ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை வாங்கி தமிழில் சிவாஜியின் நடிப்பில் படமாக்குவது பாலாஜியின் வழக்கம். இம் முயற்சியில் தொடர் வெற்றி கண்டு கொண்டிருந்த அவர் கண்களில் நமக் ஹராம் என்ற ஹிந்திப் படம் பட்டது. அமிதாப்பச்சன் , ராஜேஸ்கண்ணா இருவரும் இணைந்து நடித்த இப் படத்தை தமிழில் எடுக்க தீர்மானித்தார் பாலாஜி. உனக்காக நான் படத்தின் கதாநாயகன் சிவாஜி என்பது தீர்மானமான ஒன்று . படத்துக்கு இன்னொரு கதாநாயகனும் தேவை. அந்த வேடத்துக்கு ஜெமினியை தெரிவு செய்துள்ளதாக பாலாஜி சொன்னதும் சிவாஜி உற்சாகமாகி பெரிய வசூலுக்கு அடி போட்டிருக்கிறாய் என்று பாலாஜியின் முதுகில் தட்டி இருக்கிறார்.
திரையுலகில் பாலாஜியின் God Father ராகத் திகழ்ந்தவர் ஜெமினி. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இப் படத்தை பயன் படுத்திக் கொண்டார் அவர் . அதே போல் படத்தின் அழுத்தமான ஒரு வேடத்துக்கு நாகேஷ் தெரிவானார். நாகேஷின் ஆரம்ப கால முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் பாலாஜி என்பது குறிப்பிடக் கூடியது.
இரண்டு உயிர் நண்பர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். ராஜா
கோடீஸ்வரன் ராமு ஏழை ஆனால் பாகுபாடு இன்றி பழகுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜா அவனது தந்தையின் மில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்கிறான் . அவனை யூனியன் லீடர் கேவலப்படுத்தியதால் அவரை பழி வாங்க அதே மில்லில் ராமு தொழிலாளியாக சேர்ந்து ஒரு சந்தர்ப்பத்தில் யூனியன் தலைவனாகி விடுகிறான்.

நண்பனுக்காக தலைவனான ராமு மில் முதலாளியான ராமுவின் தந்தை தொழிலாளர்களை நசுக்கி அவர்களின் உரிமைகளை பறிக்கிறார் என்ற உண்மை புரிகிறது. தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து வந்த அவன் இப்போது பழைய தலைவரை விட தொழிலாளர் உரிமைக்காக போராடுகிறான் . இதனால் ராஜா அவனை விரோதியாக பார்க்கிறான். அவனால் ஆபத்து என்று அறியும் ராஜாவின் தந்தை ராமுவை கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதி நேரத்தில் இதனை அறியும் ராஜா தன் உயிர் நண்பனை காப்பாற்ற ஓடுகிறான் .
நீண்ட காலத்துக்கு பிறகு சிவாஜி , ஜெமினி இருவரும் சேர்ந்து
நடித்திருந்தார்கள். படத்தின் பிளஸ் பாயிண்ட் இது என்றால் மைனஸ் பாயிண்டும் இதுதான். இருவரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதை ஜீரணிப்பது கஷ்டம்! சிவாஜியின் இரு கண்களும் சிகையும் உறுத்துகிறது . ஜெமினியிடமும் முதுமை தெரிகிறது. இருவரும் தோன்றும் சில காட்சிகளில் அவர்களின் நடிப்பு பீம்சிங் காலத்தை நினைவூட்டுகிறது . ஆனாலும் நாகேஷ் தொடர்பான காட்சிகளில் ஜெமினியின் நடிப்பும், சுந்தர்ராஜனுடனான இறுதி காட்சிகளில் சிவாஜியும் நடிப்பும் கவர்கிறது.

படத்தில் எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் எடுத்துக்
கொள்கிறார் நாகேஷ். சில காட்சிகள் மட்டும் வந்தாலும் நடிப்பு நிறைவு . சுந்தரராஜன் தொழிலதிபர் பாதித்திரத்துடன் பொருந்துகிறார். பருப்பு இல்லாத கல்யாணமா மனோரமா இல்லாத படமா இதிலும் இருக்கிறார் கூடவே வி கே ராமசாமி, வை ஜி மகேந்திரன் காமெடிக்கு உதவுகிறார்கள்.

இந்த படத்தில் தான் முதல் தடவையாக சிவாஜிக்கு லஷ்மி ஜோடியாக நடித்தார். வலுவிழந்த ரோல் ! ஜெமினிக்கு நிர்மலா ஜோடி , லஷ்மியை விட வேலை சற்று அதிகம். எஸ் வி சுப்பையா வழமையான கறார் வேடம் , பாலாஜி அவ்வப்போது வந்து போகிறார். இவர்களுடன் மனோகர், மணிமாலா ,ராமதாஸ், டி வி குமுதினி, டைபிஸ்ட் கோபு, பேபி இந்திரா ஆகியோரும் நடித்தனர்.
இறைவன் உலகத்தை படைத்தானாம் பாடல் கே ஜே ஜேசுதாஸ்
குரலில் உருக்கமாக ஒலித்தது. இமை தொட்ட இரு விழி பாடலும் இனிமையாக இசைத்தது. பாலாஜி படம் என்றால் பாடல்கள் கண்ணதாசன், இசை எம் எஸ் விசுவநாதன் என்பது எழுதப்பட்
ட விதி. இதிலும் அது தொடர்ந்தது. முடிவுக்கும் வந்தது!

படத்தின் வசனங்களை ஏ . எல் . நாராயணன் எழுதினார். சில காட்சிகளில் அவரின் வசனங்கள் அழுத்தமாக பதிந்தன. படத்தை மஸ்தான் அருமையாக ஒளிப்பதிவு செய்திருந்தார் . சீனியர் கேமராமனான இவர் சில காலம் இலங்கைக்கு சென்று சிங்கள படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கிய பின் இந்தியா திரும்பினார். அவரின் திறமையை அறிந்திருந்த பாலாஜி தன் படங்களுக்கு அவரை பயன் படுத்திக் கொண்டார். பாலாஜியின் இஷ்டப்படி சி வி ராஜேந்திரன் படத்தை இயக்கினார்.
ஹிந்தியில் பிரபலமான இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி நமக் ஹராம் ( நன்றி கெட்டவன் ) படத்தை வெற்றி படமாக டைரக்ட் செய்திருந்தார். இரண்டு ஹீரோக்களாக அமிதாப் , ராஜேஷ் கன்னா இருவரையும் தெரிவு செய்து அவர்களும் பாத்திரத்துடன் பொருந்தினார்கள் . ஆனால் தமிழில் நிலைமை வேறானது. அது படத்தின் வேரையே அசைத்து உனக்காக நான் படம் தோல்விப் படமானது. பாலாஜியே எதிர்பார்க்காத அதிர்ச்சி. இதே படத்தை ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ரஜினி, கமல் நடிப்பில் எடுத்திருந்தால் படம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment