கருகத் திருவுளமோ? -ரிஷி

.







ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி.

வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக.
காதலித்துக் கைப்பிடித்தவன் ‘தலித்’ என்பதால் அவன் உயிர் வலிக்க
அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க
ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து
தன் ’கௌரவ’த்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் தாய்.
மகனும் சகோதரர்களும் இழிதுணையாய்.

’உண்டா’யிருக்கும் செய்தியைத் தாயிடம் ஆசைஆசையாய் தெரிவித்தவளை
பாசாங்குப் பாசம் காட்டிப் பிறந்தவீட்டுக்கு வரவழைத்து
கருவைத் துண்டாக்கும்படி கட்டாயப்படுத்தியதில் குலைந்துபோனது
தாய்மையின் கௌரவம்.

நான் பார்த்து ரசித்த (Super Singer 4 ) ஜத்ரா மியூசிக்கல் நைற் - செ.பாஸ்கரன்

.
கனவா நீ காற்றா என்ற அந்தப்பாடல் காற்றில் மிதந்து வருகிறது இன்ப இசை வெள்ளத்தில் முக்குளிக்க காத்திருந்தவர்களின் கரவோசை பரமட்டா றிவர்சையிட் மண்டபத்தை நிறைக்கின்றது. மண்டபம் நிறைந்திருந்தது போலவே கரவொலியும் எத்திசையும் எழுகிறது. இது கனவா என்று எண்ணத்தோன்றிய போதும் இல்லை நிஜம்தான் என்று எம்முன்னே வெள்ளை உடையோடு அரங்கத்தில் நின்று பாடுகின்றார் பிரபல பின்னணிப்பாடகரான ஸ்ரீனிவாஸ் அவர்கள் பக்கத்தில் விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் அறிவிப்பாளர் பாவனா.

சனிக்கிழமை இரவு (26.04.2014) பரமட்டா றிவர்சையிட் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது. மண்டபத்தை சுற்றியிருந்த வீதிகள் கார்களால் நிறைந்து கிடக்கிறது. சற்று தாமதமாக வந்தவர்கள் மிகத்தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிஓடி வருகின்றார்கள்.யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ஜத்ராவின் ஆதரவில் நிகழ்த்திய இந்த நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த மக்களோடு 5.30 மணிக்கு விஜே தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் அறிவிப்பாளர் பாவனா வினால் ஆரம்பிக்கப்பட்டது.

சிட்னி முருகன் கோவிலில் சமய இசைச் சொற்பொழிவுகள் 29.04.14

.


வசந்த மாலை 2014 - 03.05.14

.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
மாக்ஸீய    மனிதநேயவாதி    கணேசலிங்கன்
                                                                                                                           
   
    
 பொன்னாடையோ - பூமாலையோ - பாராட்டுகளோ - வெண்கல - வெள்ளித்தகடு  விருதுகளோ - விசேட பட்டங்களோ    வேண்டாம் எனச்சொல்லும்    ஒரு   ஆக்க    இலக்கியப்படைப்பாளி   எமது  தமிழ் சமூகத்தில்   எண்பத்தியைந்து  வயது   கடந்தபின்பும்   அயராமல்  எழுதியவாறு   இயங்கிக்கொண்டிருக்கிறார்   என்றால்   அவர் தமிழகத்தில்    வாழ்ந்துகொண்டிருக்கும்    இலங்கையின்   மூத்த எழுத்தாளர்    செ. கணேசலிங்கன்தான்  என்று உறுதியாகப்பதிவுசெய்யமுடியும்.
2008 ஆம்  ஆண்டு  என  நினைக்கின்றேன்.   தமிழ்நாடு  - சென்னையிலிருந்து   ஒரு   இலக்கிய  அமைப்பிடமிருந்து  கடிதம் வந்தது.   அதில்   தமிழகத்தில்   வதியும்    மூத்த   எழுத்தாளர் செ.கணேசலிங்கன்  அவர்களுக்கு  75  வயது   பிறந்துவிட்டது.   அதனை முன்னிட்டு   இலக்கிய   நண்பர்கள்   இணைந்து   அவருக்கு   பவளவிழா  நடத்தவிருக்கின்றோம்.    அந்த   விழாவில்   வெளியிடுவதற்கு  ஒரு  மலரைத்தயாரிக்கின்றோம்.   நீங்களும்   கணேசலிங்கன்  பற்றிய கட்டுரை   ஒன்றை   எழுதி   அனுப்பவேண்டும்.   விரைவில் எதிர்பார்க்கின்றோம். -  என்று   அக்கடிதத்தில்   குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும்   தாமதிக்காமல்   ஒரு   கட்டுரையை   எழுதி  தபாலில் அனுப்பிவைத்தேன்.   மாதங்கள்   பல   கடந்தும்   பவளவிழா  நடந்த செய்தியோ   மலர்  வெளியான   தகவலோ   எனக்குக்கிடைக்கவில்லை.
ஒரு நாள்  கணேசலிங்கனுடன்  தொலைபேசியில்   தொடர்புகொண்டு என்ன   நடந்தது?  எனக்கேட்டேன்.

மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு 4.05.14

.

அவுஸ்திரேலியாவில்   இயங்கும்   இலங்கை   சமூகங்களின்   கழகத்தின் ஏற்பாட்டில்    எழுத்தாளரும்   மிருக   மருத்துவருமான   டொக்டர்  நடேசனின் மூன்று   நூல்களின்  விமர்சன  அரங்கு   எதிர்வரும்  04 - 05 - 2014  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில்  பிற்பகல்  மணியிலிருந்து  மாலை  மணிவரையில்   GLENWAVERLEY   R S L    மண்டபத்தில்  (161, COLEMAN PARADE,   GLENWAVERLEY - VICTORIA - 3150)               (  GLENWAVERLEY    ரயில்   நிலையத்திற்கு  முன்பாகவுள்ள   மண்டபம்)       நடைபெறும்.
ஏற்கனவே   தமிழிலும்    ஆங்கிலத்திலும்   வெளியான   வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள    மொழிபெயர்ப்பு - சமணலவெவ - தமிழில்   வெளியான   உனையே  மயல் கொண்டு   நாவலின்   ஆங்கில மொழிபெயர்ப்பு   Lost in you         மற்றும்   இந்த   ஆண்டு   வெளியான   புதிய நாவல்    அசோகனின்   வைத்தியசாலை   ஆகிய    மூன்று   நூல்கள்   இந்த விமர்சன    அரங்கில்   திறனாய்வு    செய்யப்படும்.
திருவாளர்கள்    ரெயில்  மோல்ட்ரிச்  -   லெ.முருகபூபதி  -  எச்.எல்.டி மகிந்தபால  -   டி.பி.குருப்பு   ஆகியோர்    இந்த    விமர்சன    அரங்கில் உரை நிகழ்த்துவர்.
இலங்கை   சமூகங்களின்    கழகத்தின்    ஸ்தாபகர்   திரு. பந்து திஸாநாயக்கா இந்நிகழ்ச்சிக்கு    தலைமை    தாங்குவார்.
மொழிபெயர்ப்பு   இலக்கியங்கள்   பற்றிய   வாசிப்பு    அனுபவ   அரங்காக இந்நிகழ்ச்சி    ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. 

இலங்கைச் செய்திகள்


புலி சந்தேக நபர் யாழில் கைது

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பெண்ணை இன்று நாடு கடத்த தீர்மானம்

சட்டவிரோதமாக ஆஸி . செல்ல முயன்ற 25 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

புத்தளத்தில் சுழல் காற்று

புலி சந்தேக நபர் யாழில் கைது


25/04/2014 யாழ்ப்பாணத்தில் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார்  இன்று கைது செய்துள்ளனர்.
யாழ் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கோபி, தேவியன், அப்பன் ஆகியோருடன் தொடர்புகள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
நன்றி வீரகேசரி 




சங்க இலக்கியக் காட்சிகள் 5 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
----------------------------------------------------------------------------------
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------

