3வது சர்வதேசச் சிலப்பதிகார மாநாடு 2024
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா?
சங்கர சுப்பிரமணியன்.
மருதநில மன்னன் என்பவனும் நீ
தமிழ்க்குடி காத்த கோமானும் நீ
தேவர்களின் படைத்தளபதியும் நீயென
எல்லோரும் சொல்கின்றாரே ஐயா
நீ எங்களைக் காப்பாற்றி வந்த தலைவன்
மருதமண்ணின் மைந்தனன்றோ ஐயா
தேவர்களைக் காத்திடவும் வந்த நீ
தேவர்களைக் காக்கும் தேவனா?
இடைப்பட்ட கோள் ஏதிலும் தங்கி
இங்குமங்கும் பயணிக்கிறாயோ?
தூணிலும் துரும்பிலும் இருப்பதுபோல்
நீயும் மாறிவிட்டாயா மாவீரா
அங்குமிங்கும் இருப்பேன் என்று நீயும்
அவ்வாறு இருக்கின்றாயோ ஐயா
எவருக்கு உதவி தேவையென்றாலும்
நீயும் காத்தருள்வாய் கந்தையா
ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி”
ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம் சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர்.
ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.
ரவிவர்மாவின்
“திரைக்கு வராத சங்கதி” யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும்.
சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.
இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.
சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை ' யாழ்நங்கை' அன்னலட்சுமி இராஜதுரை முருகபூபதி
இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள்
நிகழ்ந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார்.
அவர்தான் தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள்.
இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச்
செய்தி வெளியாகியிருக்கிறது.
நாம் அன்னக்கா என பாசமுடன்
அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
செய்தி அறிந்தவுடன், அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்தியதையடுத்து அவர் பற்றிய இந்தக்குறிப்புகளை
எழுதுகின்றேன்.
இதற்கு முன்னர் இந்த உயரிய
தேசிய விருது தமிழர் தரப்பில் ஆண்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இம்முறை இந்த கௌரவத்திற்கு ஒரு தமிழ்ப்பெண் ஆளுமை தெரிவாகியிருக்கிறார். இவரை பரிந்துரைத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத்
தெரிவிக்கின்றோம்.
ஒரு பெண் ஏழுதசாப்தங்களுக்கும்
மேலாக தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிலைத்து
நிற்கிறார் என்றால், அவர் யார்...? என்ற கேள்வியைத்தான் முன்னைய - இன்றைய
தலைமுறை வாசகர்கள் விழியுயர்த்திக்
கேட்பார்கள். அப்படி ஒருவர் தமிழ்ப் பெண்ணாக தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக பணிதொடருவதென்பது மிகப்பெரிய ஆச்சரியம். சாதனை.
அவர்தான் திருமதி அன்னலட்சுமி
இராஜதுரை. இலக்கிய உலகில் தொடக்ககாலத்தில் யாழ்நங்கை என
அறியப்பட்ட இவரை 1972 முதல்
நன்கு அறிவேன். இவ்வளவு காலமும் அவருடன்
நான் முரண்படாமல் அவருடன் உறவைப்பேணிவருவதற்கும் என்னைப் பொறுத்தவரையில் அவர்மீதான நல்ல மதிப்பீடுகளே அடிப்படை.
அவர் வீரகேசரி
பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்த 1962 ஆம் ஆண்டு நான் படித்தது ஆறாம் வகுப்பில். அதன்பின்னர் அவரை முதல் முதலில் சந்தித்தது 1972 இல். அக்காலப்பகுதியில்தான் எனக்கு
வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர் வேலை கிடைத்தது.
அப்போது இலக்கியப்பிரதிகளை படிக்கும் ஆர்வமும் துளிர்த்தமையினால் அன்னலட்சுமி அவர்களின் முதல் நூல் விழிச்சுடரை அவரிடம் கேட்டு வாங்கிப்படித்தேன். இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு விழிச்சுடர்.
திருமாங்கல்யம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
வெண்ணிற ஆடை மூலம் 1965ல் தமிழ் திரைக்கு அறிமுகமான
ஜெயலலிதாவுக்கு 1974ல் திருமாங்கல்யம் கிட்டியது. ஆம் ஒன்பது ஆண்டு கால அவகாசத்தில் தனது நூறாவது படமாக திருமாங்கல்யம் படத்தில் அவர் நடித்தார். தனது நூறாவது படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் , தன்னுடைய பாத்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் , வண்ணப் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதா இவற்றுக்கு ஏதுவாக தெரிவு செய்த படம்தான் திருமாங்கல்யம்.
விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளரான டி . ராமநாயுடு இந்தப் படத்தை தயாரித்தார். படத் தயாரிப்பு வகையில் பணத்தை பற்றி கவலைப் படாமல் தாராளமாகவே செலவு செய்து படத்தை அவர் தயாரித்தார். பிரம்மாண்டமான செட், நவீன ஆடைகள், காட்சியமைப்பு என்று எதிலும் அவர் பின்வாங்கவில்லை. ஆனால் படத்தின் கதை விஷயத்தில் தான் அவர் கோட்டை விட்டார் என்று சொல்ல வேண்டும்.
இலங்கைச் செய்திகள்
பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு
ஃபெஞ்சல்: இலங்கை வானிலை தாக்கம் படிப்படியாக குறைகிறது
ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்
பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு
- சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை
வாகன விபத்தை ஏற்படுத்தி சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
நிஜ்ஜார் கொலை: மோடி, தோவலுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகளை மறுத்த கனடா
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை
லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கார்த்திகை சோம வாரங்கள் திங்கட்கிழமைகள் 18 & 25 நவம்பர் + 2 & 9 டிசம்பர் 2024 108 சங்காபிஷேகம் பகவான் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு (சிவன்) திங்கள் 9 டிசம்பர் 2024
பிரபஞ்சத்தின் காரணமான தெய்வீக குருவான உமாவின் (பார்வதி) இறைவனை நான் வணங்குகிறேன். பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டு, புலித்தோலை அணிந்த, அனைத்து உயிரினங்களுக்கும் இறைவனாகிய இறைவனை வணங்குகிறேன். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களாகவும், விஷு அருகிலிருக்கும் இறைவனை வணங்குகிறேன். அனைத்து பக்தர்களுக்கும் அடைக்கலமானவரும், வரங்களை அளிப்பவருமான சிவசங்கரரை வணங்குகிறேன்.
பாவங்களை நீக்கி, மனதையும் உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்து, வளமான வாழ்க்கையை அனுபவிக்க சிவபெருமானின் மாற்றும் ஆற்றல் தமிழ் மாதமான கார்த்திகையில் (நவம்பர்-நவம்பர் முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) ஏராளமாக கிடைக்கிறது. சாஸ்திரங்களின்படி, இந்த புனித மாதத்தில், சிவன் தன்னை எல்லையற்ற நெருப்பாக வெளிப்படுத்தினார். திங்கட்கிழமையை ஆளும் கிரக சந்திரன் (சமஸ்கிருதத்தில் சோமா என்று அழைக்கப்படுகிறது), சிவனுடன் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது, இது சோமேஸ்வரா என்றும் அழைக்கப்படுகிறது (பிறைச் சந்திரனை தனது மேட்டட் முடியில் அணிந்தவர்). திங்கட்கிழமைகள் எப்போதும் சிவனுக்கு மிகவும் உகந்தவை, மேலும் கார்த்திகை சோமாவரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் ஆண்டின் நான்கு சிறப்புமிக்க திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 43
“ஆற்றுகைகளைப் புரிந்துகொள்ளுதலும் பகுத்தாய்தலும்”
(Performance Understanding and analysing)
உரை: பேராசிரியர் சி. மௌனகுரு
ஒருங்கிணைப்பு: வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ்
நாள்: சனிக்கிழமை 30-11-2024
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
மேலதிக விபரங்களுக்கு: - அகில் 001416-822-6316
நல்லூர் பிறந்த நாவலர் பெருமான் !
திரைச்சீலையூடே தெரிந்த அம்முகம்!
….சங்கர சுப்பிரமணியன்.
நண்பனை நாடி அவன் வீடு வந்த எனக்கு
பக்கத்து வீட்டிலேதோ நகர்வது தெரிய
பார்த்தாலே தெரியும் அருகிருந்த வீடதில்
காற்றால் சாளரத்தில் ஏதோ நகர்ந்திட
கூர்ந்து பார் என என் மனமும் சொல்லிட
உண்மை அறிந்திட நானும் முயன்றேன்
சாளரத்தை விட்டு திரைச்சீலை விலகியது
உடலை மூடிய ஆடை விலகுவதுபோல்
இயல்பான அனிச்சைசெயல் தூண்டலால்
என்னை அறியாது கண்கள் நகர்ந்தன
நகர்ந்தது சாளரத்தின் திரைச்சீலைதான்
காற்றால் நகர்ந்ததை உணர்ந்தேன்
மீண்டும் அங்கே திரைச்சீலை நகர்கிறது
ஆவலால் என் கண்களும் நகர்கின்றன
தங்கப் பதக்கம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழ் சினிமாவில் விபரீத முடிவுகளை கொண்ட பல படங்கள்
வந்துள்ளன. கட்டிய கணவனை மனைவி கொல்வது ( அந்த நாள் , மந்திரிகுமாரி ) மகனை தாய் கொல்வது (நான் ) அண்ணன் தம்பியை கொல்வது ( உத்தம புத்திரன் ) அக்காள் தம்பியை கொல்வது ( திரும்பிப் பார் ) கணவன் மனைவியை கொல்வது ( கவரிமான் ) என்ற வரிசையில் தந்தை மகனை கொல்வதாக அமைத்த படம்தான் தங்கப் பதக்கம்.
