யாழ்ப்பாணத்தில் 27, 28 ஆம் திகதிகளில் மௌனகுருவின் காண்டவதகனம்

.

மட்டக்களப்பில் கடந்த 24 ஆம் திகதி நடந்த விஞ்ஞான விழாவில் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம் காலையும் மாலையுமாக இரண்டு காட்சிகள் அரங்காற்றுகை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணையும் கலை இலக்கிய அரங்குகளின் தேவையே அவசியம் என்பதை உணர்ந்துள்ளமையால் மீண்டும் மேடையேறிய காண்டவதகனம் அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் பார்வையாளர்களான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் புதிய கலாரசனை அனுபவத்தை வழங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பேராசிரியர் மௌனகுருவின் தகவல்களிலிருந்து அறியப்படுவதாவது:
விஞ்ஞான வழிகாட்டிகள் சங்கம்  நடத்திய கோலாகலமான விஞ்ஞான விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் காண்டவ தகனம் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைத்தது.

போர்க்குற்றம்

.
போர்க்குற்றம் புரிந்தவர்களும் , புரியவைத்தவர்களும் ஓடிப்பிடித்து விளையாட்டு

படம் நன்றியுடன் வீரகேசரி 

மலரும் முகம் பார்க்கும் காலம் 15 - தொடர் கவிதை

.
கவிதை 15  திருமதி. ரதி மோகன், டென்மார்க்

மலரும் முகம் பார்க்கும் காலம்
மனம் மலரும் வசந்த காலம்
மாதங்கள் பத்து காத்திருக்கும்
மங்கையவளின் கனவுக்காலம்..

காதலுக்காய் அவன் தந்த
கனியொன்றின் விதையொன்று
துளிர்விட்டு மொட்டவிழ்ந்து
கனியாகும் இப் பேறு காலம்..

காத்திருந்து காத்திருந்து
பல வருடங்கள் கடந்த பின்பு
பட்டு வண்ண ரோஜா ஒன்று
இதழ்கள் விரிக்கும் வேளை..

வனப்பும் செழிப்பும் மதாளிப்புமாய்
வஞ்சியவள் உடலுக்குள் மாற்றம்
விஞ்சையர் பாவுக்குள் அடங்காத
விந்தையான உணர்வுக்கோலம்..

பஞ்சுப்பாதங்கள் மெல்ல அரும்பும்
பிஞ்சு விரல்கள் ரோஜாவாகும்
கஞ்சமின்றிய அழகான படைப்பு
வெஞ்சுடரான மகவின் வரவுக்காலம்..

குட்டிப்பாதங்கள் வயிற்றில் உதைக்க
கள்ளனவன் செய்திட்ட குறும்பெல்லாம்
கள்ளியிவள் நெஞ்சத்தில் அலைமோத
கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்

பேச்சாட்டன்.. (சிறுகதை) வித்யாசாகர்

.

“செல்லம்.. நதினி.. அப்பா வந்துட்டேன்..”
“ஹே.. ஜாலி.. அப்பா வந்தாச்சு அப்பா வந்தாச்சு..”
உள்ளறையிலிருந்து ஓடிவந்து வேலையிலிருந்துவந்த செழியனை வாசலிலேயே கட்டிக்கொண்டாள் முதல்வகுப்பு படிக்கும் மகள் நதினி. செழியன் தனது மடிக்கணினியை ஓரம்போட்டுவிட்டு மகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சினார்.
அதற்குள் மனைவி கலையும் தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து அருகில் அமர நீர் வாங்கி அருந்திவிட்டு கொஞ்சநேரம் நிறுவனம் வீடு என பகல்நேரப் பொழுதின் கதைகளை இருவரும் ஒருவர்மாற்றி யொருவர் பேச ஆரம்பித்தார்கள்.
அதற்குள் நதினி வீட்டிற்குள் ஓடிப்போய் தனது புத்தகங்கள், வண்ணமடித்த ஓவியம், இன்று எழுதிய இன்னபிற என ஆசிரியை நட்சத்திரம் போட்டதுவரை பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்த அத்தனையையும் ஒன்றுவிடாது எடுத்துவந்து மாறி மாறி ஒவ்வொன்றாய்க் காட்டி செழியனை தொல்லைசெய்தாள்.
செழியனோ முக்கியமானதொரு நிறுவனத்தின் தொழில்குறித்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். நதினிக்கு அப்பாமேல் ஏக கோபம். என்னடா இது அப்பா கொஞ்சம்கூட என்னை கண்டுக்கொள்ள கூட இல்லையே என எண்ணி கையிலிருந்தப் புத்தகங்களையெல்லாம் தூக்கி தூர வீசினாள்.