காட்சி 5

கள்ள உறவில் களித்த தலைவன்


இருமனங் கலந்து திருமணமாகி இல்லறத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்தத் தம்பதிகள். ஆராக் காதலுடன் வாழ்க்கையினை ஆரம்பித்த அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் மாறாத அன்பு வைத்திருந்தார்கள். தலைவி தலைவனைத் தன் உயிருக்கும் மேலாக மதித்தாள். அவனே தனக்கு எல்லாம் என்று நினைத்தாள். அவனும் அப்படித்தான். ஆனால் அக்காலச் சமூக வாழ்க்கை முறையிலே பெரும்பாலான ஆண்கள் பரத்தையரை நாடுவது வழக்கமாக இருந்தது. அவனும் ஒருநாள் கணிகையொருத்தியின் கவர்ச்சியில் தன் மனதைப் பறிகொடுத்தான். அவளோடு உறவு கொள்ளத் துடித்தான். எப்படியோ அவளின் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான். தலைவிக்குத் தெரியாமல் அடிக்கடி பரத்தையர் வாழும் பகுதிக்குக் களவாகச் சென்று அவளோடு மட்டுமன்றிப் பலரோடும் உறவாடி மகிழ்ந்தான்.
தலைவியின் தோழிக்குத் தலைவனின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது. நாளடைவில் அவனது கள்ள உறவு அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. ஒருநாள் வீதியிலே அவள் தலைவனைக் கண்டாள். அவன் எதிர்த்திசையிலேயிருந்து வந்துகொண்டிருந்தான். அவனது கோலத்தைக் கண்டதுமே அவன் எங்கேயிருந்து வருகிறான் என்பதைத் தோழி புரிந்து கொண்டாள். அவன் பரத்தையர்களின் இருப்பிடம் சென்று அவர்களோடு கூடிக்குலாவி இன்பம் அனுபவித்துவிட்டுத் தன் இல்லத்திற்குத் திரும்பிவந்து கொண்டிருந்தான். அவனது முகத்திலும்  வெளித்தெரியும் பரந்த மார்பிலும் அவன் அணிந்திருக்கும் உடையிலும் அவன் விலைமாதரோடு களித்திருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. உடனே அவளுக்கு மனதிற்குள் கேலிச் சிரிப்பு எழுந்தாலும் அதனை அடக்கிக்கொண்டு தலைவனிடம் பின்வருமாறு கூறுகிறாள்.

சிவாஜியின் கையெழுத்து - அ .முத்துலிங்கம்

.
   

                          
’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு வரப்போகிறார். வருடம் 1959. தினகரன் பத்திரிகை ஆசிரியர் க.கைலாசபதியின் பெருமுயற்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழாவுக்கு சிவாஜி வருவது உறுதியாகிவிட்டது. நான் திட்டமிடத் தொடங்கினேன்.

சிவாஜியுடனான என்னுடைய பரிச்சயம் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய வீட்டில் அண்ணர் சர்வாதிகாரி. பேப்பர் பறக்காமல் இருக்க ஒரு கல் வைப்பதுபோல ஆணை இடும்போதே அதை மறக்காமல் இருக்க ஓர் அடியும் வைப்பார். பராசக்தி படம் வந்தபோது அவர் என்ன செய்தார் என்றால் ஐந்து சதத்துக்கு விற்ற வசனப் புத்தகத்தை வாங்கி வந்து அதைபாடமாக்கச் சொல்லி எனக்கு கட்டளையிட்டார். நான் நாலு நாட்களில் ’நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்று அடிக்குரலில் ஆரம்பித்து பேச்சை உணர்ச்சிகரமாக முடிப்பதற்கு பழகிவிட்டேன். அதுவெல்லாம் தனிமையான பயிற்சியின்போதுதான். அண்ணர் முன்னே நின்றபோது நாக்குழறி, மண்டைக்குள் இருந்த சொற்கள் வாய்க்குள் வராத சொற்களிலும் பார்க்க அதிகமாகிவிட்டன. அவர்சமிக்ஞை விளக்குப்போல, அடிக்கடி மனம் மாறுகிறவர். முழுவதையும் பாடமாக்கினால் படத்துக்கு கூட்டிப்போவதாகச் சொல்லியிருந்தார். வாக்கை காப்பாற்றாமல் போகலாம். ஒருநாள்  நண்பர்களை அழைத்துவந்து அவர்களுக்கும் பேசிக்காட்டச் சொன்னார்.  பேசி முடிந்ததும் நண்பர்கள் வயிறு குலுங்க சிரித்தார்கள். அது ஏன் என்றுமட்டும் எனக்கு புரியவில்லை.

மருத்துவ நிதியத்தின் நிதிசேகரிப்பு

.

சங்ககாலத்தில் பெண்கள்.

.

உலகம் தழுவியதாகவும், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் இருக்கக்கூடிய விவாதப்பொருள் எதுவெனக் கேட்டால் பெண்ணுரிமையே என அடித்துக் கூறலாம்.


“உரிமை என்பது ஒரு பொருளா? எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று சொல்லுவதற்கு. நாம் ஒன்றும் சட்டத்தால் தடுக்கப்படவில்லை, நாம் உரிமை என்று கருதுபவற்றை எடுத்துக்கொள்வதுவும் எடுக்காததுவும் எம் சிந்தனையிலேயே தங்கியுள்ளது. ஆண்களில் கைகளில் அல்ல.” என்று யாரோ ஒரு பெண்மணி பெண்ணுரிமை பற்றிக் கூறியதை வாசித்ததாக நினைவு.

உண்மை கொண்டதாகவும் விவாதத்திற்குரியதாகவும் இக் கருத்து தென்படுகின்றது.


உலகளாவிய வகையில் மனிதம் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பெண்ணுரிமை பற்றிய கருத்துகளும் முரண்களும்; நிறைந்து கிடக்கின்றன. உயிர்மத் தோற்றகாலத்திலிருந்தே இந்த உரிமை முரண்கள் உருவாகிவிட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகச் செய்திகள்


தென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்ட பராக் ஒபாமா

3700 கி.மீ. தொங்கியபடி விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்: அமெரிக்காவில் பரபரப்பு


காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை இந்த வாரம் பூர்த்தியாகலாம் - மலேசிய அமைச்சர்
===================================================================

தென்கொரிய கப்பலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்ட பராக் ஒபாமா


நிலவும் நாணயங்களும் - S.ராமகிருஷ்ணன்

.
நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனுக்குக் காலடியில் கிடக்கும் நாணயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்
உலகெங்கும் கலைஞர்கள் தனது கற்பனையுலகோடு, தனது படைப்பாற்றலின் முழுவீச்சோடு இயங்கவே ஆசைப்பட்டிருக்கிறார்கள்
தன் விருப்பபடி வாழ்வதற்கு உலகம் அனுமதிக்காது என்பதை உணர்ந்து கொண்டு, அதை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள்,  பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரது வாழ்வும் நாடோடிகளின் வாழ்க்கைமுறையைக் கொண்டதே
வாழ்க்கையை அதன் தீவிரத்தோடு எதிர்கொண்டு தன்னைப் பலிக் கொடுத்த ஒவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் என நிறையப் பேர் என் நினைவில் வந்து போகிறார்கள்,
ஒவியர் பால் காகின் அப்படியான தீவிர மனநிலை கொண்ட ஒவியர், தாஹிதி தீவிற்குப் போய் அங்குள்ள பழங்குடி மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து ஒவியம் வரைந்தவர், ஒவிய உலகில் காகின் சிவப்பு என்றே ஒரு வண்ணம் குறிப்பிடப்படுகிறது, வான்கோவின் நண்பரான காகின் நவீன ஒவியத்தில் மிக முக்கியமானவர், அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் சாயலில் எழுதப்பட்டதே சாமர்செட் மாமின் The Moon and Sixpence நாவல்.
ரயில் பயணத்தில் வாசிப்பதற்கு எடுத்துச் சென்ற இந்த நாவலை படித்து முடித்த பிறகு உறங்க முடியவில்லை, முழு இரவும் இதைப்பற்றி நினைத்தபடியே படுக்கையில் கிடந்தேன்,

கன்பராவில் திருமுறை விழா -K.கணேசலிங்கம்

.
ஆஸ்திரேலியா கன்பராவில் சென்ற சில ஆண்டுகளாக நடைபெற்ற திருவாசக விழா இம்முறை திருமுறை விழா என்ற பெயரில் நடைபெற்றது அங்குள்ள விஷ்ணுசிவா கோயிலில், 13-04-2014 அன்று,  நடைபெற்ற இவ்விழாவிற்கு  பெரும் திரளானமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

பெருமை மிக்க சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சிறப்பையும்தமிழ் மக்கள் குறிப்பாக வருங்காலச் சந்ததியினர் உணர்ந்து பயன் பெற வேண்டுமென்றநோக்கில் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டது.