தீவிரமாகாத காலகட்டத்தில் பல நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருந்தன. திரைப்படக் கதாசிரியராகவும், துக்ளக் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான மகேந்திரன் , நடிகர் செந்தாமரையின் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டில் ஒன்று என்ற நாடகத்தை எழுதி அது அடிக்கடி மேடையேறிக் கொண்டிருந்தது. நாடகத்தை எஸ் ஏ கண்ணன் நெறியாள்கை செய்திருந்தார். இந்த கண்ணன் சிவாஜியின் மிக நீண்ட கால நண்பர் ஆவார். இளம் வயதில் இவர் சிவாஜியுடன் பல மேடை நாடகங்களிலும், பின்னர் படங்களிலும் நடித்திருந்தார். அதே போல் செந்தாமரையும் சிவாஜி நாடக மன்றத்தின் நிரந்தர நடிகராவார்.
திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் `யாழினி` நூல் வெளியீடு - ஒரு கண்ணோட்டம் சிட்னியில் இருந்து திருமதி திலகா பிரபாகரன்
திருமதி தேவகி கருணாகரன் அம்மாவின் `யாழினி` உட்பட மேலும்
சில சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த நவம்பர் மாதம் 2 ஆந் திகதி சனிக்கிழமை மாலை, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநிலத்தின் ஸ்றத்பீல்ட் நகரத்தில் அமைந்துள்ள கரிங்ரன் மண்டபத்திலே நடைபெற்றது. இந்தியாவின் ஸீரோ டிகிறி பதிப்பகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதற் பரிசை `யாழினி` குறுநாவல் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
திருமதி கருணாகரனின் அன்பான அழைப்பையேற்று நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். மண்டப வாசலிலே ஏற்றப்பட்டு இருந்த குத்துவிளக்கு நிறைகுடம், எம் தமிழரின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டு இருந்தது. அங்கு வருகை தந்த அன்பர்களை திருமதி கருணகரன், தனது குடும்பத்தாரோடு சேர்ந்து வரவேற்றார்.
சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த விழாவினை தலைமை
தாங்கி நடாத்துவதற்காக சிட்னியில் புகழ்பூத்த வைத்திய கலாநிதி பொன் கேதீஸ்வரன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார். விழாவின் ஆரம்ப நிகழ்வாக அவுஸ்திரேலிய ஆதிக் குடிமக்களான அப்பொற்ஜினல் Aboriginal இனத்தவருக்கான மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, திருமதி சத்தியா கந்தராஜா, வைத்திய கலாநிதி சாந்தினி தவசீலன் ,திருமதி சரோ சுந்தரலிங்கம், மற்றும் பல் வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர். அடுத்தபடியாக தொடர்ந்து வர்ஷ்னி கேஷ்னி கேதீஸ்வரன் சகோதரிகள் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தார்கள்.
முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத புதுமை!
November 21, 2024 6:25 am
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இதுவரையிலான 76 வருட அரசியல் பாதையில் இப்போது புரட்சிகரமானதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒருசில பாரம்பரிய அரசியல் கட்சிகளே இதுவரையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறி வந்திருக்கின்றன.
தனிக்கட்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ அல்லது ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஒரு கட்சியை சார்ந்தவர்கள் புதிய கட்சியை அமைத்து அதனூடாக அரசியல் பிரவேசம் செய்தோ ஆட்சி நடத்தி வந்திருப்பது கடந்தகால அரசியல் நிகழ்வுகளாகும்.
இலங்கையில் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்ற ஆட்சி மாற்றங்களை ‘மோதகம், கொழுக்கட்டை’ ஆகியவற்றுக்கு உவமானமாகக் கூறுவதுண்டு. ஏனென்றால் மோதகம் அல்லது கொழுக்கட்டை ஆகியவற்றின் தோற்றம்தான் வித்தியாசமானது. ஆனால் உள்ளீடுகள் ஒன்றுதான்.
மேற்படி உவமானக் குறிப்பை இன்னும் விரிவாகச் சொல்வதானால், கடந்த காலத்தில் ஆட்சிபீடம் ஏறி இறங்கிய சகல அரசுகளும் அரசியல் கட்சிகளும் மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுடன், சிலவேளைகளில் பிடிகொழுக்கட்டையாகவும் அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.
மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுக்கு உள்ளே வைக்கப்படும் பயறு, தேய்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றை மாவுடன் சேர்த்து பிசைந்தெடுத்து கையில் வைத்து விரல்களால் பிடித்துச் செய்யப்படுவதுதான் பிடிகொழுக்கட்டை. இந்தவகையில் மோதகம், கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை என்பனவெல்லாம் ஒரே ரகம்தான்.
ஜனாதிபதி அநுரவும் இனவாதமும்
November 22, 2024
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நேற்றைய தினம் காலை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களை ஜனாதிபதிகள் ஆரம்பித்து வைக்கும் போது அந்த நிகழ்வுகளை ‘சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தல்’ என்றே அழைப்பதுண்டு. ஆனால் ஜனாதிபதி திஸநாயக்க எந்தவிதமான பழைய சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் – படை அணிவகுப்புகளோ அல்லது வீண் செலவில் ஆரவாரங்களோ எதுவுமின்றி எளிமையான முறையில் வந்து கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது.
அவரது இந்த செயல் முன்னுதாரணமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். அவரது அரசாங்கத்தின் வருங்கால நடவடிக்கைகளில் இவ்வாறாக பல்வேறு முன்னுதாரணங்களை எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தனது உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்கிக்கூறியிருக்கிறார். அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் அல்லது கணக்கு வாக்கெடுப்பும் அடுத்த வருடம் முழுமையான வரவு – செலவு திட்டமும் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற பிரகடனத்தையும் அவர் சபைக்கும் அதன் ஊடாக நாட்டுக்கும் அறிவித்தார். அதுவும் வரவேற்கப்பட வேண்டியதே. இனவாத அரசியலும் மதவாதமும் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை நன்குணர்ந்தவராக அவர் அந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். இதுகாலவரையில் ஓர் இனத்தை இன்னோர் இனத்துக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் எவரும் தாங்கள் செய்வது இனவாத அரசியல் என்று சொன்னதில்லை.
உக்ரைன் போரில் அமெரிக்க முரண்நகை: ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி; போர் உதவியை நிறுத்தும் ட்ரம்ப்!
November 21, 2024 8:26 am
எதிர்வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார்.
பிரேஸிலில் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றும் போது, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய படைகள் களமிறக்கப்பட்ட பின்னர் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும், உக்ரைனுக்காக பைடனின் இறுதி முயற்சி இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்மறையாக அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆதரவைக் குறைப்பார் அல்லது நிறுத்துவார் எனத் தெரிவிக்கபடுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்க அரசே முன்னணியில் உள்ளது.
மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கப்படாது எனக் கூறியமை மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியது.
ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி:
உக்ரேன் அரசு ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வடகொரிய வீரர்களை உக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது என்று சில அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும்
November 22, 2024 7:54 am
எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.
தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்தரவாதம் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்
நான் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை என அவரும் அவரது கட்சியும் எடுத்த நிலைப்பாடு சார்ந்துமே அவரை ஆதரித்தேன். பின்னர் அவர் நிலைமாறிப் போனது வரலாற்றுத் துயரம்.
என்னைப் பொறுத்தவரை எனது அரசியல் முடிவுகளில் கொள்கை நிலைப்பாடே முன்னிலைப்படும். இதில் இன, மத, சாதி, பால் வேறுபாடுளுக்கு இடமளிப்பதில்லை. அந்த தார்மீக உணர்வுடன்தான் இதனை எழுதுகிறேன்.
நான் போர் காரணமாக புலம்பெயர்க்கப்பட்டு நோர்வே வந்தடைந்தவன். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து, போர் நெருக்கடி உந்தித்தள்ள தாயக மண்ணை விட்டு வெளியேறியவன். இவ்வெளியேற்றம் தந்த குற்ற உணர்வுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு தனிமனிதனாக, எனது உணர்வின் நிலை நின்று இப்பதிவை எழுதுகிறேன். என் போன்ற உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.
புலப்பெயர்வு வாழ்க்கை எம்மை புதியதொரு நாட்டின் குடிமக்கள் ஆக்கினும், நான் பிறந்து வளர்ந்த மண்ணை எனது தாயகமாக உணர்கிறேன். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் தேசத்தின் அங்கமாக என்னை இனங்கண்டு, நாடு கடந்த சமூகவெளியில் தாயகத்துடன் உறவுகளைப் பேணிய வண்ணம் வாழ்ந்து வருகிறேன். இதனால், ஏற்படும் ஈடுபாடு, அக்கறையின் காரணமாகவே இம்மடலை எழுதுகிறேன்.




.png)
.png)


.jpg)
.jpg)
.jpg)

.jpeg)

.png)
.png)


.jpg)

.webp)