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்

.

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.‏

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மிக முக்கியமான நாடு என்பதோடு, சர்வதேச ரீதியில் செல்வாக்கு மிகுந்த நாடாகவும் திகழ்கின்றது. இந்நிலையில், இலங்கையில் பொது மக்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனைத் தடுத்திருக்க வேண்டும். அது இந்தியாவின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் அதுவே எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாடும் தமது குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதோடு, அதனைச் செய்ய குறித்த நாடுகள் தவறும் பட்சத்தில் நட்பு நாடுகள் தலையிட்டு பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சினிமா


த்ரிஷா இல்லனா நயன்தாரா




எனக்கு எண்ட் கார்டே கிடையாதுடா.. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற வடிவேலுவின் ஹிட் டயலாக் எல்லோருக்கும் தெரியும். இதையே டைட்டிலாக வைத்து அறிமுக இயக்குனர் ஆத்விக் இயக்கியிருக்கும் படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா.
டார்லிங் வெற்றிக்கு பிறகு அடுத்து என்ன நடிப்பார் ஜிவி என ஆவலுடன் காத்திருக்க, யாருமே எதிர்ப்பார்க்காத ப்ளே பாய் இமேஜ்ஜை கையில் எடுத்து கொஞ்சம் ஷாக் கொடுத்து களத்தில் இறங்கிவிட்டார்.
கதைக்களம்
காதல் ரொம்ப புனிதமானது, ஒரு ரோஜா செடி ஒரு முள்ளு இப்படி பேசி பேசி 2 லட்சம் தமிழ் படம் வந்திருக்கும், இதையெல்லாம் கிழித்து காதல்னாலே கசமுசா தான்யா ஜாலியா இருன்னு புது வாழ்க்கை தத்துவத்த சொல்லியிருக்காரு நம்ம அறிமுக இயக்குனர் ஆத்விக்.
ஜி.வி பிறக்கும் போதே ப்ளே பாய் மாதிரி இரண்டு பெண்களுக்கு நடுவே பிறக்கிறார். இதை தொடர்ந்து அந்த பெண்களில் ஒருவரான ஆனந்தியின் காதலில் விழுகிறார். அதன்பின் சில 18+ காட்சிகளுடன் இவர்கள் காதல் அரங்கேற, இந்த ரகசியம் பள்ளி முழுவதும் தெரிகிறது. அதோடு இந்த லவ் கதம் கதம்.
அதை தொடர்ந்து அடுத்த போனில் மனிஷா யாதவ், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்ல, அடுத்த கியரை போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் ஜி.வி. பெண்கள் குணம் 100 வகை அதை அறிந்த ஆண் யார்? இது தெரியாத ஜிவி, இந்த பெண்ணிடம் நல்லவனாக நடிக்க முயற்சி செய்து இந்த காதலிலும் பல்ப் வாங்குகிறார்.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இந்த காதலே வேண்டாம் என்று தன் மாமா விடிவி கணேஷ் இருக்கும் கும்பகோணத்திற்கு செல்ல, அங்கு மீண்டும் ஆனந்தியை பார்த்து, தன் பழைய காதலை புதுப்பிக்க முயற்சி செய்கிறார் சீனியர் ஆர்டிஸ்ட் சிம்ரன் உதவியுடன். இவர் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இவ்ளோ தைரியமான கலகலப்பான கிளைமேக்ஸுடன் கூறியிருக்கிறார் ஆத்விக். (வெர்ஜின் பசங்க சாபம் மட்டும் இல்லை பாஸ், பொண்ணுங்க சாபம் கூட உங்கள் சும்மா விடாது.....)
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமாவிலே இப்படி ஒரு படமா? என்று புருவத்தை உயர்த்த வைக்கின்றது, அட...டெக்னிக்கல், உலகத்தரத்த சொல்லலங்க...பசங்க பதுங்கி பதுங்கி பேசுற விஷயத்தை கூட திரையில பப்ளிக்கா சொல்லி ஆச்சரியப்படுத்தியிருக்காரு ஆத்விக்.
ஜி.வி நடிப்பில் பள்ளியில் பாஸ் ஆகி கல்லூரிக்கு வந்துவிட்டார், ப்ளே பாய், சூப் பாய் என அனைத்து ‘ஏ’ரியாக்களிலும் கலக்கியுள்ளார். மனிஷா ஒன்லி கிளாமர் மட்டும் தான், ஆனால், ஆனந்தி அந்த கண்களை வைத்துக்கொண்டு ஜி.விக்கு செம்ம ப்ரஷர் கொடுத்திருப்பார் போல.
படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை சீரியஸ் என்ற வார்த்தையை எங்கு தேடினாலும் கிடைக்காது, அதிலும் விடிவி கணேஷின் புதிய புதிய வார்த்தைகள், செங்கல் சைக்கோ கதாபாத்திரம் என இளைஞர்களுக்கான அனைத்து விஷயங்களும் படத்தில் உள்ளது. சிம்ரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் கதாபாத்திரம் கிட்டத்தட்ட லவ் குரு மாதிரி.
படத்தின் நாயகனே இசை என்பதால், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பு, அதிலும் ‘பிட்டு படம் டி’ பாடல் ஒருத்தரும் சீட்டில் இல்லை. ஆனால், இன்னும் எத்தன வருஷத்துக்கு தான் பெண்களையே குறை சொல்லி கைத்தட்டல் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. அதை விட இந்த விஜய், அஜித் டயலாக் Reference என இன்னும் எத்தனை படத்தில் பயன்படுத்துவார்களோ.
க்ளாப்ஸ்
ஜி.வி-ஆனந்தி காதல் காட்சிகள், மிகவும் யதார்த்தமாக இன்றைய இளைஞர்கள் என்ன செய்வார்களோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பின்னணி, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்தும் இளைஞர்களுக்கான டார்க்கெட்.
பல்ப்ஸ்
படம் கலகலப்பாகவே சென்றாலும் கொஞ்சம் நீளமாக இருப்பது போல் ஒரு உணர்வு, குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்றால்???.
மொத்தத்தில் பூவே உனக்காக விஜய், காதல் கோட்டை அஜித் இதில் நீங்கள் எந்த ரகம் சீரியஸ் காதலர்களாக இருந்தாலும், அட வாழ்க்கை ரொம்ப ஈஸி பாஸ், ஜாலியா விடுங்கன்னு அவர்களையும் மாற்றிவிடும் இந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா.
ரேட்டிங்- 3/5  நன்றி cineulagam   





வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல்

.

வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...

திரும்பிப்பார்க்கின்றேன் - இலக்கியத்தோழன் இளங்கோவன். - - முருகபூபதி

.
ஆக்க   இலக்கியத்திலும்  தமிழர்  மருத்துவத்திலும் ஈடுபட்டுழைத்த   இலக்கியத்தோழன்  இளங்கோவன்.
பாரதியின்   சேவகன்  கண்ணன்  -  டானியலின்  சேவகன் இளங்கோவன்

                                            
கவியரசு  கண்ணதாசன்  பற்றி  ஒருசமயம்  கலைஞர்  கருணாநிதி கவிதை    எழுதியபொழுது "  யார்  அழைத்தாலும்  ஓடிப்போகும்  செல்லப்பிள்ளை "    என்று  வர்ணித்தார்.   எனக்கும்  இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன்  குறித்து  நினைக்கும்தோறும்  அந்த வரிகள்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது.
கவிஞர்கள்   இயல்பிலேயே  மென்மையானவர்கள்தான்.  அதனால்  அவ்வப்பொழுது  எவருக்கும்   செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள்.
இளங்கோவனை  நான்  யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  காலப்பகுதியில் அவர்   சீனசார்பு  கம்யூனிஸ்ட்   கட்சியின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார்.
இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர்.

நூல் வெளியீட்டு அழைப்பு - 27 09 2015

.










ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2-2 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

Dr.கைலாசபதி மனைவி சர்வமங்களம் குழந்தை சுமங்களாவும் பேராதனை பல்கலைக்கழக விடுமுறையை களிக்க கொழும்பில் தங்கியிருந்த காலம். ஆவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம் அச்சமயம் கைலாசுடன் பல விசயங்களை பற்றியும் உரையாடினேன் அவர ஆர்வமாக என்னைத் தூண்டித் தூண்டி பல கேள்விகளைக் கேட்டார் நாட்டிய வேறுபாடுகள் அரங்கக் கலை எனது இந்திய வாழ்வில் பார்த்த அரங்கப்படைப்புக்கள் குருகுல வாசம் என பலதும் பேசினோம் அப்பொழுது அவர் கூறினார் கார்த்திகா இத்தனையும் பலர் அறியNவுண்டிய விஷயங்கள் ஏன் நீங்கள் இதை எழுதக் கூடாது எழுதினால் பலரும் இவற்றை அறிய வாய்ப்புண்டு என்று என்னை எழுதத் தூண்டினார். நான் எழுதிய இரு கட்டுரைகளை தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் எடுத்துச் சென்றார் சிவகுருநாதனோ நான் அதை தொடர் கட்டுரையாக எழுதவேண்டும் எனப்பணித்தார். தினகரன் வார மஞ்சரியில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் தொடர் கட்டுரையாக 14 வாரங்கள் தொடர்ந்தது. இதுவே என்னை ஒரு ஆய்வாரள் ஆக்கியது. பத்திரிகைக்கு எழுதும்போது பல நூல்களைப் படித்து ஆராய்ந்து எனது அறிவை விருத்தி செய்தேன். வாசகருக்கு தமிழரின் ஆடற்கலையை கூறப்புகுந்த நான் நீண்ட ஆய்வில் ஈடுபடவேண்டியதாயிற்று.

மெல்பேர்னில் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் 26 09 15

.













தாயகத்து இளையவர்கள் திறமைகளை கண்டேன் - க பாலேந்திரா

.

எமது தமிழ் அவைக்காற்று கலைக் கழக நாடகக் குழுவினருடன் சென்று , 2013இல் இலங்கையில் நடாத்திய நாடக விழாவின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் நான் தனியாக அங்கு சென்றேன். இலங்கையில் யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சென்று இளையவர்களையும், முதியவர்களையும் சந்தித்து என் நாடக
அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கலைப் பயணத்தின் அனுபவங்களை  புதினம் பத்திரிகை ஊடாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
 முதலில் மட்டக்களப்பில் பேராசிரியர் மௌனகுரு தனது, அரங்க ஆய்வுக்கூட மாணவர்களுடன் ஒரு நாடக பயிற்சிப் பட்டறை நடத்த அழைத்திருந்தார். சுமார் 25 இளையவர்கள் மிக உற்சாகமாக பங்கு கொண்டார்கள். ஒரு வாரப் பயிற்சியின் பின்னர், நான் இங்கு லண்டனில் எமது நாடகப் பள்ளி மாணவர்களைக்  கொண்டு கடந்த ஜனவரி மாதம் மேடையேற்றிய பாரதியின் பாஞ்சாலி சபதம் கவிதையை அடிப்படையாகக் கொண்ட “நெட்டை மரங்கள்” மேடை நிகழ்வை , மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தில்  மேடையேற்றினோம். உலகில் நடைபெறும் அநீதிகளையும், கொடுமைகளையும் குறிக்கும் குறியீடாக பாஞ்சாலியின் துயர் காட்டப் படுகிறது.
 “நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்............”
ஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்
ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்
மாடு நிகர்த்த துச்சாதனன் -அவள்
மைக் குழல் பற்றி இழுக்கிறான்


இலங்கைச் செய்திகள்


சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது

கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை

சம்­பந்­தனின் கடி­தத்­துடன் சுமந்திரன் தலை­மை­யி­லான குழு ஜெனிவா விரைவு

ரணில் - மோடி சந்தித்தனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை

 கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

  'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்


ஏழையின் மகன்!

.


