் . அதனை திருப்தியாக செய்திருந்தார் அவர். அதே போல் ஓ. ஏ. கே . தேவருக்கும் உண்ர்ச்சிகரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இவர்களுக்கு மத்தியில் மனோகரும் , அசோகனுக்கு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் மத்தியில் நாகேஷ் நகைச்சுவையில் மிளிர்கிறார்.

படத்தின் வசனங்களை வித்துவான் வே . லஷ்மணன், பேராசிரியர் நா. பாண்டுரங்கன் இருவரும் எழுதினார்கள். பல இடங்களில் அவர்களின் வசனங்கள் கவனத்தை ஈர்த்தது. பி .என் .சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார் .
படத்துக்கு பெரியளவில் கை கொடுத்தது எம் .எஸ் . விஸ்வநாதனின் இசைதான். வாலியின் பாட்டு வரும் உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும், தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை, நல்ல வேளை நான் பிழைத்துத்துக் கொண்டேன், நான் உயர உயர போகிறேன் பாடல்கள் தேனாக காதில் பாய்ந்தன.
இப் படதின் படப்பிடிப்பு கால கட்டத்தில் எம் ஜி ஆர் தான் பிறந்த நாடான இலங்கைக்கு சென்று வந்திருந்தார். அதனை போற்றி வரவேற்கும் விதத்தில் ஆலங்குடி சோமு எழுதிய பிறந்த இடம் தேடி பெருமையுடன் வந்த திருமகனே வருக பாடல் , காட்சியுடன் சேர்ந்து கவனத்தை ஈர்த்தது .
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம் ஜி ஆர் நடித்த பாடலின் முதல் அடியையே நான் ஆணையிட்டால் என்று படத்துக்கு பெயராக வைத்து அப் படத்தை இயக்கிய சாணக்கியாவை இப் படத்துக்கும் இயக்குநராக்கினார் வீரப்பன். எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி படத்தை டைரக்ட் செய்திருந்தார் சாணக்கியா .
ஆனாலும் படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் கூட்டத்தை மன்னித்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதை வீரப்பன் விரும்பவில்லை. எம் ஜி ஆரோ அதையே வற்புறுத்தினார் . இறுதியில் அவரின் விருப்பப் படியே அவசர அவசரமாக இறுதிக் காட்சி படமானது. வழக்கமாக தன்னுடைய பட எடிட்டிங்கில் எம் ஜி ஆரும் சம்பந்தப் படுவது வழக்கம் . இந்தப் படத்தில் எம் ஜி ஆர் ஒதுங்கி கொண்டார். இதனால் அவசர கதியில் படத் தொகுப்பாளர் ஜம்புலிங்கம் படத்தை எடிட் செய்து இறுதி நேரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பி அவர்களின் அனுமதியை பெற்றார்கள் .
படத்தில் கொடியவர்கள் மத்தியில் இருக்கும் போது எம் ஜி ஆரின் பேர் பாஷா. முற்பது ஆண்டுகளுக்கு பின் இதே வீரப்பன் ரஜினி நடிப்பில் பாஷா படத்தை தயாரித்து அன்று விட்டதை பிடித்துக் கொண்டார்!
.png)
.png)
.png)
.png)
.jpeg)
.png)
No comments:
Post a Comment