விழாவின் தொடக்கத்தில் திரு சிவபாதசிங்கம் அவர்கள் தீபாராதனை செய்துபஞ்சபுராணம் பாடினார்தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டுபெர்யபுரானாம் ஆகியவை பஞ்சபுராணம் எனப்படும்.

இதனைத் தொடர்ந்து திருமதி வானதி இரத்தினவேல் அவர்களுடன் சேர்ந்துசபையினர் சிவபுராணம் ஓதினர்.

பின் சிறுமி அஸ்வினி முரளீதரனின் சைவத் திருமுறைகள் என்ற தலைப்பிலானபேச்சு மிகவும் சிறப்பாக அமைந்து திருமுறைகள அறிமுகம் செய்வதாக இருந்தது.

இதன் பின்  திருமதி தமிழ்ச் செல்வி யோகானந்தனின் கானாமிர்த்த இசைப்பள்ளிமாணவர்கள் திருமுறை இசை வழங்கி எல்லோரையும்  மகிழ்வித்தனர்.

இதனைத் தொடர்ந்து சதுரிக்கா சபேசன் அஜே ரமேஷ் ஆகிய சிறுவர்கள் முறையேசைவ சமயக் குரவர்கள்நமச்சிவாய வாழ்க என்ற தலைப்புக்களில் பேசினார்கள்.

மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!

.

kushboo-prabhu-2
பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில் பிரபு-குஷ்பூவிற்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதையடுத்து, பிரபு-குஷ்பூ இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். பின்னர், திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தபோதும், பிரபுவுடன் எந்த படத்திலும் குஷ்பூ இணைந்து நடிக்கவில்லை.இருவரும் வெவ்வேறு துருவங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், அப்படி எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்த பிரபு-குஷ்பூ இருவரையும் மீண்டும் இணைக்கும் முயற்சியில் தற்போது ஒரு இயக்குனர் இறங்கியிருக்கிறார். அவர் முதலில் கதையை பிரபுவிடம் சொல்லி இதில் உங்களுக்கு ஜோடியாக நடிக்க குஷ்பூவிடம் பேசப்போகிறேன் என்று சொன்னபோது, அவர்கள் நடித்தால் நானும் நடிக்கத்தயார். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டாராம்.
அதையடுத்து இதுபற்றி குஷ்பூவிடம் பேசியபோது, கதையும், எனக்குரிய கேரக்டரும பிடித்திருக்கிறது. அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒத்துக்கொண்டாராம். ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பிரபுவும், குஷ்பூவும் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார்கள்.
Nantri 123tamilcinema

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

.க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன் இரண்டாம் தரமானவனே என்றெல்லாம் விமர்சன வேலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையே பேசிக் கொண்டு, ஆனால் தொடர்ந்து தெளிவான ரசனை அனுபவம் கொண்ட ஒரு விமர்சகராகவும் இயங்கியவர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். ஏறத்தாழ அவருடைய விமர்சனக் கட்டுரைகள் – பலரும் கருதுவதைப் போல அபிப்ராயக் கட்டுரைகள் – அடங்கிய 19 தொகுப்பு நூல்களைப் பட்டியலிட்டுள்ளார் நவீனகால இலக்கிய ஆராய்ச்சியாளர் பழ.அதியமான்(1). இந்த நூல்களைத் தமிழின் முதல் விமர்சனப் பிரக்ஞையைத் தூண்டிய புத்தகங்கள் எனக் கொண்டாடுகிறார் தஞ்சை பிரகாஷ்; (தஞ்சை பிரகாஷ்; கட்டுரைகள். ப.237). மேலும் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) என்ற விமர்சன நூலிற்காகவே சாகித்திய அகாதெமி பரிசும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பத்திரிக்கையாளர், புனைகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்தி எழுத்தாளர், இருமொழி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் தளத்தில் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்க அளவிற்குச் சாதனை செய்திருந்தாலும் காலமும் நவீனத் தமிழ் இலக்கியச் சூழலும் அவர் மேல் நிலைநிறுத்திய அடையாள முத்திரை விமர்சகர் என்பதுதான். அவர் விரும்பாத ஒரு பெயரினாலேயே அவர் அறியப்படுகிறார் என்பதே அவரது சிக்கலான வாழ்வின் புதிரைப் புலப்படுத்தக்கூடிய ஒன்றாகப் படுகிறது.