ராக்ஃபெல்லர் என்பவர் அமெரிக்கக் கோடீஸ்வரரர்களில் ஒருவர்.
   அவர் ஒரு சமயம் ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர், ஹோட்டல் நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
   பின்பு, “வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, மலிவான வாடகைக்கு ஒரு அறை வேண்டும்“ என்று கேட்டார்.
   ஹோட்டல் நிர்வாகி வியந்து, “ஐயா... தாங்கள் எங்கள் ஹோட்டலுக்கு வருகை புரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பெயரைச் சொல்லி தங்கள மகன் அடிக்கடி இங்கு வந்து தங்குவார். அவர் எப்பொழுதும் அதிக வசதிகள் நிறைந்த அதிக வாடகையுள்ள ஆடம்பர அறையையே கேட்டு வாங்கித் தங்குவார். ஆனால் உலக மகா கோடீஸ்வரரான தாங்கள் மலிவு வாடகையில் அறையைக் கேட்கிறீர்களே. இது எனக்கு வியப்பாக உள்ளது.“ என்றார்.
   அதற்கு ராக்ஃபெல்லர் புன்சிரித்தார்.
   “இதில் வியக்க ஒன்றும் இல்லை. அவனது தந்தையாகிய நான் கோடீஸ்வரன். அதனால் அவன் ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான். ஆனால் நானோ ஓர் ஏழையின் மகன். ஏழையின் மகனான நான் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்?“ என்றார் ராக்ஃபெல்லர்.
   அவரது தன்னடக்கத்தைக் கேட்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் ஹோட்டர் நிர்வாகி.

நன்றி : arouna-selvame.blogspot

தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் வேண்டும்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

.
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன்.
1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஐ, ஔ, ஃ
குறில், நெடிலாக எழுத்துக்கள் சீராக மாறி வந்து கொண்டிருக்கும்போது, திடீரென இடையில் ஒற்றை நெடில் ‘ஐ’ வரவேண்டிய அவசியமென்ன?

எம்.ஜி.ஆர் கேட்டமுற்பணம் கடன் வாங்கிய பி.ஆர். பந்துலு

.

கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய சரித்திரப்படங்களுக்கு உயிரூட்டியது  நடிகர்திலகம் சிவாஜியின் நடிப்பு.சமூகப்படங்களில் சிவாஜியும் அரச படங்களில் எம்.ஜி.ஆரும் கொடிகட்டிப்பறந்தநேரத்தில் பி.ஆர். பந்துலுவின் கர்ணன், வீரபாண்டியகட்டப்பொம்மன் என்பன அரச படங்களில் நடிக்க சிவாஜியாலும் முடியும் என்று நிரூபித்தன.  அரச படங்களின் வெற்றியைத்தொடர்ந்து இன்னொரு அரச படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு அதில் நடிப்பதற்குநடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய ஆயத்தமாக இருந்தார் பி.ஆர். பந்துலு. திரைப்படத்து றையின் அனுபவம் மிக்க வீனஸ் கிருஸ்ணமூர்த்தியுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது த‌ன‌து புதிய படத்தின் கதையைப்பற்றிக்கூறினார் பந்துலு.    இன்றைய இயக்குனர்களைப்போன்று அன்றைய இயக்குனர்கள் தமது கதையைப்பொத்தி வைத்திருப்பதில்லை. அனுபவம் உள்ளவர்களிடம் கூறி ஆலோசனை பெற்றபின்பே படப்பிடிப்பைத்தொடங்குவார்கள். பந்துலுவின் கதையைமுழுமையாகக்கேட்ட வீன‌ஸ் கிருஸ்ண‌மூர்த்தி "இது எம்.ஜி.ஆர் நடிக்க‌வேண்டிய‌க‌தை அவ‌ர் ந‌டித்தால் தான் அருமையாக‌ இருக்கும்" என்றார்.  வீன‌ஸ் கிருஸ்ண‌மூர்த்தி கூறிய‌தைக்கேட்ட‌தும் ப‌ந்துலு திகைத்து விட்டார்.த‌மிழ்த்திரை உல‌கை எம்.ஜி.ஆர், சிவாஜி என‌ இரு துருவ‌ங்க‌ள் ஆட்சிசெய்த‌கால‌ம். சிவாஜிக்காக‌க்க‌தை எழுதி ப‌ட‌ம் த‌யாரித்து